Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நாட்டை விட்டு வெளியேறுகிறார் கடாபி? லிபியா பரபரப்பு அதிகரிப்பு
Page 1 of 1
நாட்டை விட்டு வெளியேறுகிறார் கடாபி? லிபியா பரபரப்பு அதிகரிப்பு
ராஸ் லுனுப்: தானும், தன் குடும்பத்தினரும் சொத்துக்களுடன் எவ்வித
ஆபத்துமில்லாமல் லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கும்படி,
எதிர்த்தரப்பிடம் கடாபி கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது குறித்த
தீர்மானம் ஒன்றை, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா.,வில் கொண்டு
வந்துள்ளன.
லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜாவியா, மிஸ்ரட்டாவிலும்,
மேற்குப் பகுதியில் உள்ள ராஸ் லுனுப், பிரிகாவிலும் அரசுப் படைகள் மற்றும்
எதிர்ப்புப் படைகளுக்கிடையிலான மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஜாவியா மற்றும் மிஸ்ரட்டா நகரங்களில் வசிப்பவர்களை தற்போது, கடாபி ராணுவம்
சுற்றி வளைத்துள்ளது. இச்சண்டையில், எத்தனை பேர் பலியாயினர் என்பது
தெரியவில்லை. எனினும் கணிசமான அளவு பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கக்
கூடும் என்று அஞ்சப்படுகிறது. இருதரப்பு சண்டையில், கடாபி ராணுவம், போர்
விமானங்களைப் பயன்படுத்தி எதிர்ப்பாளர்கள் மீது குண்டு வீசி தாக்குதல்
நடத்தி வருகிறது. எதிர்ப்பாளர்களிடம் போர் விமானங்கள் எதுவும் இல்லாததால்,
இதுவரை அவர்கள் பிடியில் இருந்த நகரங்கள் கடாபி வசமாகி வருகின்றன. இதனால்
பீதியடைந்துள்ள எதிர்ப்பாளர்கள் விடுத்த அறிக்கையில், "லிபிய விவகாரத்தில்
அன்னிய நாடுகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. எனினும், லிபியா மீது
போர் விமானங்கள் பறக்கத் தடை விதித்தால் அதுவே எங்களுக்கு பெரும் உதவியாக
இருக்கும்' என்று, சர்வதேச கோரிக்கை வைத்தனர்.
ஐ.நா.,வில் குழப்பம்: இதைக் கருத்தில் கொண்டு, பிரிட்டன்
மற்றும் பிரான்ஸ் நாடுகள், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை
செய்யும் தீர்மானம் ஒன்றை தயாரித்துள்ளன. இத்தீர்மானம் நாளை, ஐ.நா.,வில்
விவாதத்திற்கு வரும் எனத் தெரிகிறது. அமெரிக்க எம்.பி.,க்கள் சிலர்,
லிபியாவில் அமெரிக்க ராணுவம் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும்
வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அது சாத்தியமில்லை என்று, அமெரிக்க
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்து
விட்டார். லிபியாவின் மீதான ராணுவ நடவடிக்கை அல்லது போர் விமானம் பறக்கத்
தடை உள்ளிட்டவற்றுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கைகள், லிபியா மீதான அன்னிய படையெடுப்புக்குச் சமம் என்றும் அது
கருதுகிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு "வீட்டோ' அதிகாரம்
உள்ளதால், இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றவிடாமல் அதனால் தடுத்து விட
முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. ஐ.நா.,வைத் தொடர்ந்து ஜப்பானும், தன்
நாட்டில் உள்ள கடாபி சொத்துக்களை முடக்கி, லிபியா மீது பொருளாதாரத் தடைகளை
விதித்துள்ளது.
கடாபி மகன் எச்சரிக்கை: கடாபி மகன்களில் ஒருவரும், முன்னாள்
கால்பந்தாட்ட வீரருமான சாடி கடாபி, நேற்று முன்தினம் அல் அராபியா செய்தி
நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,"கடாபிக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால்,
சோமாலியாவைப் போல லிபியாவிலும் உள்நாட்டுப் போர் மூளும். என் தந்தை, என்
சகோதரரான சயீப் அல் இஸ்லாமிடமும், பிற அமைச்சர்களிடமும் அன்றாடச்
செய்திகள் மற்றும் விலைவாசி பற்றி தன்னிடம் தகவல் தெரிவிக்கும்படி
சொன்னார். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யாததால் தான் இப்போது இந்தளவுக்கு
வந்து விட்டது' என்று தெரிவித்தார்.
வெளியேற கடாபி விருப்பம்? இதற்கிடையில், லிபியாவை விட்டு
வெளியேறுவது குறித்து எதிர்த்தரப்புக்கு கடாபி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தன் தரப்பில் ஒரு பிரதிநிதியை பெங்காசியில் இயங்கி வரும் இடைக்கால
தேசிய கவுன்சில் அரசிடம் அனுப்பி வைத்தார். தானும் தன் குடும்பத்தாரும்
சொத்துக்களுடன் லிபியாவில் இருந்து பத்திரமாக வெளியேற அனுமதியளிக்க
வேண்டும்; எதிர்காலத்தில் தன் மீது எவ்வித வழக்கும் போடக் கூடாது;
இடைக்கால அரசை அங்கீகரிக்கும் விதமாக பார்லிமென்டில் ஒப்பதல்
அளிக்கப்படும் என்ற கோரிக்கைகளை அவர் வைத்துள்ளார். ஆனால், கடாபியின்
கோரிக்கையை ஏற்க எதிர்ப்பாளர்கள் மறுத்து விட்டனர். அவர், அவ்வாறு எளிதாக
லிபியாவை விட்டு வெளியேறினால் அது, இதுவரை பலியானோர் மற்றும்
பாதிக்கப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கூறியுள்ளனர். இடைக்கால
அரசின் ஊடக செய்தித் தொடர்பாளர் முஸ்தபா கெரானி கூறுகையில்,"கடாபியிடம்
இருந்து அதுபோன்ற கோரிக்கை வந்தது உண்மை தான். ஆனால், இன்றைக்கு லிபியா
ரத்தம் சிந்தக் காரணமான அந்த ஆளை நாங்கள் எதற்காக நம்ப வேண்டும்?' என்று
கேள்வி எழுப்பினார். கடாபி தப்பிச் செல்வது குறித்த இத்தகவலை லிபிய அரசு
மறுத்துள்ளது.
"நேட்டோ' கண்காணிப்பு தீவிரம்: * லிபிய வான்வெளி மீதான
24 மணி நேர "வான்வெளி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு' (அவாக்ஸ்) முறையை
"நேட்டோ' அமைப்பு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், நேட்டோ கண்காணிப்பு
விமானங்கள் லிபிய வான்வெளியில் 24 மணி நேரமும், பறக்கும் விமானங்களை
அடையாளம் கண்டறியும்.
* லிபிய எதிர்த்தரப்புக்கு உதவும் பல்வேறு முடிவுகளில்,
அவர்களுக்கு ஆயுதம் வழங்கும் திட்டம் பற்றியும் அமெரிக்கா ஆலோசித்து
வருகிறது. ஆனால், அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி
இதுபற்றி கூறுகையில், "அது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் லிபியா மீது
விதித்துள்ள ஆயுதப் பரிமாற்றத் தடைக்கு எதிரானது' என்று கூறியுள்ளார்.
* அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே
நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கடாபி ஆதரவாளர்கள் அவரை விட்டு விலகி விட
வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள
நேரிடும்' என்று எச்சரித்துள்ளார்.
* கிழக்கு லிபியாவில் செயல்பட்டு வந்த எண்ணெய்
சுத்திகரிப்பு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டதால், பெங்காசி உள்ளிட்ட
பகுதிகளில் விரைவில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு நேரும். அதனால்,
இடைக்கால அரசு இத்தாலியில் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்வது குறித்து
ஆலோசித்து வருகிறது.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» லிபியா எரிந்தால் எரியட்டும் : சரணடைய மாட்டோம் – கடாபி பிடிவாதம்
» சட்டவிரோதமாக நாட்டை விட்டு ஓடிய பசில் ராஜபக்சே!
» மோடி பிரதமராவதால் நாட்டை விட்டு வெளியேறும் நடிகர்
» பி.பி.சி ஊடகவியலாளரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவு!
» உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் ஃபொன்சேகா
» சட்டவிரோதமாக நாட்டை விட்டு ஓடிய பசில் ராஜபக்சே!
» மோடி பிரதமராவதால் நாட்டை விட்டு வெளியேறும் நடிகர்
» பி.பி.சி ஊடகவியலாளரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவு!
» உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் ஃபொன்சேகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum