TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ராசாவுக்கு ஆப்பு வைத்திருக்கும் ஆசிர்வாதம் ஆச்சாரி...!

Go down

ராசாவுக்கு ஆப்பு வைத்திருக்கும் ஆசிர்வாதம் ஆச்சாரி...!  Empty ராசாவுக்கு ஆப்பு வைத்திருக்கும் ஆசிர்வாதம் ஆச்சாரி...!

Post by மாலதி Mon Apr 18, 2011 9:22 am

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'கவிழ்க்கக் காத்திருக்கும் இருவர்’ என்ற தலைப்பில் கடந்த இதழில்
ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து எழுதி இருந்தோம். சி.பி.ஐ-யால் கைது
செய்யப்பட்டு, இப்​போது திகார் சிறையில் இருக்கும் ஆ.ராசாவுக்கு எதிராக,
இரண்டு முக்கியமான வாக்குமூலங்கள் வாங்கப்​பட்டுள்ளன என்றும் அதில்
குறிப்பிட்டு இருந்தோம்.

''சி.பி.ஐ. ரெய்டுக்கு உள்ளான ஏ.கே.ஸ்ரீவத்சவா, சுமார் ஒன்பது
வருடங்களாகக் கூடுதல் பிரைவேட் செக்ரெட்டரியாக ஆ.ராசாவுடன் பணியாற்றிய
ஆசீர்வாதம் ஆச்சாரி என்பவரும் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். இந்த
இருவரின் வாக்குமூலங்களை வைத்து ஆ.ராசாவுக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ.
வலிமைப்படுத்தி உள்ளது!'' என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு
இருந்தோம். இப்போது ஆசீர்வாதம் ஆச்சாரி தொடர்பான பல தகவல்கள்
டெல்லியில் இருந்து கசிய ஆரம்பித்து உள்ளன.

''2ஜி அலைக்கற்றை ஊழலில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் கூடுதல்
தனிச் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரியின் வாக்குமூலம்தான் மிக
முக்கியமானது. அவரது வாக்குமூலத்தின் முழு விவரங்கள் வெளியே வரும்போது
ஆ.ராசா செய்த பல காரியங்களை எளிதாக உணரலாம். சில நாட்களுக்கு முன்பு
சி.பி.ஐ. நீதிமன்றத்தில், அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, 164 சட்டப் பிரிவின்
கீழ் ஆசீர்வாதம் ஆச்சாரி ஒரு வாக்குமூலம் கொடுத்துள்ளார்!'' என்றும்
டெல்லி தகவல்கள் கூறுகின்றன!

யார் இந்த ஆசீர்வாதம் ஆச்சாரி..?

தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவர் வெளி மாநிலங்களில்தான் அதிகம் வசித்தவர். இவரது அப்பா பெயர், ராஜலிங்கம் மனா ஜோசப்!

1992 மார்ச் மாதம் ரயில்வே துறையில் 'ஸ்டெனோ டி’ அந்தஸ்தில் சேர்ந்தவர்
ஆசீர்வாதம். 1999-ல் 'ஸ்டெனோ சி’ அந்தஸ்து பெற்று பதவி உயர்வு கிடைத்தது.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை 2004-ல் எழுதித் தேர்ச்சி பெற்று,
ரயில்வே துறையில் பிரிவு அதிகாரியாகச் சேர்ந்தார். ஊரக வளர்ச்சித் துறை
அமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளராக 1999 அக்டோபரில் சேர்ந்து, பிறகு
அக்டோபர் 2000-ல் சுகாதாரத் துறை அமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளராக
மாற்றப்பட்டு, 2004 டிசம்பர் வரை பணிபுரிந்துள்ளார்.

2004 பொதுத் தேர்தல் முடிந்த​வுடன், ஆ.ராசா சுற்றுப்புறச் சூழல் துறை
கேபினெட் அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1.1.2006-ம் தேதி ஆ.ராசாவின்
கூடுதல் தனிச் செயலாள​ராக நியமிக்கப்பட்டார் ஆசீர்வாதம். அப்போது,
ஆர்.கே.சந்​தோலியா​தான், தனிச் செயலாளராக இருந்தார். (இப்போது இவர் கைது
செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்!) 2007 மே மாதம் ஆ.ராசா தொலைத்
தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆ.ராசாவின் விருப்பப்படி,
சுற்றுச் சூழல் துறையில் இருந்து தொலைத் தொடர்புத் துறைக்கு மாற்றம்
செய்யப்பட்டு, ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாளராக ஆக்கப்பட்டார்
ஆசீர்வாதம். அதே நேரத்தில், ஆர்.கே.சந்தோலியாவும் மீண்டும் ஆ.ராசாவின்
செயலாளராகச் சேர்ந்தார் என்று, ஆசீர்வாதம் வளர்ந்த கதையைச் சொல்கிறார்கள்.

இதனால், ஆ.ராசாவுடன் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு ஆசீர்வாதத்துக்குக்
கிடைத்தது. இதை சி.பி.ஐ.யிடம் ஆசீர்வாதம் விரிவாக விளக்கி உள்ளா​ராம்.

ராசாவுக்கு ஆப்பு வைத்திருக்கும் ஆசிர்வாதம் ஆச்சாரி...!  Raja-4


''தினமும் அமைச்சர்
ஆ.ராசாவின் வீட்டுக்குக் காலை 9 மணிக்குள் போய்விடுவேன், இரவு 7 மணிவரை
பணியாற்றிவிட்டு, என் வீட்டுக்குப் புறப்படுவேன். சில நாட்கள் பணி அதிகமாக
இருந்தால், இரவு 9 மணிவரை அமைச்சர் வீட்டில் இருப்பேன். அலைக்கற்றை
ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சரைப் பார்க்க அங்கு நிறையத் தொழிலதிபர்கள்
வந்து போவார்கள்...

2.11.2007 அன்று எலெக்ட்ரானிக்ஸ் நிகேதான் அலுவலகத்தில் இருந்து
வீட்டுக்குப் புறப்பட்டேன். இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். சிறிது
நேரம் ஓய்வு எடுத்துவிட்டு இரவு உணவை சாப்பிட்டேன். அப்போது வீட்டில்
போன் அடித்தது. அமைச்சர் ஆ.ராசாதான் பேசினார். வீட்டுக்கு வரும்படி
கூறினார். உடனடியாக அமைச்சர் வீட்டுக்குப் போனேன். அமைச்சரின் அறையில்,
ஆர்.கே.சந்தோலியா, மெம்பர் டெக்னாலாஜி ஸ்ரீதரா, அமைச்சர் பி.ஏ-வான ராஜன்
ஆகியோர் இருந்தனர்.

சந்தோலியா, அமைச்சரின் லெட்டர் பேப்பரை எடுத்துக் கொடுத்தார்.
கம்ப்யூட்டரில் நான் உட்கார்ந்து அடிக்க ஆரம்பித்தேன். அமைச்சர் ஆ.ராசாவே
என்ன விஷயங்கள் அடிக்க வேண்டும் என்பதை டிக்டேட் செய்தார். பல மாற்றங்கள்
செய்யப்பட்டு, இரவு 11 மணிக்கு கடிதம் இறுதி வடிவம் பெற்றது. இரவு 1.30
மணிக்கு அந்தக் கடிதம் சிறப்பு நபர் மூலம் கொண்டுசெல்ல, அமைச்சர் ஆ.ராசா
உத்தரவிட்டார். நான் புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.

26.12.2007 அன்று சந்தோலியா என்னிடம், '2.11.2007 இரவு தயார் செய்த
கடிதம் எங்கு உள்ளது. உடனடியாகப் பிரதமர் கேட்கிறார்’ என்றார்.
கம்ப்யூட்டரில் இருக்கிறது என்று சொன்னேன். பென் டிரைவ் மூலம் அந்தக்
கடிதத்தை காபி செய்துகொண்டு போனார் சந்தோலியா. மீண்டும் வந்து அந்தக்
கடிதத்தை பிரின்ட் எடுத்துக்கொண்டு போனார். பிரதமருக்கு அந்தக்
கடிதத்தைக் கொடுத்தாகப் பேசிக்கொண்டார்கள்.


ராசாவுக்கு ஆப்பு வைத்திருக்கும் ஆசிர்வாதம் ஆச்சாரி...!  Aasirvatham-1


ஆ.ராசாவின் வீட்டுக்கு, 2008
ஜனவரி 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள் ஹவாலா புரோக்கர் மகேஷ் ஜெயின்
அடிக்கடி வந்து சென்றார். ஸ்வான் டெலிகாம் நிர்வாக இயக்குநர் ஷாகித்
பால்வா, அமைச்சரைப் பார்க்க அடிக்கடி வருவார். யுனிடெக் சஞ்சய்
சந்தோலியாவும் அமைச்சர் வீட்டுக்கு வருவார்.

மே 2007-ல், மொரானி சகோதரர்கள் வந்தார்கள். சரத்குமார் ரெட்டியும்
அவர்களை சந்தித்துப் பேசினார். கலைஞர் டி.வி. தொடங்குவதற்கான ஏற்பாடுகள்
அமைச்சர் ஆ.ராசா வீட்டில்தான் நடந்தன. கலைஞர் டி.வி-க்கு அனுமதி பெறுவது
தொடர்பாக அமைச்சர் ஆ.ராசா, மத்திய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ்
முன்ஷியிடமும், அவருடைய செயலாளர் மனோஜ்குமாரிடமும் பேசினார். கலைஞர்
டி.வி-க்கு அனுமதி கிடைத்தது. 'கலைஞர் செய்தி சேனல்’ தொடங்க வேண்டும்
என்று கனிமொழி பல முறை அமைச்சர் வீட்டுக்கும், எலெக்ட்ரானிக்ஸ் நிகேதான்
அலுவலகத்துக்கும் வந்தார். பல முறை பல மணி நேரம் பேசிக்கொண்டு
இருப்பார்கள்.


ராசாவுக்கு ஆப்பு வைத்திருக்கும் ஆசிர்வாதம் ஆச்சாரி...!  Neeraraadia


கலைஞர் டி.வி. சேனலை, டாடா
ஸ்கை டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பப் பேச்சுவார்த்​தை நடந்தது. இந்தப்
பேச்சுவார்த்தையில் நீரா ராடியாவும் கலந்துகொண்டார். ஆ.ராசா, கனிமொழி,
நீரா ராடியா ஆகியோர் பேசிய பேச்சுகள், 18.9.08 அன்று ரிக்கார்டிங்
செய்யப்பட்டது. ஆனால் கலைஞர் டி.வி-யை, டாடா ஸ்கை மூலம் ஒளிபரப்புவதற்குக்
கூடுதல் வசதி வேண்டும். அதாவது, அலைக்கற்றையில் கூடுதல் ஒதுக்கீடு
வேண்டும் என்று டாடா நிர்வாகம் கோரிக்கை வைத்தது!'' என்று ஆசீர்வாதம்
தனது வாக்குமூலத்தில் சொன்னதாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3.10.2008-ல் ஆசீர்வாதத்தைக் கூடுதல் தனிச் செயலாளர் பதவியில் இருந்து
ராசா விடுவித்து இருக்கிறார். 29.10.08-ல் ரயில்​வே துறைப் பணியில் இவர்
சேர்ந்து இருக்கிறார்.

இந்த வாக்குமூலத்தை நேரடியான சாட்சியாக சி.பி.ஐ. பார்க்கிறது. இவரது
வாக்குமூலத்தை, முக்கியமானதாகப் பயன்படுத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில், 2ஜி அலைக்கற்றை ஊழலின் இரண்டாவது குற்றப் பத்திரிகை
அமையும். இந்த குற்றப் பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார், தயாளு அம்மாள்
ஆகிய மூவரின் பெயர்களும் இடம் பெறும் என்று சி.பி.ஐ. தரப்பில்
கூறப்படுகிறது!

நன்றி : ஜூனியர்விகடன்-20-04-2011


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum