Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ருவாண்டா படுகொலை-ராணுவ தளபதிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை கொடுத்த இலங்கை மாஜி நீதிபதி
Page 1 of 1

அருஷா
(தான்சானியா): ருவாண்டாவில் நடந்த வரலாறு காணாத இனப்படுகொலைக்குக் காரணமான
முன்னாள் ராணுவத் தளபதிக்கு 30 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையை விதித்தவர் இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை
நீதிபதி அசோக டிசில்வா.
ருவாண்டாவில் நடந்த மிகப் பெரிய
இனப்படுகொலை சம்பவம் தொடர்பாக ஐ.நா. சர்வதேச போர்க்குற்ற டிரிப்யூனல்
விசாரித்து வந்தது. இந்த கோர்ட்டுக்கு இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள்
தலைமை நீதிபதி அசோக டிசில்வா தலைவராக இருந்தார். இந்த நீதிமன்றம் தற்போது
ருவாண்டா ராணுவத்தின் மாஜி தலைமைத் தளபதி அகஸ்டின் பிஸிமுங்குவுக்கு 30
ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இவர் தவிர
பிரான்காய்ஸ் சேவியர் சுவானமயி மற்றும் இன்னொசன்ட் சகாஹுடு ஆகியோருக்கு
தலா 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலீஸ்
தலைவர் அகஸ்டின் டின்டிலியிமனா என்பவரும் குற்றவாளி என்று கோர்ட்
அறிவித்தது. இருப்பினும் அவர் ஏற்கனவே சிறையில் நீண்ட காலம் இருந்ததால்
அவரை விடுவிக்க சர்வதேச கோர்ட் உத்தரவிட்டது.
1994ம் ஆண்டு
ருவாண்டாவில் பெரும் இனக் கலவரம் வெடித்தது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு
அது நீடித்தது. இந்த கால கட்டத்தில் ருவாண்டாவே ரத்தக்களறியானது.
கிட்டத்தட்ட 8 லட்சம் டுட்சி இனத்தவரும், நடுநிலையுடன் கூடிய ஹூடு
இனத்தவரும் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது ருவாண்டாவை ஆட்சி செய்து
வந்தது ஹூடு இனத்தவர்கள் ஆவர். இதனால் டுட்சி இனத்தவர்களை அழிக்கும்
நோக்கில் கொலை வெறியாட்டம் ஆடியது ராணுவம். இந்த இனப்படுகொலையை
தலைமையேற்று நடத்தினார் பிஸிமுங்கு.
1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம்
தேதி தலைநகர் கிகாலி அருகே ருவாண்டா முன்னாள் அதிபர் ஜூவினல் ஹபியாரிமானா
பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அதிபர்
கொல்லப்பட்டார். இதையடுத்து கலவரம் வெடித்தது.
100 நாள் நடந்த
ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான வழக்கை விசாரிக்க தான்சானியாவில் சர்வதேச
கோர்ட் நிறுவப்பட்டது. முன்னாள் இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அசோக
டிசில்வாவைத் தலைவராக கொண்ட கோர்ட் அமைக்கப்பட்டது.
இந்தக் கோர்ட்டில், அசோக டிசில்வா தவிர தக்ரிட் ஹிக்மத் மற்றும் சியோன் கி பார்க் ஆகியோரும் நீதிபதிகளாக செயல்பட்டனர்.
கிட்டத்தட்ட 250 சாட்சியங்களை விசாரித்த இந்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தற்போது தீர்ப்பை அளித்துள்ளது.
2002ம்
ஆண்டு அங்கோலாவில் வைத்து பிஸிமுங்கு கைது செய்யப்பட்டார். வீடு வீடாக
போய் டுட்சி இனத்தவரை கும்பல் கும்பலாக கொலை செய்யுமாறு அப்போது
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹூடு இனத்தவர்களுக்கு உத்தரவிட்டது இந்த
பிஸிமுங்குதான். குறிப்பாக ஒரு கல்வி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான டுட்சி
இனத்தவரை நிற்க வைத்து அத்தனை பேரையும் ஈவு இரக்கமே இல்லாமல் கொன்று
குவித்தான் இந்த பிஸிமுங்கு.
மேலும் ருவாண்டா பிரதமர் அகாதே
விலிங்கியிமானாவையும் கொல்ல பிஸிமுங்கு உத்தரவிட்டான். அப்போது பிரமரைப்
பாதுகாக்க ஐ.நா. அனுப்பியிருந்த படையில் இடம் பெற்றிருந்த ஏழு பெல்ஜியம்
வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து ருவாண்டாவிலிருந்து ஐ.நா.
அமைதி காக்கும் படை வெளியேறியது.
ராஜபக்சே கும்பலுக்கு எப்போது தண்டனை?
இலங்கையில்
நடந்த தமிழினப்படுகொலை குறித்து உலகம் முழுவதும் தமிழர்கள் தொடர்ந்து
குரல் கொடுத்து வருகின்றனர். ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே, பசில் ராஜபக்சே
மற்றும் தமிழர்களை வேட்டையாடிய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக அப்போது
இருந்த சரத் பொன்சேகா ஆகியோரை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வேண்டும்,
அவர்களுக்குத் தண்டனை தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து
வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த முன்னாள்
உச்சநீதிமன்ற நீதிபதி, போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மூன்று பேருக்கு
கடும் தண்டனை வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் இதே நிலைமை ராஜபக்சே கும்பலுக்கும், பொன்சேகாவுக்கும் வர வேண்டும் என்று உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ரூ. 2000 லஞ்சம்: மாஜி நீதிபதிக்கு 3 ஆண்டு சிறை !
» ஈரானில் உளவு பார்த்த அமெரிக்கர்கள் 2 பேருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை
» தில்சானை சுட்டுக்கொன்ற வழக்கு: ராணுவ அதிகாரிக்கு 28 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும்; சைதாப்பேட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
» சிறுவன் தில்ஷன் சுடப்பட்ட வழக்கு:மாஜி ராணுவ அதிகாரி கைது
» கால்நடை தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வித்தித்துள்ளது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum