TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 11:10 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை துவக்கம்: அ.தி.மு.க., புறக்கணிப்பு

Go down

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை துவக்கம்: அ.தி.மு.க., புறக்கணிப்பு Empty தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை துவக்கம்: அ.தி.மு.க., புறக்கணிப்பு

Post by mmani Tue Jun 14, 2011 7:34 am

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை துவக்கம்: அ.தி.மு.க., புறக்கணிப்பு Large_257174தூத்துக்குடி: தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை, நேற்று
மாலை மத்திய அமைச்சர் வாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இலங்கை மீது
பொருளாதார தடை விதிக்க வேண்டுமென சட்டசபையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டதால், இவ்விழாவை அ.தி.மு.க., அமைச்சர், தமிழக அரசு
அதிகாரிகள் புறக்கணித்தனர்.
தென் தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, இக்கப்பல் சேவைக்கு,
இந்திய - இலங்கை அரசுகள் அனுமதியளித்தன. இதற்காக, "பிளமிங்கோ லைனர்ஸ்'
என்ற நிறுவனம், "ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற பிரமாண்ட, "ஏசி' கப்பலை,
தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் கொண்டு வந்தது. இக்கப்பல் வெள்ளோட்டம்,
மே 28ல் நடந்தது. கப்பல் சேவை துவக்க விழாவையொட்டி, இதில் பயணம் செய்ய
முன்பதிவு செய்திருந்த 121 பயணிகள், நல்லெண்ண தூதுவர்களாக துறைமுக
ஊழியர்கள் 80 பேர் என, மொத்தம் 201 பேர், நேற்று மதியம் 1.30 மணியளவில்,
சுங்கச் சோதனை முடித்து, கப்பலில் ஏற அனுமதிக்கப்பட்டனர். மத்திய அமைச்சர்
வாசன், கப்பலுக்குள் சென்று அவர்களைப் பார்த்து வாழ்த்து தெரிவித்தார்;
மாலுமிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். பின், வ.உ.சி., துறைமுக கப்பல்
தளத்திற்கு வந்து, 3.15 மணியளவில் பச்சைக் கொடியசைத்து, கப்பல் பயணத்தை
துவக்கி வைத்தார். அப்போது, கப்பலில் சைரன் ஒலித்தது; வண்ண பலூன்கள் பறக்க
விடப்பட்டன. எம்.பி.,க்கள் ராமசுப்பு - நெல்லை, ஜெயதுரை - தூத்துக்குடி,
துறைமுகத் தலைவர் சுப்பையா, அதிகாரிகள் உடனிருந்தனர். இக்கப்பல் இன்று
காலை கொழும்பு துறைமுகம் சென்றதும், நல்லெண்ண தூதுவர்களாக சென்றவர்கள்,
கொழும்பிலுள்ள முக்கிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு,
மீண்டும் கப்பலுக்கு திரும்புவர். இன்று மாலை, இக்கப்பல் கொழும்பிலிருந்து
தூத்துக்குடி புறப்படுகிறது.
அ.தி.மு.க., அமைச்சர் புறக்கணிப்பு: இலங்கைத் தமிழர்களின்
நல்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்காத அந்நாடு மீது, பொருளாதார தடை விதிக்க,
மத்திய அரசை வலியுறுத்தி கடந்த வாரம் சட்டசபையில் முதல்வர் ஜெ., தீர்மானம்
கொண்டு வந்தார். இந்நிலையில், கப்பல் சேவை துவக்க விழா அழைப்பிதழில்,
பெயர் இடம் பெற்றிருந்தும், தூத்துக்குடி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வான,
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் செல்லபாண்டியன் மற்றும்
ஆளுங்கட்சியினர், கலெக்டர் உள்ளிட்ட தமிழக அரசு அதிகாரிகள் இவ்விழாவை
புறக்கணித்தனர்.
வாரம் இருமுறை இயக்கம்: மொத்தம் 1,044 பேர் பயணம் செய்யக்கூடிய
இக்கப்பல் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்தும்,
புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பிலிருந்தும் இயக்கப்படுகிறது. மாலை 6
மணிக்கு புறப்பட்டு மறுமுனையை மறுநாள் காலை 8 மணிக்கு (14 மணி நேரம்)
சென்றடையும்.
"104 ஆண்டிற்கு பின் மீண்டும் துவங்கிய கப்பல் சேவை': ஆங்கிலேய
அரசை எதிர்த்துப் போராடிய விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி.,
இத்துறைமுகத்திலிருந்து, 1907, ஜூன் மாதம், "கலிலியோ, லாவோ' என்ற இரண்டு
வணிக சுதேசி கப்பல்களை இயக்கினார். இதன் பின், சில மாதங்களில்,
ஆங்கிலேயர்களால் இக்கப்பல் போக்குவரத்து, தடை செய்யப்பட்டது. இதையடுத்து,
104 ஆண்டுகளுக்குப் பின், தற்போது மீண்டும் தூத்துக்குடி - கொழும்பு இடையே
கப்பல் சேவை, அவர் பெயரைக் கொண்ட துறைமுகத்தில் இருந்தே துவங்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வ.உ.சி., கண்ட கனவு நனவாகியுள்ளது.
"பயமும், சந்தோஷமும் கலந்த பயணம்' : * மதியம், 12.30 மணிக்கு,
"ஏசி' சொகுசு கப்பலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு,
கப்பல் முழுவதும் சுற்றிக்காட்டப்பட்டது. அதில் பணிபுரிவோர் ஒவ்வொரு
இடங்கள் குறித்தும் விளக்கினர்.
* இந்த கப்பல் பயணம் தங்களுக்கு
கொஞ்சம் பயமாகவும், சந்தோஷமாகவும் உள்ளதாக, சுங்க சோதனை முடிந்து,
பயணத்திற்கு தயாரான துறைமுக பெண் ஊழியர்கள் தெரிவித்தனர்.
* மத்திய
அமைச்சர் வாசன், கொடியசைத்து பயணத்தை துவக்கி வைத்தபோது, கப்பலில் இருந்த
பயணிகள், தேசியக்கொடியை அசைத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
* இந்த
கப்பல் பயணம் மூலம், துறைமுகத்திற்கு, ஆண்டுக்கு, 7.2 கோடி ரூபாய்
வருமானம் கிடைக்குமென வ.உ.சி., துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
* இக்கப்பல் சேவை மூலம் இந்தியா, இலங்கையிடையே கலாசாரம், சுற்றுலா, வணிகம் மேம்படும்.
*1832ல் இத்துறைமுகத்திலிருந்து கொழும்புவிற்கு தோணி மூலம் சரக்கு போக்குவரத்து துவங்கி, தற்போதும் நடந்து வருகிறது.
வ.உ.சி., கண்ட கனவு நிறைவேறியுள்ளது: மத்திய அமைச்சர் வாசன் பெருமிதம் :
தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் நேற்று மாலை, தூத்துக்குடி -
கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை துவக்கி வைத்து, மத்திய அமைச்சர் வாசன்
பேசியதாவது: தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 1907 ஜூனில், இரு சுதேசி
கப்பல்களை வ.உ.சி., இயக்கினார். பின்னர், அது ஆங்கில அரசால் தடை
செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் இங்கிருந்து கொழும்பிற்கு பயணிகள்
கப்பல் இயக்கப்படுகிறது. இதன் மூலம் வ.உ.சி., கண்ட கனவு நிறைவேறியுள்ளது.
இந்தியா - இலங்கை விமானக் கட்டணத்தை விட, இக்கப்பலில் கட்டணம் குறைவு.
இதனால், அனைத்து தரப்பினரும் குறிப்பாக நடுத்தர மக்கள் பயன் பெற முடியும்.
இக்கப்பல் போக்குவரத்து, அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு பெறும் என
நம்பிக்கையுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள்
கப்பல் இயக்குவதற்கான, ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்த
பின், இப்பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் இயக்கப்படும். விழா
தொடர்பாக, மத்திய கப்பல் துறை அமைச்சகம் மூலம் அழைப்பிதழ்
அச்சடிக்கப்பட்டு, துறைமுகத் தலைவர் மூலம் அமைச்சரிடம் ஒப்படைத்து தகவல்
தெரிவிக்கப்பட்டது.இலங்கையில், சட்ட ரீதியாக சிங்களர்களுக்கு நிகராக
தமிழர்களுக்கும் சம உரிமை, முழு பாதுகாப்பு கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து
முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை
அமைச்சக அதிகாரிகள் அங்கு சென்று, அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசினர்.
இவ்வாறு வாசன் பேசினார்.
கட்டண விவரம் வெளியீடு: இங்கிருந்து கொழும்பு செல்ல குறைந்த
பட்ச கட்டணம் 2,990 ரூபாய், அதிக பட்ச கட்டணம் 19,550 ரூபாய்.
கொழும்புவில் இருந்து தூத்துக்குடி வர குறைந்த பட்ச கட்டணம் 3,128 ரூபாய்,
அதிக பட்ச கட்டணம் 20,470 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துவக்கவிழா
சிறப்பு கட்டணம் 2,243 ரூபாய். கப்பலுக்கு சென்றவுடன் தரப்படும்
குளிர்பானம் மற்றும் வரையறை செய்யப்பட்ட இரவு உணவு விலை ஆகியவையும்
பயணக்கட்டணத்தில் அடங்கும். இதுதவிர, கப்பலிலுள்ள கேன்டீனிலும் பணம்
கொடுத்து தேவைக்கேற்ப உணவுப் பொருட்களை வாங்கலாம். இதில், குழந்தைகள்
மற்றும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையும் உண்டு. இதற்கான டிக்கெட்
விற்பனை உரிமத்தை, தூத்துக்குடி மூன்று தனியார் நிறுவனத்தினர்
பெற்றுள்ளனர்.டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது.
பயணிகளுக்கான விதிமுறைகள்: கப்பலில் பயணம் செய்பவர்கள் 4 மணி
நேரத்திற்கு முன்பே வரவேண்டும். டிராவல்பேக், லேப்டாப் பேக் உள்ளிட்ட
ஏதாவது இருபொருட்களை தங்களது அறைக்கு எடுத்துச் செல்லலாம். இதுதவிர,
எக்கனாமி வகுப்பு பயணிகள் 100 கிலோ எடை வரையும், முதல் வகுப்பு பயணிகள்
200 கிலோ எடை வரையும் லக்கேஜ்களை கொண்டு செல்லலாம். வெளியில் வாங்கப்பட்ட
மதுபானங்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.
பாஸ்போட் அவசியம்: இக்கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர்
கண்டிப்பாக பாஸ்போட் வைத்திருக்க வேண்டும். இலங்கை சென்றவுடன் அவர்களுக்கு
அந்நாட்டு அரசு சார்பில் சுற்றுலா விசா வழங்கப்படும். 30 நாட்கள் வரை இது
செல்லுபடி ஆகும். அதற்குள், அவர்கள் கொழும்புவிலிருந்து தூத்துக்குடி வர
வேண்டும்.

பயணிகள் கட்டணத்திற்கான விவரம்
வகுப்பு பிரிவு தூத்துக்குடி - கொழும்பு கொழும்பு - தூத்துக்குடி
1.எக்கனாமி தனிபடுக்கை ரூ.2,990 - ரூ.3,128
அறை(2 பேர்) ரூ.5,980- ரூ.6,210
அறை(4 பேர்) ரூ.11,960 -ரூ.12,420
2.சிறப்பு வசதி அறை
(மாற்றுத்திறனாளிகள்) தனிபடுக்கை ரூ.2,990 -ரூ.3,128
அறை(4 பேர்) ரூ.11,960 -ரூ.12,512
3. டீலக்ஸ் அறை தனிபடுக்கை ரூ.3,450 - ரூ. 3,680
அறை(4 பேர்) ரூ.13,800 - ரூ.14,260
------------ ---
4. சூப்பர் டீலக்ஸ் அறை
தனிபடுக்கை ரூ.3,680 - ரூ.3,910
அறை(2 பேர்) ரூ.7,360- ரூ. 7,590
அறை(4 பேர்) ரூ.14,260 -ரூ.14,720
-- -------------------
5. முதல் வகுப்பு அறை
அறை(2 பேர்) ரூ.13,800 - ரூ. 14,220
அறை(4 பேர்) ரூ. 19,550 - ரூ.20,470
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் ஆன்லைன் சேவை துவக்கம்
» அமெரிக்கா கப்பல் ஊழியர்கள் 35 பேர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு: தூத்துக்குடி கடலோர காவல் படை நடவடிக்கை!
» டைட்டானிக் கப்பல் முழ்கியதன் 100-ம் ஆண்டு தினத்தையொட்டி, கப்பல் பாகங்கள் ஏலம்!
» சட்டசபை புறக்கணிப்பு – திமுக முடிவு
» உ.பி, பிகாருக்கு சிறப்பு நிதி: மே.வங்கம் புறக்கணிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum