Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
போலீஸ் அதிகாரிகளில் யார் யாருக்கு முக்கிய பதவி?
Page 1 of 1
போலீஸ் அதிகாரிகளில் யார் யாருக்கு முக்கிய பதவி?
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டி.ஜி.பி., உள்ளிட்ட
முக்கிய பதவிகளில் யார் யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு
போலீஸ் அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது
தி.மு.க., ஆட்சி மாறி, அ.தி.மு.க., முழுப் பெரும்பான்மையுடன்
ஆட்சியமைக்கிறது. ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, அரசு
அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம். குறிப்பாக மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை
காப்பாற்றும், மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கும் போலீஸ் துறையின்
தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், மாவட்ட தலைமை அதிகாரிகள், என அனைவரும்
மாற்றப்படுவர்.
பொதுவாக, மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும்
சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,
உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஐ.ஜி., தலை நகரான சென்னை போலீஸ் கமிஷனர்
மற்றும் முக்கிய நகரங்களின் கமிஷனர்கள் என முக்கிய பொறுப்பில் உள்ள
அதிகாரிகள் மாற்றப்படுவர். கடந்த முறை, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற
போதும் இதே போல், அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.இப்போது, அ.தி.மு.க., ஆட்சி
பொறுப்பேற்ற உடன், வழக்கம் போல் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என
கூறப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க.,வின்
கோரிக்கையை ஏற்று தேர்தல் கமிஷன் சில அதிகாரிகளை மாற்றம் செய்தது. அதில்,
டி.ஜி.பி., லத்திகா சரணும் ஒருவர். அவர் அப்பதவியில் இருந்து மாற்றப்படா
விட்டாலும், தேர்தலை நடத்தும் பொறுப்பு பறிக்கப்பட்டு, விஜிலென்ஸ்
இயக்குனராக இருந்த போலோநாத்துக்கு வழங்கப்பட்டது. "ஒரு உறையில் இரண்டு
கத்தி' இருப்பது பிரச்னைக்குரியதாக்கும் என்பதால், லத்திகா சரண்,
விடுமுறையில் செல்ல, சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., பதவியையும் போலோநாத்தே
கவனித்தார்.
விடுமுறை முடிந்து வந்த லத்திகா சரண், ஜெயலலிதாவை
சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தற்போது புதிய ஆட்சி அமைய உள்ள
நிலையில், லத்திகா சரணுக்கு பதில் டி.ஜி.பி.,யாக போலோநாத்தே தொடருவார்
என்ற கருத்து நிலவுகிறது. அல்லது வீரப்பன் விவகாரத்தில் சிறப்பாக
செயல்பட்டு, தற்போது சி. ஆர்.பி.எப்., தலைமை இயக்குனராக உள்ள விஜயகுமார்,
தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவரை தமிழக டி.ஜி.பி.,யாக நியமிக்க
வாய்ப்புள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கு
கூடுதல் டி.ஜி.பி.,யை பொறுத்தவரை தற்போதுள்ள ராதாகிருஷ்ணனே தொடருவார் என
தெரிகிறது.ஒரு வேளை அவர் மாற்றப்படும் பட்சத்தில், அவருக்கு பதிலாக அனூப்
ஜெய்ஸ்வால் உள்ளிட்ட சிலரது பெயர்கள் அடிபடுகின்றன. அடுத்ததாக
உளவுப்பிரிவு தலைவர் பதவி மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆட்சி மாற்றம்
ஏற்படும் போதெல்லாம், இந்த பதவியில் இருப்பவர்கள் மாற்றப்படுவது
கட்டாயமாகி விடுகிறது.
தி.மு.க., ஆட்சிக் காலத்தில் உளவுப்பிரிவு
ஐ.ஜி.,யாக இருந்த ஜாபர் சேட்டுக்கு, கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு
கிடைத்தபோதும் அங்கேயே நியமிக்கப்பட்டார். தி.மு.க., வின் முக்கிய
முடிவுகள் பலவற்றிற்கு, இவர் அளித்த தகவல்களே பின்புலமாக அமைந்திருந்தது
என்பதை யாரும் மறுக்க முடியாது.ஆனால், அந்த தகவல்களே தற்போது
தி.மு.க.,வின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க, ஆட்சி அமைந்தவுடன், ஜாபர் சேட் மாற்றப்படுவது உறுதியாகி
விட்டது. இவருக்கு பதில் கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜம் நியமிக்கப்பட
வாய்ப்புள்ளது.
அதே போல், உளவுப்பிரிவு ஐ.ஜி.,யாக உள்ள சங்கர்
ஜூவால் மாற்றப்பட்டு, அவருக்கு பதில், தற்போது நிர்வாகப்பிரிவு ஐ.ஜி.,யாக
உள்ள தாமரைக்கண்ணன் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அடுத்தது தலைநகர் சென்னை போலீஸ் கமிஷனர் பதவி. தற்போது கமிஷனராக உள்ள
ராஜேந்திரன் மாற்றப்படலாம் என தெரிகிறது.சென்னை கமிஷனர் பதவிக்கு ஏற்கனவே
கூடுதல் டி.ஜி.பி.,க்களான ஜார்ஜ் மற்றும் திரிபாதி ஆகியோர் மோதி
வருவதாகவும் தகவல் உள்ளது. இவர்களை தவிர ஏற்கனவே கமிஷனராக இருந்த சேகர்
மீண்டும் வரலாம் என்றும் கூறப்படுகிறது.
தேர்தல் நேரத்தில்
புறநகர் கமிஷனர் மாற்றப்பட்டு, புதிய கமிஷனராக கரண் சின்கா
நியமிக்கப்பட்டார். இந்த பதவிக்கு தற்போது கோவை மாநகர கமிஷனராக உள்ள
சைலேந்திரபாபுவுக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.தி.மு.க.,விற்கு விசுவாசியாக இருந்த அதிகாரிகள், முக்கிய
பதவிகளில் நியமிக்கப்பட்டவர்கள் என பலரும் தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளால்
நடுநிலையாளர்களாக மாறிய நிலையில், யாருக்கு என்ன பதவி என்பது புதிய ஆட்சி
அமைந்த பிறகு உறுதியாக தெரிந்து விடும்.
நான்கு புதிய அரசு
செயலர்கள் : தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் தமிழக அரசில்
தற்போது முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான ஷீலா பிரியா,
ராம்மோகன் ராவ், ராமலிங்கம் மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான
வெங்கட்ரமணன் ஆகியோர் போயஸ் கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவை சந்தித்து
வாழ்த்து தெரிவித்ததுடன், அவருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
புதிய ஆட்சி அமையும் போது, இவர்கள் நால்வரும் அரசின் முக்கிய
பொறுப்புகளில் அரசு செயலர்களாக நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மோடி பதவி ஏற்பில் யார் உள்ளேன்,யார் இல்லேன்? வைகோ கைது .
» போலீஸ் "ஹிட் லிஸ்ட்'டில் 35 பிரமுகர்கள் யார், யார்?
» அடுத்த முறை யாருக்கு மந்திரி பதவி? கருணாநிதி தகவல்
» யார், யாருக்கு தேர்தலில் சீட்...? ஜெ.வின் சென்டிமென்ட் படுத்தும் பாடு!
» தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்!- விகடன்
» போலீஸ் "ஹிட் லிஸ்ட்'டில் 35 பிரமுகர்கள் யார், யார்?
» அடுத்த முறை யாருக்கு மந்திரி பதவி? கருணாநிதி தகவல்
» யார், யாருக்கு தேர்தலில் சீட்...? ஜெ.வின் சென்டிமென்ட் படுத்தும் பாடு!
» தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்!- விகடன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum