Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலங்கை பொருட்கள் மற்றும் கிரிக்கெட் அணியை புறக்கணியுங்கள் : சீமான் வேண்டுகோள்
Page 1 of 1

இலங்கை அரசு மீது பொருளாதார தடையை கடைப்பிடிக்க வேண்டும், என இந்திய
அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழக
மக்கள் அனைவரும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நாம் தமிழர்
கட்சியின் தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து அவர் சில முக்கிய தீர்மானங்களை அறிவித்து, இவற்றை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈழத்
தமிழர்களுக்கு எதிரான போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை
செய்ததது மட்டுமின்றி, இன்றுவரை ஈழத் தமிழின அழிப்பில் தொடர்ந்து
ஈடுபட்டுவரும் இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடையை கடைபிடிக்க
வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவை
நிறைவேற்றியத் தீர்மானத்தை தமிழக மக்கள் அனைவரும் உடனடியாக நடைமுறைப்படுத்த
வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
ஈழத்
தமிழினத்தின் நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் இத்தீர்மானம் ஒரு பெரும்
திருப்புமுனையாகும். இதனை இந்திய அரசு நிறைவேற்றும் என்று நாம்
காத்திருந்தால் இலவு காத்த கிளி கதையாக முடிந்துவிடும்.
எனவே, இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வருவோம்.
1. இங்கு விற்பனைக்கு வந்திருக்கும் இலங்கை நாட்டின் பொருட்கள் எதுவாயினும் அவைகளைப் புறக்கணிப்போம்.
2. இலங்கைக்கு இங்கிருந்து அனுப்பப்படும் பொருட்களை நிறுத்துமாறு தமிழ்நாட்டு வணிகர்களை வலியுறுத்துவோம்.
3.
இலங்கையில் கடந்த 2010ஆம் ஆண்டில் இந்திய சர்வதேச திரைப்பட விழா
நடத்தப்பட்டபோது, அதில் இந்தியக் கலைஞர்கள் எவரும் கலந்துகொள்ளக் கூடாது
என்று கோரிக்கை விடுத்தோம். அந்த விழா தோல்வியில் முடிந்தது. அதேபோன்று,
இப்போதும் இந்தியத் திரைப்படக் கலைஞர்கள் அனைவரும் இலங்கையை முழுமையாகப்
புறக்கணித்து தங்களுடைய மனிதாபிமான உணர்வுகளை வெளிப்படுத்துமாறு கோருவோம்.
4.
‘கலை, இலக்கியம் யாவும் மக்களுக்காகவே’ என்கிற முழுக்கத்துடன் எப்போதும்
மனிதாபிமானத்துடன் செயல்பட்டுவருபவர்கள் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள்.
இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை முன்னெடுக்கும் மானுடத்தின்
தூதுவர்களாக அவர்களை முன்னுறுத்தி செயல்படுவோம். அவர்கள் இந்தியா முழுவதும்
சென்று, கலைஞர்களையும், படைப்பாளிகளையும் சந்தித்து இலங்கைக்கு எதிரான
பொருளாதாரத் தடையை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்வோம்.
5. இதேபோல்,
இனவெறியை கடைபிடித்த தென் ஆப்ரிக்காவை எப்படி சர்வதேச சமூகம்
தனிமைபடுத்தியதோ அதேபோல், தமிழினப் படுகொலை செய்த இலங்கையையும் பன்னாட்டுச்
சமூகம் தனிமைபடுத்திட வேண்டும் என்ற முழக்கத்தை உலகளாவிய அளவில் நாம்
முன்னெடுப்போம். குறிப்பாக இலங்கையின் கிரிக்கெட் அணி இதற்கு மேல்
இந்தியாவில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று போராடுவோம். தமிழ்நாட்டு
மண்ணில் அந்த அணிக்கு இடமில்லை என்பதை ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம்
காட்டுவோம்.
6. இலங்கை அரசின் விமான போக்குவரத்தை மனிதாபிமானமுள்ள
யாரும் பயன்படுத்தாதீர்கள் என்று விரிவான அளவில் அனைத்து ஊடகங்களையும்
பயன்படுத்தி பரப்புரை செய்வோம்.
7. இலங்கை இனப் படுகொலை செய்த குற்றவாளி என்பதை இந்தியா முழுவதும் கொண்டு செல்வோம்.
8.
இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து இலங்கைக்கு எதிரான
பொருளாதாரத் தடையை கொண்டுவருமாறு நாடாளுமன்றத்தில் தங்களுடைய
உறுப்பினர்களைக் கொண்டு மத்திய அரசை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்வோம்.
9.
தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இலங்கையிலுள்ள
சிங்களக் கட்சிகள் அனைத்தும் கடுமையாக எதிர்க்கின்றன. தமிழ்நாடு சட்டப்
பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை தாங்கள் கண்டு கொள்ளப் போவதில்லை
என்றும், தங்களைப் பொறுத்தவரை இந்திய அரசுடன் மட்டுமே உறவு
கொண்டுள்ளதாகவும் திமிருடன் கூறியுள்ளார் இலங்கை அமைச்சக பேச்சாளர் கேகலிய
ரம்புக்வாலா. இநதியா வேறு, தமிழ்நாடு வேறு என்று இலங்கை அமைச்சர்
பேசுகிறார். நாம் புரியவைப்போம். தமிழ்நாட்டின் சட்டப் பேரவைத்
தீர்மானத்திற்கு எந்த அளவிற்கு வலிமை உள்ளதென்பதை தமிழக மக்களாகிய நாம்
உணர்த்துவோம்.
தமிழினத்தின் ஒன்றிணைந்த செயல்பாட்டிலேயே தமிழினத்தின் மீட்சி உள்ளது என்பதனை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு சீமான தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar topics
» கனேடியத் தமிழர்களே இளையராஜாவின் நிகழ்ச்சியைப் புறக்கணியுங்கள் - செந்தமிழ் செல்வன் சீமான் வேண்டுகோள்
» எல்பிஎல் கிரிக்கெட் போட்டிகள்: இலங்கை திட்டம்
» இலங்கை கிரிக்கெட் வீரர் முபாரக் கைது
» பார்வதியம்மாள் இலங்கை சென்றது அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடி – சீமான்
» இலங்கை பிரச்னை: ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum