TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கட்சி தாவி வந்தவர்களுக்கு தி.மு.க.,வில் 15 சதவீதம் "சீட்' ஒதுக்கீடு

Go down

கட்சி தாவி வந்தவர்களுக்கு தி.மு.க.,வில் 15 சதவீதம் "சீட்' ஒதுக்கீடு Empty கட்சி தாவி வந்தவர்களுக்கு தி.மு.க.,வில் 15 சதவீதம் "சீட்' ஒதுக்கீடு

Post by ஜனனி Sat Mar 19, 2011 7:57 am

கட்சி தாவி வந்தவர்களுக்கு தி.மு.க.,வில் 15 சதவீதம் "சீட்' ஒதுக்கீடு Large_208326
சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டில், கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தது
போக தி.மு.க., வசமிருந்த தொகுதிகள் 119. மொத்தமுள்ள 234 தொகுதிகளில்
வெறும் 51 சதவீதத்தில் மட்டும் தி.மு.க., வேட்பாளர்கள் களம் காணும் நிலை,
இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ளது. இந்த 51 சதவீதத்தில் 15 சதவீதம், மாற்றுக்
கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு சென்றுள்ளதால், "சீனியர்'
உடன்பிறப்புகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வி.பி.துரைசாமி, எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், கருப்பசாமி
பாண்டியன், ரகுபதி உள்ளிட்டவர்கள் அ.தி.மு.க.,வில் இருந்து
தி.மு.க.,விற்கு வந்த பழைய முகங்கள். கடந்த தேர்தலில் அ.தி.மு.க.,
சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வான அனிதா ராதாகிருஷ்ணன் ஓராண்டுக்கு
முன் தி.மு.க.,வில் இணைந்து, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர். லோக்சபா
தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளராக நிறுத்தப்பட்ட கடலாடி சத்தியமூர்த்தி
தி.மு.க.,வில் இணைந்ததற்கு பரிசாக, அவருக்கும் தொகுதி
ஒதுக்கப்பட்டுள்ளது.இரு மாதங்கள் முன் வரை, "அம்மா' புகழ் பாடிய
சேகர்பாபுவுக்கும் சீட் கிடைத்துள்ளது. இவர்களையெல்லாம், "இழுக்கும்'
பணியில் ஈடுபட்ட ஈரோடு முத்துசாமியும் தி.மு.க., சார்பில் மீண்டும் களம்
காண்கிறார்.
வைகோவின் தலைமையை ஏற்று ம.தி.மு.க.,வுக்கு சென்று
திரும்பியவர்களுக்கும் இந்த வேட்பாளர் பட்டியலில் கணிசமான இடம்
கிடைத்துள்ளது. கரூர் கே.சி.பழனிச்சாமி, திருச்சி செல்வராஜ், மைதீன்கான்
என கொஞ்ச நாளிலேயே தாயக்கழகத்திற்கு திரும்பியவர்களுக்கு, ஏற்கனவே உரிய
மரியாதை தரப்பட்டுள்ளது. ம.தி.மு.க.,வை விட்டு கடைசியாக வந்த கோவை
கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோரும் வேட்பாளர் பட்டியலில் இடம்
பெற்றுள்ளனர்.இவர்கள் தவிர, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையிலிருந்து வந்த
ரங்கநாதன், மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து வந்த திருப்பூர் கோவிந்தசாமி
ஆகியோரும் தி.மு.க., வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். இப்படி தி.மு.க.,
வேட்பாளர்கள் 119 பேரில் 18 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள்.
இது குறித்து, கொங்கு மண்டலத்தை சேர்ந்த தி.மு.க., முன்னணி பிரமுகர்
ஒருவர் கூறியதாவது:"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என
அண்ணா தெரிவித்தார். ஆனால் இன்று, "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு தான்
மணம் உண்டு' என்பது போல மாறிவிட்டது. அந்த அளவிற்கு, மாற்றுக் கட்சியில்
இருந்து தி.மு.க.,வுக்கு வந்தவர்கள் ஆதிக்கம் பெற்றுள்ளனர்.மாற்றுக்
கட்சிகளில் இருந்து வந்த இவர்கள் அனைவரும், தத்தம் பகுதியில் இத்தனை
நாட்களாக தி.மு.க.,வுக்கு எதிராக தீவிர களப்பணியாற்றியவர்கள். அவர்களுக்கு
வாய்ப்பு தந்துள்ளதன் மூலம், கட்சிக்காக காலம் காலமாய் கஷ்டப்பட்டவர்கள்
புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தலைநகரில் சேகர்பாபுவுக்கு வாய்ப்பு
கொடுத்துவிட்டு, மாவட்டச் செயலராக உள்ள வி.எஸ்.பாபுவுக்கு வாய்ப்பு
மறுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில், சாத்தூர் ராமச்சந்திரன் தன்னை
சந்திக்காமல் திருப்பி அனுப்பியதை திருச்சி சிவா வருத்தத்துடன்
குறிப்பிட்டார். இதேபோல் தான், கட்சித் தலைமையை மதிக்காமல்
ம.தி.மு.க.,விற்கு ஓடியவர்களுக்கும் முதல் மரியாதை
செய்யப்பட்டுள்ளது.தி.மு.க.,வை எதிர்த்து அரசியல் செய்தவர்களை,
வேட்பாளர்களாக அறிவிப்பதற்கு கட்சி தலைமை ஆயிரம் காரணங்களை சொல்லலாம்.
ஆனால், குறிப்பிட்ட தொகுதியில் நமக்கும் என்றைக்காவது வாய்ப்பு வரும் என
எதிர்பார்த்து கட்சிப் பணியாற்றும் நிர்வாகி இந்த அறிவிப்பை எப்படி
ஏற்பார்?இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அ.தி.மு.க.,விலும்... : அ.தி.மு.க., வெளியிட்டுள்ள 160
தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலிலும், மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்த
சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசில் இருந்து வந்த
பழ.கருப்பையா, ஐ.என்.டி.யு.சி.,யில் இருந்து கடந்த தேர்தலின் போது
அ.தி.மு.க., வில் ஐக்கியமாகி 14 ஓட்டு வித்தியாசத்தில் எம்.எல்.ஏ.,வான
சின்னச்சாமிக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க.,
ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்த ராஜ.கண்ணப்பன், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர்
மீண்டும் தாய் கழகம் திரும்பிய நிலையில் அவர்களுக்கும் தொகுதி
ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் மீன்வளத் துறை அமைச்சராக இருந்த
ஜெனிபர் சந்திரன் அ.தி.மு.க.,வில் இணைந்தார். நீண்ட கால
காத்திருப்புக்குப் பின் அவருக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,விற்கு 31 சீட் ஒதுக்கீடு: காங்., அதிர்ச்சி
» தேசியக் கட்சி தகுதியை இழக்கிறது லாலு கட்சி?
» தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்!- விகடன்
» இந்த படத்தை பார்த்தும் நீ காங்கிரஸ் கட்சி, திமுக, பாரதிய ஜனதா கட்சி, ஆகிய தமிழின விரோதிகளுக்கு வாக்கு போடுவாயா, போடுவாயா???
» அ.தி.மு.க.வில் சீட் கிடைக்காத தொழிலதிபர் மாரடைப்பால் மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum