TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


டாஸ்மாக்கில் ரூ.3,000 கோடி ஊழல்?

Go down

டாஸ்மாக்கில் ரூ.3,000 கோடி ஊழல்? Empty டாஸ்மாக்கில் ரூ.3,000 கோடி ஊழல்?

Post by அருள் Mon Jul 04, 2011 8:04 am

சென்னை, ஜூலை 3: டாஸ்மாக் மதுக் கடைகளில் பார் நடத்துவதில் அதிகாரிகளின்
உடந்தையுடன் தனிநபர்கள் சில தில்லுமுல்லுகளைச் செய்து சுமார் ரூ.3,000 கோடி அளவுக்கு
தமிழக அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அரசு உறுதியாக நடவடிக்கை எடுத்தால், இத்துடன் மேலும் சில ஆயிரம்
கோடி வருமானமும் கிடைக்கும் என மதுபானக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள்
கூறுகின்றனர்.
உரிமம் இல்லாமல் நடக்கும் 3,450 பார்களால் இந்த வருவாய் இழப்பு ஏற்படுகிறது
என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிண்டிகேட்டுகள் ஆதிக்கம்: மதுக் கடைகளை ஏல முறையில் தனி நபர்களுக்கு ஏலம்
விட்டபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கூட்டு (சிண்டிகேட்) சேர்ந்து கொண்டு,
குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஏலம் கேட்காமல் இருந்தனர். இதனால் குறைவான தொகைக்கே
கடைகள் ஏலம் போயின. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால் மதுபான வியாபாரிகள்
அபரிமிதமான லாபம் சம்பாதித்தனர்.
இதை முறியடிக்கும் வகையில் மதுக் கடைகளை அரசே ஏற்று நடத்தும் என 2003-ல்
முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அரசால் இதை வெற்றிகரமாக நடத்த முடியுமா என்று அப்போது பலத்த சந்தேகம்
எழுப்பப்பட்டது. தமிழக அரசு அதிகாரிகளின் திட்டமிட்ட அணுகுமுறையால் மதுக் கடைகள்
முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அதன் பிறகு அரசுக்கு வருவாய் ஈட்டும்
முக்கிய அங்கமாகவும் இது மாறிவிட்டது.
2002-03-ல் டாஸ்மாக்கின் வருமானம் ரூ.2,828 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டில்
இது ரூ.14 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது.
டாஸ்மாக் மூலம் மது விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து செயல்படக் கூடாது,
இதனால் தமிழகத்தில் பெரும்பாலானோர் குடிகாரர்களாகிவிட்டனர் என்ற குற்றச்சாட்டுகள்
ஒருபுறம் இருந்தாலும், அடுத்தடுத்து வரும் அரசுகள் தங்களது அணுகுமுறையை மாற்றிக்
கொள்வதாகத் தெரியவில்லை.
பார்கள் தந்த மறுவாழ்வு: ஏற்கெனவே மதுக்கடைகள் நடத்தி வந்தவர்களுக்கு இனி
மதுக் கடை வியாபாரம் கிடைக்காது என்ற நிலையில், கடையின் அருகிலேயே "பார்' வைத்து
நடத்திக் கொள்ள அனுமதிப்பது என்ற அரசின் முடிவு அவர்களுக்கு மறுவாழ்வு தருவதாக
அமைந்துவிட்டது.
மது வகைகளை வாங்குவோர் அருகில் உள்ள பாரிலேயே அதைக் குடிக்க, தேவையான வசதிகளை
பார் உரிமையாளர்கள் செய்து தருவார்கள்.
குறிப்பிட்ட ஒரு கடையின் சராசரி தினசரி வியாபாரத்தில் 2.5 சதவீதத்தை
அடிப்படைத் தொகையாக நிர்ணயித்து, பார் உரிமத்துக்கு டெண்டர் கோரப்படுகிறது.
உதாரணமாக, தினம் ரூ.1 லட்சம் வியாபாரம் நடக்கும் கடைக்கு தினசரி ரூ.2,500
என்பது குறைந்தபட்ச உரிம கேட்புத் தொகையாக நிர்ணயித்து டெண்டர் அறிவிக்கப்படும்.
இதில் யார் அதிகபட்ச தொகைக்கு டெண்டர் கேட்கிறாரோ அவருக்கு உரிமம் தரப்படுகிறது.
அவ்வாறு உரிமம் பெறுபவர் மூன்று மாதங்களுக்கான தொகையை முன்பணமாக டாஸ்மாக்
நிறுவனத்துக்குச் செலுத்திவிட வேண்டும். பிறகு ஒவ்வொரு மாதத்துக்குமான தொகையை
செலுத்த வேண்டும். ஆண்டு முடிவில் அவரது முன்பணத்தை திரும்பப் பெறலாம்.
ஒருவர் தினசரி ரூ.3,000 என்ற தொகைக்கு உரிமம் பெறுவதாக வைத்துக் கொண்டால்,
ரூ.2.70 லட்சம் முன்பணம் செலுத்த வேண்டும். மாதம் ரூ.90 ஆயிரம் செலுத்த வேண்டும்.
மூன்று மாதங்கள் கட்டணம் செலுத்தாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும். பிறகு
மறுபடியும் டெண்டர் மூலம் வேறொருவருக்கு அனுமதி தரப்படும்.
ஆனால் இந்த இடத்தில்தான் மோசடி நடக்கிறது என்று மதுக் கடை விற்பனையாளர்கள்
கூறுகின்றனர்.
முதல் மூன்று மாதங்கள் முடியும் வரையில் மாதாந்திரக் கட்டணம் செலுத்தாமல்
இருந்துவிட்டால், பிறகு உரிமம் ரத்தாகிவிடும். கடைக்கு வருவோருக்கு, பாருக்கு உரிமம்
உள்ளதா, ரத்தாகிவிட்டதா என்பது தெரியாது.
மறு டெண்டர் விடுவதில் அதிகாரிகள் தெரிந்தே தாமதம் செய்கின்றனர். எனவே உரிமக்
கட்டணம் செலுத்தாமலே அங்கு பார் நடத்தப்படுகிறது. மாதம் ரூ.90 ஆயிரம் கட்டணத்தை
அரசுக்குச் செலுத்தத் தேவையில்லை. அதிகாரிகளுக்கு இதில் சிறு தொகையைத் தந்துவிட்டால்
போதும்.
தமிழகம் முழுக்க 6,700 மதுக் கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 3,250 கடைகளில்
மட்டுமே பார் நடத்த உரிமம் தரப்பட்டுள்ளது. மீதி 3,450 கடைகளில் பார் நடத்த உரிமம்
இல்லை. ஆனால் ஏறத்தாழ எல்லா கடைகளுக்கு அருகிலும் பார்கள் உள்ளன என்பது
போலீஸôருக்கும், வருவாய்த் துறையினருக்கும் நன்கு தெரியும்.
இந்தக் கடைகள் மூலம் ஒவ்வொரு மாதமும் மொத்தம் ரூ.310 கோடி அரசுக்கு வருவாய்
இழப்பு. முதல் 3 மாதங்கள் போக மீதி 9 மாதங்களுக்கு கணக்கு பார்த்தால் ரூ.2794 கோடி
நட்டம். எல்லா கடைகளிலும் தினசரி சராசரி விற்பனை ரூ.1 லட்சம் என்ற அடிப்படையில்
பார்த்தால் இந்தக் கணக்கு. இதுவே கடையின் சராசரி விற்பனை ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம்
என உயரும்போது மேற்படி தொகையும் ரூ.3,000 கோடியைத் தாண்டும்.
அதிகாரிகளை சிறிய அளவில் கவனித்துவிடுவதால், இந்தத் தொகை முழுக்க பார்
உரிமையாளர்களுக்கு போய்ச் சேருகிறது.
இது மட்டுமில்லை. பாருக்கு வருவோர் மது வகைகளை வாங்கி வருமாறு பணம் கொடுத்து
அனுப்புவர். அப்போது தாங்கள் ஏற்கெனவே வைத்துள்ள போலி மது வகைகளையும், அரசுக்கு வரி
செலுத்தாமல் மது உற்பத்தி நிலையத்திடம் நேரடியாக வாங்கி வைத்துள்ள மது வகைகளையும்
கொடுத்துவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரித் தொகையும்
விற்பனை மூலமான லாபமும் சேர்ந்து கிடைக்கிறது.
இதனால் அரசுக்கு இரட்டிப்பு நட்டம் ஏற்படுகிறது. இப்படி தில்லுமுல்லுகள்
செய்து அதிக லாபம் கிடைப்பதால்தான் பார்களுக்கு அனுமதி பெற அரசியல்வாதிகளிடையே
உள்ளூர் அளவில் கடுமையான போட்டி இருக்கிறது என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு இதில் கவனம் செலுத்தினால்,
அரசுக்கு வர வேண்டிய கணிசமான வருமானம் தனி நபர்களுக்குச் செல்வதையும் அவர்கள்
செல்வாக்கு பெறுவதையும் தடுக்க முடியும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum