Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழகத்தில் மேல்சபை வராது : ஜெயலலிதா திட்டவட்டம்
Page 1 of 1

சென்னை:""தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது, சட்ட மேலவை
அமைக்க முயற்சிஎடுப்பதும், அ.தி.மு.க., ஆட்சியில், அவை வேண்டாம்
எனதீர்மானம் நிறைவேற்றுவதும், தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. சட்ட
மேலவை வேண்டாம்என்பது தான், அ.தி.மு.க., கொள்கை. மேலவைவராமல் இருக்க என்ன
செய்ய வேண்டுமோ, அதை செய்வோம்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
முதல்வராக
ஜெயலலிதா பொறுப்பேற்றதும், வாரம் ஒரு முறை நிருபர்களைசந்திப்பதாக
தெரிவித்தார். அதன்படி, கடந்த வாரம் நிருபர்களை சந்தித்தார். இரண்டாவது
முறையாக நேற்று காலை,கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார்.முதலில்
அவர் கூறும்போது, "வாரம் ஒரு முறை உங்களை சந்திப்பதாகவாக்குறுதி
அளித்துள்ளேன். அதன்படி, நேற்றே உங்களை சந்திக்க திட்டமிட்டிருந்தேன்.
ஆனால், அமைச்சர் மரியம் பிச்சை மரணம் அடைந்ததால், நேற்று சந்திக்க
முடியாமல், இன்று சந்திக்கிறேன்'என்றார்.
பின், நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து, முதல்வர் கூறியதாவது:
மின்சார பிரச்னையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
மின் பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. விரைவில், நிலைமை மாறும்.
பெட்ரோல் விலைகடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. விலையை குறைக்க, விற்பனை வரி குறைக்கப்படுமா?
பெட்ரோல்
விலையை, திரும்பத் திரும்ப உயர்த்தி வருகின்றனர். இந்த ஆட்சி
பொறுப்பேற்று, ஒரு வாரம் தான் ஆகிறது. விற்பனை வரியை குறைப்பது குறித்து,
ஆய்வு செய்து முடிவுஎடுக்கப்படும்.
அரசுத் துறைகளில்,நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்ள ஏதாவது சிறப்புத்திட்டங்கள் இருக்கிறதா?
தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் தான், ஒரு அரசுக்குத் தேவை. அது, தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதைத்தவிர, வேறு எதுவும் இல்லை.
கெரசின், சமையல் காஸ், டீசல் விலைகள் உயர வாய்ப்பிருப்பதாக, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளாரே?
கடுமையான
விலைவாசி உயர்வால், ஏற்கனவேமக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், மீண்டும் எரிபொருட்களின் விலைஉயரும் என கூறுவது,
கண்டனத்திற்குரியது. அப்படி ஒரு திட்டம்இருந்தால், அம்முடிவை, மத்திய
அரசு, உடனடியாக கைவிட வேண்டும்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மற்ற
பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும். எனவே, விலை உயர்த்தும்
முடிவைஉடனடியாக கை விட வேண்டும்.
தனியார்
பள்ளிகளுக்கு,கல்விக் கட்டணம்நிர்ணயிக்காததால் பல இடங்களில் பிரச்னை
நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில், கல்விக்கட்டணம் அறிவிக்கப்படுமா?
கல்விக்
கட்டணநிர்ணயக் குழு தான்,கட்டணத்தை அறிவிக்க வேண்டும். இதில், அரசுக்கும்,
குழுவிற்கும் எவ்விதசம்பந்தமும் கிடையாது. பள்ளிகள் கேட்டுக்கொண்டால்,
இந்த விவகாரத்தில் அரசு தலையிடும்.
ஸ்பெக்ட்ரம்
விவகாரம் தொடர்பாக, "கனிமொழி, மூன்று கோடி ரூபாய்முதலீடு செய்ததைத் தவிர,
வேறு எந்த குற்றமும்செய்யவில்லை' என,கருணாநிதி கூறியிருக்கிறாரே?
கோர்ட்டில்
வழக்குவிசாரணை நடந்துகொண்டிருக்கிறது;குற்றவாளி மீது,குற்றப்
பத்திரிகைதாக்கல் செய்யப்பட்டு, தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது,
இப்படி ஒரு கருத்தை கூறக் கூடாது.
ஸ்பெக்ட்ரம் வழக்குசரியான திசையில் சென்று கொண்டிருக்கிறதா?
இந்த
வழக்கில், கோர்ட் எடுக்கும் நடவடிக்கைகளால், நீதித்துறையின் மீது தற்போது
மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, சட்டத்தின்படி தொடர்ந்து
நடைபெற வேண்டும்.
தமிழகத்தில் சட்ட மேலவை வருமா?
சட்ட
மேலவைவேண்டாம் என்பது தான், அ.தி.மு.க., கொள்கை. ஆனால்,
தி.மு.க.,ஆட்சிக்கு வரும்போது முயற்சிசெய்வதும், பின் அ.தி.மு.க.,
வந்தால்,தீர்மானம் நிறைவேற்றி நிறுத்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சட்ட மேலவை வராமல்இருப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ, அதைச்செய்வோம்.இவ்வாறு
ஜெயலலிதா கூறினார்.
"நான் ரொம்ப பாஸ்ட்' : நிருபர்கள்,
ஒவ்வொரு துறை குறித்தும் கேள்விகள் கேட்டதற்கு, "ஆட்சி பொறுப்பேற்று எட்டு
நாட்கள் ஆகிறது. இன்னும் சிறிது நாட்கள் ஆனால், பல பிரச்னைகள் தீரும்'
என்றார்."அரசு கேபிள், "டிவி' எப்போது வரும்?' என, கேட்டதற்கு, "ஆட்சி
பொறுப்பேற்ற எட்டு நாட்களில், பல வேலைகளை வேகமாக செய்து கொண்டிருக்கிறோம்.
என் அளவிற்கு யாராவது வேகமாக செயல்படுகின்றனரா; சொல்லுங்கள் பார்ப்போம்?
ஆனால், என்னிடம் தான் பல கேள்விகளை கேட்கிறீர்கள்' என்றார்.
போதும் தம்பிகளே...! : ஜெ.,
பேட்டி ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், நிருபர்கள், அறைக்குள்
அனுமதிக்கப்பட்டனர். நிருபர்கள் தயாராவதற்கு சில நிமிடங்கள் கால
தாமதமானதால், ஒரே சலசலப்பாக இருந்தது. அறைக்குள், ஜெ., நுழைந்ததற்குப்
பிறகும், சலசலப்பு நீடித்ததால், சிரித்துக்கொண்டே, "இவ்வளவு நேரம் அமைதியா
இருந்துட்டு, என்னைப் பார்த்ததும், அதிகமா பேச ஆரம்பிச்சுட்டீங்களே...
போதும் தம்பிகளே...' என்றார் ஜெயலலிதா.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தமிழகத்தில் இனி ஆட்சிக்கு தி.மு.க., வராது: "அஸ்தமித்த சூரியன் உதிக்காது' என, ஜெயலலிதா பேச்சு
» தமிழகத்தில் புலிகள் ரகசிய முகாம் இல்லை: டி.ஜி.பி. திட்டவட்டம்
» ஜே.பி.சி., தான் ஒரே தீர்வு: ஜெயலலிதா திட்டவட்டம்
» தமிழ்நாட்டில் இனிமேல் எந்தக் காலத்திலும் மேல்-சபை வராது: ஜெயலலிதா பேச்சு
» தமிழகத்தில் அனுமதி கிடையாது: முதல்வர் ஜெயலலிதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum