TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கூட்டாக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றத்திற்கு தலைமையேற்ற குறொசிய அதிபருக்கும் தளபதிகளுக்கும் தண்டனை

Go down

  கூட்டாக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றத்திற்கு தலைமையேற்ற குறொசிய அதிபருக்கும் தளபதிகளுக்கும் தண்டனை   Empty கூட்டாக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றத்திற்கு தலைமையேற்ற குறொசிய அதிபருக்கும் தளபதிகளுக்கும் தண்டனை

Post by மாலதி Wed Apr 27, 2011 7:17 am

குரோசியாவின் இரண்டு ஜெனரல்களைப் போர்க் குற்றவாளி என ஐ.நா மன்று
தீர்பளித்திருக்கும் அதேநேரம் மூன்றாவது ஜெனரலை இந்தக்
குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்திருக்கிறது.

1990ம் ஆண்டளவில் இடம்பெற்ற பால்கன் போரில் குறோசியா நடந்துகொண்ட முறை
தொடர்பாக கடந்த வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் சபையினது நீதிமன்றம் வெளியிட்ட
தீர்ப்பு குறோசியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

1995ம் ஆண்டு குறோசியன் லாண்ட் மற்றும் கரஜான பிராந்தியத்தில் [Croatian
land and drive Serbs out of the Krajina region] குறேசியா முன்னெடுத்த
படை நடவடிக்கையின்போது அதனைத் தலைமையேற்று நடாத்திய குறோசியாவினது ஜெனரல்
அன்ரி கொரொவினா போர்க் குற்றங்களிலும் மனித குலத்திற்கு எதிரான
குற்றங்களிலும் ஈடுபட்டார் ஐ.நா நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

ஜெனரல் கொரொவினா [General Gotovina] தலைமையிலான படையினர் நகரங்களை
இலக்குவைத்துத் தாக்குதல் நடாத்தியதாகவும் பொதுமக்களைப்
படுகொலைசெய்ததாகவும் அவர்களது சொத்துக்களை சூறையாடியதாகவும் கூறி இவருக்கு
எதிராக 24 ஆண்டுகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

தனக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் நான்கு
ஆண்டுகளாகத் தலைமறைவாக வாழ்ந்துவந்த இந்த ஜெனரல் 2005ஆம் ஆண்டு
கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதே சம்பவத்தில் பங்கெடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஜெனரல்
லேடன் மார்கக் [Mladen Markac] என்பவருக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை
வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் குற்றம் சுமத்தப்பட்ட மூன்றாவது ஜெனரலான ஐவன் செர்மாக் Ivan Cermak
மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மீளப்பெற்றிருக்கின்ற நீதிமன்றம்
அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறது.

யூக்கோஸ்லாவியாவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக நெதர்லாந்தின்
கேக் நகரில் [The Hague] அமைக்கப்பட்ட மூன்று நீதியரசர்கள் கொண்ட போர்க்
குற்றத் தீர்ப்பாயம் [war crimes tribunal] குறோசியாவின் மறைந்த அதிபர்
பிராங்ஜோ ருட்ஜ்மனிற்கு [late president of Croatia, Franjo Tudjman]
எதிராக தீர்ப்பினையும் வழங்கியிருந்தது.

குறோசியாவின் மத்திய மற்றும் தென் பிராந்தியங்களில் காலம் காலமாக
வாழ்ந்துவந்த சேர்பியர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு அந்தப்
பிராந்தியத்தில் குறோசியர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கையினை அந்த
நாட்டினது முன்னாள் அதிபர் ருட்ஜ்மன் தலைமையேற்று [The leader of a Joint
Criminal Entreprise] நடாத்தியிருந்தார்.

1991ம் ஆண்டு பெல்கிறேட்டின் ஆதரவுடன் சேர்பியக் கிளர்ச்சியாளர்கள் தமக்கென தனியானதொரு ஆட்சியலகினை உருவாக்கிகொண்டார்கள்.

யூக்கோஸ்லவாவியாவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக கேக்கில்
அமைக்கப்பட்ட மூன்று நீதியரசர்கள் கொண்ட போர்க் குற்றத் தீர்ப்பாயம்
குறோசியாவின் மறைந்த அதிபர் பிராங்கோ ருட்மனிற்கு எதிராக தீர்ப்பினையும்
வழங்கியிருந்தது.

கரஜினா என்ற இந்த நகரத்திலிருந்து சேர்பிய இராணுவத்தினரையும் பொலிசாரையும்
வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின்போது 300 பொதுமக்கள்
வரை கொல்லப்பட்டிருந்தனர், பல வீடுகள் சூறையாடப்பட்டிருந்தன. அத்துடன்
90,000 குறோசியர்கள் குறோசியாவிலிருந்து வெளியேறியிருந்தனர். இந்த
நிலையில் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டன.

கரஜினா நகரத்தினை வெற்றிகொண்டமையானது மிகப்பெரும் இராணுவ வெற்றியென்றும் நாட்டிற்குக் கிடைத்த பெருமையென்றும் குறோசியா கருதியது.

இந்த நிலையில் குறித்த இந்தப் படைநடவடிக்கையினைத் தலைமையேற்று நடாத்திய
இந்த மூன்று ஜெனரல்களையும் போர் வீரர்களாகவே குறோசியா போற்றிப்
புகழ்ந்தது.

இந்த நிலையில் இவர்கள் மூவருக்கும் எதிராகக் சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் பகீரதப்
பிரயத்தனத்தினை மேற்கொண்டிருந்தது. இதன் காரணமாக இந்தச் தீர்ப்பாயத்தினது
விசாரணைகளுக்கு குறோசியா முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை.

ஐ.நாவினது இந்தத் தீர்பாயத்தினால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பானது
ஏற்றுக்கொள்ளமுடியாதது எனத் தற்போது கூறியிருக்கும் குறோசியாவினது பிரதமர்
ஜட்றங்கா கொசர் [Prime Minister Jadranka Kosor of Croatia] தீர்ப்பினை
மாற்றுவதற்கு ஏதுவாக தங்களாலான முயற்சிகள் அனைத்தையும்
மேற்கொள்ளப்போவதாகக் கூறியிருக்கிறார்.

குறோசியப் படையினர் பொதுமக்களை இலக்குவைத்து வகைதொகையற்ற எறிகணைத்
தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்பது வெறுமனே சுமத்தப்பட்ட ஒரு
குற்றச்சாட்டேயன்றி இதுவிடயம் தொடர்பாக எந்தவொரு சாட்சியங்களும்
விசாரணைக்குட்படுத்தவில்லை எனக் குறோசிய வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார்.

குறிப்பிட்ட இந்தப் படை நடவடிக்கையினைத் திட்டமிட்டவர்கள் யாரோ அவர்கள்
கரஜினா பிராந்தியத்திலிருந்து சேர்பியர்களை நிரந்தரமாக வெளியேற்றுவதையே
நோக்ககாகக் கொண்டிருந்தனர். பலப்பிரயோகத்தின் ஊடாகவும் இதர நடவடிக்கைகள்
ஊடாகவும் தங்களது நோக்கங்களை இவர்கள் நிறைவேற்றிக்கொண்டனர் என
நீதியரசர்கள் கூறுகிறார்கள்.

குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த குறோசியாவின் முன்னாள் பிரதமர்
ருட்ஜ்மன், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கொஜ்கோ சுசக் மற்றும் குறோசிய
இராணுவத் தளபதி ஜாங்கோ பொபெட்கோ ஆகியோரை உள்ளடக்கிய குழுவில் ஜெனரல்
கொரொவினா ஒரு அங்கமாகச் செயற்பட்டு வந்ததாக நீதிபதிகள் கூறுகிறார்கள்.
ஜெனரல் கொரொவினா தவிர்ந்த ஏனைய மூவரும் தற்போது உயிருடன் இல்லை என்பது
இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணை தொடர்பாக குறோசியா அதிகாரிகள் கருத்து தெரிவித்த போது
ஐக்கிய அமெரிக்க இராணுவ ஆலோசகர்களும் வேர்ஐினியாவை தளமாகக் கொண்ட
Military Professional Resources என்ற ஒப்பந்த நிறுவனமும் குறோசிய
படைகளுக்கு பயிற்சி அளித்ததுடன் அவர்களது இராணுவ நடவடிக்கை திட்டமிடலுக்கு
உதவியதாகவும் அமெரிக்காவின் Drone aircraft செர்பியர்களின் நடமாட்டம்
பற்றி தங்கள் படையினருக்கு தகவல்களை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது பெயர்குறிப்பிட விரும்பாத குறோசிய அதிகாரி தனிப்பட்ட
முறையில் தெரிவிக்கும்போது சிஐஏயும், பென்டகனும் தங்கள் நடவடிக்கைகளை
திட்டமிட உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இப்போர்க்குற்ற விசாரணையாளர்கள் இத்தகவல்கள் தங்கள் விசாரணை நோக்கத்திற்கு பொருந்தவில்லை எனத் தெரிவித்தனர்.

செய்தி வழிமூலம்: [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum