TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: இந்தியாவின் யோசனையை நிராகரித்தது இலங்கை?

Go down

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: இந்தியாவின் யோசனையை நிராகரித்தது இலங்கை? Empty தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: இந்தியாவின் யோசனையை நிராகரித்தது இலங்கை?

Post by mmani Mon Jun 13, 2011 8:46 am

கொழும்பு, ஜூன் 12: இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது
தொடர்பாக இந்தியா தெரிவித்த யோசனைகளை இலங்கை நிராகரித்துவிட்டது என
அந்நாட்டிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலம் மற்றும் காவல்துறை
சார்ந்த அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்க முடியாது என்று இலங்கை அரசு
தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.
இதனிடையே, இலங்கை இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பணியை
நாடாளுமன்றத்திடம் ஒப்படைப்பது என அதிபர் ராஜபட்ச திட்டமிட்டுள்ளதாக அதிகார
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா
ராவ், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்தியக் குழு அதிபர்
ராஜபட்சவை சனிக்கிழமை சந்தித்துப் பேசியது. இலங்கையில் வாழும் தமிழர்கள் பிரச்னைக்கு
விரைவில் அரசியல் ரீதியில் தீர்வு காணுமாறு இந்தியா சார்பில் அப்போது
வலியுறுத்தப்பட்டது.
இந்திய-இலங்கை அமைதி உடன்பாட்டின்படி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு
அளிக்கப்பட வேண்டும் என்று அப்போது கூறப்பட்டது. இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல்
ரீதியில் தீர்வு காண்பதற்காக 1987-ம் ஆண்டே 13-வது அரசியல் சாசன சட்ட திருத்தம்
கொண்டு வரப்பட்டது. அதன்படி ஈழத் தமிழர் பகுதிக்கு சுய அதிகாரம் அளிப்பதில் இலங்கை
அரசு தீவிரமாக உள்ளதாகத் தெரிகிறது என்று சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம்
பேசிய சிவசங்கர் மேனன் கூறினார்.
ஆனால், இந்தியக் குழுவினர் சனிக்கிழமை மாலை இந்தியா திரும்பிய பிறகு இந்தியா
தரப்பில் தெரிவிக்கப்பட்ட யோசனைகள் நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முக்கியமான அரசியல் அதிகாரங்கள், வசிப்பிடங்கள் மீதான அதிகாரம் ஆகியவற்றை
மாகாண அரசுகளுக்கு விட்டுத் தர முடியாது என்று இந்தியக் குழுவினரிடம், இலங்கை
தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
காவல்துறை மற்றும் நிலம் மீதான அதிகாரத்தை மாகாண அரசுகளுக்கு வழங்க முடியாது
என்று இலங்கை தெரிவித்துள்ளது, இந்தியா அளித்த யோசனைக்கு எதிராக அமைந்துள்ளது. இது
இரு நாட்டு அரசியல் தலைமைக்கு இடையே நெருடலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக ""சண்டே
டைம்ஸ்'' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிபர் ராஜபட்ச மற்றும் இந்தியக் குழுவினருடனான பேச்சு குறித்து
அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. அதிபருடனான பேச்சுவார்த்தையின்போது
இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் காந்த் இடம்பெற்றிருந்தார்.
மாகாணக் கவுன்சில்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு ராஜபட்ச கூட்டணி அரசில்
இடம்பெற்றுள்ள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏற்கெனவே மாகாணக்
கவுன்சில்கள் அதிகாரமின்றி செயலற்று உள்ளன.
மத்திய மாகாணக் கவுன்சில் கூட்டு அதிகாரம் வழங்குவதற்கு தமது அரசு தயாராக
உள்ளதாக இந்தியக் குழுவிடம் அதிபர் ராஜபட்ச தெரிவித்ததாகத் தெரிகிறது.
தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அமைதியான சூழல்
நிலவுவதால் இவ்விரு பகுதிகளிலும் நெருக்கடி நிலை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக
ராஜபட்ச அப்போது சுட்டிக் காட்டியதாகவும் ""டைம்ஸ்'' தெரிவிக்கிறது.
ஆனால் செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக
அரசியல் சாசன திருத்த சட்டத்தை இலங்கை அமல்படுத்தும் என்று நம்புவதாக சிவசங்கர்
மேனன் குறிப்பிட்டிருந்தார். சிறுபான்மை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை
விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும், இப்பிரச்னைக்கு அரசியல் மூலமான தீர்வுதான்
சிறந்ததாக இருக்கும் என்று இந்தியக் குழுவினர் வலியுறுத்தியதாக மேனன் குறிப்பிட்டார்.
கடந்த மாதம், இலங்கையில் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவம்
குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா சற்று கடுமையாக குறிப்பிட்டிருந்தது.
அத்துடன் அங்கு நிலவும் நெருக்கடி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும்
இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் யோசனையை, இந்தியக் குழு தில்லி திரும்புவதற்குள்ளாகவே இலங்கை அரசு
நிராகரித்து விட்டது. இந்நிலையில் இலங்கை விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை செல்ல
பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார். இவரது பயணம் இலங்கைத் தமிழர்
பிரச்னைக்கு எந்த வகையில் தீர்வாக அமையும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: இலங்கை அரசு மெத்தனம்
» இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: கருணாநிதி-மேனன் ஆலோசனை
» தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: ராஜபட்சவிடம் எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல்
» தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு : தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்காது - கருணாநிதி
» தமிழர்களுடன் அரசியல் அதிகாரப் பகிர்வு இல்லை: இலங்கை அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum