Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
குரும்பூர் அருகே வெடி பட்டறையில் தீ விபத்து: அ.தி.மு.க. பிரமுகர்- புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் கருகி சாவு; உருக்கமான தகவல்கள்
Page 1 of 1
குரும்பூர் அருகே வெடி பட்டறையில் தீ விபத்து: அ.தி.மு.க. பிரமுகர்- புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் கருகி சாவு; உருக்கமான தகவல்கள்
குரும்பூர்,ஜூன்.30-
தூத்துக்குடி
மாவட்டம் குரும்பூர் பக்கமுள்ள குழைக்கநாதபுரத்தில் ஞானக்கரை சுவாமி
கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே வாண வெடிகள் தயாரிக்கும் பட்டறை
இருக்கிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சத்தியசீலன்
(வயது 30) நடத்தி வந்தார்.
இங்கு உடன்குடி
ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஜோசப் மகன் மரியசிலுவை (30), நாசரேத் ஜெயபாண்டியன்
தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சின்னத்துரை (28),
குழைக்கநாதபுரத்தை சேர்ந்த பால்துரை (42), உமரிக்காடு கிராமத்தை சேர்ந்த
ஜெயசிங் (52) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள்
4 பேரும் நேற்று வழக்கம் போல் வெடிகள் தயாரிக்கும் பணியில்
ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை சுமார் 4.45 மணியளவில் வெடி பட்டறையில்
திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து
சிதறின. இதில் பட்டறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த
விபத்தில் பட்டறையில் பணிபுரிந்து கொண்டிருந்த மரிய சிலுவை, சின்னத்துரை,
பால்துரை, ஜெயசிங் ஆகிய 4 பேரும் சிக்கினர். அவர்கள் பட்டறையை விட்டு
வெளியே வர ஓடிவந்தனர்.ஆனால் பட்டறையின் தெற்கு வாசல் வழியாக தப்ப முயன்ற
மரியசிலுவை உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேரும்
பட்டறையின் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்கள் வழியாக தப்ப முயன்றனர். ஆனால்
அவர்களும் தீயில் கருகினர்.அவர்கள் உடல் கருகிய நிலையில் உயிருக்கு
போராடியபடி கிடந்தனர்.
இதுகுறித்து பட்டறை
உரிமையாளர் சத்தியசீலன் குரும்பூர் போலீஸ் நிலையத்திற்கும்,
திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ
இடத்திற்கு குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டானி, சப்- இன்ஸ்பெக்டர்கள்
சோனா விமலராணி, மாரியப்பன், கைலாஷ், கதிரேசன் மற்றும் போலீசாரும்,
திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்து
மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு உயிருக்கு
போராடியபடி கிடந்த சின்னத்துரை, பால்துரை, ஜெயசிங் ஆகிய 3 பேரையும் மீட்டு
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களை தூத்துக்குடி
மாவட்ட கலெக்டர் செல்வராஜ் பார்த்து, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல்
கூறினார்.
தீ விபத்தில் பலியான மரிய சிலுவையின்
உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி
வைக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டிருந்த சின்னத்துரை, பால்துரை ஆகிய 2 பேரும் சிகிச்சை
பலனின்றி இறந்தனர்.
இந்த வெடி விபத்து குறித்து
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர நாயர்,
ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஸ்டீபன் ஜேசுபாதம்,
திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. பொற்கொடி, தாசில்தார் வீராசாமி, நல்லூர் கிராம
நிர்வாக அலுவலர் சிவகாமி நாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை
நடத்தினர்.
மேலும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.
(பொறுப்பு) வரதராஜுவும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை
மேற்கொண்டார். அதில் சிறிய ரக வெடி தயாரிக்க அனுமதி வாங்கிவிட்டு பெரிய
அளவிலான வெடிகள் தயாரித்தது தெரியவந்தது.
இதனை
தொடர்ந்து பட்டாசு பட்டறை அருகே பெரிய ரக வெடிகள் வைக்கப்பட்டிருந்த 2
குடோன்கள் சீல் வைக்கப்பட்டன. இந்த வெடி விபத்து தொடர்பாக குரும்பூர்
போலீசார் வழக்கு பதிந்து வெடி பட்டறையின் உரிமையாளர் சத்தியசீலனை கைது
செய்தனர்.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
பெற்று வந்த ஜெயசிங்கும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால்
சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. வெடி விபத்தில் சம்பவ இடத்தில் பலியான
மரிய சிலுவைக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்க இருந்தது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஈரான் ஆயுத கிடங்கில் பயங்கர வெடி விபத்து: கமாண்டர் உள்பட 17 பேர் பலி !
» ஆண்டிப்பட்டி அருகே கோர விபத்து: பஸ்-ஆட்டோ மோதி 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி
» ஆந்திராவில் குடிசைப்பகுதியில் தீ விபத்து : 4 குழந்தைகள் கருகி சாவு
» அசாம் குடிசைப்பகுதியில் பெரும் தீ விபத்து: 2 குழந்தைகள் கருகி சாவு
» பஞ்சாப் தொழிற்சாலையில் தீ: 3 பேர் கருகி சாவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum