Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
குருமாற்ற சிறப்புப் பலன்கள்
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம் :: ஜோதிடம்
Page 1 of 1
குருமாற்ற சிறப்புப் பலன்கள்
இன்று ஞாயிற்றுக்கிழமை 8.5.2011 கர வருடம் சித்திரை மாதம் 25ஆம் தேதி
பின்னிரவு 1.12 மணிக்கு மீன ராசியிலிருந்து மேடராசிக்கு குருபகவான்
செல்கிறார்.
திங்கட்கிழமை 9.5.2011 முதல் 16.5.2012 வரை மேட ராசியில்
அமர்ந்திருக்கப் போகும் குருபகவான், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு,
மீனம் ஆகிய ராசிகளுக்கு சிறப்பான பலன்களையும், ஏனைய ராசியினருக்குச்
சற்றுச் சிரமமான பலன்களையும், வழங்குவார். பன்னிரு ராசிகளுக்குமான
குருமாற்ற பலன்களை இனிக் காணலாம்.
இவை ராசிகளுக்கான பொதுப்பலன்களே. ஒவ்வொருவருக்குமான ஜனனகால ஜாதக கிரக
பாவநிலையினடிப்படையிலும், தசாபுத்திகளினடிப்படையிலும், இப்
பொதுப்பலன்களில் மாற்றங்கள் காணப்படும் என்பதனையும் கவனத்திற் கொள்ளவும்.
ஆதலால் சுபபலன்கள் காணும் ராசியினர் அளவுக்கு மீறிய செயற்பாடுகளை
மேற்கொள்வதனையோ, அன்றி அசுப பலன்கள் காணும் ராசியினர் அளவுக்கதிகமான
சோர்வு நிலையோ காணாது, இயல்பான வாழ்நிலையையும், இயன்ற பரிகாரங்களையும்
மேற்கொண்டு வாழ்வது சாலச்சிறந்ததாகும்.
மேடம்: (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
மேடராசி அன்பர்களே! அடுத்து வரும் ஓராண்டு காலத்திற்கு குருபகவான்
உங்களது ராசியிலேயே ஜென்மகுருவா அமர்ந்திருக்கப் போகின்றார். ஜென்ம
குருவானவர் உங்களுக்குப் பொருளாதார நிலையில் முன்னேற்றங்களைத் தருவார்
என்கின்ற போதிலும், கொடுங்கல் வாங்கல் விவகாரங்களில் சிரமங்களை
ஏற்படுத்தக் கூடும். குடும்பத்தில் கணவன் - மனைவியிடையே கருத்து
வேறுபாடுகளும், உடல் நலம் தொடர்பில் சீரற்ற தன்மையினையும் கொடுப்பார்.
ஆயினும் இவற்றால் பெருமளவிலான கெடுதல்கள் இல்லை.
இவ்வருட இறுதிவரை சனிக்கிரகத்தின் சஞ்சாரம் உங்கள் ராசிக்குச் சாதகமாக
இருப்பதால், டிசம்பர் மாதம் வரை, எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும்
பலம் கிடைக்கும். தொழில் முயற்சிகளில் பலத்த போட்டிகளையும், சிரமங்களையும்
சந்திக்கநேரிடும். பெண்கள், கலைஞர்கள், ஏமாற்ம் அடையாதிருக்க
முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற
ஆடையும் கொண்டைக் கடலையால் செய்த மாலையையும் சாற்றி அர்ச்சனை செய்வதும்,
நெய் தீபமேற்றுவதும் சிறப்பான பரிகாரமாக அமையும்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.
இடபம்: (காத்திகை 2-ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம்)
அடுத்து வரும் ஓராண்டு காலப்பகுதிக்கு குரு பகவான் உங்கள் ஜென்ம
ராசிக்கு 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இந்தப் பன்னிரெண்டாம் இடம்
என்பது விரயஸ்தானமாக அமைவதால், இக்காலப்பகுதியில் பொருளாதார விடயங்களில்
எதிர்பாராத வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். கணவன் மனைவி விட்டுக்
கொடுத்து நடப்பது என்பது இக்காலத்தில் ஏற்படக் கூடிய குடும்ப விரிசலைத்
தவிர்க்கும். பணியிடங்களில் அனுசரித்துப் போதலும், மோதல்களைத் தவிர்த்துக்
கொள்வதும், நல்லது.
எதிர்பாராத பயனங்களின் மூலம் சிலருக்கு சிறப்புக்கள் சேரும். வருட
இறுதியில் சனிக்கிரகத்தின் நகர்வு உங்களுக்குச் சற்று ஆரோக்கியத்தையும்,
ஆறுதலையும், நம்பிக்கைகளையும் தோற்றுவிக்கும். தளராது போராடுங்கள் வெற்றி
காண்பீர்கள். மாணவர்கள் கல்வியில் முயற்சிக்குத் தக்க முன்னேற்றம் காண
முடியும். இந்த ராசிக்காரர்களும் வரும் ஒரு வருட காலத்துக்கு
வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற ஆடையும்
கொண்டைக் கடலையால் செய்த மாலையையும் சாற்றி அர்ச்சனை செய்வதும், நெய்
தீபமேற்றுவதும் சிறப்பான பரிகாரமாக அமையும்.
அதிர்ஷ்ட தேதிகள்: 7, 10, 16, 18, 24.
மிதுனம்: (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம்)
குருபகவான் உங்கள் ராசிக்குப் பதினோராம் இடத்துக்கு வருவது பொருளாதார
ரீதியாகச் சிறப்பான அனுகூலங்களை ஏற்படுத்தும். குடும்பத்தில்
மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடைபெறும். பலதரப்புக்களிலும் இதுவரை இருந்து
வந்த பகைமைகள் விலகி எதிலும் மகிழ்ச்சி நிலவும். வருட இறுதியில்
சனிக்கிரகத்தின் நகர்வின் நற்பலனால், இதுவரையில் இருந்து வந்த துன்பங்கள்
யாவும் மறைந்து விடும் மங்கலங்கள் கூடும்.உத்தியோகத்தில் சிறப்புக்களும்,
உயர்வுகளும் தேடி வரும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமும், கலைஞர்களுக்கு அதிர்ஷ்டமம்,
பெண்களுக்கு மக்கட் சிறப்பும் ஏற்படும். குருமாற்றம் சிறப்பாக இருப்பினும்
வருட இறுதிவரை சனிக்கிரக சஞ்சாரம் சாதகமாக இல்லாமையால், வரும் துன்பங்கள்
நீங்க, சனிக்கிழமைகளில் , ஆஞ்சநேயர், விஷ்ணு, வழிபாடுகள் மேற்கொள்வதும்,
நெய்தீபம் ஏற்றுதலும் நன்மை தரும்.
அதிர்ஷ்ட தேதி: 4, 5, 9, 14, 18, 23.
கடகம்: (புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
கடகராசி அன்பர்களே! உங்களது ராசிக்குப் பத்தாம் இடத்திற்கு நகரும்
குருபகவான், அடுத்து வரும் ஒரு வருட காலத்துக்கு, உங்களுக்கு பல்வேறு
சிரமங்களையும், காரியத் தடைகளையும் ஏற்படுத்தக் கூடும். வருட இறுதியில்
நிகழும் சனிமாற்றமும் சாதகமாக அமையாத காரணத்தினால், எதிலும் அதிக
வழிப்புடன் செயற்படுவது நல்லது.
உடல் ஆரோக்கியம், தொழில் முயற்சி என்பவற்றில் மிகுந்த கவனமும், கணவன்
மனைவி உறவில் விட்டுக் கொடுப்பும், பணியிடத்தில் பொறுமையும் அவசியமாகும்.
மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வமுடனும், கலைஞர்கள் நிதானத்துடனும்
செயற்படுவதும் தேவையானதாகும். வியாழக்கிழமை விரதமிருப்பதும்,
தட்சிணாமூர்திதயை மஞ்சள் மலர் கொண்டு வழிபடுவதும், நெய்த்தீபம் ஏற்றுவதும்
குருப் பிரீதி செய்வதாகும். சனிக்கிழமை விரதமிருப்பதும், எய்தீபம்,
ஏற்றுவதும், மஹாவிஷ்ணு, ஆஞ்சநேய வழிபாடு என்பனவும் ஆறுதல் தரும்.
அதிர்ஷ்ட தேதி : 2, 11, 20, 29.
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து துன்பத்தில் துவண்ட உங்களுக்கு, உங்கள்
ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கு வரும் குருபகவான் ஒப்பற்ற உயர்வுகளைக்
கொடுக்கவுள்ளார். இதுவரை காலமும் தடைப்பட்ட முயற்சிகள் தடையின்றிக்
கூடும். மங்களகரமான சுபகாரியங்களும், திருமணமும் இனிது நிறைவேறும்.
தொழில்துறையிலும், பொருளாதார முயற்சிகளிலும் எதிர்பார்த்த வரவுகளும்,
இலாபங்களும் கூடிவரும்.
வருட இறுதியில் நிகழும் சனிக்கிர மாற்றம், ஏழரைச் சனியின்
பிடியிலிருந்து உங்களை விடுவிக்கும். அரசு வழியில் ஆதரவும். நல்லோர்
நட்பும்,ஏற்படும். எதிர்பாராத இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமும், கலைஞர்களுக்கு
புதியவாய்ப்புக்களும், புதிய முயற்சிகளும் கூடிவரும்.
பொன், பொருள், வாகனம், வீடு, தொழில் என எல்லாவித சுகங்களையும்
அனுபவித்து மகிழும் அதேவேளை, இவ்வளவு காலமும் உங்களைச் சிரமப்படுத்திய
துன்பங்கள் விலகி சீரான காலம் வரும் இந்த வேளையில் சிறப்பாகச் சிந்தித்து,
உயர்வான வாழ்வுக்கு அடித்தளமிடுங்கள்.
குருமாற்றம் சிறப்பாக இருந்த போதும், வருட இறுதி வரை தொடரும் சனிக்கிரக
பாத சஞ்சாரத்தினால் வரக் கூடிய அசுப பலன்கள் நீங்க, சனிக்கழமை
விரதமிருந்தல், எள்தீபம் ஏற்றல், ஆஞ்சநேய வழிபாடு என்பன அற்புதமான
பலன்களைத் தரும்
அதிர்ஷ்ட தேதி : 1, 10, 19, 28.
கன்னி: (உத்திரம் 2-ஆம் பாதம், அத்தம், சித்திரை 2-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு அஷ்டமஸ்தானம் எனும் எட்டாம் இடத்திற்குக் குருபகவான்
வருவதென்பது மிகுந்த சோதனைகளைத் தரக் கூடியது என்பதுடன், ஏழரைச் சனியின்
பிடிக்குள் இருப்தனால் எல்லாவிதமான வழிகளிலும் முயற்சிகள் தடைப்படக்
கூடும். உடல் நலத்திலும் பாதிப்புக்கள் ஏற்படும். குடும்பத்தில் குழப்பமான
நிலைகள் காணப்படும். விபத்துக்கள் ஏற்படலாம். இவ்வாறான பலன்களினால் உங்கள்
மனநிலையில் சோர்வு காணப்படலாம். ஆகவே எப்போதம், எதிலும் நிதானத்தையும்
அமைதியையும் கடைப்பிடிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு கல்வி முயற்சிகளில் சோர்வும், பரீட்சைகளில் பாதகமான
முடிவுகளும் காணப்படலாம். கலைஞர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற
முடியாத நிலையும், வீண் அலைச்சல்களும் ஏற்படும்.
குருபகவானின் தோஷநிவரத்திக்கு வியாழக்கிழமை விரதமிருந்து, மஞ்சள்
பூகொண்டு தட்சினாமூர்த்திக்கு வழிபாடியற்றுவதும், சனிக்கிரக தோஷம் குறைய
சனிக்கிழமைகளில் விரதமிருந்து, எள்தீபம் ஏற்றி, நீலநிற மலர்களால்
சனிக்கிரக வழிபாடியற்றுவதும், தீய பலன்களின் தாக்கத்தைக் குறைக்கும்.
அதிர்ஷ்ட தேதி: 5, 9, 14, 18, 23, 27.
துலாம்: (சித்திரை 3-4ஆம், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் வரை)
உங்கள் ராசிக்கு ஏழில் வரும் குரு பகவான் உங்களுக்கு எல்லாவித
நன்மைகளையும் செய்யக் கூடியதாக இருந்த போதும், ஏழரைச் சனியின் சஞ்சாரம்
எதிலும் பாதிப்பினை ஏற்படுத்தப் பார்க்கும். இருந்த போதும் உங்கள்
பொருளாதார வளம் சிறக்கும். தொழில் வளம் பெருகும். உடல் ஆரோக்கியம், கணவன்
மனைவி நெருக்கம் ஏற்படும்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், பணி உயர்வும்,
கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முயற்சிக்குரிய முன்னேற்றம்
கிடைக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் வரும். வரும் சந்தர்பங்களை
நழுவவிடாது பாரத்துக் கொள்வது உங்களது சாமர்த்தியம்.
ஜனன கால ஜாதக கிரகநிலை நல்லவிதமாய் அமைந்திருப்பின் மேலும்
சிறப்புக்கள் உண்டாகும். சனிக்கிரகத்தின் சாதகமற்ற நிலையில் பரிகாரம் காண,
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து எள்தீபம் ஏற்றி சனிபகவானை நீல
நிறமலர்களால் பூஜிக்கவும்.
அதிர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8.
விருச்சிகம்: (விசாகம் 4-ம் பாதம் , அனுஷம், கேட்டை)
விருச்சிக ராசி நன்பர்களே! கடந்த ஓராண்டில் உங்களுக்கு ப் பலவகையிலும்
உதவியாக இருந்தவர்களே விலகிச் செல்லும் காலமாக அடுத்து வரும் ஒரு வருட
காலம் அமையலாம். இதுவரையில் சுபஸ்தானத்தில் இருந்த குருபகவான் இனி வரும்
ஒரு வருட காலத்துக்கு உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு வருகின்றார்.
இது உங்களுக்கு பொருளாதார ரீதியாகவும், தொழில்துறை சாரந்தும் சில
பின்னடைவுகளைத் தரக் கூடும். தேவையற்ற வீண் பழிச்சொல்லுக்கும், சீரற்ற
உடல் ஆரோக்கியத்துக்கும் ஆளாகக் கூடும். இவ்வாறான நிலையில் வருட
இறுதிப்பகுதியில் நிகழும் சனி மாற்றமும் ஏழரைநாட்டுச் சனியாக அமைவதால்
மேலும் இறுக்கமான நிலையைத் தொற்றுவிக்கும். குடும்பத்தில் குளப்பங்களும்,
உறவுகளுக்குள் விரிசல்களையும் ஏற்படுத்தும்.
ஆயினும் எதிலும் தளர்ந்து போகாது, சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலமும்,
சீரிய இறைவழிபாடுகள் மூலம், உங்களது கடினமான காலப் பகுதியினை தாண்டி,
வெற்றியுடன் பயணிக்க முடியும்.
குருபகவானுக்கு ப்ரீதியாக, வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து, மஞ்சள்
மலர்களால் தட்சினாமூர்த்திக்கு அரச்சனை செய்தல், குருபகவானுக்கு
கொண்டைக்கடலை மாலை அணிவித்தல், நெய்த் தீபம் ஏற்றல் என்பனவும், சனிக்கிழமை
தோறும் விரதமிருந்து, நீலநிற மலர்களால் சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்து,
வழிபடுதல் என்பதும், சிறந்த பரிகாரங்களாக அமையும். ஏழை மாணவனின் கல்விக்கு
உதவுதல், ஊனமுற்ற ஒருவருக்கு உதவியளித்தல் என்பன சிறந்த பலன்களைத் தரும்.
அதிர்ஷ்ட தேதி : 5, 9, 14, 18, 23, 27.
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
கடந்த சில வருடங்களாகவே சிரமங்களின் மேல் சிரமமாக அனுபவித்து வந்த
உங்களுக்கு இப்போது நடைபெற்றுள்ள குருமாற்றம் நம்பிக்கைகளைத்
தோற்றுவிக்கும், நற்பலன்களை ஏற்படுத்தும். இதுவரையில் இருந்து வந்த
குழப்பங்கள் எல்லாம் படிப்படியாக விலகி எதிலும் முன்னேற்றம் காணப்படும்
காலமாக அமையும்.
பொருளாதார முயற்சிகளும், தொழில் லாபங்களும் பலிதமாகும். தடைப்பட்ட
காரியங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். குடும்பத்தில்
சுபகாரியங்கள் நடைபெறும். உறவுகளுக்கிடையில் மகிழ்ச்சி உருவாகும்.
வருட இறுதியில் நிகழும் சனிமாற்றமும் உங்களுக்கு மிகுந்த நற்பலன்களைத்
தரும் காலமாக அமைவதால், பொன்னான இந்தத் தருணத்தை திட்டமிட்டுச் சிறப்பாகப்
பயன்படுத்திக் கொள்ளுங்கள்
மாணவர்களுக்கு, கலைஞர்களுக்கு, பொன்னான வாய்ப்புக்கள் உருவாகும். இந்த
வருட இறுதிவரை சனிக்கிரகதத்தின் பாதகமான சஞ்சாரத்தால் ஏற்படக் கூடிய
சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ள இக் காலத்தில் சனீஸ்வர வழிபாடியற்றுவத
நன்மை தரும்.
அதிர்ஷ்ட தேதிகள் : 3, 12, 21, 30.
மகரம்: (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் வரை)
உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்கு வரும் குருபகவானால், சற்றுச்
சிரமமான பலன்களை சந்திக்க வேண்டிவரும். பொருளாதாரத்திலும், தொழில்
முயற்சிகளிலும், எதிர்பார தடைகள் அல்லது தாமதங்கள் நேரிடலாம். உடல்
ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.
வாகனப் பயனங்களில் அவதானம் தேவை, பணியிடங்களில் மேலதிகாரிகளின்
கண்டிப்புக் காணப்படும். குடும்பத்தில் குழப்பங்களும், மனஸ்தாபங்களும்
காணப்படும். பிறருக்காக ஜாமீன் கையெழுத்துப் போடுவது, கணவன் மனைவியரிடையே
வாக்குவாதம் என்பவற்றைத் தவிர்த்துக் கொள்வது நலம்.
மாணவர்கள் கல்வியில் அதீத கவனமும் அக்கறையும் கொள்ள வேண்டிய காலமிது. புதுமுயற்சிகளில் ஈடுபடும் போது சிந்தித்துச் செயற்படவேண்டும்.
குருபகவானுக்குப் ப்ரீதியாக வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து, மஞ்சள்
மலர்கள் கொண்டு தட்சினாமூர்த்தியை வழிபடுவதும், முருக வழிபாடியற்றுவதும்,
சனிக்கிழமைகளில், சனீஸ்வர பரிகாரமாக விரதமிருந்து, எள்தீபம் ஏற்றி, நீலநிற
மலர்களால் சனீஸ்வரனை அர்ச்சிப்பதும் நன்மை தரும்.
இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், உதவிகள் புரிவதும், பெரியோர்க்கு உதவுவதும் நன்மை தரும்.
அதிர்ஷ்ட தேதி : 5, 6, 8.
கும்பம்: (அவிட்டம் 3-ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் வரை)
கும்பராசி நண்பர்களே! உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு வரும்
குருபகவான் மந்தமான பலன்களைத் தருவதாக அமையும். இந்த ஒரு வருட
காலப்பகுதியின் முதல் ஆறு மாதகாலத்துக்கு அஷ்டமத்துச் சனியும் இருப்பதால்
இந்தக் காலப்பகுதி சிரமமானதாக இருக்கும்.
பொருளாதார நிலையில் இறுக்கமும், பணியிடங்களிலும், குடும்பத்திலும்,
வீண் மனஸ்தாபங்களும் எற்படக் கூடும். சொத்து இழப்புக்கள், வீண்பிரச்சனைகள்
ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் அவதானமாகவும், அமைதியாகவும் செயற்படுதல்
நன்று. குடும்பத்திலும், வௌியிடங்களிலும் அமைதி காத்து வருவது நல்லது.
மாணவர்கள், தொழிற்துறையினர், கலைஞர்கள், மிகக் கூடிய கவனத்துடன்
செயற்பட வேண்டிய காலமிது. வருட இறுதிவரை சனிக்கிரக வழிபாடும், குருமாற்ற
காலப்பகுதியில் தட்சினாமூர்த்தியை வழிபடுவதும் நன்மை தரும்.
அதிர்ஷ்ட தேதி : 6, 8.
மீனம்: (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )
மீனராசி நண்பர்களே! இந்தக் குருமாற்ற காலம் உங்களுக்கு மிகவும் உகந்த
காலமாகும். இரண்டாம் இடத்துக்கு வரும் குருபகவான், கடந்த இரண்டு வருட
காலத்தில் தந்தத சிரமமான பலன்களுக்கு மாற்றாக நற்பலன்களைத் தருவார்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாகவும், பொருளாதாரம் திருப்திகரமாகவும்,
தொழில்துறையில் முன்னேற்றமும் காணப்படும். முதல் ஆறுமாத காலப்பகுதியில்
குருபகவான் தரும் நன்மைகளை அனுபவித்து வரும் உங்களுக்கு வருட இறுதியில்
நிகழும் சனிமாற்றம் சற்றுச் சரிவுகளைத் தரும்.
உங்கள் இராசிக்கு ஏழாமிடத்து மாறும் சனிபகவான், உடல் ஆரோக்கியம்,
தொழில் முயற்சிகள் என்பவற்றில் சிரமங்களைத் தரக் கூடும். ஆதலால் இந்த
ராசிக்காரர்கள் இக் காலப்பகுதியில் எல்லாவகையிலும் மிகுந்த அவதானத்துடன்
செயற்படுத்துவது நன்மை தரும்.
மாணவர்கள், கலைஞர்கள், தங்கள் முயற்சிகளில் சிரத்தையுடன் செயற்படுவது
சிறப்பானது. வருட இறுதியில் மாறும் சனிக்கிரக தோஷ பரிகாரமாக,
சனிக்கிழமைகளில் விரதமிருந்து, எள்தீபம் ஏற்றி,நீலமலர்கள◌ால் அர்ச்சனை
செய்வது நன்மை தரும். ஊனமுற்ற ஒருவருக்கு உணவளிப்பதும், உதவிகள் செய்வதும்
நன்மை தரும்.
அதிர்ஷ்ட தேதி : 1, 5, 8.
மேற்சொன்ன பலன்களை வாசித்தறிந்து, வேண்டிய பரிகாரங்களைச் செய்து, எல்லோரும் இன்புற்றிருக்க இனிய வாழ்த்துக்கள்
கணிப்பு: - ஶ்ரீ சாயிதுர்க்காதேவி திருவருள் நிலையம்
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள்.
» தமிழ்நாடு சுற்றுலா – ஒரு சிறப்புப் பார்வை!
» 'சத்யா 2' சிறப்புப் பாடல் வீடியோ!
» ரஜினி பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு!
» கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒரு சிறப்புப் பார்வை
» தமிழ்நாடு சுற்றுலா – ஒரு சிறப்புப் பார்வை!
» 'சத்யா 2' சிறப்புப் பாடல் வீடியோ!
» ரஜினி பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு!
» கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒரு சிறப்புப் பார்வை
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum