TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தாக்குப் பிடிக்குமா சிவப்புக் கோட்டை?முதல்வர் பதவியை குறிவைத்து மம்தா அதிரடி

Go down

தாக்குப் பிடிக்குமா சிவப்புக் கோட்டை?முதல்வர் பதவியை குறிவைத்து மம்தா அதிரடி Empty தாக்குப் பிடிக்குமா சிவப்புக் கோட்டை?முதல்வர் பதவியை குறிவைத்து மம்தா அதிரடி

Post by mmani Sun Mar 13, 2011 7:29 am

தமிழகத்தை போலவே, மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் திருவிழா
கோலாகலமாக துவங்கி விட்டது. நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் இருப்பதால்,
பாதுகாப்பு காரணங்களுக்காக, மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் ஆறு
கட்டங்களாக இங்கு தேர்தல் நடக்கிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி தலைமையிலான இடதுசாரி கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், மம்தாவின்
திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும் தேர்தலை
சந்திக்கின்றன.
சிவப்புக் கோட்டை : மேற்கு வங்க மாநிலத்தை சிவப்புக் கோட்டை
என்றே கூறலாம். அந்த அளவுக்கு, கடந்த 34 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகளின்
ஆதிக்கம், இங்கு கொடி கட்டிப் பறக்கிறது. ஜோதிபாசு முதல்வராக இருந்தவரை,
இடதுசாரி கட்சிகளின் ஆதிக்கத்தை, அசைக்க முடியவில்லை. குறிப்பாக,
எதிர்க்கட்சிகளே இல்லாத சூழல் இங்கு நிலவியது. ஜோதிபாசுவுக்கு பின்,
புத்ததேவ் முதல்வராக பதவியேற்றதும், இடதுசாரி கட்சிகளின் கோட்டை, ஆட்டம்
காணத் துவங்கி விட்டது.
நந்திகிராம், சிங்கூர் வன்முறை : கடந்த 2007ல் நந்திகிராம் என்ற
இடத்தில் சிறப்பு பொருளாதாரம் மண்டலம் அமைப்பதற்காக, 10 ஆயிரம் ஏக்கர்
பரப்பிலான நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தியது. இந்தோனேசியாவைச் சேர்ந்த
சலீம் குரூப் என்ற நிறுவனத்துக்கு ராசாயன தொழிற்சாலை அமைக்க அனுமதி
அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அந்த பகுதியில் வசித்த மக்கள் போராட்டம்
நடத்தினர். எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ,
அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து, கடந்த 2009ல் சிங்கூரில்
டாடாவின் நானோ கார் தொழிற்சாலை அமைக்க, மாநில அரசு ஒப்புதல் அளித்தது.
இதற்காக, 997 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலங்கள் விளை
நிலங்கள் என்றும், தொழிற்சாலை அமைக்க, இந்த நிலங்களை கையகப்படுத்தக்
கூடாது என்றும் பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து வன்முறை பரவியது. பலர் பலியாயினர்.இந்த இரண்டு
சம்பவங்களும், இடதுசாரி கூட்டணி ஆட்சியின் வரலாற்றில், நீக்க முடியாத ஒரு
கரும்புள்ளியாக அமைந்து விட்டது. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்
கட்சியின் செல்வாக்கு குறைவதற்கு, இந்த இரண்டு சம்பவங்களும் அடித்தளமாக
அமைந்து விட்டன.இந்த சம்பவங்களுக்கு பின் நடந்த லோக்சபா தேர்தல்,
உள்ளாட்சி தேர்தல்கள் ஆகியவற்றில் மம்தாவின் திரிணமுல் கட்சிக்கு கணிசமான
வெற்றி கிடைத்தது. ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு கடும் சரிவு ஏற்பட்டது.
இதையடுத்துத் தான், தங்களது கோட்டை, ஆட்டம் காணத் துவங்கி விட்டதை,
இடதுசாரி கட்சி தலைவர்கள் உணரத் துவங்கினர்.
நக்சலைட்களால் நெருக்கடி : இதனால், ஆட்சியை தக்க வைத்துக்
கொள்வதற்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தனர். ஆனால், மேற்கு
மிட்னாபூர் மாவட்டத்தில் நக்சலைட்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக
செயல்படும் பழங்குடியினரின் நடவடிக்கைகளால், ஆளும் கட்சிக்கு அடுத்த அடி
விழுந்தது. இந்த விவகாரத்தில் மம்தாவின் திரிணமுல் கட்சி, மறைமுகமாக
பழங்குடியினருக்கு ஆதரவு அளித்தது. இந்த விவகாரத்திலும், ஆளும் கட்சிக்கு
கடும் நெருக்கடி ஏற்பட்டது.இந்த நேரத்தில் தான், மம்தா பானார்ஜி ரயில்வே
அமைச்சராக பொறுப்பேற்றார். ஒட்டு மொத்த நாட்டுக்கே ரயில்வே அமைச்சராக
இருந்தாலும், மேற்கு வங்கத்துக்கு தான், ரயில்வே திட்டங்களுக்கு
முக்கியத்துவம் அளித்தார். ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றதும், தான்
தாக்கல் செய்த இரண்டு பட்ஜெட்டிலுமே, மேற்கு வங்கத்துக்கு ஏராளமான
சலுகைகளை அறிவித்தார். ரயில்வேயின் தலைமையிடமே, கோல்கட்டாவில் தான்
செயல்படுகிறது என, கூறும் அளவுக்கு அவரின் நடவடிக்கைகள் அமைந்தன.
முதல்வர் பதவி குறி : மேற்கு வங்கத்தின் முதல்வர் பதவில் அமர
வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே, அவர் இதைச் செய்தார். இந்த
சூழ்நிலையில் தான், தற்போது சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காகவே காத்துக் கொண்டிருந்த மம்தா பானர்ஜி, தீவிரமாக களம் இறங்கி
விட்டார். தொகுதி பங்கீடு, பிரசாரம் என, மம்தாவின் தேர்தல் எக்ஸ்பிரஸ்,
மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது. ஆளும் இடதுசாரி கூட்டணியோ, தடுமாறிக்
கொண்டிருக்கிறது. கடந்த 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும், திடீரென
கிளம்பியுள்ள மம்தா என்ற அரசியல் புயலை சமாளித்து கரை சேர்ந்து விடுவோமா
என, அவர்கள் கவலைப்படுகின்றனர்.தேர்தலில் தோற்றுவிட்டால், இத்தனை
ஆண்டுகளாக கட்டிக் காத்து வந்த பெருமை பறிபோய் விடுமே என்ற பயம்
அவர்களுக்கு உள்ளது. எனவே, மம்தாவை சமாளித்து, எப்படியும் மீண்டும்
ஆட்சியில் அமர்ந்து விடுவது என்ற ஒரே நோக்கத்துடன் தேர்தல் பணிகளை
துவக்கியுள்ளனர். மேற்கு வங்கத்தில், மம்தாவின் அதிரடி அரசியலுக்கு,
சிவப்புக் கோட்டை தாக்குப் பிடிக்குமா என்பது, மே 13ம் தேதி தெரிந்து
விடும்.
அருண் ஜெட்லியை களமிறக்க திட்டம்: மேற்கு வங்கத்தில் பா.ஜ.,
வுக்கு பலமான அடித்தளம் இல்லை. இதனால், தேர்தல்களில் பா.ஜ.,வால் சாதிக்க
முடியவில்லை. இருந்தாலும், இந்த தேர்தலில், மற்ற பிரதான அரசியல்
கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.,
உறுதியாக உள்ளது. இதற்காக, அருண் ஜெட்லியை பிரசார தளபதியாக மேற்கு
வங்கத்துக்கு அனுப்பி வைக்கவும், கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
பீகாரில் கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் தேர்தல் ஒருங்கிணைப்பாளராக
அருண் ஜெட்லி தான் பணியாற்றினார். அந்த தேர்தலில் பா.ஜ., - ஐக்கிய ஜனதா
தளம் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இதை மனதில் வைத்து தான், தற்போது
மேற்கு வங்கத்துக்கும் அருண் ஜெட்லியை, களமிறக்க பா.ஜ., மேலிடம் முடிவு
செய்துள்ளது. பா.ஜ.,வின் அருண் ஜெட்லி "சென்டிமென்ட்' கை கொடுக்குமா
என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மலிவு விலையில் மீன்கள், கோழிகள்: முதல்வர் மம்தா அதிரடி திட்டம்
» முதல்வர் விரும்பினால் அமைச்சர் பதவியை துறக்க தயார்: அழகிரி
» சிங்கூரில் 400 ஏக்கர் திரும்ப அளிக்கப்படும்: முதல்வர் மம்தா பானர்ஜி
» முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சிபு சோரன் : ஜார்க்கண்டில் புதிய அரசு அமைக்குமா காங்கிரஸ்
» மத்திய அமைச்சரவையில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் விலகல்: மம்தா அதிரடி முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum