Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆர்.எஸ்.மங்கலம் அருகே அமைச்சருக்கு எதிர்ப்பு: ரகளையில் ஈடுபட்ட எம்.பி., சுற்றி வளைப்பு
Page 1 of 1

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில்
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பிச்சங்குறிச்சியில் பிரசாரம் செய்ய வந்த
அமைச்சர் தங்கவேலனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள்ரோட்டை
துண்டித்தனர். பிரசாரம் செய்யமுடியாமல் அமைச்சர் திரும்பி சென்றதால்
ஆத்திரமுற்ற தி.மு.க., எம்.பி., ரித்தீஷ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள்
, சோழந்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்த பாண்டமங்கலத்தை
சேர்ந்த நாராயணனை தாக்கினர். அப்போது அங்கு வந்த கிராமத்தினர்
எம்.பி.,மற்றும் அவரது ஆதரவாளர்களை விரட்ட , அவர்கள் காரில் தப்பியோடினர்.
இதனிடையே, தேவிபட்டினம் அருகே வைத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து
மடக்கினர். பிச்சங்குறிச்சியில் ரோடு வசதி இல்லாமல் ஐந்து ஆண்டுகளாக கிராம
மக்கள் தவித்து வந்தனர். அமைச்சர் தங்கவேலன் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை
முறையிட்டும் பயனில்லை. ரோடு வசதியை காரணம் காட்டி, பஸ் போக்குவரத்தும்
நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், திருவாடானை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும்
அமைச்சர் தங்கவேலன், அக்கிராமத்தில் நேற்று மாலை பிரசாரம் செய்ய வருவதாக
தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஊராட்சி சார்பில் ரோட்டை
சீரமைக்கும் பணியை நேற்று காலை அவசரமாக தொடங்கினர். இதை அறிந்து அங்கு
வந்த கிராமத்தினர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மண்வெட்டியால் ரோட்டை
வெட்டி துண்டித்தனர். சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் தகராறில்
ஈடுபட்டனர். தகவல் அறிந்து பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு வந்த
ரித்திஷ்குமார் எம்.பி.,யின் தந்தை குழந்தைவேலு, தோண்டிய ரோட்டை அமைச்சர்
வருவதற்குள் சரிசெய்யுமாறு கூறி, அங்கிருந்து சென்றார். அதன்படி பொக்லைன்
இயந்திரம் மூலம் ரோட்டை சரிசெய்ய முயன்ற போது கிராமத்தினர் எதிர்த்தனர்.
இச்சம்பவம் அறிந்து அங்கு வந்த அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வ.து.நடராஜனின்
மகன் ஆனந்த் தலைமையிலான கட்சியினர், இத்தனை நாட்களாக ரோட்டை சீரமைக்காமல்,
பிரசாரத்திற்கு அமைச்சர் கார் வர வசதியாக ரோடு சீரமைப்பதை கண்டித்தனர்.
இது குறித்து தேர்தல் பார்வையாளரிடமும் புகார் தெரிவித்தனர்.
கிராமத்தை சேர்ந்த ஸ்டாலின் கூறுகையில்,""எங்கள் கிராமத்தில் ரோடு வசதி
கேட்டு ஐந்து ஆண்டுகளாக முறையிட்டு வருகிறோம். இப்போது அமைச்சர்
வருவதற்காக ரோட்டை சீரமைக்க வந்துள்ளனர். கொதித்து போன நாங்கள் எதிர்ப்பு
தெரிவித்தோம்,'' என்றார். ரோடு சீரமைப்பில் ஈடுபட்ட ஊராட்சி தலைவரின்
உறவினர் நாகமுத்து கூறுகையில், ""பொக்லைன் இயந்திரம் தற்போது தான்
கிடைத்தது. அதனால் தான் சீரமைப்பு பணியை தொடங்கினோம்,'' என்றார்.
இதைத்தொடர்ந்து மாலையில் அங்கு வந்த போலீசாரிடம் கிராமமக்கள் பொக்லைன்
இயந்திரத்தை ஒப்படைத்தனர். இதனிடையே , களவான்குடி வழியாக மாற்று பாதை
தயார் செய்யும் பணியை தி.மு.க.,வினர் தொடங்கினர். இதற்கு களவான்குடி
கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க.,வினரும்
கிராமத்தினருக்கு ஆதரவு அளித்தனர். அதன் பின் அங்கு வந்த தி.மு.க.,-
அ.தி.மு.க., வினரிடையே மோதல் ஏற்பட்டது.
இத்தகவலை அறிந்த அமைச்சர் தங்கவேலன் பிரசாரத்தை ரத்து செய்து, பாதியில்
திரும்பினார். இதை அறிந்த ரித்தீஷ்குமார் எம்.பி., தனது ஆதரவாளர்களுடன்
ஏராளமான கார்களில் சம்பவ இடத்திற்கு வந்த போது, சோழந்தூர் பஸ் ஸ்டாண்ட்
அருகே நின்று கொண்டிருந்த பாண்டமங்கலத்தை சேர்ந்த நாராயணனை தனது
ஆதரவாளர்களுடன் எம்.பி., தாக்கினார். இதை அறிந்த கிராமத்தினர்,
ரித்தீஷ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை விரட்டியடித்தனர். கார்களில்
வந்த ரித்தீஷ்குமார் தரப்பினர் தப்பியோடினர். தொடர்ந்து ரித்தீஷ்குமாரை
கைது செய்யக்கோரி அப்பகுதியினர் மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு
பதட்டம் உருவானது .மேலும் போலீசார் குவிக்கப்பட்டனர். கிராமத்தினரை
போலீசார் சமாதானபடுத்தி, ரித்தீஷ்குமாரை கைது செய்வதாக உறுதி அளித்தனர்.
இருப்பினும் ரித்தீஷ்குமாரை கைது செய்த பின்னரே கலைந்து செல்வோம் என
கூறியப்படி கிராமத்தினரும் அங்கே திரண்டு நின்றனர்.
இதனிடையே, தப்பி வந்த ரித்தீஷ்குமார் தரப்பினரை ராமநாதபுரம்
டி.எஸ்.பி., முரளிதரன் மற்றும் போலீசார் தேவிபட்டினம் அருகே மாதவனூரில்
மடக்கி பிடித்தனர். ரித்தீஷ்குமார் ஆதரவாளர்கள் எட்டு பேரை கைது செய்த
போலீசார், ரித்தீஷ்குமாரை தேவிபட்டினம் ஸ்டேஷனில் வைத்து விசாரித்து
வருகின்றனர். காயமடைந்த நாராயணன் ராமநாதபுரம் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்.பி., ஆட்கள் பீர்பட்டில் வீச்சு: ரித்தீஷ்குமார் தப்பி
ஓடியபோது, அவரை பின்தொடர்ந்து விரட்டியவர்களை எம்.பி., தரப்பினர்
பீர்பட்டிலால் எறிந்தனர். இதில் கார்த்திக் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.
ரித்தீஷ்குமாரின் ஆதரவாளர்கள் அனைவரையும் கைது செய்த நிலையில், அவரை
மட்டும் கைது செய்யாமல் தேவிபட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நீண்ட
நேரமாக போலீசார் விசாரித்தனர்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் படையினரால் சுற்றி வளைப்பு
» மும்பை தாக்குதலில் தொடர்புடைய முஜாகிதீன் தீவிரவாதி ஆரூண் பிடிபட்டான்; கொல்கத்தாவில் பதுங்கி இருந்தவன் சுற்றி வளைப்பு
» பதவி பறிப்புக்கு எதிர்ப்பு: குடும்பத்தோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி!
» செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு
» மத்திய சுகாதார அமைச்சருக்கு டெங்கு காய்ச்சல் ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum