Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:00 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:38 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 07, 2024 4:22 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சாதிக் தற்கொலை விசாரணை: ரகசியம்... ரகசியம்...!
Page 1 of 1

ஸ்பெக்ட்ரம் வழக்கில், முக்கிய துருப்புச் சீட்டான சாதிக் பாட்சா
தற்கொலை வழக்கில், பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்ற, சி.பி.ஐ.,யின் அடுத்த
கட்ட நடவடிக்கைகள் அனைத்தும், ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், பரபரப்பு
நிலவி வருகிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா,
கனிமொழி, சரத்குமார், சாகித் பால்வா உள்ளிட்டவர்கள், தற்போது சிறையில்
உள்ளனர். இந்த வழக்கில் பணப்பரிமாற்றம் உள்ளிட்டவற்றை கவனித்ததாக
கூறப்படும் ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை விவகாரம்,
அடுத்த கட்ட குற்றப்பத்திரிகைகளில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. சாதிக்
பாட்சா தொடர்பான வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பது குறித்த
தகவல்கள், ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. "ஸ்பெக்ட்ரம்' ராஜாவின் நண்பரான
சாதிக் பாட்சா, 37, சென்னை, தேனாம்பேட்டையில்,"கிரீன் ஹவுஸ்' புரமோட்டர்ஸ்
நிறுவனம் நடத்தி வந்தார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜா கைதைத்
தொடர்ந்து, சாதிக் பாட்சாவின் வீட்டிலும், அலுவலகத்திலும் சி.பி.ஐ.,
ரெய்டு நடத்தியது.
கடந்த மார்ச் 17ம் தேதி பகல், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டதாக, அவரது உடல், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து மர்மமாக
பொதியப்பட்டு, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
முடிந்து, உடல் ஒப்படைக்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடையவர்
என்பதால், சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. தொடர்ந்து,
சி.பி.ஐ.,யும் இந்த வழக்கை கையில் எடுத்து விசாரணையை துவக்கியது. சென்னை
சி.பி.ஐ., அதிகாரிகள், மத்திய தடயவியல் நிபுணர்கள், சாதிக்கின் வீட்டில்
தடயங்களை ஆய்வு செய்தனர். சென்னை போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆர்.,
விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், ஒரு சில விஷயங்கள் ஒத்துப்போகாதது
சி.பி.ஐ.,க்கு சந்தேகத்தை கிளப்பியது. தொடர்ந்து, சி.பி.ஐ.,யின் வழக்கு
பதிவில், "தற்கொலை' என இருந்தாலும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற
கோணத்தில் தன் விசாரணையை துவக்கியது. முதற்கட்டமாக, மனைவியிடம் விசாரணை
நடந்தது. சம்பவம் நடந்த போது அவர் எங்கிருந்தார் என்பதற்கான விவரங்கள்
பதிவு செய்யப்பட்டுள்ளன. சாதிக் மனைவியின் பதிலில் சில விஷயங்களும்
சி.பி.ஐ.,யின் சந்தேகத்திற்கு தூபம் போடும் அளவிற்கு இருந்ததாக
கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, தன் விசாரணையை சி.பி.ஐ., துரிதப்படுத்தியது. இந்த
விஷயத்தில் முக்கியமானது, சாதிக்கின் பிரேத பரிசோதனை அறிக்கை. இதை
பெறுவதற்குள் சென்னை போலீசும், சி.பி.ஐ.,யும் பகீரத பிரயத்தனம் செய்ய
வேண்டியதாகிவிட்டதாக கூறப்படுகிறது. சாதிக்கின் உடல் ராயப்பேட்டை அரசு
மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது, டாக்டர் டிகால்
தலைமையில், சென்னை மருத்துவக் கல்லூரி தடயவியல் இயக்குனர் நந்தகுமார்
உள்ளிட்டோர் இருந்தனர். சாதிக்கின் உடல் பிரேத பரிசோதனை முழுவதும் தனியார்
வீடியோ கிராபர் மூலம் பதிவு செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில், சாதிக்கின் கழுத்துப்பகுதி சதை, "பேத்தாலஜி
லேபிற்கு' அனுப்பப்பட்டதுடன், "விஸ்ரா' குடல் பரிசோதனைக்கும் தேவையான உடல்
பாகங்கள் அனுப்பப்பட்டன. ஆய்வு முடிந்த பின், பிரேத பரிசோதனை மற்றும்
அறிக்கை தயாரிப்பதில் சென்னை அரசு பொது மருத்துவமனை பாரன்சிக்(தடயவியல்)
துறை இயக்குனர் ஒப்புதலும் வெளியிடுவது வழக்கம். இந்த வழக்கை பொறுத்தவரை,
இயக்குனரும் பிரேத பரிசோதனையின் போது உடன் இருந்துள்ளார். ஆனால், இந்த
வழக்கில் டாக்டர் டிகால் மட்டும் அறிக்கையை வெளியிட, அவருக்கு அழுத்தம்
தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், டாக்டர் டிகால், தடயவியல்
இயக்குனர் மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துமனை சூப்பிரண்டு அடங்கிய
குழுதான் அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
இறுதியாக, அவரிடம் இருந்தே அறிக்கை பெறப்பட்டுள்ளது. அந்த அறிக்கை
தற்கொலைக்கும், கொலைக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளதாக
கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, நடந்த விசாரணைகள், சி.பி.ஐ., தரப்பில் ரகசியமாக
வைக்கப்பட்டு வருகிறது. சாதிக் விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு, "நாங்கள்
இப்போது வேறு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். சாதிக் விவகாரத்தில்
ஒன்றுமில்லை' என்ற பதிலே சி.பி.ஐ., அதிகாரிகளிடம் இருந்து வெளி வருகிறது.
இருந்தாலும், தற்கொலை சம்பவம் நடந்த அன்று, வழக்கு பதிவு செய்த
தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்ளிட்ட சிலரை சி.பி.ஐ.,
அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில், சாதிக் தற்கொலை
தகவல் கிடைத்தது, மனைவியை அழைத்து வந்தது, மருத்துவமனையில் சாதிக்கின்
உடலில் துணி போர்த்தப்பட்டது, உடன் இருந்தவர்கள், சாதிக்கின் வீட்டில்
கிடைத்த தடயங்கள் உள்ளிட்ட அடிப்படை பதிவுகள் குறித்து தீவிர விசாரணை
நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சாதிக்கின் மனைவி
ரேகாபானு, வீட்டில் இருந்த கார் டிரைவர்கள் உள்ளிட்டோரிடமும் மீண்டும்
சி.பி.ஐ., விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ஸ்பெக்ட்ரம்
விவகாரம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், சாதிக் விவகாரத்தில் உண்மையை
கண்டறியும் பணியில் உள்ள சி.பி.ஐ., தகவல்களை வெளியிட தயங்குவது வழக்கின்
போக்கை சந்தேகத்திற்குரியதாக மாற்றுகிறது.
என்ன செய்கிறார் டிகால்? சாதிக் பாட்சா உடலை பிரேத பரிசோதனை
செய்ததற்குப் பின், தடயவியல் மருத்துவ நிபுணரான டிகால் சந்தித்த பல்வேறு
பிரச்னைகளுக்கு, அவரே காரணமாகிவிட்டார். அதிலும், பிரேத பரிசோதனை முடிந்து
வெளியில் வந்ததும், பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்தது அவருக்கு
பெரும் வினையாக மாறிவிட்டது. இருந்தாலும், எதிலும் பிடிகொடுக்காமல்,
பத்திரிகையாளர்களுக்கு தெளிவாக பதிலளித்திருந்தார். கடந்த மாதம் 16ம்
தேதி, சாதிக்பாட்சா பிரேத பரிசோதனை அறிக்கையை சி.பி.ஐ., வசம் டிகால்
அளித்துள்ளார். அதற்கு முன், விளக்கம் கேட்டு, நான்கு கேள்விகளுடன்
நோட்டீஸ் டிகாலுக்கு வந்து சேர்ந்ததாக கூறப்படுகிறது. அதில் இரண்டு
கேள்விகள் மிக முக்கியமானவை.
* வழக்கு விசாரணையில் இருக்கும் போது, பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்க யார் அதிகாரம் அளித்தது?
* நாங்கள் உங்களை பணியில் இருந்து விடுவிக்காத போது, தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தது எப்படி?
* ஏற்கனவே முடித்த பிரேத பரிசோதனை தொடர்பான வழக்குகள் நிலுவையில்
உள்ளனவே, அதை எப்படி தீர்ப்பது என்பது உள்ளிட்ட நான்கு கேள்விகள்
கேட்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கேள்விகளுக்கு தீர்க்கமாக பதிலளித்துள்ள டிகால், வழக்குகளுக்கு
தொடர்ந்து ஆஜராகி சாட்சியம் அளித்து வருவதாகவும் விளக்கம்
அளித்துள்ளாராம். தற்போது, டாக்டர் டிகால் அரசு மருத்துவமனை பணியில்
இல்லாமல், வெளியில் வேறு எங்கும் பணியில் சேராமல், விடுவிப்பு ஆணையை
எதிர்பார்த்திருப்பதாக தெரிகிறது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ராஜாவின் நண்பர் சாதிக் யார்? ரூ.500 கோடிக்கு மேல் சொத்து குவித்த ரகசியம்
» தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம்? சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி
» சாதிக் பாட்ஷா சாகும் முன் காரில் வந்து மிரட்டியது யார்? விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு
» கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு காதலி தற்கொலை-காதலனும் தற்கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|