Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
யோகா குரு ராம்தேவ்விடம் மத்திய அமைச்சர்கள் கெஞ்சல்: ஊழல் எதிர்ப்பு போரை கைவிட வலியுறுத்தல்
Page 1 of 1

புதுடில்லி: ஊழலுக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் நாளை துவக்க
உள்ள, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, சமூக சேவகர் அன்னா
ஹசாரேயும் ஆதரவு தெரிவித்துள்ளார். உண்ணாவிரதப் போராட்டத்தில் வரும் 5ம்
தேதி பங்கேற்பதா கவும் உறுதி அளித்துள் ளார். அதே நேரத்தில்,
உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தி, ராம்தேவிடம் மத்திய அமைச்சர்கள்
கெஞ்சுவது இன்றும் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, அவரை நேரில்
சந்தித்து ஆதரவு தெரிவித்தவர், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ். ஊழலுக்கு
எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை, முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார்.
ஊழலை ஒழிக்கவும், வெளிநாடுகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள கறுப்புப்
பணத்தை மீட்கவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாளை,
டில்லியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்க உள்ளார். இதற்காக
நேற்று முன்தினம் அவர், உஜ்ஜயினியிலிருந்து தனி விமானத்தில் டில்லி
வந்தார். அப்போது, மத்திய அரசு சார்பில், டில்லி விமான நிலையத்தில் அவரை
சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல்,
பவன்குமார் பன்சால், சுபோத்காந்த் சகாய் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தை
கைவிட வேண்டும் என, வலியுறுத்தினர். விமான நிலைய விருந்தினர் அறையில்
இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையில், எந்த விதமான
சுமுக உடன்பாடும் எட்டப்படவில்லை. அறிவித்தபடி உண்ணாவிரதம் தொடரும் என,
பாபா ராம்தேவ் அறிவித்தார். ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் நடக்கும்
என்றும் அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், பாபா ராம்தேவை அரசு தரப்பில்
அமைச்சர்கள் சிலர் இன்று மீண்டும் சந்தித்துப் பேசுவர். "உண்ணாவிரதம்
வேண்டாம்' என, அவரிடம் கெஞ்சி கேட்டுக் கொள்வர் என, தெரிகிறது.
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பான செயல் திட்டத்தை இறுதி
செய்யவும், உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென, வலியுறுத்தும் அரசு
தரப்பினருடன் என்ன பேச வேண்டும் என்பதை முடிவு செய்யவும், தனது நெருங்கிய
ஆதரவாளர்களுடன் பாபா ராம்தேவ் நேற்று ஆலோசனை நடத்தினார். இதற்காக, நேற்று
மாலை நடத்தவிருந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் ரத்து செய்தார். முழு
ஆதரவு: இதற்கிடையில், லோக்பால் மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும் என
வலியுறுத்தி ஏற்கனவே உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய பிரபல சமூக சேவகர்
அன்னா ஹசாரேயும், யோகா குரு பாபா ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு
ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: பாபா ராம்தேவுக்கும்,
எங்களுக்கும் இடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. ஊழலுக்கு
எதிரான அவரின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, நாங்கள் ஆதரவு
தெரிவிக்கிறோம். ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் வரும் 5ம் தேதி
நானும் பங்கேற்பேன்; சில மணி நேரங்கள் அங்கிருப்பேன். முதலில் கோரிக்கைகளை
ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு தெரிவிக்கும்; பின்னர் அதிலிருந்து
பின்வாங்கி விடும். அரசின் சமாதான பேச்சுவார்த்தைகளை ராம்தேவ் நம்பி
விடக்கூடாது. வாய் மொழியாக மத்திய அரசு அளிக்கும் உறுதி மொழிகளில்,
ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் திருப்தி அடையக்கூடாது. பாபா
ராம்தேவை நேற்று முன்தினம் பல மத்திய அமைச்சர்கள் சந்தித்துப்
பேசியுள்ளனர்; உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். அப்படி
பல அமைச்சர்கள் சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்று அல்லது இரண்டு
அமைச்சர்கள் போயிருந்தாலே போதுமானது. பல அமைச்சர் சென்றாலே, அது மோசடி
செய்ய முற்படும் வேலையாகும். ஒப்பந்தங்கள் போடுவது, உறுதி மொழிகள்
அளிப்பது எல்லாமே காலம் கடத்தும் வேலை. காலம் கடந்து விட் டாலே, அரசு என்ன
நினைக்கிறதோ, அதைத்தான் செய்யும்.
நான் உண்ணாவிரதம் இருந்தபோது, எங்களின் கோரிக்கைகளை எல்லாம் ஏற்றுக்
கொள்வதாக மத்திய அரசு அறிவித்தது. அரசை காப்பாற்ற இப்படி செய்தது. தற்போது
அதிலிருந்து பின்வாங்கி விட்டது. லோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமரை
கொண்டு வர மத்திய அரசு சம்மதம் தெரிவித்தால், அரசின் கவுரவம் அதிகரிக்குமே
அன்றி குறையாது. லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமர் வர வேண்டும்
என்பதே எங்களின் விருப்பம். அப்போது தான் தெளிவான நிர்வாகத்தை தர
முடியும். ஊழலை முற்றிலும் ஒழிக்க அரசு விரும்பினால், அரசில் முக்கிய
பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம், தங்களின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார். அதே நேரத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தை
கைவிட வேண்டும் என்ற அரசின் வேண்டுகோளை, பாபா ராம்தேவ் நிராகரித்து
விட்டதால், அவரின் உண்ணாவிரதத்தால் எழும் சூழ்நிலைகளை சமாளிப்பது குறித்து
விவாதிப்பதற்காக, காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது.
பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் நடந்த இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ்
தலைவர் சோனியா மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இலங்கைத் தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும்: பா.ஜ.க. வலியுறுத்தல்
» யோகா குரு ராம்தேவுக்கு காங்., பா.ஜ., எதிர்ப்பு
» 14 மத்திய அமைச்சர்கள் மீது கேஜரிவால் ஊழல் குற்றச்சாட்டு
» பொலிசிடமிருந்து தப்பியோடா விட்டால் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன் - யோகா குரு ராம்தேவ்
» யோகா குரு ராம்தேவ் நான்கு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு? புதிய தகவலால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum