Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:59 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காங்கிரசை கலங்கடித்த இலங்கை தமிழர் பிரச்னை: மிரண்ட வேட்பாளர்கள்
Page 1 of 1
காங்கிரசை கலங்கடித்த இலங்கை தமிழர் பிரச்னை: மிரண்ட வேட்பாளர்கள்
இந்தியாவின் சக மாநில மக்களை போல், பார்க்கபட்டவர்கள் தான் இலங்கை
தமிழர்கள். அந்த அளவிற்கு நம் தேசத்திற்கும், அவர்களுக்குமான நட்பு
கொண்டாடப்பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு இன்னல் என்றால் தமிழகம்
கொந்தளித்தது. இலங்கை போராட்டக் குழுக்களுக்கு தமிழக கட்சிகள் போட்டி
போட்டு ஆதரவு கொடுத்தன.
இலங்கை தமிழர் விவகாரத்தில் நமக்குள்ள கடமையை உணர்ந்து செயல்பட்டவர்
மறைந்த பிரதமர் இந்திரா. போராளிக் குழுக்களுக்கு, "ரா' அமைப்பு மூலம்
பயிற்சி கொடுத்து, போராட்டத்திற்கு நேரடி ஆதரவு தந்தார். இலங்கை தமிழர்
போராட்டத்திற்கு எம்.ஜி.ஆரும் மிகப்பெரிய உதவியை வழங்கினார். "டெசோ'
மாநாடு போன்றவற்றை நடத்தி கருணாநிதியும் தன் பங்கிற்கு ஆதரவு கொடுத்தார்.
இப்படி, கட்சி பேதம் இல்லாமல் இலங்கை தமிழர்களுக்காகவும், அங்குள்ள
போராட்டக் குழுக்களுக்காகவும் உதவிய காலத்திற்கு முற்றுப்புள்ளி
ஏற்படுத்திய சம்பவம் ராஜிவ் கொலை. இலங்கை விவகாரத்தை அலசும் அத்தனை
ஆய்வாளர்களும், ராஜிவ் கொலைக்கு முன் - பின் என்று இரு பிரிவாகவே அதை
பார்க்கின்றனர்.
ராஜிவ் கொலை சம்பவத்திற்கு பிறகு, இலங்கை தமிழர்கள் குறித்த
பிரச்னையில் கவனம் செலுத்தாமல் இருந்தாலும், தமிழகத்தில் தங்களது
கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, எண்ணிய பல கட்சிகள் கை விரிக்க
துவங்கி விட்டன. இலங்கை தமிழர்களுக்காக தனது அழுத்தமான குரலை வைகோ
தொடர்ந்து பதிவு செய்த போதிலும், ம.தி.மு.க., கட்சிக்கு தேர்தலில்
செல்வாக்கு உயரவில்லை. இவையெல்லாம் இலங்கை தமிழர்கள் பிரச்னையில்
தமிழர்களின் அக்கறை குறைந்ததை காட்டியதாகவே அரசியல் கட்சியினர் எண்ணினர்.
இதனால், முக்கிய கட்சிகள் பல இந்த விஷயத்தில் சற்று இடைவெளி விட்டே நின்று
கொண்டன. இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக இலங்கை தமிழர்கள்
பெருந்துன்பத்திற்கு ஆளானதும், இறுதி கட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள்
கொத்து, கொத்தாக கொல்லப்பட்டதும், தமிழக மக்களின் மனதை உலுக்க செய்தது.
அத்துடன் கடந்த சில மாதங்களாக, தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவதும்,
பிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது. இரண்டு
சம்பவங்களையும் ஒன்றாக பார்க்கும் மனபக்குவத்திற்கு வந்த தமிழக மக்களுக்கு
யார் மீது கோபமோ... இல்லையோ... ஆனால், இந்த இரண்டு விஷயத்திலும் அமைதி
காத்து வந்த காங்கிரஸ் கட்சியின் மீது தீராத வெறுப்பாக அது மாறியது.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு
பெரும் தடையாக இலங்கை பிரச்னையே எதிரொலிக்கும் நிலை ஏற்பட்டது. மத்திய
உளவுத் துறையினரும் இதை உறுதி செய்து மேலிடத்திற்கு தெரியப்படுத்தினர்.
விலைவாசி பிரச்னை, ஸ்பெக்ட்ரம் முறைகேடு, குடும்ப அரசியல் என, முக்கிய
பிரச்னைகளில், தி.மு.க., மாட்டி தவித்ததால், இலங்கை தமிழர்கள் பிரச்னை,
அவர்களுக்கு, ஆறு, ஏழாவது இடத்துக்கு போய்விட்டது. ஆனால், தமிழகத்தில்
காங்கிரஸ் கட்சிக்கு இலங்கை பிரச்னையே தோல்விக்கு அழைத்து செல்லும்
பிரதானமான பிரச்னையாக வெடித்தது. இந்த விஷயத்தில் சற்று அனுசரித்து
சென்றால் மட்டுமே, தேர்தலில் தமிழக மக்களின் மனதை நெருங்க முடியும் என,
நினைத்த மேலிட காங்கிரஸ் சற்று இறங்கி வந்தது. அதனால் தானோ என்னவோ,
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் தொடர்பாக சென்னையில் பங்கேற்ற காங்கிரஸ்
தலைவர் சோனியா, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு குறித்து பேசி சென்றார்.
குறிப்பாக அவர்கள் சம உரிமை பெறவும், மறுவாழ்விற்காகவும், புனரமைப்பு
பணிக்காகவும் மத்திய அரசு பல்வேறு உதவிகளையும், தேவையான நிதி உதவியையும்
செய்து வருவதாக குறிப்பிட்டார்.
"இதெல்லாம் பொய் வேஷம்; களத்தில் காங்கிரசை காணாமல் அடிக்க வேண்டும்'
என, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட, 63 தொகுதிகளிலும், "நாம் தமிழர்
இயக்கம்' உள்ளிட்ட தமிழர் அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு களம்
இறங்கின. ஏற்கனவே லோக்சபா தேர்தலின் போது இவர்கள் கொடுத்த நெருக்கடியால்,
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, இளங்கோவன் தோல்வி, குறைந்த ஓட்டு
வித்தியாசத்தில் சிதம்பரத்தின் வெற்றி அமைந்தது போன்ற திருப்பங்கள்
நிகழ்ந்தன. இந்த தேர்தலில், ஏற்கனவே கோஷ்டி பூசலாலும், உள்ளடி வேலையாலும்
கலங்கி நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இலங்கை பிரச்னையும் சேர்ந்து
கொள்ள உச்சக்கட்ட தோல்வி பயத்தில் உறைந்தனர். பல பிடிவாதங்களுக்கு பின்,
தி.மு.க., கூட்டணியில், 63 தொகுதிகளை பெற்ற போதிலும், வெற்றி வாய்ப்பை
பாதிக்கும் இலங்கை தமிழர் விவகாரத்தில், ஆரம்பத்திலேயே, சில சரியான
அணுகுமுறைகளை பின்பற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தவறிவிட்டனர். இலங்கை
தமிழர் பிரச்னை தமிழகத்தில் மறுபடியும் ஓட்டு வங்கியை உருவாக்கியுள்ளதா
என்பதற்கான விடை, காங்கிரசின் வெற்றி, தோல்விகள் மூலம் தெரியவரும். அதன்
மூலமாக, மற்ற கட்சிகளுக்கு இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என்பதில்
தெளிவு ஏற்படும்.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» இலங்கை பிரச்னை: ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு
» இந்திய இலங்கை மீனவர் பிரச்னை குறித்து விவாதம்: கூட்டறிக்கை வெளியீடு
» காலையில் இருந்த வாசகம் மதியம் மாறியது : இலங்கை பிரச்னை நோட்டீசில் குழப்பம்
» இலங்கை தேர்தல் : தமிழர் கட்சிகள் வெற்றி
» இலங்கை அரசை ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஈடுபட்டுவரும் அரசாகத் தமிழ்நா
» இந்திய இலங்கை மீனவர் பிரச்னை குறித்து விவாதம்: கூட்டறிக்கை வெளியீடு
» காலையில் இருந்த வாசகம் மதியம் மாறியது : இலங்கை பிரச்னை நோட்டீசில் குழப்பம்
» இலங்கை தேர்தல் : தமிழர் கட்சிகள் வெற்றி
» இலங்கை அரசை ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஈடுபட்டுவரும் அரசாகத் தமிழ்நா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum