Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நிபுணர் குழு அறிக்கை தமிழில் முழு வடிவத்தில்
Page 1 of 1

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு
வெளியிடப்பட்டுள்ளது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில்
இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றசாட்டுகள்
தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் விபரம் வருமாறு:
அறிமுகம்
1. கருத்து வேறுபாடுகளுக்கிடையே துன்பம் மிகுந்த விதத்தில் இலங்கையில்
யுத்தம் முடிவடைந்தது. அதன் இரக்கமற்ற தன்மைக்கு பெயர்பெற்ற தமிழீழ
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு 27 வருடங்களுக்குப் பின்னர்
ஆயுதமேந்திய மோதல் முடிவுக்கு வந்ததையிட்டு இலங்கையர் பலரும் உலகம்
முழுவதில் உள்ள ஏனையவர்களும் மன ஆறுதல் அடைந்தனர். ஆயினும், நாட்டின்
ஆயுதப்படையினர் வெற்றியை அடைவதற்காகக் கையாண்ட வழிமுறைகள் பற்றி இலங்கை
மற்றும் ஏனைய இடங்களில் உள்ளவர்கள் அதிக மனத்தாக்கம் அடைந்தனர். நாட்டின்
வடகிழக்குக் கரையோரப்பகுதியான வன்னியின் ஒரு சிறிய இடத்தில் தப்பியோட
முடியாமல் மும்முரமாக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கிடையே பல
இலட்சக்கணக்கான தமிழ் பிரஜைகள் சிக்குண்டிருப்பதை அதிகரித்து வரும்
அச்சத்துடன் பல மாதங்களாக அவர்கள் நோக்கியவண்ணம் இருந்தனர். உயிரிழந்த
மற்றும் காயமடைந்த பிரஜைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்தது.
அரசாங்க தரப்பிலிருந்து எறியப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள்
சிக்கினர்“ அப்பகுதியில் இருந்து தப்பியோட முயற்சித்த போது பெண்கள்
மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலரை எல்ரிரிஈ இனர் சுட்டனர். மனிதாபிமான
உதவிக்கான தேவை அதிகரித்த போதிலும், அரசாங்கத்தினால் அது தொடர்ந்தும்
கட்டுப்படுத்தப்பட்டது. அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள்
அல்லது பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு வசதியாக
யுத்தத்தைப் போதியளவு தளர்த்துவதற்கான முயற்சிகள் தடுமாற்றமடைந்தன.
2. மோதல் வலயத்தில் இருந்து பாரபட்சமற்ற அறிக்கை விடுத்தலுக்குத்
தட்டுப்பாடு நிலவியதால், 2009 மே மாதம் 19ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி
வெற்றியைப் பிரகடனப்படுத்திய நாள் வரை இறுதி இராணுவத் தாக்குதலின் போத
என்ன நேர்ந்தது என்பதை சரியாக நிர்ணயிப்பது சிரமாக இருந்தது. ஆயினும்,
அரசாங்கம் அப்பிரதேசத்தில் இருந்ததாக முன்னர் கூறிய மதிப்பீட்டை அதிக
எண்ணிக்கையால் விஞ்சுமளவிற்கு யுத்த வலயத்தில் இருந்து இடம்பெயர்ந்த
சுமார் 290,000 மக்கள் மூடப்பட்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.
பாரிய காயங்களுக்கு இலக்காகிய பலர் அடங்கிய சுமார் 14,00 மக்கள் சர்வதேச
செஞ்சிலுவைக் குழுவினால் கடல் மார்க்கமாக பாதுகாப்பான இடத்துக்கு
அகற்றப்பட்டனர். எல்லா அறிகுறிகளின்படி, மரணித்தவர்களின் எண்ணிக்கை
மிகவும் அதிகமாக இருந்ததோடு, இன்று கூட சரியான கணிப்பொன்று
நிர்ணியக்கப்படவில்லை. எனினும், "பூஜ்ய பொதுமக்கள் சேதத்துடன்' தான்
"மனிதாபிமான மீட்டு நடவடிக்கையொன்றினை' மேற்கொண்டதாக அரசாங்கம் உறுதியாக
வாதிட்டு வந்துள்ளது.
3. யுத்தம் முடிவுற்று மூன்று நாட்களுக்குப் பின்னரே செயலாளர் நாயகம்
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதோடு மோதல் வலயத்தின் சில இடங்களையும்
மோதல் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான ஒரு முகாமையும் அவர்
நேரடியாகப் பார்வையிட்டார். அவரின் விஜயத்தின் முடிவில், இலங்கை
ஜனாதிபதியுடன் இணைந்து செயலாளர் நாயாகம் கூட்டு அறிக்கையொன்றை விடுத்தார்.
இராணுவ நடவடிக்கைகளின் போது நேர்ந்த சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித
உரிமைகள் சட்ட மீறல்கள் பற்றி நடவடிக்கை எடுப்பதற்காக பொறுப்புக்கூறும்
ஒரு செயற்பாட்டின் முக்கியவத்துவத்தை செயலாளர் நாயகம் அதில்
வலியுறுத்தினார் என்பதோடு அத்தகைய இன்னல்கள் பற்றிய நடவடிக்கை எடுப்பதற்கு
ஜனதிபதி இணக்கம் தெரிவித்தார். நிபுணர்கள் குழுவின் நியமனம் அந்த கூட்டு
அறிக்கையின் தொடர் நடவடிக்கையாக செயலாளர் நாயகத்தினால்
மேற்கொள்ளப்பட்டதாகும்.
4. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பான கூட்டு இணக்கப்பாட்டை அமுல்
செய்வது பற்றி செயலாளர் நாயகத்துக்கு அறிவுரை வழங்குவது குழுவின்
ஆணையாகும். இவ்வறிக்கையில் இக்குழு குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச
சட்டங்களின் மீறல்களின் சுபாவம் மற்றும் அவற்றின் நோக்கெல்லை அத்துடன்
இலங்கை அரசாங்கத்தின் பதில் ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது. குறிப்பாக,
கற்ற பாடங்கள் மற்றும் மீளிணைக்கப்பாட்டு ஆணைக்குழு சர்வதேச தரங்கள்
மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவங்கள் ஆகியவற்றின் பின்னணியில் மதிப்பீடு
செய்யப்படுகிறது. இலங்கையின் சட்ட அமைப்பு மற்றும் பொறுப்பக் கூறல்
தொடர்பான உள்நாட்டு நிறுவனங்களையும் குழு மறுபரிசீலனை செய்கிறது. அதன்
செயற்பாடு முழுவதிலும், இலங்கையின் வரலாற்று மற்றும் அரசியல் சூழ்நிலைப்
பொருத்தங்களையும் பொறுப்புக் கூறல் பற்றிய இலங்கையின் தற்கால சூழலையும்
குழு கவனத்துக்கு எடுத்துக் கொண்டது. இவ்வறிக்கை குழு மேற்கொண்ட
செயற்பாட்டின் பிரதிபலானாகவுள்ளதோடு சிபாரிசுகள் தொகுதிகளாக செயலாளர்
நாயகத்துக்கான அறிவறுத்தலையும் அது உள்ளடக்குகிறது.
1. ஆணை, தொகுப்பு மற்று வேலைத் திட்டம்.
அ. குழுவினை அமைத்தல்.
5.இலங்கையின் ஆயுத மோதலின் இறுதிக் கட்டங்களின்போது குற்றஞ் சாட்டப்பட்ட
சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் தொடர்பாக
பொறுப்புக்கூறல் விடயங்கள் பற்றித் தனக்கு அறிவுரை வழங்குவதற்காக 2010
யூன் 22ஆம் திகதி இக்குழுவின் நியனமத்தை செயலாளர் நாயகம் அறிவித்தார்.
குழுவின் நோக்கெல்லை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டது: செயலாளர் நாயகமும்
இலங்கை ஜனாதிபதியும், 2009 மே 23ஆம் திகதி நாட்டுக்கான செயலாளர்
நாயகத்தின் விஜயத்தின் முடிவில் விடுத்த கூட்டு அறிக்கையில், இலங்கை
அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இராணுவ
நடவடிக்கைகளின் போது நேர்ந்த சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள்
சட்ட மீறல்கள் பற்றி நடவடிக்கை எடுப்பதற்காக பொறுப்புக்கூறும் ஒரு
செயற்பாட்டின் முக்கியவத்துவத்தை செயலாளர் நாயகம் அதில் வலியுறுத்தினார்.
அத்தகைய இன்னல்கள் பற்றிய நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம்
தெரிவித்தார். இத்தருணத்தில் மற்றும் இதன் பின்னணியில்:
1. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக சொல்லப்பட்ட உறுதிப்பாட்டினை
அமுல் செய்வதற்காக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை
அமைப்பதற்கு செயலாளர் நாயகம் தீர்மானித்தார்.
2.குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை
பற்றியவற்றைக் கவனத்துக்கெடுத்து, கூட்டு அறிக்கையின் பொறுப்புக்
கூறுவதற்கான செயற்பாட்டு பற்றிய உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான தோதான
முறைமைகள், ஏற்படைத்தான சர்வதேச தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவம்
பற்றிய செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவது குழுவின் குறிக்கோளாகும்.
3.ஏற்ற மற்றும் சம்பந்தப்பட்ட அனுபவத்தைக் கொண்ட மூன்று உறுப்பினர்களை அது
கொண்டிருக்கும். குழு அதற்கென்றே தனது செயற்பாட்டு முறைமைகளை ஏற்படுத்திக்
கொள்வதோடு OHCHR இன் துணையோடு செயலயகமொன்று அதற்கு உதவி வழங்கும்.
4.அது செயற்பாட்டை ஆரம்பித்து நான்கு மாதங்களுக்குள் குழு அதன் அறிக்கையை
செயலாளர் நாயகத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். 5.குழுவுக்கான நிதியளிப்பு
செயலாளர் நாயகத்தின் எதிர்பாரான நிகழ்வுகள் வரவு செலவுத் திட்டத்தின் கீழ்
வழங்கப்படும்.
6.மர்சுக்கி தாருஸ்ஸமான் (இந்தோனேசியா), தலைவர்; ஸ்ரீவன் ரத்னர் (ஐக்கிய
அமெரிக்கக் குடியரசு“ மற்றும் யஸ்மின் சூக்கா (தென் ஆபிரிக்கா) ஆகியவர்களை
குழுவின் உறுப்பினர்களாக செயலாளர் நாயகம் நியமித்தார்.
ஆ. குழுவின் ஆணை
1.குழுவின் சகலதையும் உள்ளிட்ட பொறுப்பு
7.செயலாளர் நாயகத்துக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான 2009 மே 23ஆம்
தேதிய கூட்டு அறிக்கையை சகல குற்றஞ்சாட்டல்கள் பற்றிய உண்மையான சுபாவம்
மற்றும் நோக்கெல்லை பற்றி அமுல் படுத்துவதற்காக இலங்கை இதுகாலவரை
மேற்கொண்ட மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டியவை பற்றி செயலாளர்
நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவது குழுவின் பணியாகும். இவ்வாறாகக்
குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்று இலகுவாகத் தாக்கமுறக்
கூடிய குழுக்களுக்கெதிரான தெளிவான மீறல்கள் உள்ளிட்ட சர்வதேச மனிதாபினமா
மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின் மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறல்
பற்றிய முறைமைகள், தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவங்கள் மீது குழு
பரவலாகக் கவனம் செலுத்தியது. இப்பிரச்சினை தொடர்பான நாடுகள் மற்றும்
சர்வதேச அமைப்புக்களின் தற்கால அணுகுமுறை பற்றி இயன்றவரை முழுமையானதொரு
காட்சியைக் கண்டு பிடிக்க அது முயற்சியெடுத்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு
மற்றும் சர்வதெச கடப்பாடுகளை அவை நிறைவு செய்கின்றனவா மற்றும் எவ்வளவு
தூரம் அவை சிறந்த சர்வதேச நடைமுறைகளை பிரதிபலிக்கிறது என்பதை
நிர்ணயிப்பதற்காக பொறுப்புக் கூறல் தொடர்பாக தோதான அல்லது தோதான
நிலைச்சக்தியைக் கொண்ட இலங்கையின் உள்நாட்டுப் பொறித்தொகுதியையும் அது
ஆராய்ந்தது. இறுதியாக, யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் பொறுப்புக் கூறல்
தொடர்பான அரசாங்கத்தின் தற்கால கொள்கைகளையும் குழு கவனத்துக்கெடுத்துக்
கொண்டது. கற்ற பாடங்கள் மற்றும் மீளணிக்கப்பாட்டு ஆணைக்குவினை அமைத்தலை
இக்கொள்கைகள் உள்ளிட்டது.
8.கடந்த கால மனித உரிமைகள் மற்றும் கௌரவம் ஆகியவற்றின் மீறல்கள் தொடர்பாக
நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அரசியல், சட்ட மற்றும் நல்லொழுக்கப்
பொறுப்புக்களை நிர்ணயிப்பதில் விரிவானதொரு செயற்பாடாக பொறுப்புக்கூறலை
குழு நோக்குறிது“ உண்மை, நீதி, மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நக்ஷ்ட
ஈடு ஆகியவற்றையும் பொறுப்புக்கூறல் உள்ளடக்குகிறதோடு, மோதலுக்குப் பின்னர்
ஒரு நாட்டில் நிலைத்தகவுள்ள சமாதானத்தை அடைவதற்காக பாரியதொரு
செயற்பாட்டின் ஒன்றிணைந்த அம்சமாகவுள்ளது.
பின்னர் இந்த அறிக்கையில் பொறுப்கூக்கூறலின் அம்சங்களையும்
பொறுப்புக்கூறல் பற்றிய இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்களையும் இக்குழு
விளக்குகிறது.
9.சூன்யத்தில் பொறுப்புக்கூறலுக்கான தரங்கள் மற்றும் பொறித்தொகுதிகளை ஆராய
முடியாது என்பதோடு, "குற்றம்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும்
நோக்கெல்லை தொடர்பாக' செயலாளர் நாயகத்துக்கு அதன் ஆலோசனையை வழங்க வேண்டும்
என்பதை குழுவின் வரையறை நோக்கெல்லை சுட்டிக் காட்டுகிறது. "சுபாவம்
மற்றும் நோக்கெல்லை' என்பது குற்றச்சாட்டுக்களின் அளவு மற்றும் சட்ட
தகைமைகள் என்பதைக் குறிக்கிறது. குற்றச்சாட்டுக்களின் அளவினை
வருணிப்பதற்காக, குழு பல்வேறு மூலங்களின் இருந்து தகவலைப் பெற்று,
சட்டத்தின் அடிப்படையில் அவற்றைச் சீர்தூக்கிப்பார்த்து, பொறுப்புக்கூறல்
பற்றிய கூட்டு அறிக்கையை செயற்படுத்துவது தொடர்பில் செயலாளர் நாயகத்துக்கு
சிறந்த ஆலோசனையை வழங்குவதை இவ்வேற்பாடு தேவைப்படுத்தியது. அது
சர்ச்சைக்குள்ளான உண்மைகள் பற்றி நிஜத் தீர்மானங்கைளை எடுக்கவில்லை
என்பதால் வழக்கமான ஐக்கிய நாடுகள் சொற்றொடர் குறிக்கும் உண்மையைக்
கண்டறியும் நடவடிக்கையை குழு மேற்கொள்ளவில்லை என்பதோடு நாடுகள், நாடற்ற
அமைப்புக்கள் அல்லது தனிநபர்களின் சட்டப்படியான பொறுப்பு அல்லது
குறைகூறத்தக்க நிலை பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்கான முறைசாநர்ந்த
புலனாய்வொன்றையும் மேற்கொள்ளவில்லை.
10. குற்றச்சாட்டுக்கள் பற்றிய மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய பல்வேறு
முறைமைகள் பற்றிக் குழு மேற்கொண்ட மதிப்பீட்டின் அடிப்படையில், இலங்கையில்
பொறுப்புக்கூறலை தொடர்வதற்கான சிபாரிசுகள் தொகுதியொன்றை செயலாளர்
நாயகத்தின் பாவனைக்காக குழு முன் வைத்துள்ளது. குழு அதன் கடமையைச்
செய்யும் கால வரையறையின் போது அதற்குக் கிடைத்த தகவல் மற்றும் கிடைத்த
இலக்கியங்களின் அடிப்படையில் இவ்வறிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(05) 11. அதன் நடவடிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே, செயலாளர் நாயகம்
மற்றும் ஐ.நா. வின் சிரேக்ஷ்ட அலுவலர்கள், அது செயலாளர் நாயகத்துக்கு
அறிக்கை விடுத்து இறுதியில் ஆலோசனை வழங்கிய போதிலும், அதன் ஆணையை
நிறைவேற்றுவதில் சுயேச்சையாக நடவடிக்கை எடுப்பதற்கு அதற்கு அதிகாரம் உண்டு
என குழுவுக்குத் தெளிவாக விளக்கியுள்ளனர். மேலும், பின்வரும்
சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்தை விட்டும் சுயேச்சையாக குழு இருக்கும்
என்பதை ஐ.நா. குழுவிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
2. குழுவின் காலம் சார்ந்த வரையறைப் பொறுப்பு
12. "யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள்' தொடர்பான கூட்டு அறிக்கையினைச்
செயற்படுத்துவது பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழகுவதை வரையறை ஆணை
தேவைப்படுத்துகிறது. குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச சட்டப் பாரிய மீறல்கள்
அநேகமானவை நேர்ந்த யுத்தத்தின் மிக உக்கிரமான கட்டத்தை உள்ளடக்கிய 2008
செப்டம்பர் முதல் 2009 மே வரையிலான காலப்பகுதிக்கு குழு கவனம்
செலுத்தியது. எல்.ரி.ரி.ஈ. இன் நடப்பிலுள்ள தலைநகரான கிளிநொச்சி மீது
அரசாங்கம் இறுதி இராணுவத் தாக்குதல் மேற்கொண்டதற்கு 2008 செப்டெம்பர்
ஒத்திருக்கிறது. வன்னியில் செயற்படும் சர்வதேச அமைப்புக்களில்
தொழில்புரியும் சர்வதேச பணியாட்களின் பாதுகாப்புக்குத் தொடர்ந்தும்
உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து
சர்வதேச யுத்த அவதானிப்பு முடிவடைந்ததற்கும் அது ஒத்திருக்கிறது. 2009 மே
மாதம் யுத்தத்தின் முடிவையும் எல்.ரி.ரி.ஈ. இன் இராணுவத் தோல்வியையும்
குறிக்கிறது.
13. சூழ்நிலைத் தொடர்பினை வழங்குவதற்காக, மேலே விவரிக்கப்பட்ட இறுதிக்
கட்டங்களுக்கு முந்திய விடயங்கள் பற்றி சில சமயங்களில் குழு
கலந்துரையாடுகிறது. மேலும், யுத்தத்தின் முடிவுக்கு முன்னர் அல்லது
அதனுடன் நெருக்கமாக தொடர்புபட்ட, யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் மற்றும்
மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் தொடர்ந்தவை சில சந்தர்ப்பங்களில்
இன்றுவரை இடம்பெறுவது போன்ற மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின்
மீறல்கள் பற்றியும் குழு அறிந்துள்ளது. ஆயுதம் தாங்கிய மோதலுடன்
நெருக்கமற்ற, குறிப்பாக இலங்கையின் ஏனைய பாகங்களில் தற்போது நடைபெறுவதாகக்
குற்றம் சாட்டப்பட்ட மீறல்கள் பற்றி குழு கவனம் செலுத்தவில்லை. (06) 3.
குற்றம் சாட்டப்பட்ட மீறல்கள் தொடர்பான விடயங்கள்
14. குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின்
மீறல்கள் தொடர்பாக வரையறை ஆணை உள்ளது. மனிதாபிமான சட்டம் தொடர்பில்,
மோதல்களில் ஈடுபடாதவர்கள் மற்றும் தொடர்ந்தும் ஈடுபடாதவர்கள் அத்துடன்
நலன்புரி வழிகள் மற்றும் முறைமைகள் தொடர்பான ஜெனீவா கோட்பாடுகளில்
வழங்கப்பட்டுள்ள தோதான வழக்கமான விதிமுறைகள் பற்றி குழு கவனம்
செலுத்துகிறது. மனித உரிமைகள் சட்டத்தைப் பொறுத்தவரை, இலங்கை ஒப்புதல்
அளித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்கள் மீது கவனம் செலுத்தி
அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் அத்துடன் பொருளாதார, சமூக மற்றும் கலாசார
உரிமைகள் ஆகியவை பற்றி குழு கவனம் செலுத்துகிறது. இந்நடவடிக்கையின் போது,
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது ஆயுதந் தாங்கிய மோதல் ஏற்படுத்தும்
தாக்கம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்கள் பரஸ்பரம் ஒன்றை
ஒன்று உறுதிப்படுத்துவதை குழு நினைவூட்டுகிறதோடு, நிலையான சமாதானம்
மற்றும் மீளிணக்கப்பாடு ஆகியவை மீது அவற்றின் விளைவான தாக்கத்தையும்
இனங்காண்கிறது. இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் சர்வதேச மனிதாபிமான
மற்றும் மனித உரிமைகள் சட்டம் அத்துடன் பொறுப்புக் கூறல் பற்றிய ஏனைய
சட்டங்கள் உள்ளடக்குகிறது என்ற அளவில்,இலங்கையின் சட்டம் மற்றும் தோதான
நிறுவனங்களும் ஆராயப்படுகின்றன. இறுதியாக, யுத்தத்தின் முக்கிய
பாத்திரங்களான அரசாங்கம் மற்றும் எல்.ரி.ரி.ஈ. ஆகியவற்றின் மீறல்கள்
பற்றிய குற்றச் சாட்டுக்களை குழு ஆராய்கிறது.
(07) (இ) செயற்றிட்டம்
15. ஆய்வுரிமை வரம்பின் படி, குழு அதற்கே உரித்தான முறைமைகளை அபிவிருத்தி
செய்வதோடு, செயலகமொன்று அதற்கு உதவி வழங்கும். 2010 செப்டெம்பர்
நடுப்பகுதி அளவில் அதன் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு இரண்டு
மாதங்களுக்கு முன்பு, ஐக்கிய நாடுகள் அமைப்பினுள் தொழில் புரியும்
நெறிசார்ந்த தொழில்புரிவோர்களிடையே இருந்து செயலகம் ஒன்று திரட்டப்பட்டது.
மேலும், வேறு வகையாய் கிடைக்காத ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்காக புற
உசாத்துணையாளர்களின் சேவையை குழு பெற்றுக் கொண்டது. ஐக்கிய நாடுகள்
செயலகத்தில் ஏற்கனவே உள்ள பல்வேறு திணைக்களங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட
மேற்கோள் குழுவொன்றும் குழுவுக்கு உதவியளித்தது.
16. குழுவின் செயல் திட்டம் இரு கட்டங்களாக நெறிப்படுத்தப்பட்டது. முதற்
கட்டத்தில், அதன் ஆய்வுரிமை வரம்பு தொடர்பான நிபுணத்துவம் அல்லது அனுபவம்
உள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து இலங்கையின் ஆயுதந்
தாங்கிய மோதல் பற்றிய பல்வேறு தகவல்களை குழு சேகரித்தது. இவ்வாறான சில
தகவல்கள் எழுத்து வடிவத்தல் உதா: அரசாங்க, ஐ.நா. அல்லது அரச சார்பற்ற
அமைப்புக்களின் அறிக்கைகள் மற்றும் குழுவுக்கு இரகசியமான முறையில்
வழங்கப்பட்ட தகவல்கள் மூலமாகக் கிடைத்தன. ஏனைய தகவல்கள் குழுவின் பல
கூட்டங்கள் மற்றும் அதன் செயலகத்தின் மூலமும் பெறப்பட்டன. யுத்தத்தின்
இறுதிக் கட்டங்களின் போது நடந்தேறிய நிகழ்வுகளினால் நேரடியாகப்
பாதிக்கப்பட்ட ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புக்களின் அலுவலர்கள் அத்துடன்
அரசாங்கங்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும்
தனிநபர்கள் ஆகியோருடன் குழு சந்திப்புக்களை நடத்தியது. அதன் நடவடிக்கையின்
இரண்டாம் கட்டத்தின் போது, குழு இவ்வறிக்கையின் நகலைத் தயாரித்தது.
பிரசுரிப்பதற்கு ஏதுவான வகையில் இவ்வறிக்கை வரையப்பட்டது.
17. பரவலாக பொதுமக்களின் தொடர்பு கொள்வது தொடர்பில், அக்கறைகொண்ட
அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் எழுத்து மூலமாக முறையீடுகளைச்
சமர்ப்பிக்குமாறு பொதுவானதொரு அழைப்பு விடுக்கப்பட்டது. 2010 ஒக்டோபர்
21ஆம் திகதி, குழுவின் பணியாட்டொகுதித் தலைவர், அறிவித்தலின் பிரதியொன்றை
இணைத்து அது ஐ.நா. இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்து
இத்தீர்மானம் பற்றி இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதிக்கு
அறிவுறுத்தப்பட்டது. ஆங்கில அறிவித்தல் 2010 ஒக்டோபர் 27 ஆம் திகதி
பிரசுரிக்கப்பட்டதோடு, சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலான அறிவித்தல்கள்
பின்னர் பிரசுரிக்கப்பட்டன. கருத்துக்களைச் சமர்ப்பிப்பதற்கு ஆரம்பத்தில்
கடைசித் திகதியாகக் குறிப்பிடப்பட்ட 2010 டிசம்பர் 15ஆம் திகதி பின்னர்
2010 டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. 2010 டிசம்பர் 31ஆம்
திகதி இருந்தவாறாக, 2,300க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 4,000 க்கும்
அதிகமான முறையீடுகள் குழுவுக்குக் கிடைக்கப் பெற்றன.
(08) 18. குறிப்பிட்டதொரு வகைகளிலான மீறல்கள் அல்லது இறுதிக் கட்டங்களின்
போதான குறிப்பிட்டதொரு காலப்பகுதிகள் தொடர்பானதாக மற்றும் மனித உரிமைகள்
அல்லது மனிதாபிமான சட்டத்தின் குறித்துரைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பாக
கிடைக்கப்பெற்ற முறையீடுகளில் கணிசமானவை இருந்தன. ஆவணப்படுத்தப்பட்ட
தகவல், நிகழ்வுகளின் பட்டியல்கள் அல்லது பாதிக்கப்பட்டோர், நிழற்படங்கள்
மற்றும் வீடியோப் படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கின. பாரபட்சமற்றவையாக
பகுப்பாய்வு ரீதியிலான மட்டுப்படுத்தப்பட்ட சில முறையீடுகள் பொதுவான
தகவல்கள், போக்குகள் அல்லது நிலைமை பற்றிய குறிப்பின் அம்சங்களின்
பகுப்பாய்வினை வழங்கின. பொதுவான தகவல்கள் ஊடக அறிக்கைகள், இணையத்
தொடர்புகள் பொதுவாகக் கிடைக்கக் கூடிய மூலங்களில் இருந்து பெறப்பட்ட
தகவல்கள் மற்றும் வரலாற்று ரீதியிலான விளக்கங்கள் குழுவுக்குச்
சமர்ப்பிக்கப்பட்ட முறையீடுகளில் அடங்கின. இறுதியாக, உண்மையினை
அடிப்படையாக அல்லது பகுப்பாய்வினைக் கொண்டிராத நடவடிக்கை எடுக்குமாறும்
குறிப்பான பரிந்துரைகளைச் செய்யுமாறும் குழுவினை வேண்டிக் கொண்டவை
பெறப்பட்ட கணிசமான முறையீடுகளில் அடங்கின.
19. முறையீடுகளை ஒவ்வொன்றாக குழுவினால் சரி பிழை பார்க்க முடியவில்லை
என்பதால் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய
தன்மையினை நிறைவு செய்யவும் குழுவின் நியதிக்கேற்ப அவை நேரடி மூலமாகப்
பாவிக்கப்படவில்லை (அத்தியாயம் டிடி அ பார்க்கவும்). சில விடயங்களில்,
முறையீடுகள் தகவலின் ஏனைய மூலங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவின.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக மாத்திரமன்றி மேலும் விரிவாக
கடந்த காலம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவையை குழுவின்
காலம் சார்ந்த ஆணைக்கு முன்பதான நிகழ்வுகளை உள்ளிட்டதாகக் கிடைக்கப்பெற்ற
கணிசமான முறையீடுகள் வலியுறுத்திக் காட்டுகின்றன.
ஈ. இலங்கை அரசாங்கத்துடனான இணைச் செயற்பாடு 20. அதன் ஆரம்பந்தொட்டு, அதன்
ஆணையை அமுல் செய்வது பற்றி இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி
பொறுப்புக்கூறும் விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கத்தின்
நோக்கம் எவ்வாறாக உள்ளது என்பதை அறிவதற்காகக் குழு விருப்பம்
கொண்டிருந்தது. உண்மையிலேயே, குழு அரசாங்கத்துக்கானதொரு மூலவளமாகச்
செயற்படலாம் என்பதாக குழுவுக்கும் அரசாங்கத்துக்கும் செயலாளர் நாயகம் தன்
நம்பிக்கையைத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, உள்நாட்டிலேயே அபிவிருத்தி
செய்யப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றியதொரு பொறித்தொகுதி என பகிரங்கமாக
அரசாங்கம் குறிப்பிட்டுள்ள கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு
ஆணைக்குழுவுடன் தொடர்புகளைப் பேணுவது பெறுமதி மிக்கதாகும் என்ற
நிலைப்பாட்டின தொடர்ச்சியுமாகக் குழு பேணி வந்துள்ளது. அதேநேரத்தில்,
பொறுப்புக்கூறலைப் பொறுத்தவரையில் ஏனைய உள்நாட்டு நிறுவனங்களுக்கும்
பாரியதொரு பங்களிப்பு உண்டு என குழு கருதியதோடு, அரசாங்கத்தினுடாக
அவற்றுடனும் தொடர்புகளைப் பேண குழு முயற்சிகளை மேற்கொண்டது.
(09) 21. இவ்விளக்கம் எடுத்துக் காட்டுவது போன்று, 2010 செப்டெம்பர்
ஆரம்பத்தில் இருந்து குழு அதன் ஆணையை நிறைவு செய்யும் சந்தர்ப்பம்
நெருங்கும் வரை, இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாட சொல் மூலமும் எழுத்து
மூலமும் பலதடகைள் குழு முயற்சியினை மேற்கொண்டது. குழுவின் நோக்கெல்லை
செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதாக உள்ளதாகவும் ஏதும் புலனாய்வினை
மேற்கொள்வதில் அது ஈடுபடவில்லை என்பதை உள்ளிட்டவாறு இலங்கை
அரசாங்கத்துக்கு குழுவும் ஐ.நா. அலுவலர்களும் பலதடவை
தெளிவுபடுத்தியுள்ளனர். குழுவுடன் எதுவிதத் தொடர்பாடலும் இன்றிப் பல
மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு வருமாறு அரசாங்கம் குழுவுக்கு அழைப்பு
விடுத்த போதிலும் அத்தகைய விஜயத்துக்கான ஏற்பாடுகள் பற்றிக்
கலந்துரையாடாமல் அதன் நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக் கொண்டது. குழு கற்ற
பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவுக்கு "பிரதிநிதித்துவங்களை'
மாத்திரம் செய்யலாம் என 2010 டிசம்பர் மாதம் கடித மூலம் அரசாங்கம்
வற்புறுத்திய போதிலும் நாட்டுக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கான அதன்
விருப்பத்தைக் குழு வலியுறுத்தியது. இதனையும் 2011 ஜனவரி ஆரம்பத்தில்
வழங்கிய குறிப்பொன்றின் மூலம் அரசாங்கம் நிராகரித்ததோடு அதன் பின்னர்
விஜயம் பற்றி மேற்கொண்டு எதுவித தொடர்பினையும் பேணவில்லை. மாறாக, கற்ற
பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாடு பற்றிய ஆணைக்குழு மற்றும் ஏனைய
உள்நாட்டுப் பொறித்தொகுதிகள் பற்றிய குழுவின் கேள்விகளுக்கு எழுத்து
மூலமான பதிலை ஜனவரி இறுதி அளவில் அனுப்பி வைத்ததோடு கற்ற பாடங்கள் மற்றும்
மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் எந்தவொரு உறுப்பினரையும் உள்ளடக்காத
சிறியதொரு தூதுக்குழுவினை நியூயோர்க்குக்கு அது அனுப்பி வைத்தது.
22. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கற்ற பாடங்கள் மற்றும்
மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு அத்துடன் பொறுப்புக்கூறல் தொடர்பான
விடயங்களில் ஈடுபட்டுள்ள பலதரப்பட்டட அதிகாரிகளைக் குழு சந்திப்பதற்கு
இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பதையிட்டு குழு கவலை
தெரிவிக்கிறது. இலங்கைக்கு விஜயம் செய்வது அதன் நடவடிக்கைகளுக்கு
அவசியமானதல்ல என்றிருந்த போதிலும், கற்ற பாடங்கள் மற்றும்
மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு மற்றும் அரசாங்க அலுவலர்களைச் சந்தித்து,
அவர்களின் கருத்துக்களை மேலும் நேரடியாகக் கேட்டு அவர்களுடன்
நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு (வேறு வழிகளில் உத்தியோகபூர்வ
கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு குழு முடிந்த போதிலும்)
குழுவுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கும். எழுத்து மூலமான
பதில்களையும் இலங்கை அதிகாரிகளுடனான நேருக்கு நேரான உரையாடலுக்கான
சந்தர்ப்பத்தை குழு வரவேற்ற போதிலும், அப்படியானதொரு ஈடுபாட்டிற்காக குழு
முயற்சி செய்யவில்லை.
உ. குழுவினது பதிவுகளின் இரகசியத் தன்மை
23. பின்னர் தகவலைப் பிரயோகிப்பது பற்றிய முழுமையான இரகசியத்தன்மையின்
உறுதிப்பாட்டின் பேரில் சில சந்தர்ப்பங்களில் எழுத்து மூலமான மற்றும் வாய்
மூலமான சமர்ப்பணங்கள் குழுவுக்குக் கிடைக்கப் பெற்றன. இது பற்றி அறிவுரை
வழங்கிய சட்ட விவகாரங்கள் அலுவலகம், செயலாளர் நாயகத்தின் "தகவலின் பதிவு
நுட்பத்தன்மை, வகைப்படுத்தல் மற்றும் கையாளுதல்' தொடர்பான அறிக்கையின்
(குகூ/குஎஆ/2007/6) ஏற்பாடுகளை அதன் பதிவுகளுக்கு உரியதாய்க் கருதலாம் என
உறுதிப்படுத்தியது. ஒரு (10) ஆவணத்தை "கண்டிப்பான இரகசியத்தன்மை' என
வகைப்படுத்தி அதற்கான பிரவேசத்தை 20 வருட காலத்துக்கு மட்டுப்படுத்துவதோடு
அதனைத் தொடர்ந்தும் தடுத்து வைத்தல் அல்லது வெளியிடுதல் தொடர்பான நியாயம்
பற்றிய மீளாய்வொன்றை மேற்கொள்ளலாம் என்பதற்கான ஏற்பாட்டினை இவ்வறிக்கை
விளக்குகிறது. மேலும், குழுவின் நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் மற்றும்
தோதானவிடத்து, பின்னர் பிரயோகிப்பது தொடர்பான கண்டிப்பான இரகசியத்தன்மை
பற்றிய உறுதிப்பாட்டினை குழு வழங்கலாம் என்பதை சட்ட விவகாரங்கள்
அலுவலகங்கள் உறுதிப்படுத்தியது. இதன் விளைவாக, குழுவின் பொருள் செறிந்த
பதிவுகள் கிட்டத்தட்ட முழுமையாக "கண்டிப்பான இரகசியத்தன்மை' எனவும், சில
விடயங்கள் தொடர்பாக எதிர்கால பாவனை பற்றிய மேலதிகப் பாதுகாப்புடனும்
வகைப்படுத்தப்படும்.
டிடி. மோதலுக்கான வரலாற்று ரீதியிலான மற்றும் அரசியல் பின்னணி
24. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் நடைபெற்று வந்த மூர்க்கத்தனமான
மோதலின் பின்னர், 2009 மே 19ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள்
(எல்.ரி.ரி.ஈ) மீதான அதன் வெற்றியை இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியது.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது சர்வதேச மனிதாபிமான மற்றும் சர்வதேச
மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் பற்றிய ஏராளமான குற்றச்சாட்டுக்கள்
விடுக்கப்பட்டதோடு, அவை பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவது
குழுவுக்குப் பொறுப்பு சாட்டப்பட்டது. இலங்கையின் சிக்கலான மற்றும்
எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட அரசியல் வரலாற்றினை கூறுபடுத்தி ஆராய்வது
குழுவின் பணியல்ல. இருந்த போதிலும், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை தோதான
அரசியல் மற்றும் சமூகப் பின்னணியின் கண்ணோட்டத்தில் ஆராய்வதற்காக, மோதலின்
வரலாற்றின் சில அம்சங்களை கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்
என குழு கண்டது.
25. இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு இந்தியாவின் தென் கிழக்குக் கரைக்கு
18 மைல்களுக்கு அப்பால் இந்திய சமுத்திரத்தில் உள்ள தீவு தேசமாகும்.
இலங்கை 21 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இனத்துவ, மொழிவாரியான அத்துடன்
சமயம் தொடர்பான பன்முகத் தன்மையுடையதொரு நாடு என்பதோடு, அதில் 74
சதவீதத்தினர் அதிகமாக பௌத்தர்களை உள்ளடக்கிய சிங்கள மொழி பேசும்
சிங்களவர்களாகவும், 18 சதவீதத்தினர் அநேகமாக இந்துக்களான தமிழ் மொழியைப்
பேசும் தமிழர்களாகவும் (இலங்கைத் தமிழர் மற்றும் இந்திய தமிழர்கள் என
முறையே 13 சதவீதத்தையும் 5 சதவீதத்தையும் உள்ளடக்கியதாக), மற்றும் 7
சதவீதத்தினர் இஸ்லாம் மதத்தை அனுஷ்டிக்கும் பொதுவாகத் தமிழ் மொழியைப்
பேசும் சோனகர்கள் மற்றும் மலேயர்களைக் கொண்ட முஸ்லிம்களாகவும் மற்றும் 1
சதவீதத்தினர் ஏனையவர்களுள் பறங்கியர் மற்றும் ஆதிவாசிகளைக் கொண்ட சிறிய
இனத்துவச் சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். சில சமூகங்களில் சிறிய
வீதத்தினராக கிறிஸ்தவர்கள் உள்ளனர்.
26. முதலில் போர்த்துக்கேயர், அடுத்து ஒல்லாந்தர் மற்றும் இறுதியாக
பிரித்தானியர்களின் 4 நூற்றாண்டுகள் தொடர்ந்த காலனித்துவ ஆட்சிக்குப்
பின்னர். பிரித்தானியாவிடம் இருந்து 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம்
கிடைத்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் பல்வேறு இனத்துவச் சமூகங்களை
உள்ளடக்கியதாகச் சிங்களவர் ஆதிக்கம் செலுத்தும் சிங்களப் பெரும்பான்மையைக்
கொண்ட அரசாங்கம் இலங்கையை ஆட்சி செய்து வந்தது. சகலருக்குமான வாக்குரிமை,
பல்கட்சி அமைப்பு மற்றும் துடிப்பானதொரு தேர்தல் செயற்பாடு, அத்துடன்
ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு சாராருக்குமான உயர் நிலையிலான
எழுத்தறிவு, குறைந்த சிசு மரண வீதம் போன்ற முக்கியமான மனித அபிவிருத்திச்
சித்திகள் ஆகியவற்றை உள்ளிட்ட உறுதியான ஜனநாயகச் சுட்டிகளை இலங்கையின்
நீண்ட கால யுத்தம் பற்றிய வரலாற்றுடன் தெளிவாக ஒப்பிடக் கூடியதாகவுள்ளது
(11) அ. இனத்துவமும் அரசியலும்
27. அரசியல் மற்றும் இனத்துவக் கோடுகளூடான ஆழமானதொரு விரிசலின் வன்முறைப்
பிரதிபலிப்பாக இலங்கையின் ஆயுதந் தாங்கிய மோதல் இருந்துள்ளது.
1. இனத்துவம் சார்ந்த தேசியவாதத்தின் தோற்றம் 28. சுதந்திரத்தின் பின்,
அரசியல் பிரமுகர்கள் குறுகிய கால அரசியல் இலாபங்களுக்கு முன்னுரிமை
வழங்கி, நீண்ட கால கொள்கைகளுக்கு மேலாக சமுதாயம் சார்ந்த அத்துடன் இனத்துவ
வாத மன உணர

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» கூடங்குளம்: நிபுணர் குழு இன்று அறிக்கை தாக்கல்
» கூடன்குளத்தில் நாளை தமிழக நிபுணர் குழு ஆய்வு
» நிபுணர் குழு அறிக்கை எதிரானால் ஏற்க மாட்டோம்: கேரளம்
» கூடங்குளம்: நிபுணர் குழு அறிக்கை தந்தது: முதல்வருடன் உதயகுமார் இன்று சந்திப்பு
» ஐநா அறிக்கை 2011 இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை 2011

Permissions in this forum:
You cannot reply to topics in this forum