Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பாபா ராம்தேவ் பிடிவாதம் : மத்திய அமைச்சர்கள் சமரசம் பேசியும் பலனில்லை
Page 1 of 1

புதுடில்லி:""ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக, டில்லியில்
நாளை மறுதினம் துவங்கும் தன் உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி
நடைபெறும்,'' என, பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று அறிவித்தார்.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, அவரை நேரில்
சந்தித்து ஆதரவு தெரிவித்தவர், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ். ஊழலுக்கு
எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை,
முழுவீச்சில் மேற்கொண்டு
வருகிறார். ஊழலை ஒழிக்கவும், வெளிநாடுகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள
கறுப்புப் பணத்தை மீட்கவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தி, வரும் 4ம் தேதியில் இருந்து, டில்லியில் உண்ணாவிரதம்
இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதற்காக நேற்று அவர்,
உஜ்ஜயினியிலிருந்து தனி விமானத்தில் டில்லி வந்தார். இதனால், டில்லியில்
நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு சார்பில், ராம்தேவுக்கு
சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பது போல் நேற்றைய காட்சிகள் இருந்தன.
உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வலியுறுத்தி, அவரை சந்தித்து பேச மத்திய
அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பவன்குமார் பன்சால், சுபோத்
காந்த் சகாய் ஆகியோர் நேற்று விமான நிலையத்திற்கே வந்து காத்திருந்தனர்.
விமான நிலையத்தில் ராம்தேவை அமைச்சர்கள் வரவேற்று, அவருடன் பேச்சுவார்த்தை
நடத்தினர். விமான நிலைய விருந்தினர் அறையில் இரண்டரை மணி நேரத்திற்கும்
மேல் பேச்சுவார்த்தை நடந்தது. உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி
அமைச்சர்கள் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ராம்தேவ் மறுத்து விட்டதாகவும்
கூறப்படுகிறது.
சந்திப்பு குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் கபில்
சிபல் கூறுகையில், " பாபா ராம்தேவுடன் தேசிய நலன் குறித்தும், பொதுவான
விஷயங்கள் குறித்தும் ஆலோசித்தோம். அவருடனான பேச்சுவார்த்தை இரண்டொரு
நாளில் தொடரும்,'' என்றார்.அமைச்சர்களுடன் மத்திய கேபினட் செயலர்
கே.எம்.சந்திரசேகரும் சென்றிருந்தார்.
பின்னர் பாபா ராம்தேவ்வை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகள்
கேட்டனர். குறிப்பாக லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமர் மற்றும் தலைமை
நீதிபதியை கொண்டுவருவது தொடர்பாக, அவர் தெரிவித்த கருத்து பற்றி
நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராம்தேவ் கூறியதாவது: நாளை
மறுதினம் முதல், நான் மேற்கொள்ளவிருக்கும் உண்ணாவிரத போராட்டம்,
திட்டமிட்டபடி நடக்கும். அதை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடம் இல்லை. ஊழலை
ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், கறுப்புப் பணத்தை மீட்க
வேண்டும் என்ற கோரிக்கைகளின் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்வரை,
போராட்டம் நடத்தப்படும்.லோக்பால் மசோதா விசாரணை வரம்புக்குள்,
பிரதமரையும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியையும் கொண்டுவரக்கூடாது என்ற
நோக்கில் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அரசுடன் நடந்த முதல் சுற்று
பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. தொடர்ந்து நடைபெறும்
பேச்சுவார்த்தைகள் மூலம் அனைத்து விஷயங்களுக்கும் தீர்வு ஏற்படும்.இது
பெரிய போர். கடந்த 64 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்ற
நாங்கள் போராடுகிறோம். இது சுலபமான காரியம் அல்ல. இருப்பினும், அடைந்தே
தீருவோம். பேச்சுவார்த்தையில் நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தேசிய
முக்கியத்துவம் வாய்ந்தவை. வலுவான லோக்பால், பொது சேவை வினியோக உத்தரவாத
சட்டம் ஆகியவற்றை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும்.
ஊழலில் ஈடுபடுவோர் மீதான குற்றத்தை விசாரித்து ஓராண்டுக்குள் தீர்ப்பு
வழங்கும் வகையில் அதிவிரைவு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும். அதிகபட்சமாக
மரணதண்டனை அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப உள்ளேன். ஊழலில்
ஈடுபட்டால் உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும். இன்னும் பிரிட்டிஷ்
காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தையே வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. 140
நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய்களை இந்தியாவுக்கு கொண்டு வரவேணடும்.
கறுப்புப் பணத்தை தேசிய சொத்தாக பிரகடனப்படுத்தும் வகையில், அவசர சட்டம்
பிறப்பிக்க வேண்டும். ஊழல் இல்லாத நாடாக வேண்டும் இந்தியா. இதுவே என்
விருப்பம்.ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக நாடு மற்றும்
பொதுமக்களின் நலன் கருதி போதுமான சீர்திருத்தங்களை செய்ய வேண்டிய
கட்டாயத்தில் அரசு உள்ளது. இந்த மாற்றத்தை குறிப்பிட்ட காலத்திற்குள்
கொண்டு வரவேண்டும். டில்லி ராம்லீலா மைதானத்தில், நாளை மறுநாள் நடக்கும்
உண்ணாவிரத போராட்டம், கறுப்புப் பணத்திலிருந்து நாட்டை மீட்க வேண்டும்
என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு நடைபெறுகிறது. இதில், ஒரு கோடி பேர்
பங்கேற்கின்றனர். ஊழல், கறுப்புப் பணத்திற்கு எதிரான எங்கள் போராட்டம்
எந்தவொரு தனிப்பட்ட நபர் மற்றும் கட்சிக்கு எதிரானது அல்ல. நாங்கள்
யாரையும் விமர்சிக்கவில்லை. தேசிய நலன் கருதி, நாட்டில் நல்லதொரு மாற்றம்
வரவேண்டும் என்பதே குறிக்கோள். ஊழலை ஒழிக்க முதல் நடவடிக்கையாக, 500
மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய வேண்டும்.இவ்வாறு ராம்தேவ்
கூறினார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» "உண்ணாவிரதம் தொடரும்': பாபா ராம்தேவ்
» பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தில் கைது? 144 தடை உத்தரவு
» யோகாகுரு பாபா ராம்தேவ் மீது கறுப்பு மை வீச்சு
» யோகாகுரு பாபா ராம்தேவ் மீது கடத்தல் வழக்கு
» பிரதமர் செய்த பாவத்தை வரலாறு மன்னிக்காது; பாபா ராம்தேவ் ஆவேசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum