Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வாழை-அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவப் பயன்கள்
2 posters
Page 1 of 1
வாழை-அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவப் பயன்கள்
[You must be registered and logged in to see this image.]
நாம்
உண்ணும் ஒவ்வொரு உணவின் சுவை, அதில் நிறைந்துள்ள பல்வேறு சத்துக்கள்,
மருத்துவப் பின்னணி, எப்படி அதை சமைத்துச் சுவைப்பது என தெரிந்து கொள்வது
அர்த்தமுள்ளது மட்டுமல்ல; அவசியமானதும் ஏன் ஆனந்தமானதும் கூட.
சமீபத்தில்
வேடந்தாங்கல் போயிருந்த போது ஒரு விஷயம் ரொம்ப பிடித்தது; மனதைப்
பிசைந்தது. பல ஆயிரம் மைல்கள் கடந்து பறந்து வந்து முட்டையிட்டு குஞ்சு
பொரிக்க வரும் வெளிநாட்டுப் பறவைகள் லட்சக்கணக்கில் நிரம்பியிருந்த மாலைப்
பொழுது அது.. [You must be registered and logged in to see this image.]படபடவென
திக்கெட்டும் இருந்து வரும் தாய்ப் பறவைகள், தத்தம் குஞ்சுகளுக்காக வாயில்
எடுத்துவரும் மண்புழு, தானியங்கள், மீன்குஞ்சுகளை அழகாய் வாயில் பரிமாறும்
அழகைத் தொலைநோக்கியில் பார்க்கும் போது, அந்த சிப்பந்தி
சொன்னார்..”ஒன்றுக்கொன்று சண்டை பிடிக்காது சார்! எந்த குஞ்சுக்கு என்ன
வேணுங்கிறதோ அதை அந்தந்த தாய்ப்பறவை கரெக்டா கொடுக்கும் சார்..சுற்றி
சுற்றியுள்ள கிராமத்தில எது விளைநிலத்தில கிடைக்கிறதோ அதை எடுத்து வரும்
சார்! சைபீரியாவிலிருந்து வரும் இந்த நாரை கூட்டமும் சரி நம்ம
மதுராந்தக்க் கொக்கும் சரி எல்லாமே அப்படித்தான்;” என்றார்.
பறவையிடமும்
விலங்கிடமும் மாறாது இருக்கும் தன் தேவைக்கென, தனக்கேற்ற உணவினை மட்டும்
தேடும் இந்த மரபு ஏனிந்த ’பகுத்தறிவு மிருகங்களில்’ மட்டும் மறந்து
போயிற்று? ஒவ்வை சொன்ன வரகரிசிச் சோறும் வழுதணங்காயும், புற நானூற்றின்
தேனும் தினைமாவும் சாப்பிட்ட கந்தசாமி, ’இதல்லாம் டூப்பு..பிட்சாதான்
டாப்பு’ என மாறிப்போனது ஏன்? என்ன இல்லை நம் உணவுக் கலாச்சாரத்தில்?.
இன்றைய அறிவியலும் கூட மெச்சும் நம் மரபு வழி உணவு, தானியங்கள், மாண்புடைய
காய் கனிகளின் தனிச் சிறப்பு குறித்து தெரிந்து கொள்வது மிக முக்கியம்.
முக்கனியில்
முதல் கனியாம் வாழையில் இருந்து வாசிப்பை துவங்குவோமா?. வாழை
நெடுங்காலமாய் நம் பசியாற்றிய கனி. நம் மூதாதையர் குரங்கினத்தாருக்கும்
பிடித்த அந்த அமுதுணவு தோன்றியது நம் ஆசியாவில் தான். இந்தியா மலேயா
பகுதியில் இக்கனி தோன்றியிருக்கக் கூடும் என்கிறது ஆய்வுகள். அந்நாளின்
வாழைகனியில் அழகழகாய் விதைகளுண்டு தெரியுமா? விதைவழி இன விருத்தி
அவசியமில்லாதபடி பக்க்க் கன்று மூலம் விருத்தியடைந்ததில் நாளடைவில்
விதைகளில்லா வாழை கலப்பினவிருத்தியாக விவசாயம் செய்யப்பட்டது. அன்றைய
விதையுள்ள வாழையிலிருந்து இன்று ’லேத்திலடித்து செதுக்கி பவுடர் கோட்டிங்
செய்து விற்கிறார்களோ?” என்று ஐயப்படும் படி வரும் கேவண்டிஷ் வாழை வரை-
வீரிய ஒட்டுரக வளர்ச்சியில் வாழையின் பரிமாணம் மாறிக்கொண்டே வருகிறது.
இன்னும் அதிகம் மாறாத நாக்ர்கோயில் மட்டி, கொடை ரோடு மலைப்பழம்,
களியக்காவிளை செவ்வாழை, கேரளத்து நேந்திரன் வாழை, நெல்லை மாவட்ட
நாட்டுப்பழம், திருச்சியின் மொந்தனும் கோழிக்கூடும் கூட கலப்பின வீரியமாக
இருந்தாலும் அதிகம் மரபை மறக்காதவை. ’மரபணு மாற்றிய’ வாழை வருமுன் இந்த
பாரம்பரிய வாழையின் பரவசமூட்டும் பயனை புரிந்து கொண்டு சுவைத்துப் பலன்
பெறுவோம்.

”வாழைப்பழமா?
அய்யோ! வெயிட் போட்டுடும்” “யூ மீன் பனானா? சளிப்பிடச்சிடாது?” எனும் கர்ண
பரம்பரை கதையும் கான்வென்ட் பரம்பரைக் கதையும் நிரம்பிய ஊர் இது.
நேந்திரன் வாழை மட்டும் தான் உடல் எடை அதிகரிக்க உதவும். பிற
வாழைப்பழங்கள் அளவோடு சாப்பிட்டால் எடை ஏறாது. சின்னதாய் ஒரு வாழைப்பழம்
70-90 கலோரி தரும்.(சுமார் 2 மீடியம் சைஸ் இட்லிக்கு 80 கலோரி உண்டு). ஒரு
நாளைக்கு நமக்கு கிட்டத்தட்ட 2000 கலோரி தேவைப்படுகையில் 80 கலோரி தரும்
வாழை எப்படிங்க வெயிட் போடும்? அதிக சர்க்கரைச் சத்து தவிர, பிற வாழையின்
அத்தனை சத்தும் நமக்கு ரொம்பவே தேவையானது. சுகர் நோயாளி தவிர பிறருக்கு
வாழை ஒரு சூப்பர் சிறப்பு உணவு. எப்படி?
கொழுப்பு இல்லாத உணவு
வாழைப்பழம். அதன் கால்சியச் சத்தினால் இடுப்பு சதை குறையும் என்றும் கூட
ஒரு ஆய்வு சொல்கிறது. நிறைய கால்சியம் கூடுதல் பொட்டாசியமும் உள்ள இந்த
வாழை உடனடி எனர்ஜி டானிக். தசை வளர்ச்சிக்கும் இருதயத்திற்கும் நன்மை
பயக்கும் இந்த வாழையின் பொட்டாசிய சத்து. இதிலுள்ள நரம்புகளுக்கு வலு
ஏற்றும் செரடோனின் சத்தும், நாரெபினெஃப்ரின் சத்தும் வேறு பழங்களில்
அதிகம் கிடையாது. புதுமணத் தம்பதியரை பாலும் பழமும் கொடுத்து
மகிழ்விப்பதன் அர்த்தம் இந்த ’செரடோனின் சங்கதியாலும்’ தான்.
திடீரென
தூக்கத்தில் கால் கெண்டைச் சதை மேலுக்கேறி படுக்கையில் இருந்து துள்ளிக்
குதித்தெழுந்து அலரும் நபருக்கு அவரது muscle cramps-ஐ சரிசெய்யும்
electrolytes நிறைந்த வாழைப்பழம் சரியான மருத்துவ உணவு. மலச்சிக்கலில்
அவதிப்படுவோருக்கு கனிந்த வாழைப்பழம் தினசரி கடைசி விருந்து. வயிற்றுப்
புண்ணில் அவதிப்படும் நபர்கள் தினசரி வாழைப்பழம் சாப்பிடுவது புண்ணாற்றி
வலி நீக்கிட உதவும்.[You must be registered and logged in to see this image.]
நோஞ்சானாய்
இருக்கிறானே என உங்கள் குழந்தை குறித்து கவலையாய் உள்ளதா? தினம்
நேந்திரம்பழத் துண்டுகளில் கொஞ்சம் தேன் தடவி நல்லதாய் ஒரு கதை சொல்லி,
அதிகம் மிரட்டாமல் அன்போடு கொடுத்துவாருங்கள். சீக்கிரம் ’புஜ்ஜு’
கண்ணாவாகி விடுவான். பழமாய் அதைச் சாப்பிட மறுக்கும் வாண்டுகட்கு,
வெல்லப்பாகில் நேந்திரந்துண்டுகளை வேகவிட்டு ஏலக்காய் தூவி எடுங்கள். பின்
அதனை அழகான பீங்கான் ஸ்னாக் பாக்ஸில் போட்டு, ஃபோர்க் கொடுத்து மாலையில்
கொஞ்சமாய் கொடுங்கள்.[You must be registered and logged in to see this image.] முடிந்தால் அதற்கு ’பனானா டிலைட்’ என்று லேபிள் ஒட்டிவிடுங்கள். உடல் எடை உயர்த்தும் உற்சாக கேரள உணவு அது.
வாழை
ஓர் அற்புத பழ உணவு. பல நோயையும் நீக்கும் மருந்து. குடற்புண்,
குடற்கிருமி போக்கும் இந்த பழம், மற்ற மேனாட்டு ’பாலிஷ்’ போட்டு லேபிள்
ஒட்டி வரும் பழங்களுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல. கொஞ்சம் இளக்காரமாய்
வாழைப்பழத்தைப் பார்க்கும் ம்னோபாவம் இளைய தலைமுறையிடம் பெருகி வருகிறது.
மறந்துபோய் அதை மாற்றத் தவறி விட்டால், நாளை வாழைப்பழம் மறை(ற)ந்து
விடும். பதிலாக அதிலிருந்து எடுக்கப்படும் சத்துக்கள் மட்டும் லேபிள்
ஓட்டி ஆங்கில்ப் பெயருடன் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சீட்டில் கடைசி வரியாய்
கண்டிப்பாய் இடம்

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: வாழை-அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவப் பயன்கள்
வாழை பழத்தில் இவளவு உள்ளதா ?
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் !! (I.A.S)
» வெளுத்ததெல்லாம் பால் அல்ல ....பாலுக்குள் இருக்கும் பாய்சன் - நாம் அறிந்து கொள்ள வேண்டிய அதிர்ச்சி தகவல்கள்
» வாழை இலையின் பயன்கள்....
» சீரகத்தின் மருத்துவப் பயன்கள்
» வாழை இலையின் பயன்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum