TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர்.

2 posters

Go down

தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர். Empty தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர்.

Post by ஜனனி Mon Mar 07, 2011 4:57 pm

தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர்.

ஊடகத்துறை வரலாறு அல்லது தொடர்பாடல்துறை வரலாறு என்பது மனித இனத்தின் தோற்றத்தோடு ஆரம்பித்து விட்டது எனலாம்.

தனக்கு கிடைத்த ஒன்றை தனக்கென பதுக்கி வைக்க அல்லது அந்த சொத்திற்கு தானே
சொந்தக்காரன் என உரிமை கொண்டாட பழகிக்கொண்ட மனிதன் தனக்கு கிடைத்த செய்தியை
மட்டும் ஓடிஓடி அறிவித்தான். அந்த மனித பழக்கத்தின் தொடர்ச்சிதான்
ஊடகங்கள் தனக்கு கிடைத்த செய்தியை முந்திக்கொண்டு அறிவிப்பதற்காக இரவு
பகலாக கண்விழித்து காத்திருக்கின்றன.

ஊடகத்துறையின் முதல் வரவான பத்திரிகைதொழிலின் வரலாறு என்பது மனிதன்
ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள எடுத்த நீண்டகால முயற்சியின் வரலாறு என
இலங்கை தமிழ் ஊடகத்துறை வரலாறு என்ற நூலை எழுதியவரும் என்னுடைய ஆசானுமாகிய
இ.சிவகுருநாதன் தன்னுடைய நூலில் தெரிவித்திருக்கிறார்.

தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் பரப்பிக்கொள்ளவும் மனிதன் எடுத்துக்கொண்ட ஒரு நீண்டமுயற்சியின் கதைதான் ஊடகத்துறையாகும்.
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் வரிசையில் அச்சு ஊடகமான பத்திரிகையே
முதலில் தோன்றியதாகும். இந்த வரிசையில் இறுதியாக தோற்றம் பெற்றிருக்கும்
இணையத்தளங்கள் இன்று உலகில் அதிகம் வாசகர்களை கொண்ட ஊடகங்களாக திகழ்ந்து
வருகின்றன. இணையத்தளங்களை பத்திரிகைகளின் மறுபிறப்பு என்று கூறலாம். ஒலி
ஒளி ஊடகங்களுக்கு இணையாக பெரும் வாசகர் பரப்பை இன்று இணையத்தளங்களும்
கொண்டிருக்கின்றன.

பத்திரிகைகள் அல்லது ஒலி ஒளி ஊடகங்களுக்கு இருக்கும் எல்லைகளைப்போல் அன்றி
எல்லைகடந்து உலகெங்கும் உள்ள மக்களின் வீட்டு முற்றத்திற்கு சென்று செய்தி
சொல்லும் ஊடகமாக இன்று இணையத்தளங்கள் வளர்ச்சி பெற்றிருக்கின்றன.

மனித உரிமை பட்டயத்தில் தகவல் அறியும் உரிமை பற்றியும் முக்கியமாக
குறிப்பிடப்படுகிறது. மனிதனுக்கு இருக்கும் உரிமைகளில் முக்கிய உரிமைகளில்
ஒன்று தகவல் அறியும் உரிமையாகும். அந்த உரிமையை வழங்கும் முக்கிய பொறுப்பு
ஊடகங்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழில் வெளிவரும் அல்லது ஆசிய நாடுகளிலிருந்து வெளிவரும்
ஊடகங்களில் பெரும்பாலானவை தகவல் அறியும் மனித உரிமையை சரியாக பேணி
வருகின்றனவா என்றால் இல்லை என்ற பதில்தான் வருகிறது.

தமக்கு சாதகமான தகவல்களை மட்டுமே வெளியிடும் வழக்கத்தை சில ஊடகங்கள்
கொண்டிருக்கின்றன. அரசுகள் மற்றும் அதிகார ஆதிக்கத்தில் உள்ளவர்கள்
தங்களுக்கு சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என
நிர்ப்பந்திக்கின்றன. இதனால் தகவல் அறியும் உரிமையை மனிதன் இழந்து
நிற்கிறான். தமிழர் சமூகம் இந்த பாதிப்பை நிறையவே சந்தித்திருக்கிறது.

கடந்த மூன்று தசாப்தகாலமாக ஊடகத்துறையில் முழுநேரமாக பணியாற்றி வரும்
என்னைப்போன்றவர்கள் சந்தித்த சவால்களும் வேதனைகளும் அதிகம் என்றுதான் சொல்ல
வேண்டும்.
சவால்கள் அச்சுறுத்தல்கள் வந்தாலும் வெளிப்படைத்தன்மையோடு பக்கசார்பின்றி தகவல்களை சொல்வதுதான் பத்திரிகையாளனுக்கு அழகு.

எதையும் வெளிப்படை தன்மையோடு செய்யும் போது எந்த சவால்களையும் வெற்றி கொள்ள
முடியும். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு அல்லது ஊடகங்களுக்கு
வெளிப்படைத்தன்மை என்பது மிக முக்கியமானதாகும்.

முகமூடியை போட்டுக்கொண்டு தகவலை சொல்வதை விட தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு
செய்தியை சொல்லும் போதுதான் மக்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்படுகிறது. அந்த
செய்தி தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய கடமையும் ஏற்படுகிறது. முகமூடியை
போட்டுக்கொண்டு செய்தி சொல்பவர்கள் பொறுப்பு கூறும் கடமையிலிருந்து
தப்பித்து கொள்கிறார்கள்.
எனவேதான் இந்த இணையத்தளத்தை ஆரம்பிக்கும் இவ்வேளையில் நாங்கள் யார் என்பதை
வெளிப்படைத்தன்மையோடு சொல்ல வேண்டியதும் எமது கடமை என்பதை உணர்ந்து
கொள்கிறோம்.

இது தனிமனித முயற்சியல்ல. இலங்கையில் ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவத்தோடு
மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்திருக்கும் ஊடகவியலாளர்கள் தற்போதும்
இலங்கையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் என பலரையும்
இணைத்துக்கொண்டு இந்த முயற்சியை ஆரம்பித்திருக்கிறோம்.

இந்த வேளையில் எம்மை விட்டு பிரிந்து போன என்னுடைய ஊடகத்துறை நண்பர்களான
றிசர்ட்டி சொய்சா முதல் நிமலராசன் நடேசன், சிவராம், லசந்த ஆகியோர் எந்த
இலட்சியத்தோடு பயணித்தார்களோ அதற்காக தினக்கதிர் இணையம் தன்னை
அற்பணித்துக்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த முயற்சிக்கு வாசகர்களாகிய உங்கள் ஆதரவு எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

நன்றி
இரா.துரைரத்தினம்
ஆசிரியர் , தினக்கதிர் இணையம்.
[You must be registered and logged in to see this link.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர். Empty Re: தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர்.

Post by மதன்கார்த்திக் Mon Mar 07, 2011 5:00 pm

தகவலுக்கு நன்றி ஜனனி.. என்னை நாபகம் இருக்கிறதா ? ராஜா
மதன்கார்த்திக்
மதன்கார்த்திக்
உதய நிலா
உதய நிலா

Posts : 5
Join date : 07/03/2011
Location : தமிழ் மடியில்

Back to top Go down

தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர். Empty Re: தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர்.

Post by ஜனனி Mon Mar 07, 2011 5:09 pm

உள்ளது .அய்யா தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர். 28284
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர். Empty Re: தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர்.

Post by மதன்கார்த்திக் Mon Mar 07, 2011 5:12 pm

நன்றி .... ஆச்சரியம்
மதன்கார்த்திக்
மதன்கார்த்திக்
உதய நிலா
உதய நிலா

Posts : 5
Join date : 07/03/2011
Location : தமிழ் மடியில்

Back to top Go down

தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர். Empty Re: தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர்.

Post by ஜனனி Mon Mar 07, 2011 5:14 pm

தங்களின் வரவு நல்வரவு ஆகட்டும் தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர். 155592 தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர். 155592 தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர். 155592
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர். Empty Re: தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் ஊடகத்துறையில் புதிய வரவாக “ நமது முரசொலி“ இன்று யாழில் வெளிவருகின்றது
» கடலின் அடிப் பரப்பில் இதுவரை அறியப்படாத ஆயிரக்கணக்கான மலைகள்: புதிய ஆய்வு
» புதிய தமிழ் ஸ்பெல் செக்கர் - தமிழ் எழுத்துப்பிழை திருத்தி -
»  14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015
» செங்கொடிமீடியா டாட் காம் புதிய இணைய தளம் கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum