TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கேணல் கிட்டு மீதான கைக்குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் தேசியம் வளர்க்கிறார் - திடுக்கிடும் தகவல்கள்.

Go down

கேணல் கிட்டு மீதான கைக்குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் தேசியம் வளர்க்கிறார் - திடுக்கிடும் தகவல்கள். Empty கேணல் கிட்டு மீதான கைக்குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் தேசியம் வளர்க்கிறார் - திடுக்கிடும் தகவல்கள்.

Post by ஜனனி Mon Mar 07, 2011 4:54 pm

கேணல் கிட்டு மீதான கைக்குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் தேசியம் வளர்க்கிறார் - திடுக்கிடும் தகவல்கள்.

யாழ் குடாநாட்டை விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு
காரணமாக இருந்தவரும், அப்போது யாழ். மாவட்டத் தளபதியுமான கேணல் கிட்டு மீது
1987 மார்ச் மாத இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வைத்து கிரனைட்
தாக்குதல் நடாத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே.

அந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற விபரங்களை தற்போது அதில்
நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களே இணையங்களிற்குத் தெரிவித்துள்ளனர்.

இத் தாக்குதல் சிறீலங்காவின் உளவுப்படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகவே
ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் “மே
18 இயக்கம்” என்ற பெயரில் தேசியத்திற்கு எதிராக தீவிரமாக இயங்கிவரும்
காந்தன் என அழைக்கப்படும் ரகுமான் ஜான் மாஸ்ரர் என்பவரின் ஒப்புதல்
வாக்குமூலமாகவே இந்த விடயம் தற்போது வெளிவந்துள்ளது.

இவர் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால உறுப்பினராக இருந்து பின்னர்
விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில்
செயற்பட்டாரயினும், அங்கும் எற்பட்ட பிரிவால் தீப்பொறி என்ற அமைப்பை
உருவாக்குவதில் முக்கிய பங்குவகித்தவரும், அந்த அமைப்பின் சஞ்சிகையான
“உயிர்ப்பு” என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தவர்.

அண்மையில் கனடா, ஐரோப்பா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிற்கு ரகுமான் ஜான்
விஜயங்களை மேற்கொண்டு தேசியம் இனி உயிர்க்கப்போவதில்லை என்றவகையிலான
கருத்தரங்குகளை நடத்தி வந்தார். இதன் போதே இவர்களது கேணல் கிட்டு மீதான
தாக்குதல் தொடர்பான சுய ஒப்புதல் வாக்குமூலத்தையும் வழங்கியுள்ளார்.

குறிப்பாக இந்தத் தாக்குதல் பற்றிய முடிவெடுத்தலில் சம்பந்தப்பட்ட, இந்தத்
தாக்குதலை நன்கு அறிந்திருந்த நபரொருவர் தற்போது கனடாவில் வசித்து
வருவதையும் மேற்படி நபர் ஆரம்பத்தில் புளொட் மற்றும் தீப்பொறி குழுவின்
முக்கிய செயற்பாட்டாளாராக இருந்து ஆனையிறவுத் தாக்குதலின் பின்னர் மீண்டும்
தேசியம் சார்பாக இணைந்து கனடாவில் பணியாற்றிக் கொண்டிருப்பவர் என்ற
தகவலும்

மேற்படி நபர் 2009ம் ஆண்டு கனடாவில் இடம்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மான
வாக்கெடுப்பிலும் முன்நின்று செயற்பட்டவர் என்பதும் இவர்களால் இப்போது
வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களது உள்ளக மோதலின் வெளிப்பாடாக தற்போது வெளிவந்துள்ள இவ்விவகாரத்தின்
பிரகாரம் கிட்டு மீதான தாக்குதல் தீப்பொறி என்ற அமைப்பின் மத்திய குழுவின்
ஒட்டுமொத்த முடிவின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மத்திய குழுவில் தன்னுடன் அப்போது இருந்தவரும் தற்போது கனடாவில்
வதியும் மேற்படி “தேசியம் வளர்க்கும்” நபர் பின்னர் விடுதலைப் புலிகளுடன்
மீண்டும் இணைந்து வேலை செய்த போதும் இந்தக் கைக்குண்டுத் தாக்குதல்
விவகாரத்தை அவர்களிற்குத் தெரியாமலே வைத்திருந்தார் என்று ரகுமான் ஜான்
மாஸ்ரர் பெருமிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை,

அண்மையில் ஐரோப்பா, கனடா ஆகிய இடங்களிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரகுமான்
ஜானே தனது அரசியல் பிரபலதிற்காகவும், அரசியல் லாபங்களிற்காக இதுவரை
தங்களால் மறைக்கப்பட்ட இந்த விவகாரத்தை வெளியே கசிய விட்டுள்ளார் என்ற
குற்றச்சாட்டை அவருடைய தீப்பொறி இயக்க இயக்க முக்கியஸ்தர்கள், கனடாவில்
வதியும் மேற்படி தங்களுடைய தோழர் கூட விடுதலைப் புலிகளுடன் இணைந்து வேலை
செய்து கொண்டிருக்கிற போதும் இதுவரை அவர் மறைத்து வருகின்ற ஒரு செய்தியை
ரகுமான் ஜான் தனது சுய புகழ்ச்சிக்காக அம்பலப்படுத்தியதாகக் கூறி மேற்படி
கனடாத் தேசிய செயற்பாட்டாளருக்குப் அவர்களும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இது குறித்த விவரமான செய்தியையும், விவரமான ஆய்வையும் “மறுஆய்வு” என்ற இணையத்தளம் ஆதாரங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளது.
sankathi
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கேணல் கிட்டு மீதான கைக்குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் தேசியம் வளர்க்கிறார் - திடுக்கிடும் தகவல்கள். Empty Re: கேணல் கிட்டு மீதான கைக்குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் தேசியம் வளர்க்கிறார் - திடுக்கிடும் தகவல்கள்.

Post by ஜனனி Mon Mar 07, 2011 4:55 pm

இங்கு கிட்டு மீதான குண்டுதாக்குதல் தொடர்பாக வெளிவந்த தகவல்கள் அவதானிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. மறுஆய்வு
கேணல் கிட்டு மீதான கைக்குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் தேசியம் வளர்க்கிறார் - திடுக்கிடும் தகவல்கள். Kiddu
கிட்டுவுக்கு குண்டு எறிந்த தீப்பொறியின் அரசியல், தனிநபர் பயங்கரவாதமாகும்
மக்களின் விடுதலை, புரட்சி, மார்க்சியம்.. என்று
கூறிக்கொண்டு உருவான முரண்பாடுகளும், அமைப்பு உடைவுகளும் மீண்டும் ஒருமுறை
எம்மை ஏமாற்றியே வந்துள்ளது. கடந்த 23 வருடத்துக்கு முன் நடந்த ஒரு சம்பவம்
சார்ந்த ஒரு உண்மை, அண்மையில் தான் அம்பலமாகியது. ஆம், அன்று கிட்டுவுக்கு
குண்டெறிந்தது யார் என்ற உண்மையினூடு தான். மார்க்சியம் பேசியபடி, தனிநபர்
பயங்கரவாதத்தில் தீப்பொறி முடங்கிக் கிடந்த உண்மை இன்று அம்பலமாகியுள்ளது.
இதை இவர்கள் வெளிப்படுத்தினார்கள் என்று கூறி, இன்று வகைதொகையற்ற
தாக்குதலை தீப்பொறியின் வாரிசுகள் என்று இன்று கூறுகின்றவர்கள்
தொடங்கியுள்ளார்கள். தீப்பொறியின் மற்றைய முக்கிய உறுப்பினர்களை
வெளியேற்றிய போது, முன்வைத்த விமர்சன ஆவணங்களைக் கூட, வரலாற்றின் முன்
திட்டமிட்டு புதைத்து வைத்துள்ளனர். விமர்சனம், சுயவிமர்சனமற்ற வகையில்
தங்கள் கடந்தகாலத்தை மூடிமறைத்தபடி தான், புதிய அரசியல் மோசடிகளில்
மறுபடியும் ஈடுபடுகின்றது. அது தன்னை மறுபடியும் மே 18 நீட்சியாக
கூறிக்கொண்டு, திடீரென அரசியலில் ஈடுபடுகின்றது. கேசவன் உட்பட சிலர்
புலியால் கொல்லப்பட, முன்னணி தீப்பொறி உறுப்பினர்கள் தீப்பொறியின் தவறான
அரசியலை விமர்சித்து விலகிய நிலையில், மார்க்சியத்தின் பெயரில் புலிக்கு
சிவப்பு கம்பளம் விரித்தது எஞ்சிய தீப்பொறி. இறுதியில் புலியின் ஆள்காட்டி
அமைப்பாக, புலியின் உளவு அமைப்பாக செயல்பட்டு, புலியுடன் சங்கமமாகிய
வரலாற்றில் காணாமல் போனது. இன்றும் தாம் தான் தொடர்ந்து தீப்பொறியின்
இன்றைய வாரிசுகள் என்று கூறிக்கொண்டு, மே18 நீட்சியாக தன்னை வெளிப்படுத்தி
வருகின்றது.
இந்த தீப்பொறி வாரிசுகள் என்று மார்புதட்டும் இந்தக் கூட்டம், அன்று
கிட்டுவுக்கு குண்டு எறிந்த அரசியல் எந்த வகைப்பட்டது என்பதே, இங்கு இதில்
குறிப்பாக பேசும் பொருளாகின்றது. மறுபடியும் இந்தக் கூட்டம் தனிநபர்
பயங்கரவாத அரசியலைக் கொண்டு தான், மே 18யின் அரசியல் நீட்சியாக தன்னை
அடையாளப்படுத்திக் கொண்டு, ஒரு சதிக் குழுவாக தன்னை முன்னிறுத்தி
வருகின்றது.
வரலாற்றில் கிட்டுவுக்கு குண்டு வீசிய சம்பவத்தை, புலியின் உள்ளான வழமையான சம்பவங்களில் ஒன்றாகவே நாமும் கூட கருதி வந்தோம்.
மிக அண்மையில் தான், இது தீப்பொறி நடத்திய தனிநபர் பயங்கரவாதம், என்ற
தகவல் வெளியாகியுள்ளது. இதை இன்று அரசியல்ரீதியாக விமர்சனத்துக்கு உள்ளாக்க
வேண்டியுள்ளது. மீண்டும் குண்டுகளை இலங்கையில் வெடிக்க வைக்கும், இரகசிய
சதி அரசியல் தான் பல தரப்பின் அரசியல் தெரிவாக இன்றும் உள்ளது.
இடதுசாரியம், மார்க்சியத்தின் பெயரிலும் கூட இதுதான் இன்று தெரிவாகின்றது.
அன்று புளட்டுக்கு எதிரான மக்கள் அரசியலுடனும், மக்களுக்கு எதிரான இயக்க
அரசியலையும் எதிர்த்துதான், புளட்டில் இருந்து உருவானது இந்தத் தீப்பொறி.
இந்த தீப்பொறி தன்னை ஒரு அமைப்பாக தக்கவைக்க, என்.எல்.எவ்.ரியின் நிதி
மற்றும் உதவிகள் முக்கியமான பங்காற்றியது. இப்படி உருவான அமைப்பு,
கிட்டுக்கு குண்டெறிந்த நிகழ்வு அதன் அரசியல் வங்குரோத்தைக் எடுத்துக்
காட்டுகின்றது.
நாம் இதுவரை காலமும், கிட்டுக்கு
குண்டு எறிந்ததை புலிகளின் உள் விளையாட்டாக கருதி கருத்து உரைத்து
வந்திருக்கின்றோம். நாங்கள் மட்டுமல்ல, புலிகள் கூட அப்படித்தான் கருதி
வந்தனர்.
புலியின் முரண்பட்ட குழுவில் ஒன்று இதை செய்ததாகவே,
அவர்களுக்குள்ளும் கூட கருதினர். அதிகார மோதல்களும், சதிகளும் புலியின்
உள்ளார்ந்த விதியாக இருந்தது. புலிகள் இயக்கத்தில் இதுபோன்ற முறைகள் மூலம்
தான், முரண்பாட்டை களைவதும், தலைமையை தக்கவைப்பதும் ஒரு இயக்க
நடைமுறையாகவும் இருந்தது.
புலிகளின் உள்ளான நிகழ்வுகள் இப்படி அணுகப்பட்ட நிலையில், வெளியில்
உள்ளவர்கள் இப்படித்தான் இந்நிகழ்வையும் பார்த்தனர். கிட்டுவுக்கு குண்டு
வீசிய பிற்பாடு, ஒரு மாதம் கழிந்த நிலையில் புலிகள் என்னைக் கடத்திச்
சென்றனர். சித்திரவதைகளின் இடையில் என்னை மிரட்டி அடிபணிய வைக்க
“கிட்டுக்கு குண்டு எறிய ஏலுமாடா” என்று கேட்டும் மாத்தையா என்னைத்
தாக்கினான். இது நடந்து சிறிதுகாலத்தின் பின், கிட்டுவுக்கு கீழ் இருந்த
ஐவர் குழுவை தங்கள் பொறுப்பை விட்டு விலகுமாறு பிரபா-மாத்தையா குழு
நிர்ப்பந்தித்தது. அவர்கள் ராஐpனாமா செய்த அன்று, எனது வதைமுகாமில் அது
கொண்டாடப்பட்டு, விசேட விருந்தும் வைக்கப்பட்டது.
அன்று கிட்டுவிற்கு எதிராக, பிரபா-மாத்தையாவும் தங்கள் தலைமையை
தக்கவைக்கும் போராட்டத்தை புலிக்குள் நடத்தினர். இந்த நிலையில்
தீப்பொறிதான் இதை செய்தது என்ற தகவல், தற்போது வெளியாகியுள்ளது.
இதை தீப்பொறி அமைப்புத்தான் செய்தது. அதன் மத்தியகுழுவில் யார் இதை
முன்வைத்தது, யார் இதை எதிர்த்தனர் என்ற விபரங்களும், என்ன நடந்தது என்ற
விபரங்களும் இன்னும் வெளியாகவில்லை. இது இந்தக் கட்டுரையில்
முக்கியமானதல்ல. தீப்பொறியின் மத்தியகுழு முழுக்க எந்த முரண்பாடும் இன்றி,
எந்த எதிர்ப்பும் முரண்பாடுகளுமின்றி இது நடக்கவில்லை. இந்த முரண்பாடுகள்
தான், தொடர்ந்து உமாமகேஸ்வரனை கொல்லும் முடிவையும் தடுத்தது. இது போன்ற
அரசியல் மற்றும் நடவடிக்கைதான், தீப்பொறியின் மத்தியகுழுவைச் சேர்ந்த பலர்
விலகக் காரணமாகும். இதைச் செய்த தீப்பொறியின் மத்தியகுழு உறுப்பினர்கள்,
எந்த சுயவிமர்சனமுமின்றி தொடரும் அரசியல் தொடர்ந்தும் தனிநபர்
பயங்கரவாதத்தின் அரசியல் ஊற்றாக உள்ளது. இந்த வகையில் இந்த முடிவை
முன்னின்று எடுத்தவர்கள் யார் என்பது தெரிந்து கொள்ளவேண்டிய தேவையும் இன்று
எம்முன்னுள்ளது.
நாம் இங்கு விவாதிப்பது கிட்டுக்கு குண்டெறிந்த அரசியல் எது என்பதுதான்?
கிட்டுக்கு குண்டெறிய முடியாதா எனின் முடியும், ஆனால் அதை தீப்பொறி
செய்யமுடியாது. தீப்பொறி செய்தால் அது தனிநபர் பயங்கரவாதமாகும். ஏன்?
புலியில் இருந்து புளட் உருவான போது, புலியின் எந்த அரசியலை எந்த
நடவடிக்கையை தவறு என்று சொல்லி வெளிவந்தனரோ, அதையே மறுபடியும் புளட்
செய்யத் தொடங்கியது. இதனால் புலியில் இருந்து விலகிய பெரும்பான்மை
உறுப்பினர், புளட்டில் இருந்து விலகினர். இதை முன்கூட்டியே உணர்ந்த சிலர்,
புளட்டுடன் சேரவில்லை. அதே பழைய புலி அரசியல் தான், மறுபடியும் புளட்
அரசியலாகியது.
இதே போல் புளட்டில் இருந்து விலகிய தீப்பொறியும், புளட்டின், புலியின்
அதே தனிநபர் பயங்கரவாத அரசியலை முன்னெடுத்தது, கிட்டுவின் மேலான கொலை
முயற்சி எடுத்துக் காட்டுகின்றது. இந்த அடிப்படையில் தான், தன்னை ஒரு
இரகசிய அமைப்பாக மாற்றியிருந்தது என்பது தெளிவாகின்றது. இக்காலத்தில்
யாழ்பல்கலைக்கழக மாணவர் போராட்டம் முதல் பல வெகுஜனப் போராட்டங்களுடன் தன்னை
இணைக்க முன்வராத தன்மை, அதன் தனிநபர் பயங்கரவாதம் மூலம் வெளிப்படுகின்றது.
என்.எல்.எவ்.ரி போன்ற அமைப்புக்களுடன் கூட உறவை துண்டித்து தன்னை
தனிமைப்படுத்திக்கொண்டது, ஏன் என்பது இன்று புலனாகின்றது. தனிநபர்
பயங்கரவாத செயலை செய்த, ஒரு இரகசிய சதிக் குழுவாக அது இருந்தது இன்று
புலனாகின்றது.
இதன் அரசியல்ரீதியான வரலாற்று வேர் எங்கிருந்து உருவாகின்றது என்று
பார்ப்போம்? தீப்பொறி வெளியேற்றம் எப்படி நடந்தது என்ற அடிப்படை, இதற்கு
பதில் சொல்லுகின்றது. புளட் அமைப்பில் பகிரங்கமான ஒரு போராட்டத்தின் ஊடாக
தீப்பொறி வெளியேற்றம் நடக்கவில்லை. அமைப்பின் நிர்வாகங்களில் தலைமைகளில்
இருந்;தவர்கள், தங்கள் சரியான கருத்துகளுடன் தம்மை சுற்றிய இரகசிய
சதிக்குழுவாக இயங்கினர். இப்படியே தப்பியோடியவர்கள், தங்கள் கடந்தகால
நடைமுறையை விமர்சனத்துக்குள்ளாக்கவில்லை. அதேபாணியில் மீண்டும் தம்மை
தனிமைப்படுத்தியபடி, இயங்கத் தொடங்கினர். தனிநபர்களை அழிப்பதன் மூலம் சூழலை
மாற்றமுடியும் என்று கருதியே, கிட்டுவுக்கு குண்டு எறிந்தது. உமாமகேஸ்வரனை
கொல்லத் திட்டம் தீட்டியது என்பன. வேறு யார் யாரென, யாம் அறியோம்! இங்கு
கிட்டுவுக்கு குண்டெறிந்ததன் மூலம், பிரபா-மாத்தையாவின் தேவை
பூர்த்தியாகியது. இது என்ன அரசியல் ரீதியான தனிநபர் பயங்கரவாதம் சார்ந்த
யுத்த தந்திரம்!
தீப்பொறி வெளியேற முன் அவர்கள் இருந்த புளட் எப்படிப்பட்டதாக இருந்தது?
புளட் தன் மக்கள் விரோத செயல்கள் மூலம், சுரண்டும் வர்க்கத்தினதும் சமூக
ஒடுக்குமுறைகளை பாதுகாக்கும் ஒரு அமைப்பாக தனது நடைமுறையில்
வெளிப்படுத்தியது. இதை மூடிமறைக்க மார்க்சியம் உதவியது. இதுதான் பொதுவான
அரசியல் வெளிப்படையாக இருந்தது.
இந்த நிலையில் இதற்கு எதிரான போக்குகள், அமைப்பின் உள் காணப்பட்டது.
அதிருப்திகள் பல வடிவில் வெளிப்பட்டது. இதை ஒரு வெளிப்படையான போராட்டமாக
அரசியல்ரீதியாக வளர்த்தெடுக்கவில்லை. எதிர்மறையில் இது ஒரு சதிக் குழுவாக,
இரகசியமான குழு நடவடிக்கையாக அது மாறியது. பரந்த தளத்தில் காணப்பட்ட
எதிர்ப்பு, ஒருங்கிணைந்த ஒரு போராட்டமாக மாறவில்லை. அதை தடுத்த நிறுத்தும்
போக்கு, தீப்பொறியில் இருந்து வெளியேறியவர்களிள் அரசியல் வழிமுறையாகவும்
கூட இருந்தது. இதனால் பலர் உதிரியாக வெளியேறி வந்தனர். இப்படி
வெளியேறியவர்கள், சுயாதீனமாகவே மக்களின் போராட்டங்களில் ஈடுபடத்தொடங்கினர்.
உண்மையில் தளத்தில் இருந்து இந்தியப் பயற்சி முகாம் வரை காணப்பட்ட
பொதுவான அதிருப்தியும், மக்கள் அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தை
ஒருங்கிணைக்காமல் உதிரியான செயலாக, இரகசிய சதி குழு நடவடிக்கையாக மாறியது.
இதில் வேடிக்கை என்னவென்றால் பொதுவான அரசியல் குமுறலை வெளிப்படாதவாறு
தடுத்தவர்கள், தீப்பொறியாக பின்னால் (பார்க்க- புதியதோர் உலகம் என்ற நாவலை)
வெளியேறியவர்கள்தான். இதனால் தான் பலர் உதிரியாக வெளியேறினர்.
தீப்பொறியைச் சோந்தவர்கள் அமைப்புகளின் பொறுப்புகளிலும் பதவிகளிலும் இருந்த
காலத்தில், மக்கள் விடுதலைக்கு எதிராகச் செல்வதாக கூறி போராடிய பலர்,
புளட்டின் சிறைகளிலும் சித்திரவதைகளிலும் சிக்கி கொல்லப்பட்டுக்கொண்டு
இருந்தனர்.
இப்படி பொறுப்புகளில் பதவிகளில் இருந்தவர்கள் தம்மை நோக்கி இது வருவதைக்
கண்டவுடன், முற்றாக தம்மை இரகசிய குழுவாக்கிகொண்டு திடீரென்று தப்பி
ஓடினர். ஆம் அப்போது என்.எல்.எவ்.ரி. பல வழியில் தப்பியவர்களுக்கு உதவியது.
உதிரியாக சிதறாது, முரண்பாடுகளில் நொருங்காது ஒரு அமைப்பாக மாற
என்.எல்.எவ்.ரி. தான் பலவிதத்தில் உதவியது.
அன்றைய சூழல் சார்ந்து தலைமறைவுக் குழுவாக தீப்பொறி மாறிய போது,
இவர்களுக்கு முன்னும் பின்னும் வெளியேறிய பல குழுக்கள் பகிரங்கமாகவும்
இரகசியமாகவும் இயங்கத் தொடங்கியது. அவை தீப்பொறியுடன் தம்மை
அடையாளப்படுத்தவில்லை. அதற்கான எந்த அரசியல் அடிப்படையையும், அவர்கள்
விட்டுச்செல்லவில்லை. தீப்பொறியில் இருந்தவர்களின் கடந்தகால செயல்பாடு,
இவர்களுக்கு முன் அனுபவமாக இருந்தது. மறுபக்;கத்தில் தீப்பொறி புளட்டுக்கு
தலைமறைவாக இருக்கவேண்டிய சூழல், அவர்களின் தனிநபர் பயங்கரவாத அரசியலை
மூடிமறைத்தது.
புளட்டை புலி அழிக்கத் தொடங்கிய காலத்தில், தீப்பொறி புளட்டுக்கு அஞ்சி
தலைமறைவு முடிவுக்கு வந்தது. ஆனால் தீப்பொறி மக்கள் முன் இயங்க
முன்வரவில்லை. குறிப்பாக இயக்கங்களுக்கு எதிரான தன்னெழுச்சியான மக்கள்
போராட்டங்கள் முதல் யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர்ச்சியாக
நடந்த காலம் அது. இதன்போது கூட தீப்பொறி தன்னை வெளிப்படுத்தவில்லை. மக்கள்
திரள் அமைப்பு வேலையில் தன்னை ஈடுபடுத்த முன்வரவில்லை. இதற்கு தலைமை
தாங்கிய பல்வேறு சக்திகளுடன் இணைந்து போராடி, நடைமுறையூடாக ஐக்கியத்தைக்
கட்டவில்லை.
உண்மையில் புளட்டில் இருந்து விலகிய குழுக்கள், உதிரிகள் போராட்டத்தில்
முன்னின்ற போது, தீப்பொறி தன்னை மக்கள் முன் வெளிப்படுத்தியிருக்கவில்லை.
இப்படி எந்த வகையிலும் புளட்டில் இருந்து விலகி மக்களுடன் சேர்ந்து
பகிரங்கமாக போராடியவர்களுடன் கூட இணைவதற்கான, மக்கள் திரள் அரசியல் மூலம்
தீப்பொறி தன்னை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இது புளட்டின் உள்
முரண்பாட்டின் போது எப்படி தீப்பொறி நடந்ததோ, அதேபோல் இரகசிய குழுவாக தன்னை
ஒழுங்கமைத்து தலைமறைவானது. வெகுஜனங்களை அணிதிரட்டும் அரசியல் வேலையை அது
செய்யவில்லை. இந்தக் குழுதான் கிட்டுவுக்கு குண்டு எறிந்திருக்கின்றது.
மறுபக்கத்தில் இந்தத் தீப்பொறி, மக்கள் மத்தியில் வேலை செய்த
என்.எல்.எவ்.ரி.யுடன் இணைவுக்கு பதில் விலகிச்சென்றது. நெருக்கடி தணிந்த
காலத்தில், அது முற்றாகவே தலைமறைவுக் குழுவானது. என்.எல்.எவ்.ரி. யின்
தொடர்பைக் கூட அது கொண்டு இருக்;கவில்லை. பொதுவாக என்.எல்.எவ்.ரி. போன்ற
எந்தக் குழுவுடனும் கூட, தன்னை இணைத்து வெளிப்படுத்தவில்லை. இந்தக்
குழுதான் குண்டு எறிந்திருக்கின்றது என்ற செய்தி, அதன் அன்றைய அரசியலை
இன்று மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
கிட்டுவுக்கு குண்டெறிய முடியும், ஆனால் யாரால்? மக்கள் மத்தியில்
அரசியலை முன்வைத்து வேலை செய்பவர்கள் மட்டும்தான் அதை செய்ய முடியும்.
அன்று எதிர்ப்புரட்சி அரசியல் படுகொலையாக மாறிய நிலையில், தற்காப்பு முதல்
எதிர்த்தாக்குதல் வரை செய்வது அவசியமாக இருந்தது. அதை தனிநபர்
பயங்கரவாதத்தில் இருந்து, வேறுபடுத்துவது மக்கள் திரளைக் கட்டும் அதன்
நடைமுறைதானே ஒழிய மார்க்சியம் பேசும் தகுதியல்ல. நடைமுறை ரீதியாக
1. மக்கள் திரள் அமைப்பைக் கட்டும் அரசியல் வேலையை செய்த வண்ணம் இருக்கவேண்டும்.
2. அப்படிச் செய்பவர்களுடன் ஐக்கியத்தை உருவாக்குவதன் மூலம், இதை முன்னெடுக்கவேண்டும்.
3. மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை ஆதரித்தும், அதற்கு தலைமை
தாங்குபவர்களுடன் இணைந்தும், தலைமையை தாங்கள் கொடுத்தும் பயணிக்கவேண்டும்.
இப்படி இல்லாத வரை, மார்க்சியம் பேசினாலும் அது தனிநபர் பயங்கரவாதம்
தான்;. ஆம் பழைய இயக்க அரசியலின் தொடர்ச்சிதான். தனிநபர்களை அழிப்பதன்
மூலம், பயங்கரவாத செயல்கள் மூலம், மக்கள் புரட்சி வரும் என்று கூறுகின்ற
பித்தலாட்டம்;. மார்க்;சியத்தை பேசுவதன் மூலம், தனிநபர் பயங்கரவாதத்தை
மக்கள் புரட்சியாக காட்டி அதை மக்களுக்கு அணிவித்து விடமுடியாது.
பி.இரயாகரன்
01.03.2011
23 வருடங்களுக்கு முன்னர் கேணல் கிட்டு மீது நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதல் தொடர்பாக கட்டுடைக்கப்பட்ட ஆரம்பகட்ட தகவல்கள்:

இவை தேசம். நெற்றில் இருந்து தொகுக்கப்பட்டவை
தமிழீழ விடுதலை இயக்கமும் அதன் தலைமையும் படுகொலை செய்யப்பட்டு
ஓராண்டுக்கு உள்ளாக 1987 மார்ச் இறுதிப்பகுதியில் கேணல் கிட்டு மீது
கிரனைட் தாக்குதல் நடாத்தப்பட்டது. இத்தாகுதல் தொடர்பாக கடுமையான
விசாரணைகள் சோதணைகள் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போதும் தாக்குதலை
நடத்தியவர்கள் யார் என்பதோ தாக்குதல் நடத்திய அமைப்பு எது என்பதோ கடந்த
ஆண்டு வரை பொதுத்தளத்திற்கு வரவில்லை. ‘தேசத்துரோகி ஒருவனால்’ தளபதி
கிட்டுவின் இடதுகால் இழக்கப்பட்டதாக புலிகளின் ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன.
கிட்டு மீதான இத்தாக்குதல் பற்றிய முதலாவது பதிவு வன்னி யுத்தத்தின்
இறுதியில் முதற்தடவையாகக் கசிய விடப்பட்டது. தேசம்நெற் இணையத்தில்
சுப்பிரமணியம் ரவிச்சந்திரன் என்ற பெயரில் இப்பதிவு மேற்கொள்ளப்பட்டு
இருந்தது. இணையங்களின் கருத்துப் பதிவு அப்பெயருடையவரால்
மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவது இலகுவானதல்ல. அதே பதிவு
இன்னும் சில இணையங்களிலும் அதே திகதியில் பெரும்பாலும் ஒரு மணி
நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அது கீழேதேசம்நெற் – Subramaniam Ravichandran on May 21, 2009 1:33
amபின்னர் கிட்டுவை கிரனைட் வீசி புலியை சேர்ந்தவர்களே கொல்ல முயன்ற போது
காலை இழக்க நேரிட்டது என்று பலரும் ஒரு நம்ப முடியாத கதையை சொன்னார்கள்.
இது பின்னர் மாத்தையாதான் செய்ததாக சிலர் சொன்னார்கள். இப்போது அரசாங்கம்
கொல்லப்பட்ட சார்லஸ் அந்தோனி என்று பிரசுரித்த படம் கிட்டு மாதிரி
இருக்கிறான் என்று பலரும் சொல்வதை தயவு செய்து நம்ப வேண்டாம். பிரபாகரன்
நிழலை கூட இராணுவம் நெருங்க முடியாது -நம்புங்கள் நாளை தமிழ் ஈழம்
பிறக்கும்.
நிதர்சனம்.நெற் – சுப்ரமணியம் ரவிச்சந்திரன் May 21st, 2009 at 1:56
இலக்கு.கொம் – சுப்ரமணியம் ரவிச்சந்திரன் 21 May 2009 at 01:57
அதிரடி.கொம் – சுப்ரமணியம் ரவிச்சந்திரன் May 21st, 2009 at 2:06 am
முழக்கம்.கொம் – Subramaniam Ravichandran 21 May 2009 at 2:58
இதனைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ள சுப்பிரமணியம் ரவிச்சந்திரன்
என்பவர் இளங்கோ என அறியப்பட்டவர். கனடாவில் வாழ்பவர். தமிழீழ விடுதலைப்
புலிகளில் இருந்து வெளியேறி தீப்பொறிக் குழுவின் தொடர்ச்சியான தமிழீழ
மக்கள் கட்சியில் முக்கிய பொறுப்பாளர். தமிழீழ விடுதலைப் புலிகளின்
ஆனையிறவுத் தாக்குதலின் பின் மீண்டும் தாயகம் திரும்பி தமிழீழ விடுதலைப்
புலிகளுடன் இணைந்து பணியாற்றியவர். பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மான
வாக்கெடுப்பிலும் முன்நின்று செயற்பட்டவர்.
அதன் பின்னர் கிட்டு மீது கிரனைட் தாக்குதல் மேற்கொண்டது தொடர்பான தகவல்
அதிரடி.கொம் இல் வெளியானது. பிரேம்நசீர் என்பவர் முஸ்லீம்களின் படுகொலைகள்
தொடர்பான நினைவுக் கட்டுரையில் வருமாறு எழுதி இருந்தார்.
அதிரடி.கொம் பிரேம்நசீர் Aug 3rd, 2009 at 19:11 pm ”காத்தான்குடியில்
முஸ்லிம்களை புலிகள் கொன்றது ஒரு வரலாற்று தவறுதான். அனால் அதற்கு முன்னரே
தளபதி கிட்டுமீது கிரேநைட் வீசியது திருகோணமலை முஸ்லிம்தானே (ஜான்
மாஸ்டர்)
. முஸ்லிம்கள்தான் முதலில் புலிகளை ஆத்திரப்படுத்தியது மட்டுமல்ல தளபதிகளையும் கொல்ல முயற்சித்தது.
”அதற்குப் பின் டிசம்பர் 31ல் தேசம்நெற் இணையத்தில் ரகு என்பவர் வருமாறு கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
ரகு Dec 31, 2010 1:38 AM”கிட்டு
மீது ரகுமான் ஜான் கிறநைட் வீசியதால் அருணா நாவலர் வீதியில் உள்ள கந்தன்
கருணையில் நூற்றுகணக்கான போராளிகள் படுகொலை செய்யப்படவும். கிட்டு மீதான
கொலை முயற்சி மாத்தையா மீது சந்தேகத்தை வரப்பண்ணி அந்த சந்தேகம் பூதாகரமாக
வளர்ந்து மாத்தையாவின் கீழ் விடுதலைக்காக போரிட வந்த நூற்றுக்கணக்கான
போராளிகளை பிரபாகரன் கொல்லவும். வழி சமைத்தது.

”இவ்விரு கருத்துப்
பதிவுகளிலும் கிட்டுவின் கால் முறித்தமை புலிகள் முஸ்லீம்களைக்
கொல்வதற்கும் மாற்று இயக்கப் போராளிகளைக் கொல்வதற்கும் சொந்த இயக்கத்தின்
போராளிகளைக் கொல்வதற்கும் காரணம் எனக் கூறப்பட்டு உள்ளது. இவை புலிகளின்
கொலைகளுக்கு நியாயம் கற்பிக்கவும் முற்பட்டு உள்ளன.மேலும் ரகு டிசம்பர் 31
2010ல் பதிவு செய்த பின்னூட்டத்தில் வருமாறு, ”தீப்பொறியில் இருந்த 1986
இல் வெளியேறிய கண்ணாடி சந்திரனுக்கு (தயாபரன்) இயக்க இரகசியங்கள் அதிகம்
தெரிந்ததால் அவரை கொல்ல வேண்டும் என்று தீப்பொறிக்குள் ரகுமான் ஜான்
தீர்மானம் கொண்டுவந்தது ஏன் ?” கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் கண்ணாடிச்
சந்திரனின் பின்னணியில் பல தகவல்களையும் ரகு வெளிப்படுத்தி உள்ளார்.
பிரேம்நசீர் என்ற பெயரிலும் ரகு என்ற பெயரிலும் பதிவு செய்யப்பட்ட கிட்டு
மீதான கிரனைட் தாக்குதலும். ரகு கண்ணாடிச் சந்திரனின் பின்னணியில் பதிவு
செய்யும் தகவல்கள் திட்டமிட்டு உண்மைகளைத் திரிபுபடுத்துவதாகவும் அமைகிறது.
தற்போது கனடாவில் வாழும் கண்ணாடிச் சந்திரன் தீப்பொறியை விட்டு வெளியெறிய
பின்னரே கிட்டுமீதான கைக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதனால்
அத்தாக்குதல் தொடர்பான விபரங்கள் எதுவும் கண்ணாடிச் சந்திரனுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தீப்பொறி குழுவைச் சேர்ந்த கிட்டு மீதான
கைக்குண்டுத் தாக்குதலை அறிந்திருந்த கனடாவில் வாழும் கண்ணாடிச்
சந்திரனின் நண்பர், நேசன் (திருஞரனசம்பந்தர் சிவநேசன்) மூலமாக இதனை அறிந்துள்ளார்.
இக்கண்ணாடிச் சந்திரனின் பின்னணியில் உண்மைகள் திரிபுபடுத்தப்படுகிறது.
கண்ணாடிச் சந்திரன் தீப்பொறியை விட்டு வெளியெறியதற்கு நியாயம் கற்பிக்கும்
வகையில் கிட்டுவின் கால் முறித்தமை புலிகள் முஸ்லீம்களைக் கொல்வதற்கும்
மாற்று இயக்கப் போராளிகளைக் கொல்வதற்கும் சொந்த இயக்கத்தின் போராளிகளைக்
கொல்வதற்கும் காரணமாக அமைந்தது என்று நியாயம் கற்பிக்க
முயற்சிக்கப்படுகிறது. மேலும் ரகு தனது பதிவில் ”கிட்டு மீது கிறநைட் வீசிய
ரகுமான் ஜான் ஏன் உமாவை கொல்லாது புளட்டில் இருந்து வெளியேறினார்?”
என்றும் கேள்வி எழுப்பினார். இவ்வாறு பல குற்றச்சாட்டுகளை கண்ணாடிச்
சந்திரனின் பின்னணியில் ரகு மேற்கொண்டு உள்ளார்.
ரகு on December 31, 2010 5:22 pm
ஜெயபாலன்!அசோக் கண்ணமுத்து எப்போ மத்திய கமிட்டிக்குள் சேர்ந்தார் எனபது
அவருக்கே தெரியும் அஷோக்கையே கேட்டு பாருங்கள். அசோக் எப்ப மத்திய
கமிட்டிக்குள் போனார் என்பதெலாம் இப்போ அவ்வளவு முக்கியமான விடயங்கள் அல்ல.
வதிரி (கல்முனையில் கடை வைத்திருந்த) சதீஸ், யோகன் கண்ணமுத்து போன்றவர்கள்
மத்திய கமிட்டிக்குள் கொண்டு வரப்படாமல் நீண்ட காலம் இருந்தததட்கு காரணம்
இவர்களின் நடத்தைகளே!!. இவர்களின் நடத்தைகள் பற்றி கொழும்பில் இருக்கும்
கல்லுவம் (காந்தீயம்) சதானந்தனிடம் கேட்டால் நிறைய தெரிய வரும்!!
ஜெயபாலன்! நீங்கள் ரகுமான் ஜானிடம் கேட்பதாக இருந்தால் பின்வரும் இரண்டு முக்கிய விடயங்கள் பற்றி கேட்க மறக்க வேண்டாம்
(1) புளட்டில் நடந்த படுகொலைகளுக்காக புளட்டை விட்டு வெளியேறி தீப்பொறியை
ஆரம்பித்த ரகுமான் ஜான் தீப்பொறியில் இருந்த 1986 இல் வெளியேறிய கண்ணாடி
சந்திரனுக்கு இயக்க இரகசியங்கள் அதிகம் தெரிந்ததால் அவரை கொல்ல வேண்டும்
என்று தீப்பொறிக்குள் ரகுமான் ஜான் தீர்மானம் கொண்டுவந்தது ஏன் ?
(2) கிட்டு மீது ரகுமான் ஜான்
கிறநைட் வீசியதால் அருணா நாவலர் வீதியில் உள்ள கந்தன் கருணையில்
நூற்றுகணக்கான போராளிகள் படுகொலை செய்யப்படவும். கிட்டு மீதான கொலை முயற்சி
மாத்தையா மீது சந்தேகத்தை வரப்பண்ணி அந்த சந்தேகம் பூதாகரமாக வளர்ந்து
மாத்தையாவின் கீழ் விடுதலைக்காக போரிட வந்த நூற்றுக்கணக்கான போராளிகளை
பிரபாகரன் கொல்லவும். வழி சமைத்தது.கிட்டு மீது கிறநைட் வீசியதை பற்றி
ரகுமான் ஜான் என்ன நிலைப்பாட்டில் இப்போது இருக்கிறார்?கிட்டு மீது கிறநைட்
வீசிய ரகுமான் ஜான் ஏன் உமாவை கொல்லாது புளட்டில் இருந்து வெளியேறினார்?

LTTE- PLOT- தீப்பொறி – தமிழீழ
மக்கள் கட்சி- மே 18 இயக்கம் ஆகியவற்றின் உறுப்பினரான ரகுமான் ஜான் மாஸ்ரர்
அல்லது காந்தன் என்று அறியப்பட்டவரின் கிட்டு மீதான குண்டுத்தாக்குதலின்
ஒப்புதல் வாக்குமூலம்:

கேணல் கிட்டு மீதான கைக்குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் தேசியம் வளர்க்கிறார் - திடுக்கிடும் தகவல்கள். Rahuman_jan_01
நான் நேசனை நோக்கி பின்வரும் கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன்.
1. கேசவனை (சொந்தப்பெயர் சூசப்பிள்ளை நோபட்–புதியதோர் உலகம் ஆசிரியர்
கோவிந்தன்) யாழ்பாணம் அனுப்புவது என்பது தீப்பொறியின் மத்தியகுழு எடுத்த
முடிவு என்ற வகையில் அந்த குழுவில் இடம்பெற்ற அத்தனை பேருமே அந்த
முடிவுக்கு கூட்டாக பொறுப்பானவர்கள். ஆனால் இந்த முடிவுக்கு இட்டுச்
செல்லும் வகையில் அமைப்பினுள் அதீதமாக நெருக்குதல்களை கொடுத்தவர்
என்றவகையில் உங்களது பங்கு அதிகமானது. கூட்டுப் பொறுப்பு என்றவகையில், நாம்
ஒருபோதும் உங்களை அப்படி விமர்சித்தது கிடையாது. இப்போது பொறுப்புகளை
பங்கு போடவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அன்று நீங்கள் மண்ணுக்கும்,
தோழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு தலைமை கொழும்பில் சொகுசாக இருப்பதாக
(வாசகர்கள் கவனிக்க இது 1990 மேயில் எமது தோழர்களான தர்மலிங்கம்,
சண்முகநாதன் ஆகியோர் பிடிபட்டு, மிஞ்சியவர்கள் கொழும்பிற்கு தப்பிவந்து
சேர்ந்த பின்பு, 1991 முற்பகுதியில் நேசன் கூறிய கூற்றுக்கள்)
குற்றஞ்சாட்டி சர்ச்சைகளை அமைப்பினுள் தொடர்ந்து ஏற்படுத்தி, கேசவனை
யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவது என்ற முடிவை குழு எடுத்ததில் பிரதான
பாத்திரம் வகித்தது குறித்து என்ன சொல்ல முனைகிறீர்கள்?
2. இதனைவிட இன்னும் இரண்டு குறிப்பான விடயங்கள் தொடர்பாக நீங்கள்
விசமத்தனமாக பிரச்சாரங்களில் ஈடுபடுவது எனக்குத் தெரியும். முதலாவது,
கேசவனுடைய கைது தொடர்பானது. தோழர் கேசவனை நானே புலிகளுக்கு காட்டிக்
கொடுத்ததாக நீங்கள் விசமப்பிரச்சாரம் செய்து வருகிறீர்கள் என்பதை என்னால்
நிரூபிக்க முடியும். எங்கே நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான
ஆதாரங்களை முன்வையுங்கள் பார்க்கலாம். வாசகர்கள் அவற்றை பரிசீலித்து தாமாக
முடிவுகளை மேற்கொள்ளட்டுமே.
3. இரண்டாவது, நான் புலிகளின் உளவாளியாகவே கழகத்தினுள் நுழைந்ததாகவும்,
அங்கே பிரச்சனைகளை உருவாக்கி கழகத்தை சீரழிப்பதே எனது நோக்கமாக
இருந்ததாகவும், இந்த நோக்கில் சந்ததியார் போன்ற நல்ல தோழர்களது இழப்பிற்கு
காரணமாக அமைந்ததாகவும் ஒரு கதையை உலாவ விட்டு வருகிறீர்கள் என்பதற்கான
ஆதாரம் என்னிடம் உள்ளது. எங்கே உங்களது குற்றச்சாட்டுகளை நிரூபியுங்கள்
பார்க்கலாம்!
4. கிட்டுவுக்கு கல்லெறிந்தது
பற்றிய பிரச்சனையும் தீப்பொறி அமைப்பின் மத்தியகுழு எடுத்த முடிவு. அந்த
குழுவில் நீங்களும் அங்கத்துவம் வகித்தீர்கள். அவ்வாறே அந்த நடவடிக்கையில்
நாமிருவருமே நேரடியாக பங்குபற்றவில்லை. ஆகவே இந்த சம்பவத்தில் எமது இருவரது
பாத்திரங்களும் சமமானதாகவே இருந்தது. தாக்குதலில் நேரடியாக கலந்துகொண்ட
சிலர் பின்னர் புலிகளினால் வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட நிலையில்
கொல்லப்பட்டார்கள். இன்னும் சிலர் உயிருடன் இருக்கிறார்கள். புலிகளால் கைது
செய்யப்பட்ட தர்மலிங்கமோ, சண்முகநாதனோ மிக மோசமான சித்திரவதைகளை
அனுபவித்தபோதிலும் இறுதிவரை இந்த விடயம் தொடர்பாக மூச்சுக்கூட விடவில்லை.

அவ்வாறே பின்னர் கைதான கேசவனும்
கூட அத்தனை சித்திரவதைகளையும் மீறி இது தொடர்பாக எதுவுமே கூறவில்லை.
கேசவனிடம் கவிஞர் புதுவை இரத்தினதுரை நேரில் சென்று, தலைவருடன் நேரில்
பேசிவிட்டு புலிகள் அமைப்புடன் சேர்ந்து வேலைசெய்யும் படியும்,
இல்லாவிட்டால் அநியாயமாக இறக்க நேரும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால்
இப்படிப்பட்ட நிலைமைகளிலுங்கூட இந்த தோழர்கள் தமது உயிர்களை தியாகம்
செய்தார்களே அன்றி யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை.அன்று அவர்கள்
வாய்திறந்திருந்தால் இன்று நீங்களும் நானும் உயிருடனேயே இருந்திருக்க
மாட்டோம். அந்தவகையில் நாம் இன்று வாழும் இந்த வாழ்க்கையானது அந்த
தியாகிகள் போட்ட பிச்சைதான்.

அவர்கள் தமது மரணத்தின்
தருவாயிலுங்கூட, புலிகளிடம் தோற்காமல் அமைப்பு இரகசியங்களை
பாதுகாத்தார்கள். எல்லாம் ஏன், நீங்கள் அடிக்கடி குற்றஞ்சாட்டும் இளங்கோ
கூட பின்னர் புலிகளுடன் சேர்ந்து வேலை செய்த காலத்தில் கூட இந்த தகவல்
புலிகளுக்கு இறுதிவரை தெரியாமலேயே இருந்தது.இப்போது இந்த இரகசியத்தை
பகிரங்கப்படுத்தி பலருக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துவதுடன், அந்த
செயற்பாட்டில் உங்களுக்கு உள்ள முக்கிய பங்கை அப்படியே மறைத்துவிட்டு எனது
பெயரில் போடுவதை எவ்வாறு உங்களால் நியாயப்படுத்த முடிகிறது. நீங்கள்
புலிகளுக்கு என்னை காட்டி கொடுத்துள்ளதாக நான் பகிரங்கமாகவே
குற்றஞ்சாட்டுகிறேன். எங்கே உங்களிடம் நியாயம் இருந்தால் அதனை
முன்வையுங்கள் பார்க்கலாம்.

நன்றி: தேசம். நெற்
புளொட் -தீப்பொறி – தமிழீழ மக்கள்
கட்சி -ஆகியவற்றின் உறுப்பினராக இருந்த தற்போது கனடாவில் இருக்கும்
நேசனின் வாக்குமூலம்Sad கிட்டுவுக்கு குண்டு எறிந்த சம்பவத்துடன்
தொடர்புபட்ட தகவல் மட்டும்)

நேசன் பற்றி:
“நேசனுடன் இப்படியாக ஒரு பகிரங்க அரங்கில் விவாதிக்க வேண்டும் என்று
நான் நீண்ட நாட்களாக விரும்பியதுண்டு” என ரகுமான்ஜான்
கூறுகிறார்.ரகுமான்ஜான் அவதூறுகளை அடுக்கி வைத்துவிட்டு, உண்மைக்கு
புறம்பான விடயங்களை அடுக்கி வைத்து விட்டு, ஊகங்களை அடுக்கி வைத்து விட்டு,
தனது கற்பனைகளை அடுக்கி வைத்து விட்டு என்னுடன் விவாதிக்க வேண்டும்
என்கிறார். இவை விவாதத்துக்கு உரிய விடயங்கள் அல்ல என்ற போதும்
ரகுமான்ஜானின் அவதூறுகளுக்கு பதில் சொல்கின்றேன்.”தீப்பொறி அமைப்பினுள்
நாம் இவரது கருத்துக்களை வேண்டுமென்றே நிராகரித்து வந்தததாக ஒரு குறைபாட்டை
முன்பு தீப்பொறி அமைப்பில் இருந்த போது கூறி வந்தவர் நேசன்” என்று
ரகுமான்ஜான் எழுதுகிறார்.இந்த ஒன்றுதான் – இந்த ஒன்று மட்டும்தான் –
ரகுமான்ஜான் என்னை பற்றி எழுதியிருக்கும் உண்மை. மற்ற அனைத்தும்
ரகுமான்ஜானின் கற்பனைகளில் உதித்த அவதூறுகளே.நாம் தீப்பொறி குழுவாக
செயற்படத் தொடங்கிய காலத்தில் இருந்து இரண்டே இரண்டு விடயங்களில்
மட்டும்தான் செயற்குழுவில் செயற்குழுவினருடன் முரண்பட்டு விவாதிக்காமல்
மௌனமாக எனது சம்மதத்தை தெரிவித்திருந்தேன்.
(1) உமாமகேஸ்வரனை கொல்வதற்கான ரகுமான்ஜானின் முன்மொழிவு. இதற்கு
பொறுப்பாக கண்ணாடி சந்திரன் தலைமையில் இந்தியாவுக்கு சிலரை அனுப்புவது.
இதற்கு செயற்குழுவில் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த முடிவின்
பின் குறுகிய காலத்துக்குள் கண்ணாடி சந்திரன் தீப்பொறியை விட்டு வெளியேறி
விட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. (இது பற்றி மிகவும் விபரமாக எனது
புளட் தீப்பொறி அனுபவத் தொகுப்பில் விபரமாக கூறவுள்ளேன்)
(2) கண்ணாடி சந்திரன் தீப்பொறியை விட்டு விலகிய பின், கண்ணாடி சந்திரன்
தீப்பொறி இரகசியங்களை வெளியில் சொன்னால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது
பற்றிய செயற்குழு கூட்டத்திலும் நான் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
(இது பற்றியும் மிகவும் விபரமாக எனது புளட் தீப்பொறி அனுபவத் தொகுப்பில்
விபரமாக கூறவுள்ளேன்)இந்த இரண்டு விடயங்களையும் தவிர, அரசியல் மற்றும்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» யேர்மனியில் நடைபெற்ற கேணல்.கிட்டு மற்றும் வீரத்தமிழன் முத்துக்குமாரனின் வீரவணக்க நிகழ்வு
»  கேணல் கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகளின் 19ம் ஆண்டு நினைவேந்தல் !
» அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் சவூதி அரச குடும்பம்: திடுக்கிடும் தகவல்!
» இந்தியர்கள் மீதான தாக்குதலில் இனப்பாகுபாடு உள்ளது: ஆஸ்திரேலிய அமைச்சர் ஒப்புதல்
» புலம்பெயர் அமைப்புகள் மீதான இலங்கை அரசின் தடைக்கு கனடாவில் சட்ட வலிமையில்லை! - வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயர்ட் அறிவிப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum