Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
"2ஜி' ஸ்பெக்ட்ரம் விசாரணையில் முரண்பாடு துவங்கியாச்சு : ஜே.பி.சி., தலைவர் புகார்
Page 1 of 1

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து
விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக் கமிட்டியின் முதல்
கூட்டம், வரும் 24ம் தேதி நடைபெற இருக்கிறது. இக்குழுவின் தலைவர் சாக்கோ,
அதிகார எல்லையை மீறி பொதுக் கணக்கு கமிட்டி (பி.ஏ.சி.,) செயல்படுவதாக
குற்றம் சாட்டியுள்ளார்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து
ஆய்வு செய்த மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, அரசுக்கு 1.76 லட்சம் கோடி
ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டியிருந்தார். இவரது
அறிக்கை, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை வைத்து
எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட் கூட்டத்தொடரை முடக்கின.இதையடுத்து, மத்திய
தணிக்கை அதிகாரியின் அறிக்கை பற்றி பொதுக் கணக்கு கமிட்டி ஆய்வு செய்து,
நடவடிக்கை எடுக்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதை ஏற்க மறுத்து
எதிர்க்கட்சிகள், பார்லிமென்ட் கூட்டுக் கமிட்டி (ஜே.பி.சி.,) விசாரணை
தேவை என பிடிவாதமாக இருந்தன. இதனால், பல நாட்களாக பார்லிமென்ட் முடங்கிப்
போனது.மூன்று மாத போராட்டத்திற்கு பின், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக
நடத்த வேண்டும் என எண்ணிய மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு
செவிசாய்த்து, ஜே.பி.சி., விசாரணைக்கு ஒத்துக்கொண்டது.
ஆனால்,
பொதுக் கணக்கு கமிட்டி (பி.ஏ.சி.,) தனது விசாரணையை மேற்கொண்டது. மத்திய
தணிக்கை அதிகாரி உட்பட இதில் தொடர்புடைய பலரை நேரில் அழைத்து விசாரணை
நடத்தியது. இக்கமிட்டியின் தலைவராக பாரதிய ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவர்
முரளிமனோகர் ஜோஷி உள்ளார். இந்த விசாரணை பல்வேறு கோணத்தில் நடக்கிறது.
அதே
சமயம், அரசு அமைத்த ஜே.பி.சி.,யில் 30 எம்.பி.,க்கள் உள்ளனர். காங்கிரஸ்
கட்சியை சேர்ந்த, கேரள மாநிலம் திருச்சூர் தொகுதி எம்.பி., சாக்கோ தலைவராக
நியமிக்கப்பட்டார். இக்கமிட்டியின் முதல் கூட்டம் வரும் 24ம் தேதி
நடக்கிறது.இதற்கிடையில், பொதுக் கணக்கு கமிட்டியின் தலைவர் முரளிமனோகர்
ஜோஷி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக, இதில் முக்கிய நபராக உள்ள
மீடியா ஆலோசகர் நிரா ராடியாவின் டெலிபோன் உரையாடல்களை வெளியிட்ட
பத்திரிகைகளின் நிருபர்கள், இதழ்களின் ஆசிரியர்கள் ஆகியோர் நேரில் ஆஜராகி
வாக்குமூலம் அளிக்க வேண்டும் என அழைப்பு விடுத்து சிலரிடம் விசாரணையும்
முடிந்தது. பி.ஏ.சி.,யின் இந்த நடவடிக்கைக்கு, ஜே.பி.சி., தலைவர் சாக்கோ
எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய சாக்கோ கூறியதாவது: ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக, மத்திய தணிக்கை அதிகாரி அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை படித்து பார்த்து, முறைகேடுகள்
நடத்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்யும் பணியை மட்டுமே கவனிக்க பொதுக்
கணக்கு கமிட்டியிடம் கோரப்பட்டது. ஜே.பி.சி.,க்கு இணையாக செயல்படுவது போல
ஒரு எண்ணத்தை ஏற்படுத்துவதாக அதன் நடவடிக்கைகள் உள்ளன. தனது அதிகார
எல்லையை மீறி செயல்படுவது போல் உள்ளது.ஜே.பி.சி., அமைக்கப்பட்டதன்
நோக்கமே, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து
விரிவாக விசாரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான். ஆனால்,
பத்திரிகைகளில் வந்த செய்திகளை பார்க்கும் போது பி.ஏ.சி., -
ஜே.பி.சி.,க்கு இணையான விசாரணை போல செயல்படுகிறது. இந்த முரண்பாடான போக்கு
தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. இது குறித்து ஜே.பி.சி., கூட்டத்தில்
விவாதிக்கப்படும்.இவ்வாறு சாக்கோ கூறினார்.
கடந்த 1998 முதல்
2008ம் ஆண்டு வரையிலான தொலைத்தொடர்பு கொள்கை பற்றியும், அது
அமல்படுத்தபட்டது பற்றியும், அதன் நடவடிக்கை பற்றியும் ஆய்வு செய்ய
உள்ளது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடம்
இருந்து கோரியுள்ளது.
ஜோஷி நீடிப்பார்:
இதற்கிடையில் பொதுக் கணக்கு கமிட்டி தலைவராக உள்ள முரளிமனோகர் ஜோஷியின்
பதவிக் காலம் அடுத்த மாதம் முடிகிறது. இந்த விசாரணை முடியும் வரை, இவரே
நீடிப்பார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் நேற்று
அறிவித்தார். பொதுக் கணக்கு கமிட்டி தலைவராக வருபவர் ஓராண்டுக்கு ஒருமுறை
தேர்ந்தெடுக்கப்படுகிறார்.நேற்று சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம், "இந்த
விஷயத்தை சிறப்பாகக் கையாளும் ஜோஷி 2011 - 2012ம் ஆண்டுக்கும் இப்பதவியில்
தொடர்வார். மாறாக பொதுக்கணக்கு கமிட்டியில் இதுவரை இருந்த யஷ்வந்த்
சின்காவுக்கு பதிலாக ஸ்ரீபாத நாயக்கும், ஆனந்த குமாரும் இருப்பர்'
என்றார். இதனால், ஜோஷி தற்போது மேற்கொண்டிருக்கும் தீவிர நடவடிக்கைகள்
தொடரும். அது காங்கிரஸ் கட்சியை சங்கடத்தில் ஆழ்த்தலாம்.
பொதுக்
கணக்கு குழுவையும், ஜே.பி.சி.,யும் ஒரே விஷயத்தை விசாரிப்பதாலும் இரு
அமைப்புகளின் தலைவர்கள் இரு வேறு கட்சியை சேர்ந்தவர்கள் என்பதாலும்,
அடுத்த சில நாட்களில் "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகார விசாரணை குறித்து பரபரப்பு
தகவல்கள் வரும் என்று கூறப்படுகிறது.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» வாஜ்பாய் ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் இழப்பீடு ரூ.60 ஆயிரம் கோடி: ரத்தன் டாடா புகார்
» "ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற முன்அனுபவம் தேவையில்லை':"டிராய்' முன்னாள் தலைவர் சாட்சியம்
» ஐ. நா விசாரணையில் சாட்சியமளிப்பது எப்படி
» ஆண்களுக்கு தனி அமைச்சகம் : துவங்கியாச்சு விநோத கோரிக்கை
» நீதிமன்ற விசாரணையில் 9,927 சிபிஐ வழக்குகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum