Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
திருத்திய கட்டணத்தையும் ஏற்க இயலாது : தனியார் பள்ளிகள் மீண்டும் எதிர்ப்பு
Page 1 of 1

மதுரை : "தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கட்டணத்தை ஏற்க முடியாது' என, மீண்டும் தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சுயநிதியில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கட்டணத்தை,
நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு வெளியிட்டது. இதையடுத்து,
முதன்மை கல்வி அலுவலகத்தில் பள்ளி நிர்வாகங்களிடம், நேற்று புதிய கட்டண
பட்டியலை வழங்கினர். மொத்தம் 310 பள்ளிகளில், 125 மெட்ரிக் பள்ளிகள், 156
நர்சரி பள்ளிகள், 16 மாநில பாடத்திட்ட பள்ளிகள் என, 297 பள்ளிகளுக்கு
கட்டணம் வெளியிடப்பட்டது. பல பள்ளிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தின.
மதுரை கோச்சடை செவன்த்டே பள்ளியின் முதல்வர் ரத்னதுரை:கோவிந்தராஜன்
கமிட்டி நிர்ணயம் செய்த போது எங்கள் பள்ளியின் எல்.கே.ஜி., வகுப்புக்கு
5,000 ரூபாய் நிர்ணயித்தனர். மேல்முறையீட்டின் போது நாங்கள் 7,000 ரூபாய்
வரை நிர்ணயிக்கும்படி கூறினோம். ஆனால், நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி
4,000 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. நாங்கள் எதிர்பார்த்த தொகை
கிடைக்காததால், மற்ற பள்ளிகளை கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்வோம்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் பாதுகாப்பு நலச்சங்க மாநில பொதுச் செயலர்
ஜி.சுரேஷ்:திருத்தப்பட்ட கல்வி கட்டணத்தையும் ஏற்க முடியாது. கடந்த ஆண்டை
விட எவ்வகையிலும் கட்டணம் அதிகரிக்கவில்லை. கோவிந்தராஜன் கமிட்டி
எல்.கே.ஜி., வகுப்புக்கு 1,000 ரூபாய் நிர்ணயித்தது. நாங்கள் 50 சதவீதம்
கூடுதலாக 1,500 ரூபாய் நிர்ணயிப்பர் என எதிர்பார்த்தோம். ஆனால், 1,200
ரூபாய் நிர்ணயித்துள்ளனர்.பல பள்ளிகளில் கீழ் வகுப்புகளுக்கு அதிகமாகவும்,
மேல் வகுப்புகளுக்கு குறைவாகவும் நிர்ணயித்துள்ளனர். கட்டணம் மூன்று
ஆண்டுகளுக்கு என அறிவித்ததையும் ஏற்க இயலாது. மேலும் அங்கீகாரம் பெற்றவை,
பெறாதவை என பார்க்கக் கூடாது. ஏனெனில், விண்ணப்பித்த பள்ளிகளில் பல
விரைவில் அங்கீகாரம் பெறும் வாய்ப்பு உள்ளன. எனவே, இது தொடர்பாக
கோர்ட்டில் முறையிடுவது குறித்து பரிசீலிப்போம்.தமிழக முதல்வர்
இவ்விஷயத்தில் தலையிட்டு, நல்ல முடிவு காண வேண்டும். மருத்துவம்,
பொறியியல் கல்லூரிகளுக்கு மாநில அளவில் ஒரே மாதிரியான கட்டணம்
நிர்ணயிப்பது போல, பள்ளிகளுக்கும் நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள்
கூறினர்.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 41 மெட்ரிகுலேஷன்
பள்ளிகள், 125 தனியார் நர்சரி பள்ளிகள், 16 சுயநிதி பள்ளிகள் மற்றும் ஒரு
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. இதில் பிரைமரி நர்சரி பள்ளிகள் 68,
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 38, சுயநிதி தனியார் பள்ளிகள் 9 மற்றும்
சி.பி.எஸ்.இ., பள்ளி ஒன்று என 116 பள்ளிகள் மறு கட்டணத்திற்கு
மேல்முறையீடு செய்யப்பட்டன. இவர்களுக்கான மறு கட்டண அறிவிப்பு தற்போது
வெளியிடப்பட்டது. புதிய கட்டண விவரம் குறித்த நோட்டீஸ் அந்தந்த பள்ளிகளில்
ஒட்ட வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதற்கு தனியார்
பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துச் சென்றனர்.மறு கட்டண உத்தரவில்,
மாவட்டத்தில் பிரைமரி, நர்சரி பள்ளிகளுக்கு எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,
முதல் 5ம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 1,250 ரூபாயும், அதிகபட்சமாக 4,000
ரூபாயாக இருந்தது. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் குறைந்தபட்சம் 5,000 முதல் 12
ஆயிரம் ரூபாய் வரையும், சுயநிதி தனியார் பள்ளிகளில் அதிகபட்சமாக 6,000
ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை
முடிந்த நிலையில், ஒவ்வொரு மாணவரிடமும், அறிவிக்கப்பட்டதை போல் மூன்று
மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.தற்போது அரசு அறிவித்த கட்டணம்
போதுமானதாக இல்லை என்றும், இதில் ஏற்படும் பற்றாக்குறையை போக்க,
மாணவர்களிடம் வேறு வழியில் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று
தெரிவிக்கின்றனர்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» போச்சம்பள்ளி சம்பவம்: இன்று தனியார் பள்ளிகள் மூடல்- அரசு கடும் எச்சரிக்கை
» ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 7ஆம் தேதி தனியார் பள்ளிகள் மூடல்!
» குறும்பு செய்யும் குழந்தைக்கு எறும்புக்கடி : தனியார் பள்ளிகள் குரூரம்
» அடுத்தது என்னவோ? அலறும், தனியார் பள்ளிகள் : கல்வித்துறை மீது அதிருப்தி
» பிளஸ் 2 தேர்வில் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்ததில் தனியார் பள்ளிகள் ஆதிக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum