Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிறப்பு முதல் பத்து வயது வரை
2 posters
Page 1 of 1
பிறப்பு முதல் பத்து வயது வரை
குழந்தைகளை
வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது.
ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு
மகிழ்ச்சியான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம்.
குழந்தை வளர்ப்பில் அடிப்படையான விஷயங்கள் இங்கே தரப்படுகின்றன.
பிறப்பு முதல் ஒரு வயது வரை:
பிறந்த
குழந்தைக்கு தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் என்ற சந் தேகம் பல
தாய்மார்களுக்கும் ஏற்படு கிறது. குழந்தை ஒவ்வொரு முறை அழும் போதும்
பசியால்தான் அழுகிறதோ என்று நினைக்கிறார்கள்.
குழந்தைக்கு
தேவையான அளவு உணவு கிடைக்கிறதா என்பதை அறிய பலவழிகள் இருக்கின்றன. அதில்
ஒன்று குழந்தையின் எடையை கவனிப்பது. குழந்தை பிறக்கும்போது எவ்வளவு எடை
இருக்கிறதோ, நாலு மாதத்தில் அந்த எடை இரட்டிப்பாக வேண்டும். பிறக்கும்
போது 2.7 கிலோ என்றால், 5.4 கிலோவாக இருக்க வேண்டும். தேவையான அளவு பால்
கிடைத்தால், குழந்தையின் எடை இந்த அளவு அதிகரித்து விடும். குழந்தை யின்
சிறுநீர் அளவு, மலத்தின் அளவைப் பார்த்தும் தேவையான அளவு பால் கிடைப்பதை
உறுதி செய்து விடலாம்.
பிறந்த குழந்தைகளை தாயே பயமின்றி
குளிப்பாட்டலாம். முதலில் `பேபி ஆயில்' பயன்படுத்தி உடலை வருடி விடுங்கள்.
அம்மாவின் வருடல் குழந்தைக்கு ஆனந் தத்தை அளிக்கும். `மசாஜ்' மூலம்
குழந்தையின் உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
ஒரு சிறிய
பிளாஸ்டிக் `பேசினில்' கால் பாகத்திற்கு குளிர் நீக்கிய (லேசாக சூடான)
நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அம்மா தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும்.
குழந்தையின் தலை இடது கையில் வருவதுபோல தூக்கிப் பிடிக்க வேண்டும்.
முதலில் குழந்தையின் உட லில் `பேபி சோப்' தேய்த்து கழுவவேண் டும்.
அதற்குப் பிறகு தலையையும் முகத்தையும் கழுவுங்கள். கழுவும்போது தலையை
உத்தேசமாக 30 டிகிரி கோணத் தில் தூக்கிப் பிடித்துக் கொள்ள வேண் டும்.
குழந்தையின் மூக்கினுள் தண்ணீர் சென்று விடக்கூடாது.
குளிப்பாட்டிய
உடன் தலையை துவட்ட வேண்டும். உடலை துடைக்கும்போது காதுகளின் உள் பகுதியில்
இருக்கும் ஈரத்தை தவறாமல் துடைத்து விட வேண் டும். மூக்கை மேல் இருந்து
கீழாக லேசாக அழுத்தி, அங்கிருக்கும் தண்ணீரையும் அப்புறப்படுத்த வேண்டும்.
அதன் பிறகு பவுடர் பூசி துணி அணிவிக்க வேண்டியது தான். குளியல்
முடிந்ததும் குழந்தைக்கு பசி எடுக்கும் பால் கொடுத்து தூங்க வைத்து
விடலாம்.
சில குழந்தைகள் தூங்கும்போது, சுவாசத்தில் மூக்கில்
இருந்து லேசான ஒலி எழும். மூக்கு, தொண்டைப் பகுதியில் ஏற்படும் லேசான
தடையாலே இந்த ஒலி ஏற்படுகிறது. மூக்கில் இரண்டு துவாரம் உண்டு. அதில்
ஒன்று சிறிதாக இருந்தால், சுவாசிக்கும்போது சத்தம் வரும். குழந்தை
வளரும்போது, துவாரமும் பெரிதாகி இந்த குறை நீங்கி விடும்.
பால்
குடிக்கும் குழந்தையாக இருந் தால், பால் இந்த துவாரத்தில் ஏறி இருந்
தாலும் சுவாசிக்கும்போது சத்தம் வரும். இது ஒரு பிரச்சினையாகத்
தோன்றினால், குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்ட வேண்டும்.
இரவு
நேரத்தில் சில குழந்தைகள் தொடர்ச்சியாக அதிக நேரம் அழும். பசி, வயிற்று
வலி, மலச்சிக்கல், உஷ்ணம், சிறுநீர் கழித்தலால் ஏற்பட்ட ஈரத்தன்மை,
கொசுக்கடி, இறுகிய ஆடை, குளிர்... போன்ற ஏதாவது காரணம் இருக்கலாம்.
அறையில் தேவையான காற்று கிடைக்கா விட்டாலும், அதிக அளவு பால் குடித்து
விட்டாலும் கூட குழந்தைகள் அழலாம்.
ஒரு வயதான குழந்தைக்கு இரவில்
பால் கொடுக்கலாமா? என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள். தூங்கச் செல்
லும் போது குழந்தைக்கு `பாட்டிலில் பால்' கொடுக்காமல் இருப்பது நல்லது.
கொடுத் தால் குழந்தையின் பல் சேதமாகக் கூடும். இரவு உணவு கொடுத்து விட்டு
குழந் தைக்கு ஒரு கப் பால் கொடுங்கள். அதற்குப் பிறகு ஒரு கப் தண்ணீர்
கொடுங்கள். இதன் மூலம் வாயில் இருக்கும் பாலின் தன்மை கழுவப்பட்டு விடும்.
சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்
கொண்டிருக்கிறது. சைவ உணவை சாப் பிடும் பழக்கம் கொண்டவர்கள் குழந் தைக்கு
அசைவ உணவு கொடுத்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. பால், தயிர், வெண்ணை போன்ற
பால் வகைப் பொருட்களை கொடுக்கலாம். பயிறு வகை களை உணவில் சேர்த்தால்,
குழந்தைக்கு தேவையான புரோட்டீன் சத்து கிடைத்து விடும்.
2 முதல் 3 வயது வரை:
இரண்டு
வயதான பிறகும் குழந்தை ஒரு சில வார்த்தைகள்தானே பேசுகிறது -என்று 75 சதவீத
பெற்றோர் குறிப்பிடுகிறார்கள். இந்த குழந்தைகளுக்கும் பேச்சுத்திறன்
அதிகரிக்கவே செய்யும். அப்பா-அம்மா பேசுவதை பார்த்தும் கேட்டும்தான்
குழந்தைகள் பேசத் தொடங்குகின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்
பவர்களாக இருந்தால், குழந்தைக்கு அவர்களோடு செலவிடும் நேரம் மிகக் குறைவாக
இருக்கும். இந்த மாதிரி குழந்தைகள் தாமதமாகத்தான் பேசும். குழந்தை சரியாக
பேசவில்லை என்பதை உணர்ந்தால், `ஸ்பீச் தெரப்பிஸ்ட்'டிடம் ஆலோசனை
பெறவேண்டும்.
குழந்தைகள் விரல் சப்புவது சகஜமான விஷயம். அதை
நிறுத்துவதற்காக அடிப்பதோ குற்றஞ்சாட்டுவதோ கூடாது. இந்த வயதில்
குழந்தைகள் கிடைப்பதை எல்லாம் வாயில் வைக்கும் பழக்கம் கொண் டவை. அந்த
அடிப்படையில்தான் விரலையும் வாயில் வைத்து சப்புகிறது. பயத்தின் மூலமும்
சில குழந்தைகள் விரலை சப்பும். குறிப்பிட்ட வயதில், இந்த பழக்கம் நீங்கி
விடும்.
இரண்டு வயது குழந்தைகள் 9-10 மணி நேரமாவது உறங்கும். சில
குழந்தைகள் அதிக நேரம் தூங்காது. அதற்கு அறை யின் உஷ்ணம், சத்தம்,
கொசுக்கடி போன்ற ஏதாவது காரணமாக இருக்கும். குழந்தை சற்று குறைவான நேரமே
தூங்கினாலும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
குழந்தைகள்
மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை மலங்கழிக்கும். சில நேரங்களில்
பச்சையாகவும் மலம் வெளியேறும். இதற்கு பல காரணங்கள் உண்டு. சில
குழந்தைகளுக்கு மலம் வெளியேறும் போது வலி ஏற்படும். அதற்கு பயந்து மலம்
கழிக்காமலே இருந்து விடும். அவ்வாறு செய்தால் வயிற்றில் மலத்தின் அளவு அதி
கரித்து அதிக வலி தோன்றும். இது மலச் சிக்கலாகி விடும். இந்த நிலை
ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒரு சில நேரம் பச்சை நிறத்
தில் வெளியேறினால் பிரச்சினை இல்லை. தொடர்ச்சியாக பச்சை நிறத்தில் இருந்
தாலோ, வயிற்றை இளக்கிச் சென்றாலோ டாக்டரிடம் காட்ட வேண்டும்.
குழந்தைகள்
டி.வி. பார்ப்பது தவறல்ல. ஆனால் போதிய இடைவெளியில் அமர்ந்து பார்க்கா
விட்டால், கண்களைப் பாதிக்கும். குழந்தைகளிடம் விளையாட்டு ஆர்வத்தை
உருவாக்க வேண்டியது மிக அவசியம். அந்த ஆர்வத்தைக் கெடுத்து டி.வி.
முன்னாலே உட்கார வைத்து விடுவது சரியல்ல.
இந்த பருவத்து
குழந்தைகள் சிலவற்றிடம் மண் தின்னும் பழக்கம் ஏற்பட்டு விடும். உடலில்
இரும்புச்சத்து குறைவாக இருந்தால், மண்ணைத் தின்னும். அந்த சத்தை ஈடுசெய்ய
வேண்டும். டாக்டரிடமும் காட்டி ஆலோசனை பெறலாம்.
குழந்தைகள்
பெரும்பாலும் மருந்து குடிக்க மறுக்கவே செய்யும். அதனால் மருந்து
கொடுக்கும்போது அவைகளுடைய கவனத்தை விளையாட்டின் பக்கம் திருப்பிவிட
வேண்டும். விளையாட்டு காட்டியபடியே கொடுத்து விடலாம். வற்புறுத்தி
திணிப்பது சரியல்ல.
குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள்
வாங்கிக் கொடுக்கும்போது அவை பளபளப்பாகவும், விலை உயர்ந்த தாகவும் இருந்து
எந்த பலனும் இல்லை. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை தூண் டும் விதத்தில்
அது இருக்கவேண்டும். சப்பாத்தி மாவை சிறிதளவு பிசைந்து கொடுத்து பலவிதமான
உருவங்கள் செய் யச் சொல்லலாம். பேப்பர்களை மடக்கி, விமானம், கப்பல்
போன்றவைகளை உருவாக்கச் செய்யலாம்.
4 முதல் 10 வயது வரை:
இந்த
வயதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி யும், கற்பனைத் திறனும் அதிகரிக்கும்.
அதனால் வீட்டுச் சுவர்களில் இஷ்டத்திற்கும் கோடு போட்டு படம் வரைவார்கள்.
இது ஊக்கு விக்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனாலும் வீடு முழுவதும் எல்லா
சுவர்களிலும் வரைவது வரவேற்கத்தக்கதல்ல. ஏதாவது ஒரு சுவரில் வரையச்
சொல்லுங்கள் அல்லது அதற்கென்று கரும்பலகை ஏதாவது வைத்துக் கொடுத்து
விடுங்கள்.
பள்ளிக்கூடத்திற்குச் செல்ல சில குழந்தைகள்
அடம்பிடிக்கும். அப்போது குழந்தைகளை அடிக்காமலோ, மிரட்டாமலோ, அவைகளுக்கு
ஏன் பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை என்பதை மனரீதியாக ஆராய வேண்டும். உடன்
படிக்கும் குழந்தைகள் தரும் மனோரீதியான தொல்லை, உடல்ரீதியான தொல்லை,
ஆசிரியர்களின் மிரட்டல் அல்லது ஆசிரியர்கள் கொடுக்கும் தண்டனை, பாடல் களை
புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச் சினைகள் போன்ற பல காரணங்களால்
குழந்தைக்கு பள்ளிக்கூடம் பிடிக்காமல் போகலாம்.
இப்போது 5, 6
வயது சிறுவர் -சிறுமியர் தினமும் அதிக நேரம் கார்ட்டூன் சேனல் களைப்
பார்த்து பொழுதுபோக்குகிறார் கள். அதிக நேரம் அவர்கள் டி.வி. பார்ப்பது
கண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் கெடு தல்
ஏற்படுத்தும். அதனால் விளையாட்டு, இதர பொழுதுபோக்குகளில் சிறுவர் களுக்கு
ஆரோக்கியத்தை ஏற்படுத்துங்கள்.
பல பெற்றோர், தங்கள் குழந்தைகள்
போதுமான அளவு உணவு உண்பதில்லை என வருத்தப்படுகிறார்கள். தினமும்
இட்லியையும் தோசையையும் கொடுத்தால், குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்படத்தான்
செய்யும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தினமும் சக மாணவ-மாணவிகள்
மூலம் விதவிதமான உணவுகளைப் பார்க்கிறார்கள். அதனால் தங்கள் வீடுகளிலும்
நிறத்திலும், சுவை யிலும் வித்தியாசமுள்ள உணவுகளை எதிர்பார்க்கிறார்கள்.
அப்படிப்பட்ட உணவு களை கொடுக்கும்போது குழந்தைகள் தாராளமாக உண்ணவேச்
செய்யும்.
இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும்போது
சிறுவர் சிறுமிகளிடம் என்ன கலை ஆர்வம் இருக்கிறது என்பது தெரிந்து விடும்.
பாடும் ஆற்றல் இருப்ப தாக உணர்ந்தால், அதற்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்து
கொடுங்கள். அதுபோல பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தை உருவாக்கி
கொடுங்கள். அவன் விரும்பும் போட்டிகள் டி.வி.யில் நடப்பதை பார்க்க
வாய்ப்பு கொடுங்கள். முக்கியமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அக்கறை
செலுத்தச் செய் யுங்கள்.
சிறுவர்-சிறுமியர்களிடம் பிடிவாதம்
இருக்கத்தான் செய்யும். பெற்றோரின் அணுகு முறையால்தான் பிடிவாதம் கூடவோ,
குறையவோ செய்யும். குழந்தை கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து
விடக்கூடாது. குழந்தைகள் வளர வளர அதன் தேவைகள் வளர்ந்து கொண்டே இருக்கும்.
அதனால், தேவை யான பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுங்கள். ஒரே குழந்தையை
வளர்க் கும் பலரும் `நாங்கள் சம்பாதித்து வைப் பது சேர்த்து வைத்திருப்பது
எல்லாம் உனக்குத்தான். அதனால் நீ எதைக் கேட்டாலும் வாங்கித் தருவோம்' என்ற
மனோபாவத்தில் இருக்கிறார்கள். இது தவறான அணுகுமுறையாகும். குழந்தை களின்
எதிர்காலத்தையும் பாதிக்கும்.
நன்றி யாழ் இணையம்
Re: பிறப்பு முதல் பத்து வயது வரை
புத்திசாலியான குழந்தைகள் வளர....
ஒரு
குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்பார்கள்.
குழந்தை வளர்ப்பு என்பது தனி கலை. ஒவ்வொரு குழந்தையும் தனக்கு என்று ஒரு
உலகத்தை வைத்துக் கொள்கிறது. அதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள
வேண்டும். அவர்களின் உலகத்துக்குள் சென்று அவர்களின் எண்ணங்களை பாராட்டி,
அதே நேரம் அவர்களை நமது நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வருவது ஒவ்வொரு
பொற்றோர்களின் கடமை ஆகும்.
குழந்தைகளுக்கே உள்ள பயத்தை போக்குவது
முதலில் நம் கடமை. அதற்கான வழிகளை கையாள வேண்டும். இருட்டான நேரத்தில்
அவர்கள் பயப்படுவதை தவிர்க்க தேவையான தன்னம்பிக்கை கதைகளை கூற வேண்டும்.
அப்போது இருட்டு பயத்தில் இருந்து குழந்தை விடுபடும். அதன்பிறகு
குழந்தைகள் அணியும் உடைகளை பார்த்து அவர்களை பாராட்ட வேண்டும். இந்த
பாராட்டால் முக மலர்ச்சி அடையும். குழந்தைக்கு தன்னை அறியாமல்
தன்னம்பிக்கை வளரும்.
பள்ளிக்கூடத்தில் பாடம் படிப்பதிலும்,
வீட்டுப் பாடம் படிப்பதிலும் அனைத்து குழந்தைகளும் சரியாக செய்யும் என்று
கூறமுடியாது. அப்போது அவர்களின் குறைகளையும், நிறைகளையும் ஆராய வேண்டும்.
அவர்களின் நிறைகளை பாராட்டி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து,
குறைகளை ஆராய்ந்து அந்த குறைகளுக்கான காரணத்தை அறிந்து அதை போக்க நாம் சில
ஆலோசனைகளை கூறவேண்டும். இது அவர்களை உற்சாகப்படுத்தும்.
குழந்தைகள்
பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், ''டியூசன்'', அதன்பிறகு வீட்டு பாடம்,
சாப்பாடு, தூக்கம் என்று ஒரு வட்டத்துக்குள் விட்டுவிடக் கூடாது,
''டியூசன்'' முடிந்ததும் அவர்களுடன் காலாற நடந்து சென்று அவர்களுக்கு
பிடித்த விளையாட்டை விளையாடி திருப்தி படுத்த வேண்டும். பின்னர் தூக்கம்
வந்த பிறகும் ''படி படி'' என்று கூறாமல் தூங்க வைக்க வேண்டும். தூங்க
செல்வதற்கு முன் அன்போடு, வீட்டு பாடம் செய்ய வேண்டியது உள்ளது. ஆகவே காலை
6 மணிக்கு எழுந்து விட்டால் வீட்டு பாடம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையை
அவர்களிடம் ஏற்படுத்தி படுக்க வைக்க வேண்டும். காலை 6 மணிக்கே குழந்தை
எழுந்து வீட்டு பாடம் செய்ய அலாரம் வைத்து, அவர்களுடன் நாமும் எழுந்து
வீட்டுபாடம் முடிக்கும் வரை அருகில் உட்கார்ந்து இருக்க வேண்டும்.
குழந்தைகளை படிக்க சொல்லிவிட்டு டி.வி. பார்ப்பது தவறான செயல். அதை
பெற்றோர்கள் தவிர்ப்பது அவசியம்.
குழந்தை தவறு செய்து விட்டு
வந்து நம் மன்னிப்பை எதிர்பார்த்து நிற்கும் போது, அவர்களுக்கு ஆறுதலான
வார்த்தைகளை கூறி ''டேக் இட் ஈஸி'' என்று கூறுங்கள். அவர்களிடம் குற்ற
உணர்வு பறந்துவிடும். நாம் தவறு செய்யும் போது ''சாரிடா கண்ணா'' என்று
கூறினால் அவர்களும் அந்த வார்த்தைகளை பின்பற்றுவார்கள். அதே சமயம்
குழந்தைகளுக்கு யாராவது ஏதாவது உதவி செய்யும் போது அதற்கு ''நன்றி''
தெரிவிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகளில்
நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை எட்டாத போது குழந்தை முகம்
வாடி இருக்கும். அப்போது இந்த போட்டிகளில் கலந்துகொள்வது தான் முக்கியம்
என்று கூற வேண்டும். அப்போது தோல்வியை கண்டு அவர்கள் பயப்பட மாட்டார்கள்.
பல போட்டிகளில் பங்குபெறும் ஆர்வமும் தன்னம்பிக்கையும் வளரும். பள்ளிகளில்
நடக்கும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பை எக்காரணத்தை முன்னிட்டும் தவற
விடக் கூடாது. ஏனெனில் குழந்தைகளின் திறமையை உரசி பார்க்கும் இடமே
அதுதான். அங்கு கிடைக்கும் ''ரிசலட்''டை வைத்து குழந்தை செல்ல வேண்டிய
பாதையை வகுக்க முடியும்.
இவை அனைத்துடன் சுற்றுப்புற தூய்மை
அவசியத்தை விளக்குவதும் நமது கடமை ஆகும். இதையெல்லாம் பெற்றோர் சரி வர
கடைபிடித்தால் தன்னம்பிக்கை உள்ள குழந்தை தயார். ஒரு குழந்தை பெரிய
அறிவாளியாகவும், திறமைசாலியாகவும் வளர்வது ஒவ்வொரு பெற்றோர்களின்
வளர்ப்பில்தான் உள்ளது.

பல்
பல் போனால் சொல் போகும்
டாக்டர் டி.பி.மகேந்திரன்
'பல்
போனால் சொல் போகும்' என்ற பழமொழியே நமது பல்லின் முக்கியத்துவத்தை
உணர்த்தும். அப்படிப்-பட்ட பற்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாகப்
பராமரிக்கத்தான் வேண்டும். இதோ, பல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம்
குழந்தைகளைக் காப்பாற்ற வழி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவ
நிபுணர், டாக்டர் டி.பி.மகேந்திரன்.
''குழந்தை பிறந்தவுடன் ஆறு
மாதங்கள் கழிந்த நிலையில் பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் (milk
tooth or temporary tooth) வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று
வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான்
அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாக இந்தப்
பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை
குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால்
குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில்
நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் (strepto coccus) எனப்படும்
பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து,
கேரிஸ் (caries) எனப்படும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை 'நர்ஸிங்
பாட்டில் கேரீஸ்' (nursing bottle caries) என்று அழைக்கிறோம்.
குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.
பால்
பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும்
பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள்
விழாமல் இருக்கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க
ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் இடையூறா£க இருக்கும் பால் பற்களை
டாக்டரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்கா விட்டால், பற்களில்
அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு
இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும்.
சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு
வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக தோற்றமளிக்கும்..
பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக் காரணம். பால்
பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் (permanent tooth) வளரும் பருவத்தில்
இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள்
இடையூறாக இருப்பதால் பற்கள் தன் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப
நீண்டு வளர ஆரம்பிக்கும். எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை
குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை
அனுமதிக்கக் கூடாது.
என்ன முயன்றும் விரல் சூப்புவதை விட முடியாத
குழந்தைகளுக்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. கிளிப் ட்ரீட்மென்ட் (clip
treatment) எனும் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சையில் துருப்பிடிக்காத
சின்ன கிளிப்புகளை மேல் தாடையில் பொருந்தி விடுவதால் அவர்களால் விரல்
சூப்ப முடியாது. ஆனால், இந்த கிளிப்புகளை மாட்டிய பிறகு கடினமான பொருட்களை
சாப்பிட்டால் அவை உடைந்து போய் விடக் கூடும்.
பற்களைத் துலக்குகிற
விஷயத்தில் எல்லோரும் செய்கிற தவறு பற்களை மட்டும் துலக்குவதுதான். பல்
எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு ஈறுகளும் முக்கியம். ஈறுகளுக்கும்
பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளியில் நாம் சாப்பிடும் பொருட்கள்
தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்னைக்கு முதல் படி. எனவே, குழந்தைகள் பல்
துலக்கப் பழகும்போதே பல்லுக்கும் ஈறுகளுக்கும் உள்ள இடைவெளியை சுத்தம்
செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.''
நன்றி M.RISHAN SHAREEF, இணையம்

பல் சொத்தையால் ஏற்படும் சைனஸ் தொந்தரவுகள்!
- டாக்டர் ரவி ராமலிங்கம் -
பல்லில்
உண்டாகும் சொத்தைக்கும் சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
இரண்டையும் இணைத்துவைப்பது அவற்றின் இருப்பிடம் அமைப்பு தான். பற்களின்
வேருக்கு மிக அருகில்தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன.
பல்லில்
உண்டாகும் சொத்தை மேலும் மேலும் வளரும்பட்சத்தில் அது பல்லின் வேர்வரை
புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸிலரி சைனஸ் அறையையும் தொட்டுவிட
வாய்ப்பு இருக்கிறது. அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே
சீழ்தேங்க ஆரம்பித்துவிடும்.
இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில்
வீக்கம் உண்டாகி, அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்துவிடம். பல் சொத்தையால்
சைனஸ் பிரச்சினை வருவது இப்படி தான் என்கிறார் சென்னை பூந்தமல்லி
நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காதுமூக்கு தொண்டை மருத்துவமனை டாக்டர்
ரவிராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:
பல் சொத்தை மட்டுமல்ல...
ஏதோ காரணத்துக்காகப் பல்லைப் பிடுங்கும்போது உஷாராக இல்லையென்றாலும்
கஷ்டம்தான். பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த
வகையிலும் சைனஸ் அறையைப் பாதித்து விடக் கூடாது.
விபத்துக்களின்
போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தைக் குறி வைக்கும்
எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளைச் சேதப்படுத்தி,
சைனஸ் தொந்தரவைக் கொண்டு வரும் வாய்ப் பிருக்கிறது.
சைனஸ்
பிரச்சினையை நாங்கள் இரண்டு வகையாக எடுத்துக் கொள்கிறோம். ஒன்று...
திடீரென்று வந்த போதும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இன்னொன்று...
நிரந்தரமான, ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ். முதல் வகையை சொட்டு
மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே
குணப்படுத்திவிடலாம்.
மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை
வரை போக வேண்டிய திருக்கும். ஆனால் சைனஸ் பிரச்சினையைப் பொருட் படுத்தாமல்
விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும்
முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் `கட்டுப்படுத்த
இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக் களையும் நீக்கினால்தான் முழு
நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை.
டர்பினேட் ஜவ்வுகளையும் வளரவிட
வேண்டும். ஆனால், இதெல்லாம் சாதாரண காரிய மில்லை. இப்போது இதற்கும்
முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மருத்துவத்துறையில் நவீன சிகிச்சை
முறைகள் வந்துவிட்டன.
பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய
அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடி
கிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பதுதான்
இப்போதைய நிலை.
முன்பெல்லாம் சைனஸ் பிரச்சனை என்றால் சைனஸ் அறையை
ஓட்டை போடுவதுதான் எளிய வழியாக இருந்தது. மூக்குக்கு உள்ளே
சிரிஞ்ச்வாயிலாக நீரை பீச்சி அடித்தால் அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை
உண்டாக்கிவிடும். உள்ளே தேங்கி கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே
வந்து விடும். காலப்போக்கில் இந்த ஓட்டை தானாகவே குணமாகி, நிரப்பப்பட்டு
விடும் என்றாலும், இதில் ஒர பெரிய சிக்கல் இருந்தது.
அடுத்து
எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம். மறுபடியும் ஓட்டை போட்டுதான் அதை
வெளியே எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சிக்கல். இப்போது இந்தச்
சிக்கலுக்கும் தீர்வு கண்டாகிவிட்டது. மூடப்பட்ட கதவைத் திறந்தாலே
உள்ளேயிருக்கும் சீழ் வெளியேறி விடும் அல்லவா... அந்தக் கதவை சரியான
அளவில் திறப்பதுதான் இப்போதைய சிகிச்சை முறை.
சி.டி. ஸ்கேன்,
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால், எந்த சைனஸ் அறை
பாதிக்கப்பட்டிருக்கிறது.... எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது... அவற்றில்
இருப்பதுசளிதானா அல்லது சீழா... என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக கண்டறிய
முடிகிறது.
இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகிவிட்டது. சைனஸ்
அறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது
ஓட்டை போட வேண்டியிருக்குமா.. அது தழும்புகளை உண்டாக்கும் அளவுக்கு
இருக்குமா? அதற்கெல்லாம் அவசியம் இல்லை.
அறுவை சிகிச்சை கருவிகளைக்
கையாள மூக்குக்கு உள்ளே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது. அப்படியில்லை
என்றால் வாய்வழியாகக்கூட சைனஸ் அறைகளை அடைத்து அறுவைச் சிகிச்சை
மேற்கொள்ளலாம்.
எத்மாய்டு அல்லது ப்ரன்டல் சைனஸ் அறைகளில் பாதிப்பு
ஏற்படுபவர்களுக்கு மட்டுமே, தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே
லேசாகக் கிழிக்க வேண்டியிருக்கும். அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு
தெளிவாகத் தெரியாதஅளவுக்கு மிக மிகச் சிறிதாக இருக்கும். கவலையே வேண்டாம்
என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.
நன்றி ஜோண் நிரூபன் ,இணையம்

Similar topics
» பத்து வயது பால்ய தேவதாசிகள்
» பட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி
» பத்து வயது சிறுமியிடம் பாலியல் சேட்டைபுரிந்த ஸ்ரீலங்கா விமானப்படை வீரர் இனங்கானப்பட்டர்.
» அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் முதல் பத்து நோய்கள் !
» இலவச பிறப்பு இறப்பு சான்றிதழ் மற்றூம் மருத்துவமனை பிறப்பு இறப்பு பதிவு - வெளி நாட்டில் இருந்து கூட சேவையை இலவசமாக பெற்றூ கொள்ளலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum