Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காங்., செய்திதொடர்பாளரை செருப்பால் அடிக்க முயற்சி: ராம்தேவ் குறித்து விமர்சித்த போது பரபரப்பு
Page 1 of 1

புதுடில்லி: யோகா குரு பாபா ராம்தேவ் குறித்து
நிருபர்களிடம் பேசிக்கொணடிருந்த காங்., பொதுசெயலர்களில் ஒருவரும், செய்தி
தொடர்பாளருமான ஜனார்த்தனன்திவேதி மீது செருப்பு வீசப்பட்டதால் பெரும்
பரபரப்பு ஏற்பட்டது. டில்லியில் யோகாகுரு பாபா ராம்தேவ்
உண்ணாவிரதம் இருந்தபோது போலீஸ் நடந்துகொண்ட விதம் மற்றும் கெடுபிடிகள்
தொடர்பான விஷயங்களுக்கு விளக்கம் கேட்டு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது. இந்த பிரச்னையை தாமாக முன்வந்து கோர்ட்டில் மனுவாக ஏற்று
விசாரித்து இந்த உத்தரவை கோர்ட் பிறப்பித்துள்ளது.பா.ஜ., மூத்த தலைவர்
அத்வானி தலைமையில் ஜனாதிபதியை சந்தித்து தற்போது நிலைமை குறித்து
விளக்கினர். மேலும் பார்லி.,யை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும்
கோரியுள்ளனர்.
ஊழல் மற்றும் கறுப்பு பண விவகாரத்தை
முன்நிறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 4 ம் தேதி துவக்கினார்.
இவரது போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. இதனால் ஏற்படும்
சூழல் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான எண்ணப்போக்கை அறிந்த மத்திய அரசு
நள்ளிரவில் போலீசார் ஆயிரக்கணக்கில் சென்று யோகாகுருவை
அப்புறப்படுத்தினர். இந்நேரத்தில் ஏற்பட்ட மோதலில் போலீசார் மற்றும்
போராட்டக்காரர்கள் பலர் காயமுற்றனர். கண்ணீர்புகை குண்டுவீச்சு,
தடியடியுடன் முடிந்தது.தொடர்ந்து அவர் பாதுகாப்பாக டேராடூனுக்கு கொண்டு
செல்லப்பட்டார்.
உள்துறை செயலர் - போலீசஸ் அதிகாரி்களுக்கு நோட்டீஸ்: இவர்
மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, போலீசார் நடந்து கொண்ட விதம் ஒரு
நெருக்கடியை நினைவுப்படுத்தியதாகவும், ஜனநாயக உரிமை மீறப்பட்டடதாகவும்,
பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.,எஸ்., சமூல நல அமைப்பினர் கண்டனம்
தெரிவித்திருந்தனர். பா.ஜ., சார்பில் 24 மணி நேர சத்தியாகிரக போராட்டம்
நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு
மத்தியஅரசு, உள்துறைசெயலர், டில்லி தலைமை செயலர் மற்றும் போலீஸ்
அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்டாயமாக
வெளியேற்றியதன் காரணம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீதிபதி எஸ்.பி., சவுகான், சுவாதந்தர்குமார் ஆகியோரை கொண்ட பெஞ்ச்
விசாரித்தது. இதன் தொடர்பான விசாரணை ஜூலை மாதம் 2 வது வாரத்தில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.
உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறார்ராம்தேவ் : டில்லியில்
இருந்து அப்புறப்படுத்தப்பட்ட ராம்தேவ் ஹரித்வாரில் உள்ள தனது ஆசிரமத்தில்
தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று மீண்டும் துவக்கி உள்ளார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியதற்கு எனது நன்றி; உறுதுணையாக உள்ள என
து ஆதரவாளர்களுக்கும் நன்றி; எத்தனை தடைகள் வந்தாலும் ஊழலுக்கு எதிரான
உண்ணாரவிரதப் போராட்டத்தை கைவிட மாட்டேன்; போலீசார் தாக்குதலில் இருந்து
தன்னை பாதுகாத்த பெண் ஆதரவாளர்களுக்கு எனது நன்றி; என்னை கைது செய்ததற்கு
மனித உரிமைகள் கழகமும் டில்லி போலீசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. என்னை
கொல்ல சதி நடக்கிறது பந்தலில் நடந்த விஷயங்கள் குறித்து போலீஸ பொய்யான
தகவலை தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் பா.ஜ., தலைவர்கள் சந்திப்பு : ராம்தேவ்,
டில்லியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி
பிரதிபா பாட்டீலை அத்வானி தலைமையில் பா.ஜ., தலைவர்கள் சந்தித்து பேசினர்.
ராம்தேவ்விற்கு ஆதரவாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் பா.ஜ., வினர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதியை சந்தித்தனர். லோக்பால் விவகாரம்
தொடர்பாகவும், ராம்தேவ் மீதான கெடுபிடிகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தனர்.
மேலும் விரைவில் பார்லி.,யை கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அத்வானியுடன், பா.ஜ., தலைவர் நிதின்கட்காரி, அருண்ஜெட்லி, சுஷ்மாசுவராஜ்
ஆகியோரும் சென்றனர்.
டில்லியில் உள்ள
காங்கிரஸ் தலைமையகத்தில் மாலை, அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்த்தன்
திவேதி, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அதில், ஏராளமான
பத்திரிகையாளர்கள் மற்றும் "டிவி' நிருபர்கள் கலந்து கொண்டனர். அப்போது,
ராஜஸ்தானில் இருந்து வெளிவரும், "நவ் சஞ்சார்' பத்திரிகையின் நிருபர்
சுனில் குமார் எனக் கூறி, உள்ளே நுழைந்திருந்த ஒரு வாலிபர், திடீரென
ஜனார்த்தன் திவேதியை நோக்கி வந்து, தன் ஷூவை கழற்றி அவரை அடிக்க
முற்பட்டார். கோடு போட்ட டி-சர்ட் அணிந்திருந்த அந்த நபர், "நாங்கள்
கேள்வி கேட்பதை நீ தடுத்து நிறுத்த முடியாது' எனக் கூறி அடிக்க
முற்பட்டார்.
உடன், அகில இந்திய காங்கிரஸ் அலுவலக
பாதுகாவலர்களும், சில பத்திரிகையாளர்களும் சேர்ந்து, அந்த வாலிபரை தடுத்து
நிறுத்தி, அடித்து, பத்திரிகையாளர் அரங்கிலிருந்து வெளியேற்றினர். பின்னர்
அந்த வாலிபரை போலீசார் அழைத்துச் சென்றனர்.காங்கிரஸ் தலைவர் ஒருவரை ஷூவால்
தாக்க முற்பட்டது இது மூன்றாவது சம்பவம். இதற்கு முன், மத்திய உள்துறை
அமைச்சர் சிதம்பரம் மீது ஒருவர் ஷூவை வீசியுள்ளார். அதேபோல், காமன்வெல்த்
விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாட்டுக் குழுவின் முன்னாள் தலைவரான சுரேஷ்
கல்மாடி மீதும் ஷூ வீசப்பட்டது."இந்த சம்பவம் முன்பே திட்டமிட்ட சதி' என,
இதன்பின் நிருபர்களிடம் பேசிய ஜனார்த்தன் திவேதி தெரிவித்தார். யோகா குரு
பாபா ராம்தேவ் பற்றியும், அவரின் போராட்டம் பற்றியும் தான்
பேசவிருந்ததால், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் கூறினார். அவர்
மேலும் கூறியதாவது:
பாபா ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது நள்ளிரவில்
எடுக்கப்பட்ட நடவடிக்கை நியாயமானதே. ராம்தேவுக்கு ஆதரவு தெரிவிக்கும்
பாரதிய ஜனதா கட்சி, நாட்டில் கலகத்தையும், ஒழுங்கீனத்தையும் உருவாக்க
முற்படுகிறது. கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் விவகாரத்தில், அரசுக்கு சவால்
விடும் வகையில் செயல்பட ராம்தேவ் முற்பட்டார். மத்திய அரசின் தாராள
மனப்பான்மையை தவறாக பயன்படுத்த முயன்றார். சத்தியாகிரகப் போராட்டத்தின்
மூலம், அநீதிக்கு எதிராகப் போராட வேண்டுமே அன்றி, கோரிக்கைகளை
ஏற்றுக்கொள்ளும்படி அரசை நிர்பந்தம் செய்ய முடியாது.மகாத்மா காந்தியுடன்
பாபா ராம்தேவை ஒப்பிட்டால், அது தேசப் பிதாவுக்கு அவமானம். பிரச்னை
வந்ததும், பெண்கள் உடை அணிந்து ஓடிப் போக முற்படுவது தான் சத்தியாகிரகப்
போராட்டமா? சத்தியாகிரகம் என்றால், கைது நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்;
உயிரை விடவும் தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு திவேதி கூறினார்.
இதற்கிடையில்,
"காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி
மலிவான விளம்பரம் தேட பாபா ராம்தேவ் முற்படுகிறார்' என, ராஜஸ்தான்
முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். "ராம்லீலா மைதானத்தில் போலீசார்
எடுத்த நடவடிக்கைக்கு சோனியாவின் தூண்டுதலே காரணம் என, ராம்தேவ்
கூறியுள்ளார். அவருக்கு எதிராக நிகழும் எந்த சம்பவத்திற்கும் சோனியா
காரணம் எனக் கூறினால், ராம்தேவ் மலிவான விளம்பரம் தேடுகிறார் என்று
சொல்வதைத் தவிர வேறு வழியில்லை' என்றும் கெலாட் மேலும் கூறினார்.
துரோகம் செய்த ராம்தேவ்:
""உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக அரசுக்கு
உறுதியளித்த பாபா ராம்தேவ், பின்னர் அதிலிருந்து பின்வாங்கி துரோகம்
செய்து விட்டார்,'' என, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.
அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பா.ஜ.,
கட்சி முற்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» காங்கிரஸ் கட்சியின் செயலர் ஜனார்தன் திவேதியை செருப்பால் அடிக்க முயற்சி - வீடியோ
» ஈழ விவகாரம் குறித்து காங். எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் திடீர் கூட்டம்-எம்.பிக்களை குழப்ப முயற்சி?
» சிறிலங்கா விவகாரம் குறித்து ஹிலாரி பேசுவதைத் தடுக்க இந்தியா முயற்சி? இந்திய ஊடகம் குற்றச்சாட்டு
» டில்லியில் ராம்தேவ் ஆதரவாளர்களுடன் கைது : பார்லி.,முற்றுகை முயற்சி முறியடிப்பு !
» யோகா குரு ராம்தேவ் நான்கு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு? புதிய தகவலால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum