Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தேர்தல் நாள் நெருங்குவதால் கட்சிகள் கலக்கம்: ஆதரவு அலையாக ஆர்ப்பரிக்காத சூழ்நிலை
Page 1 of 1

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டும் உள்ள நிலையில்,
எந்தக் கட்சிக்கும் ஆதரவு அலை வீசவில்லை. தேர்தல் நாள் நெருங்குவதால்
அனைத்து கட்சிகளும் ஆர்ப்பரிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கியுள்ளன.
தங்களது அணிக்கு பெரும்பான்மை கிடைத்து, ஆட்சி அமைக்க முடியுமா? என்ற
கலக்கத்தில் கட்சித் தலைவர்கள் உள்ளனர்.
வரும் 13ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு சட்டசபை
தேர்தல் நடக்கிறது. 11ம் தேதி மாலை, தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது.
தி.மு.க., தலைமையில் காங்கிரஸ், பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் மற்றும்
இதர கட்சிகள் ஒரு அணியிலும், அ.தி.மு.க., தலைமையில் தே.மு.தி.க., - இரு
கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சிகள் மற்றொரு அணியிலும் போட்டியிடுகின்றன.
முதல்வர் கருணாநிதி, முதல் கட்டமாக கோவை, ஈரோடு, சேலம், வேலூர் ஆகிய
மாவட்டங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டங்கள் மூலம் பிரசாரம்
செய்து முடித்துள்ளார். இன்று வடசென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை
(5ம் தேதி) சென்னை தீவுத்திடலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன்
பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார்.இரண்டாம் கட்டமாக தென்சென்னை,
மதுரை, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவாரூர் ஆகிய
இடங்களில் கருணாநிதி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தி.மு.க.,வுக்கு ஆதரவாக
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் சூறாவளி
பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, கடந்த 26ம் தேதி முதல் கட்ட
தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் துவக்கினார். கடந்த 1ம் தேதி சென்னையில்
அதிவிரைவு பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று மதுரையிலும், நாளை
முதுகுளத்தூர், பரமக்குடி, காரைக்குடி, மதுரை, கோவை பகுதியில் தீவிரமாக
பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., தலைவர்
விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்,
நடிகர், நடிகைகள் பிரசார மேடையில் ஏறி, இறங்குகின்றனர்.
இரு அணியிலும் தலைவர்கள் பிரசாரம் சூடுபிடித்திருந்தாலும் எந்த
அணிக்கும் வாக்காளர்களின் ஆதரவு அலை வீசவில்லை. இலவச திட்டங்களை
தி.மு.க.,வை போல அ.தி.மு.க.,வும் அறிவித்திருப்பதால் இரு கட்சிகளின்
தேர்தல் அறிக்கையையும் பொதுமக்கள் சரிசமமாக கருதுகின்றனர்.
தேர்தல் பணியில் இரு அணிகளின் தொண்டர்களும் களத்தில் காணப்படுகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதில் தேர்தல் கமிஷன் தீவிரமாக
இருப்பதால், கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலை நீடிக்கிறது. தவிரவும்,
பா.ஜ., - இந்திய ஜனநாயகக் கட்சி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் களத்தில்
இருப்பதால், எந்த அணிக்கு இது வாய்ப்பைக் குறைக்கும் அல்லது சாதகமாக்கும்
என்ற குழப்பமும் இருக்கிறது.
தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், இலவச "டிவி', காஸ், ஊரக
வேலைவாய்ப்பு திட்டம் போன்றவை ஆளுங்கட்சிக்கு ஆதரவை பெற்றிருந்தாலும்,
ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவை அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், இந்த பிரச்னைகள் எல்லாம் அ.தி.மு.க.,
அணிக்கு ஆதரவாக மாறுமா? என்பதிலும் தெளிவு இல்லை.மேலும், தொகுதி
சீரமைப்பு, அந்தந்த பகுதியின் வளர்ச்சி நிலைமை, வேட்பாளரது பின்புலம்
போன்றவற்றை வைத்து ஓட்டுப் போடும் நிலை இருப்பதாக, பலரும் கருதுகின்றனர்.
மேலும், தேர்தல் கமிஷன் கெடுபிடி செய்வதாக ஆளும் தி.மு.க., கூட்டணி
வெளிப்படையாக குறைகூறுவது, இத் தேர்தலில் வித்தியாசமான அம்சமாகும்.
"நியாயமற்ற செயலில் ஈடுபடுவதாக' முதல்வர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
எதிரணியில் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே
மேடையில் தோன்றி பிரசாரம் செய்யப்போவதில்லை என்பதும்
வெளிப்படையாகியிருக்கிறது.
தமிழகத்தில் வெயில் அதிகரித்த நிலையில், அடுத்த ஒருவார காலத்தில்
முக்கியமான கட்சிகள் எடுக்கும் உத்திகள் தான் வாக்காளர் மனதில் அதிகமாக
ஈர்ப்பை ஏற்படுத்தும். அதுவரை ஆதரவு அலை என்பது எக்கட்சியும் இருப்பதாகக்
கூற இயலாத சூழ்நிலை தான், இத் தேர்தலில் தற்போது ஏற்பட்டிருக்கும்
புதுமையான நிலவரம் ஆகும்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தேர்தல் நெருங்குவதால் வீடுகளுக்கு தடையின்றி சப்ளை?
» 307 கட்சிகள், அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு
» கலக்கிய தேர்தல் கமிஷன்... கலங்கிய கட்சிகள்...!
» இலங்கை தேர்தல் : தமிழர் கட்சிகள் வெற்றி
» தேர்தல் கமிஷன் கலக்கலால் கலங்குகின்றன கட்சிகள்: மக்கள் நிம்மதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum