Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எல்லா தொகுதிகளிலும் பட்டுவாடா ஆரம்பமானது : தேர்தல் கமிஷனிடம் குவிகின்றன புகார்கள்
Page 1 of 1

ஓட்டுப் பதிவுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளதால், தேர்தல் கமிஷனின்
கெடுபிடிகளையும் மீறி, பல்வேறு வழிகளில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா
செய்வது ஆரம்பமாகியுள்ளது. சில இடங்களில் பணம் வினியோகிக்கும் போது,
அரசியல் கட்சியினர் பிடிபட்டுள்ளனர். இதுகுறித்து, தேர்தல் கமிஷனிடம்
புகார்கள் குவிகின்றன.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலின் போது,
அதிகளவில் பணப்பட்டுவாடா இருக்கும் என எதிர்பார்த்த தேர்தல் கமிஷன்,
பல்வேறு கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை எடுத்தது. அதிகாரிகள்
மாற்றப்பட்டனர். மத்திய தேர்தல் பார்வையாளர்கள் தீவிர கண்காணிப்பை
துவக்கினர். மற்ற மாநிலங்களில் இருந்து, ஐ.ஜி., அந்தஸ்திலான போலீஸ்
அதிகாரிகள், மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டனர். பறக்கும்
படைகள் அமைக்கப்பட்டு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருடன் சேர்ந்து
வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் தமிழகம் முழுவதும், 30
கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட ரொக்கத் தொகை பிடிபட்டது. அப்படியிருந்தும்,
பல்வேறு வழிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறு கொண்டு செல்லப்பட்டு
பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம், தற்போது வெளிவரத் துவங்கியுள்ளது.
தேர்தலுக்கு நான்கு நாட்களே உள்ளதாலும், பிரசாரம் முடிந்து கடைசி இரண்டு
நாட்கள், கண்காணிப்பு தீவிரமாக இருக்கும் என்பதாலும், இப்போதே பணப்
பட்டுவாடாவை முக்கிய கட்சிகள் துவக்கியுள்ளன.
கிராமப்
புறங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணப் பட்டுவாடா நடக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில், மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம்,
ஆளுங்கட்சி நிர்வாகி பணம் கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து,
வினியோகிக்கப்பட்ட பணத்தை, அந்தந்த வீடுகளுக்கே சென்று, தேர்தல்
அதிகாரிகள் திரும்பப் பெற்றனர். துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும்
கொளத்தூர் தொகுதியில் நேற்று பணப் பட்டுவாடா நடந்ததாக புகார் வந்தது.
பறக்கும் படையினர் சென்று விசாரணை நடத்தினர். தியேட்டர் ஒன்றில் பணம்
பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததால், அங்கும் சென்று சோதனை
நடத்தினர். ஆனால், பணம் ஏதும் சிக்கவில்லை. இதேபோல, திருச்சியில்
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட, 5.11 கோடி ரூபாய்
பறிமுதல் செய்யப்பட்டது. அப்படியிருந்தும், அந்த மாவட்டத்திலும் பண
வினியோகம் துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலான தொகுதிகளில்,
வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளுக்குள் பணப் பட்டுவாடாவை முடித்துவிட,
கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, ஏற்கனவே தொகுதி முழுவதும் சர்வே
நடத்தி, யார் யாருக்கு பணம் தரலாம் என்ற பட்டியலையும் அரசியல் கட்சியினர்
தயாரித்து வைத்துள்ளனர்.
சென்னை மற்றும் நகர்ப்பகுதிகளில்,
டோக்கன் அல்லது பூத் சிலிப்கள் முதலில் கொடுக்கப்படுகிறது. அந்த, "பூத்
சிலிப்'பை பத்திரமாக வைத்திருக்குமாறும், அதை காண்பித்தால், பரிசுத் தொகை
உரிய நேரத்தில் வழங்கப்படுமென்றும், நிர்வாகிகள் கூறிச் செல்கின்றனர்.
முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில், கடந்த இரு
நாட்களாக தி.மு.க.,வினர், திருமங்கலம், "பார்முலா'வை துவக்கி, கன ஜோராக
பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். அ.தி.மு.க.,வினரும் இதை பெரிதாக
எடுத்துக் கொள்ளவில்லை. நேற்று காலை, திருவாரூர் அருகே உள்ள எருக்காட்டூர்
கிராமத்தில் நான்கு பேர், வீடுகள் தோறும் சென்று ஓட்டு கேட்பது போல்,
ஓட்டுக்கு 1,000 ரூபாய் வீதம் பணப் பட்டுவாடா செய்துள்ளனர். இதையறிந்த
அ.தி.மு.க.,வினர், அந்த நபர்களை சுற்றி வளைத்த போது, மூவர் தப்பியோடி
விட்டனர். பணத்துடன் சிக்கிய ஒருவரைப் பிடித்து, அவரிடம் இருந்து டிரைவிங்
லைசென்ஸ், விசிட்டிங் கார்டு, மனித உரிமை கழகம் உறுப்பினர் கார்டு, 25
ஆயிரம் ரூபாய் பணம், வாக்காளர் பெயர், வரிசை, பாகம் எண் கொண்ட பட்டியலை
கைப்பற்றி, கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். இச்சம்பவம் பற்றி
தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்த தி.மு.க.,
நிர்வாகிகள் இருவர், அ.தி.மு.க., கட்சி அலுவலகத்திற்கு வந்து, இது போன்று
நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் எனக் கூறி, சமரசம் பேசி, பட்டுவாடா செய்த
நபரை அழைத்துச் சென்றனர். இதனால், நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம்: கடலூர்
மாவட்டம், பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம் நகரில், 30 வார்டுகளிலும்
வாக்காளர்களுக்கு தி.மு.க., வினர் பணம் கொடுப்பதாக தேர்தல் அலுவலர்களுக்கு
நேற்று தகவல் கிடைத்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் தலைமையில்,
நெல்லிக்குப்பம் சோழவல்லி பகுதியில் போலீசார் சோதனை செய்யச் சென்றனர்.
அங்கு நின்றிருந்த டி.என்.01 எக்ஸ். 5478 எண்ணுள்ள காரில் இருந்தவர்கள்,
அதிகாரிகளை பார்த்தவுடன் காரை எடுத்துக் கொண்டு, வேகமாக சென்றனர்.
போலீசாரும், காரை நீண்ட தூரம் துரத்திச் சென்றனர். பல தெருக்கள் வழியே
சென்றவர்கள், மெயின் ரோட்டுக்கு வந்த போது, போலீசாரை திசை திருப்ப, ஒரு
பையில் பணத்தை வைத்து தூக்கியெறிந்து விட்டு தப்பினர். கீழே
வீசியெறியப்பட்ட பையை, அதிகாரிகள் சோதனை செய்து பார்த்ததில், அதில், 2
லட்சத்து 76 ஆயிரத்து 400 ரூபாய் இருந்தது. பணத்தை கைப்பற்றி, கார்
எண்ணைக் கொண்டு பணம் கடத்தியவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து
வருகின்றனர். அமைச்சர் அன்பரசன் போட்டியிடும் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட
பம்மல், மூங்கில் ஏரியைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள். தி.மு.க., மகளிரணி
நிர்வாகி. இவர் வீட்டில் இருந்து பணப் பட்டுவாடா நடப்பதாக பம்மல்
பகுதியில் நேற்று தகவல் பரவியது. இதையடுத்து, அ.தி.மு.க., -
தே.மு.தி.க.,வினர் கோவிந்தம்மாள் வீட்டை முற்றுகையிட்டனர். இது குறித்து,
சங்கர் நகர் போலீசாருக்கும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கும் தகவல்
தெரிவிக்கப்பட்டது. சோதனை நடத்தியதில், பணம் எதுவும் பறிமுதல்
செய்யப்படவில்லை. இருப்பினும் அ.தி.மு.க., வினர் கொடுத்த புகார் குறித்து
சங்கர் நகர் இன்ஸ்பெக்டர் லட்சுமி நாராயணன் விசாரணை நடத்தி வருகிறார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» எல்லா தொகுதிகளிலும் தொடங்கியது பணமழை - மாறும் தேர்தல் முடிவுகள்..
» தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பண பட்டுவாடா: தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க., சவால்
» தேர்தல் கமிஷனிடம் ஆளும் கூட்டணி புகார் : இதுவரை காணாத வகையில் பரபரப்பு
» தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தி.மு.க.,வினர் பணம் பட்டுவாடா
» பிரணாப்முகர்ஜிக்கு எதிராக மேலும் 2 புகார்கள்: தேர்தல் ஆணையரிடம் சுப்பிரமணியசாமி மனு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum