TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பழமொழி விளக்கங்கள்

4 posters

Go down

பழமொழி விளக்கங்கள் Empty பழமொழி விளக்கங்கள்

Post by Tamil Thu Feb 24, 2011 1:10 pm

சில பழமொழிகளும் விளக்கங்களும்

சில பழமொழிகளும் விளக்கங்களும்



மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது?
மழை எப்போது பெய்யும், கருவுற்ற பெண் எப்போது பிரசவிப்பாள் என்று தெரியாது அதற்காக இப்பழமொழி.

அடைத்த கதவு திறக்காத மழை
கோடை காலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்
ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும்
கார்த்திகை மாதம் கனமழை பெய்யும்
ஒரு நாள் முழுவம் தொடந்தது பெய்யும் மழையை அடைமழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்கிறனர்.

அந்தி மழை அழுதாலும் விடாது!
கோடை காலத்தில் அந்தி நேரத்தில் மழை பிடித்தால் நாள் முழுவதும் மழை பெய்யும் அதற்கு கூறிய மொழி தான் அந்தி மழை அழுதாலம் விடாது.

தவளைகள் போடும் சத்தத்தை தவளை, உடைக்கட்டா... தவக்கட்டா...
என்று மழை கூறுவதாகக் கற்பனை செய்து கூறுகின்றார்கள். அதாவது வயல்
வரப்புகள் எல்லாம் உடைத்துவிடும் அளவோடு மழை பெய்யப் போகிறது என்று தவளை
ஆளுடம் சொல்வதாகக் கூறுகிறார்கள்.

மழை முகம் பாராத பயிரும்; தாய் முகம் பாராத பிள்ளையும் ஒன்று என்று கூறுகிறது ஒரு பழமொழி.


கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்சானம்
அடுத்தவன் பொருளை எடுத்து மற்றவருக்கு தருவது தானம் ஆகாது. இந்த கருத்தை தான் இப்பழமொழி உனர்த்துகிறது.

அரச மரத்தை சுற்றி வருவதற்குள் அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாளாம்
குழந்தைபாக்கியம்
இல்லாதவர்கள் தினமும் அரச மரத்தைச்சுற்றி வந்தால் குழந்தைபேறு உண்டாகும்
என்பது ஒரு நம்பிக்கை இந்த பழமொழி கூறுவது அவசரம் பற்றியே மரத்தை சுற்றிக்
கொண்டே வரும்போது அடிவயிறு பெருத்துவிடுமா என்ன? கரு உருவாக வேண்டும்
மாதங்கள் சில போக வேண்டும் அல்லவா.


இருட்டு வீட்டுக்குப் போனாளும் திருட்டு கை நிக்காது
மனிதன் தன் செயலைமாற்றிக் கொள்வது கடினம்.இயல்பாய் அமைந்து விட்ட சுபாவம் எளிதில் மாறாது மறையாது.

கிழிஞ்ச சேலையும் புழுங்கரிசி திண்ண வாயும் சும்மா இருக்காது
சேலை
பழசாகி விட்டால் கிழிந்து கொன்டே இருக்கும் நின்றால்,உட்கார்ந்தால் கூட
கிழியும். சிலர் புழுங்கல் அரிசியை சதா வாயில் அடக்கி மெல்லுவார்கள்.இந்த
பழக்கத்தால் அவர்கள் வாய் சதா அசை போட்டுகொண்டே இருக்கும்.


சும்மா இருந்த வாய்க்கு கொஞ்சம் அவல் கிடைத்த மாதிரி
சாதாரணமாகவே (வாய் சதா அசை) பிறர் பற்றி பொல்லாங்கு பேசும் ஒருவனுக்கு அவனை பற்றி செய்தி கிடைத்துவிட்டால் கேட்கவா வேண்டும்?

பந்திக்கு முந்து படைக்கு பிந்து
சாப்பிடுவதற்று
நம் கை (வலது கை) முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில் (போர் புரியும்
நேரம்) இடக்கையில் வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை
எய்வார்கள். எவ்வளவு தூரம் கை பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு
அம்பு வேகமாக செல்லும் இதுவே பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும்
என்கிறார்கள்.


ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
பழங்கால
சித்த மற்றும் நாட்டு மருத்துவத்தில் மூலிகை, சில பூக்கள், காய், விதை
போன்றவற்றை போல சில மூலிகை (மருத்துவ குணம் கொண்ட) வேர்களும் முக்கிய
பங்கு வகித்தன. அதன் பொருட்டே ஒரு வைத்தியன் அவனிடம் ஆயிரம் மருத்துவ
வேர்களை வைத்திருந்தாலும், தெரிந்து வைத்திருந்தாலும் அவன் அரை
வைத்தியகாரன் தான் என்று சொன்னார்கள்
.


யாணைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்
வலிமை யானவனுக்கு ஒரு நேரம் வந்தால் எளிமையானவனுக்கும் ஒரு நேரம் வரும் என்பதே இதன் பொருள்.

கைப் புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு
கைபுண்
அல்ல"கைப்பூண்"அணியக்கூடிய ஆபரணம்,அதாவது கழுத்தில் அணியும் ஆபரணத்தைப்
பார்க்க கண்ணாடி அவசியம்.ஆனால் கையில் அணியும் பரணத்தைப் பார்க்க கண்ணாடி
தேவையில்லை நம் பக்கத்திலிருக்கும் மனிதனைத் தெரிந்துகொள்ள அல்லது
புரிந்துகொள்ள மூன்றாவது மனிதன்க் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதே இதன்
உட்கருத்து.


கப்பலே கவிந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
கப்பல்
கவிழ்ந்து நீ ஏழையாகி விட்டாலும் அதற்க்காக மனம் நொந்து கன்னத்தில் கை
வைத்து உட்கார்ந்துவிட்டால் போன பணமும், செல்வமும் திரும்பவா
வந்துவிடும்.இது ஒரு கருத்து.மற்றொறு கருத்து. கன்னம் என்பதுமுகத்தில்
உள்ள கன்னம் அல்ல."கன்னக்கோல்" கப்பல் கடலில் முழ்கி பல லட்சங்கள் நஷ்டம்
ஏற்பட்டாலும் நீ மீண்டும் உழைத்து சம்பாதிக்க வேண்டுமே தவிர, கன்னக்கோல்
வைத்து திருடி பிழைக்கக் கூடாது. "கன்னக்கோல்"-அந்தக் காலத்தில்
திருடர்கள் கன்னக்கோலைப் பயன்படுத்தி சுவற்றில் ஒட்டை போட்டு
திருடுவார்கள்.


ஆட தெரியாதவனுக்கு தெரு கோணலாம்
நமது இயலாமைக்கு அல்லது தோல்விக்கு எதாவது ஒரு காரணம் கூறி தப்பிப்பதையே இப்பழமொழி விளக்குகிறது.

ஆறு வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி

தாயும் பிள்ளை என்றாலும் வாயும் வயிறும் வேறு தான்


தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை


அடியாது மாடு படியாது


எண்ணெய் தடவிக்கிட்டு குப்புறப்படுத்தாலும் ஒட்டுற மண் தான் ஒட்டும்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

பழமொழி விளக்கங்கள் Empty Re: பழமொழி விளக்கங்கள்

Post by Tamil Wed May 29, 2013 9:38 pm

மிகவும் அருமை.
இதை தயை கூர்ந்து தொடர்ந்து எழுதுங்கள்.
குறிப்பாக, காலத்தால் வடிவம் மாறிப்போன பழமொழிகளைச் சொன்னால் இன்னும் சிறப்பாக
இருக்கும்.
உதாரணத்திற்கு,

மூலம் : ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன்
சிதைவு : ஆயிரம் பேரைக் கொன்னவன் அரை வைத்தியன்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது

இங்கே பொன் என்றால் தங்கம் அல்ல. வெள்ளி கிரகம். அதை வெண்பொன் என்று
சொல்கிறார்கள். இங்கே புதன் என்பது புதன் கிழமை அல்ல. புதன் கிரகம்.
ஆங்கிலத்தில் ஜூபிடர்.

வெள்ளி கிரகத்தைக் கூட பார்த்து விடலாமாம். ஆனால், புதன் கிரகத்தை அவ்வளவு
எளிதில் காண முடியாதாம்.

போகப் போக பல சொலவடைகளை விளக்கிச் சொன்னால் கூட மிக மிக நன்றாக
இருக்கும்(வெள்ளிடை மலை, ஏழாம் பொருத்தம், இது மாதிரி)

அன்புடன்,
நிரஞ்சன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

பழமொழி விளக்கங்கள் Empty Re: பழமொழி விளக்கங்கள்

Post by Tamil Wed May 29, 2013 9:38 pm

001. பழமொழி: கிழவியும் காதம், குதிரையும் காதம்.
பொருள்: கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை
முடித்தது.

விளக்கம்: கிழவி எப்படி குதிரைபோல் வேகமாகப் போகமுடியும்? பழமொழியை
விவரித்தால் ஒரு கதை தெரிகிறது: அவன் தன் பூஜை-வழிபாடுகளை விரைவில்
முடித்துக்கொண்து குதிரையில் ஏறி வானுலகம் அடைந்தபோது, தன் வழக்கப்படி
மெதுவாகப் பொறுமையுடன் பூஜை-வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்த கிழவியையும்
அங்குக் கண்டு வியப்படைந்தான். கதை அவ்வையார்-சேரமான் பற்றியது என்பதைச்
சொல்லவும் வேண்டுமோ?

*****

002. பழமொழி: குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!
பொருள்: குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப்
படைக்கவில்லை.

விளக்கம்: குதிரையின் போக்கு அதன் மனப்போக்கு. இதனால்தான் குதிரைக்குக்
கடிவாளம் போடுவது. தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும் சொல் (’தம்பிரா
னடிமைத் திறத்து’--பெரிய புராணம், இளையான்குடி 1). சுந்தரமூர்த்தி நாயனாருக்கு
தம்பிரான் தோழர் என்று ஒரு பெயர் உண்டு. தவிர, தம்பிரான் என்பது சைவ மடத்
தலவர்களைக்குறிக்கும் பட்டம்.

*****

003. பழமொழி: சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால்
பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்.

பொருள்: கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்;
மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக
இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.

விளக்கம்: சுவாமியையும் சாணியையும் சேர்த்துச் சொன்னது, பசுஞ்சாணியால்
பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது. இந்த வழக்கம் முன்னாட்களில்
சிற்றூர்களிலும், இப்போதுகூட சில வழிபாடுகளிலும் கடைப்பிடக்கப்படுவாதத்
தெரிகிறது.

மருந்து என்றது வெடிமருந்தைக் குறிப்பது; பாணம் என்றால் வாணவேடிக்கைகளில்
பயன்படும் ராக்கெட் வாணம்: ’பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு.நகர.24). வானம்
என்றது உலந்த விதைகளைக் குறிக்கிறது.

*****

004. பழமொழி: தெய்வம் காட்டும், ஊட்டுமா?
பொருள்: தெய்வம் வழிகாட்டும், ஆனால் அந்த வழியில் நாம் தானே போகவேண்டும்?
தெய்வமே என்கையைப் பிடித்துக்கூட்டிச் செல்லவேண்டுமென்றால் எப்படி?

விளக்கம்: இதனால்தான் தெய்வத்தைத் தாய் என்பதைவிட தந்தை என்னும் வழக்கம்
அதிகம் உள்ளதோ? இதனை ஒத்த ஆங்கிலப் பழமொழிகளும் உண்டு:
"God helps those who help themselves."
"God gives every bird its food, but does not throw it into the next."

*****

005. பழமொழி: இல்லது வாராது, உள்ளது போகாது.
பொருள்: நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை
அனுபவிக்கும்வரை நீங்காது.

விளக்கம்: இதைவிட எளிய சொற்களில் கர்மபலன் விதியைச் சொல்ல முடிய்மோ? முற்பகல்
தாண்டியதும் பிற்பகல் வருவது தவிர்க்க இயலாதது போலத்தான் முற்பகல் செய்தது
பிற்பகல் விளைவதும்.

*****
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

பழமொழி விளக்கங்கள் Empty Re: பழமொழி விளக்கங்கள்

Post by ஜனனி Thu May 30, 2013 8:00 am

பழமொழி விளக்கங்கள் 471843 பழமொழி விளக்கங்கள் 471843 பழமொழி விளக்கங்கள் 471843
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

பழமொழி விளக்கங்கள் Empty Re: பழமொழி விளக்கங்கள்

Post by logu Sun Jul 07, 2013 7:42 am


பழமொழி விளக்கங்கள் %2525C2%2525AA%2525C2%2525B4%2525C2%2525AE%2525C3%25258A%2525C2%2525B4%2525C2%2525BF%2525C2%252595%2525C2%2525B3%2525C3%25258D_thumb%25255B5%25255D

1. ஜாடிக்கேத்த மூடி.
ஒரே குணம் கொண்ட இரு நண்பர்களையோ அல்லது கணவன் மனைவியையோ இந்த பழமொழியை வைத்து கூறுவார்கள். அதாவது மிக பொருத்தமாக ஒருவர் ஜாடி போன்றும் மற்றொருவர் மூடி போன்றும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
2. ஏழைக்கேத்த எள்ளுருண்டை.
ஏழைகள் விலையுயர்ந்த சாப்பாடு சாப்பிட முடியாது. கஞ்சியோ கூழோ எது கிடைத்தாலும் அதை மன நிறைவுடன் சாப்பிடுவார்கள். சாப்பிடும்போது இந்த பழமொழியைக் கூறிக்கொண்டே திருப்தியாக சாப்பிடுவார்கள்.
3. சோம்பல் இல்லாத் தொழில், சோதனை இல்லாத் துணை.
கண்டிப்பாக நமக்கு வாழ்கையில் துணை என்றால் அது நாம் செய்யும் தொழில் அல்லது வேலைதான். அதில் சோம்பேறித்தனமா இருந்தால் வாழ்வே நமக்கு சோதனைதான்.
4. நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
ஒரு பொருளின் அருமை, அது நமக்கு கிடைக்காமல் ஏங்கும்போதுதான் தெரியும்.
5. நொய் அரிசி கொதிக்குத் தாங்காது.
இளகிய மனம் கொண்டவர்களை லேசாக திட்டினால் கூட அழுதுவிடுவார்கள். அவர்களைப் பற்றிய பழமொழிதான் இது.
6. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
ஒரு சிறு கதை:
எங்கள் ஊரில் ஒருவனுக்கு இரு மனைவிகள். முதல் மனைவிக்கு தன் கணவன் இன்னொரு பெண்ணை வைத்திருப்பது தெரியவர வீட்டில் தினமும் சண்டைதான். இரண்டாவது மனைவியை விட முதல் மனைவிதான் மிகவும் அழகு மற்றும் நல்லவள். ஆனால் அடிக்கடி சண்டை நடப்பதால் கோபத்தில் முதல் மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொன்றுவிட்டான்.
இதனை தன் பெற்றோர்களிடம் கூறினான். அவர்கள் இவ்வாறாக கூறினர்.
“ஒன்னு, நீ இந்த ஊர விட்டுட்டு கண் காணாத இடத்திற்கு ஓடிடு. இல்லை அவள மாதிரியே நீயும் செத்திடு. இல்லன்னா போலீஸ் எங்கள நிம்மதியா வாழவிடாது”
இதனைக் கேட்டதும் தன் பெற்றோர்களின் மீது ஆத்திரம் கொண்டு வாழ பிடிக்காமல் விஷம் சாப்பிட்டு இறந்தான். அவனது இரண்டாவது மனைவி இப்போது தனியாக தவிக்கிறாள். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை இவன் விஷயத்தில் நன்கு உணரலாம்.
7. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்
பொய் மட்டும் அல்ல. ஒரு கெட்ட செயலை செய்ய ஆரம்பித்தால் மேலும் பல கெட்ட செயல்களை செய்ய ஆரம்பித்துவிடுவோம்.
8. ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை
எப்போதாவது அபூர்வமாக செய்வதை இப்படிக் குறிப்பிடலாம். உதாரணம்: “இவன் ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருகிறான்.”
9. பிஞ்சு வத்தினா புளி ஆகாது
புளியங்காய் பழுத்து அதனை காயவைத்து கொட்டை எடுத்தால்தான் அது புளி. பிஞ்சை பறித்து அதிலிருந்து புளி எடுக்க முடியாது. அதுபோல, பிள்ளைகளை புளியாக மாற்றவேண்டுமென்றால் பெற்றோர்கள் அவர்களை பிஞ்சிலே வத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
10.தடிக்கும் நோகாம பாம்புக்கும் வலிக்காம
அதாவது யாராவது நமக்கு பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என்றால், நமக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் அவருக்கும் மனம் வலிக்காமல் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கவேண்டும்.
11.பாம்புன்னும் மிதிக்க முடியாம பழுதுன்னும் தாண்ட முடியாம
ஒரு சிலர் இருப்பார்கள். அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்றே தெரியாது. அவர்களை ஒரு பிரச்சினையில் எப்படி அனுகுவது மற்றும் கையாள்வது என்று தெரியாது. அந்த சமயத்தில் இந்த பழமொழி அவர்களைக் குறிக்கும். அதாவது அவர்களை பாம்பு என நினைத்து மிதித்து கொல்லவும் முடியாது. பழுதென்று நினைத்து தாண்டவும் முடியாது.
12.பட்டாதான் தெரியும் பல்லிக்கு சுட்டாதான் தெரியும் நண்டுக்கு.
பல்லி நம் மேல் வந்து விழுவது, சாப்பாட்டில் விழுவது போன்ற பல ஐசாட்டியங்களைச் செய்யும். அது தவறு என்று அதனால் உணர முடியாது. நாம் அதனை அடிக்கும்போதுதான் உணரும். நண்டை நாம் சுட்டுத் திங்கும்போதுதான் அது புரிந்துகொள்ளும் வலையை விட்டு வெளியே வருவதால் வரும் ஆபத்தை.
அதுபோல, ஒருசிலருக்கு அவர்களது தவறை உணரமுடியாத அளவுக்கு மூளை மழுங்கியிருக்கும். அவர்கள் தவற்றின் விளைவுகளை அனுபவித்தால்தான் திருந்துவார்கள்.
13.உண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்யாதே.
"உப்பிட்டவரை உள்ளளவும் நினை" என்பார்கள். அதுபோல நமக்கு ஆபத்தில் உதவியவர்கள் மற்றும் பசிக்கு சோறு போட்டவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது.
14.வாழப் பழத்தில் ஊசி ஏத்துவது போல்
சிலர் பேசுவது நம்மை திட்டுவது போல் இருக்கும். ஆனால், மற்றவர்களுக்கு அவர்கள் சாதாரணமாக பேசுவதுபோல்தான் தெரியும். நமக்குதான் தெரியும் அவர்கள் பேசுவதில் எவ்வளவு சூழ்ச்சிமம் இருக்கிறது என்று. ஏன் என்னை திட்டுகிறீர்கள் என்று கேட்கவும் முடியாது. ஏனென்றால் அவர்கள் பேசுவது மறைமுகமாக இருக்கும். இப்படியாக எப்போது பார்த்தாலும் சாதாரணமாக பேசுவதுபோல் பேசி நம்மை அசிங்கப்படுத்துபவர்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் பேசுகிறார்கள் என்போம்.
15.கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
பிரச்சினைகளுக்கான சூழ்நிலையை (கெட்ட நண்பர்கள், கெட்ட பழக்கங்கள்) சுமந்து கொண்டிருந்தால், நம்மைத்தேடி பிரச்சினைகள் வந்துகொண்டுதான் இருக்கும். அவற்றை தூக்கிபோடுங்கள். ஒரு பிரச்சினையும் நம்மை அணுகாது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

பழமொழி விளக்கங்கள் Empty Re: பழமொழி விளக்கங்கள்

Post by logu Sun Jul 07, 2013 7:43 am

1. சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை.
நமக்காக எது சரி எது தவறு என்ற அறிவு இருக்கவேண்டும். அல்லது பெரியவர்கள் கூறுவதையாவது கடைபிடிக்கவேண்டும். இரண்டையுமே செய்யாமல் அறிவுக்கெட்டதனமாக நடந்துகொண்டால் நம்மை இப்படித்தான் திட்டுவார்கள்.
2. உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
அடிக்கடி உறவினர்களைச் சென்று பார்த்துக் கொண்டிருந்தால்தான் அவர்களுக்கும் நமக்கும் ஒரு பிணைப்பிருக்கும். இல்லையென்றால், ஒரு சுப நிகழ்வுகளுக்குக் கூட நம்மை அழைக்க மறந்துவிடுவார்கள். அல்லது இப்படியும் கூறலாம். ஒரு சுப நிகழ்வுக்கு நம்மை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அழைத்தார்கள். ஆனால் நாம் போகவில்லையென்றால் அவர்களுக்கும் நமக்குமான உறவு துண்டிக்கப்படும்.
அதுபோல, கடனைக் கொடுத்தவர்கள் வாங்கியவர்களிடம் அடிக்கடி கேட்டால்தான் அவர்களுக்கும் திருப்பித் தரவேண்டும் என்று எண்ணம் வரும். இல்லையென்றால் நம்மை ஏமாற்றத்தான் முயல்வார்கள்.
3. கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
ஒருவன் தனது அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்துகொண்டு, கடன் தொந்தரவு இல்லாமல் வாழ்ந்தால் அவன்தான் உலகத்திலேயே மகிழ்வாக வாழும் மனிதன்.
4. காலம் போகும், வார்த்தை நிற்கும்.
நாம் பேசும் வார்த்தைகளை ஒரு முறைக்கு பல முறை யோசித்துப் பேசவேண்டும். ஒருவரின் மனதை புண்படுத்துமாறு பேசினால், என்னதான் அவர் நம்மை மன்னித்தாலும், நாம் பேசியது அவர் மனதில் ஆரா வடுவாக இருக்கும்.
5. சர்க்கரை என்றால் தித்திக்குமா?
வாழ்க்கைக்கு எப்படி வாழவேண்டும் என்று கனவு கண்டால் மட்டும் போதாது. அந்த கனவை அடைய கடினமாக உழைக்கவேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும்.
6. சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
மேற்கண்ட பழமொழியின் வேறொரு வடிவம்தான் இது. வெறும் கனவு காண்பதால் மட்டும் வாழ்கையில் வெற்றி பெற முடியாது.
7. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அமிக்கும்.
தண்ணீர், பச்சை தண்ணீராக இருந்தாலும் சுடுநீராக இருந்தாலும் அதனை நெருப்பின் மீது ஊற்றினால் நெருப்பு அமிந்துபோகும். அதுபோல, ஒருவரின் திறன் எந்த சூழ்நிலையிலும் குறைவதில்லை.
8. துணை போனாலும் பிணை போகாதே.
ஒருவருக்கு துணையாக அவரை ஊக்குவிக்கலாமே தவிர, அவருக்கு பதிலாக நாம் எதையும் செய்யக் கூடாது. உதாரணத்திற்கு, சிலர் தங்கள் நண்பன் வாங்கிய கடனுக்காக பொறுப்பு கையெழுத்துப் போட்டுவிட்டு நண்பன் அந்த கடனைத் திருப்பி செலுத்தமுடியவில்லையென்றால், தாங்களே அதனை அடைக்கும் சூழ்நிலைக்கு வந்து அல்லல் படுவதைப் பார்த்திருக்கிறோம்.
9. நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
அதாவது “பேய்க்கு வாக்கப்பட்டா புளிய மரத்துல தொங்கிதானே ஆகவேண்டும்!” என்பதற்கு இணையான பழமொழி. நாம் செய்த வினைக்கான பயனை அடைந்துதான் ஆகவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றாற்போன்றும் சில காரியங்களை செய்துதான் தீரவேண்டும்.
10.நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
பணக்காரர்கள் தாம் தூம் என்று செலவு செய்வார்கள். எவ்வளவு நாளைக்கு? எல்லாம் அந்த பணம் உள்ளவரை மட்டும்தான். சிலர், தங்கள் அருகில் நண்பர்கள் பக்கபலமாக இருந்தால், ஒரு பிரச்சினை வரும்போது தங்கள் மேலே தவறு இருந்தாலும் கூட, நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக மிகவும் அதிகமாக பேசி தங்களது வீரத்தை நிரூபிக்க முயல்வார்கள். அதுவே அவர்கள் தனியாக இருந்தால், பயந்துபோய் ஓடிவிடுவார்கள்.
11.அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு?” என்பதற்கு இணையான பழமொழி. அதாவது “வெள்ளம் வரும் முன் அணை போடுக” மற்றும் “வருமுன் காப்பதே நலம்” என்னும் பழமொழிகளின் கருத்தைக் கடைபிடிக்கவேண்டும்.
12.மான் என்று சொன்னால் புள்ளியா குறைந்துவிடும்?
ஒரு செயலை செய்ய முயல்வதால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால், அதனை செய்யத் தொடங்கும் முன்பே அது முடியாது, அதனால் நஷ்டம் வரும் என்று கூறுவது தவறு.
13.கத்தரிக்காய் முத்தினால் கடைதெருவுக்கு வந்துதானே ஆகனும்.
அதாவது, எந்த ஒரு விசயத்தையும் நீண்ட நாளைக்கு மறைத்து வைக்க முடியாது. எப்பேற்பட்ட ரகசியமாக இருந்தாலும் ஒருநாள் அது வெளிப்பட்டுவிடும்.
14.புளி மலையில விளைந்தாலும் உரலில் குத்து பட்டுதானே ஆகவேண்டும்.
புளியை கொட்டையை எடுக்க உரலில் போட்டு குத்துவர்கள். மலையில் விளைந்தாலும் இதற்கு தப்ப முடியாது. அதுபோல, என்னதான் பெரிய பணக்காரனாக இருந்தாலும் மனிதர்களுக்கான வேதனைகள், சோதனைகள் மற்றும் சிரமங்களை அனுபவித்துதான் தீரவேண்டும்.
15.அங்கிட்டும் இருப்பான் இங்கிட்டும் இருப்பான், ஆக்கர சோத்துல பங்கும் கேப்பான்.
சிலர் பச்சோந்திபோல் அனைவரிடமும் அவரவர்களுக்கு ஏற்றாற்போன்று பேசிக்கொண்டு அவர்களது குடியைக் கெடுப்பார்கள். அவர்களைப் பற்றிய பழமொழிதான் இது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

பழமொழி விளக்கங்கள் Empty Re: பழமொழி விளக்கங்கள்

Post by logu Sun Jul 07, 2013 7:43 am

1. ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்து வந்தவ நெல்லு குத்துராளாம்.
தன் மனைவியை பதறடித்துவிட்டு புதிதாக சேர்த்துக்கொண்ட பெண்ணுக்கு (வைப்பாட்டி) உரிமை கொடுத்து கொண்டாடும்போது, இவர்களைப் பார்த்து ஊரார் சொல்லும் பழமொழிதான் இது.
2. குத்தாலத்தில குளிக்க போக கும்பகோணத்திலேயே துணி அவுக்கறான்.
ஆர்வக்கோளாறு மற்றும் ஒரு விஷயத்தில் அதிகப்படியான ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு சொல்லப்படும் பழமொழி.
3. ஆயிரம் முறை போய் ஒரு கலியாணத்த பண்ணனும்.
இந்த பழமொழி ‘ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கலியாணத்தப் பண்ணனும்’ என்று தவறாக கூறப்பட்டு வருகிறது. ஒரு திருமணம் செய்வதற்கு முன்பு மாப்பிள்ளையோ பெண்ணோ எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆயிரம் முறை அவர்கள் வீட்டிற்கு போய் அலசி ஆராய்ந்து பிறகு திருமணத்தை நடத்தவேண்டும் என்பதே உண்மையான பழமொழியின் அர்த்தம்.
4. கோயில் பூ நெய் தேவனுக்கு அம்சம் ஆகாது.
இந்த பழமொழியையும் கோவில் பூனை தேவனுக்கு அஞ்சாது’ என்று தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள். கோயிலில் சாமிக்கு நெய் பூ வைத்து அர்ச்சனை செய்தால் அது இறைவனிடம் போய்ச் சேரவா போகிறது? மாறாக, நாம் நம் எண்ணத்தில் மற்றும் செயலில் இறை பக்தியுடன் வேண்டுவதும் புகழ்வதும்தான் அவருக்கு உண்மையான அர்ச்சனை.
5. பணம் பத்தா இருக்கணும், பொண்ணு முத்தா இருக்கணும், முறையும் அத்தை மகளா இருக்கணும்.
நிச்சயதார்த்தம் என்பதை பரிசம் போடுதல் என கூறலாம். அதாவது ‘பரிசு கொடுத்தல்’ என்பதுதான் மருவி பரிசம் என்றாகிவிட்டது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
நிச்சயதார்த்தத்திற்கும் பரிசு கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்?
அந்த காலத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்யவேண்டுமானால், ஆண்மகன் தன் சம்பாத்தியத்தில் பொருள் சேர்த்து ஒரு பெரிய தொகையை பெண் வீட்டார்க்கு கொடுக்கவேண்டுமாம். தனக்கு மனைவியாக தன் வீட்டிற்கு வரப்போகிறவளை பேணி வளர்த்த குடும்பத்திற்காக ஒரு ஆண் கொடுக்கும் பரிசுதான் அந்த தொகை.
அப்படி பரிசு கொடுக்க நம்மிடம் நிறைய பணம் இருக்கவேண்டும். ஏனெனில் பெண்ணின் அழகு மற்றும் குடும்ப சூழ்நிலை பொறுத்து அந்த தொகை அதிகரிக்கும். அதனால்தான் பணம் பத்தா இருக்கணும். பின் பெண் முத்துபோல அழகாக மற்றும் நல்ல குணங்களை கொண்டவளாக இருக்கணும். முறை அத்தைமகளாக இருந்தால் பணம் கூட கொடுக்கவேண்டும் என்று அவசியமில்லை.
இந்த காலத்தில் இந்த பழக்கம் தலைகீழாக மாறி பெண்கள் ஆண்களுக்கு வரதட்சணை கொடுக்கிறார்கள்.
6. வயசு வைக்கோலா போகுதாம், கிழவி கிண்ணரம் வாசிக்குதாம்.
கிண்ணரம் என்பது ஒரு இசைக்கருவி. இசைக்கருவி வாசிக்கும் அளவுக்கு உடல் வலிமை உள்ள கிழவி பற்றிய பழமொழி இது. அதாவது சில வயதானவர்கள், அறுத்து அடித்து வைத்த நெற்கதிர்கள் வைக்கோலாக மாறுவதுபோல, எவ்வளவுதான் முதுமை அடைந்தாலும் வலிமை குறையாது தாங்களே உழைத்து, ஓடி ஆடி வேலை செய்து சாப்பிடுவார்கள். அவர்களை இவ்வாறு கூறலாம்.
7. கொழம்பன குட்டையில்தானே மீன் பிடிக்கலாம்!
ஏரியிலோ அல்லது குட்டைகளிலோ மீன் பிடிக்கும்போது பத்து பதினைந்து பேர் இறங்கி நாலா புறமும் நடந்து நீரை குழப்பிவிடுவார்கள். குட்டை குழம்பியுள்ளதால் மீன்கள் திக்கு தெரியாமல் எளிதாக வளைகளில் மாட்டிக்கொள்ளும். அதுபோல, ஒருசிலர் நம்மை இல்லாதது பொல்லாது கூறி நம்மை குழப்பி அதனால் ஆதாயம் தேடுவார்கள்.
8. பிள்ளையார பிடிக்கப்போயி கொரங்க பிடித்த கதையாயிடுச்சி.
களிமண்ணில் பிள்ளையார் சிலை செய்ய எண்ணி நம் கைகளால் பிடித்து செய்து பார்த்தால் அது குரங்கு போல் இருக்கிறது. நாம் செய்ய நினைத்ததோ பிள்ளையார் சிலை. ஆனால், இறுதியில் கிடைத்ததோ குரங்கு சிலை. இதைப்போலதான் வாழ்க்கையிலும். நல்லது செய்ய எண்ணி ஒரு செயலை செய்தால் கடைசியில் அது தீயதாக வந்து முடிகிறது.
9. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
வேலை செய்தால்தான் களைப்பு வரவேண்டும் என்று அவசியமில்லை. நல்ல வயிறு முட்ட சாப்பிட்டால் கூட மயக்கம் மற்றும் களைப்பு வரும். சாப்பாடு விஷயத்தில் தலைவர் சீடர் என்ற பிரிவில்லை. எல்லாருக்கும் உண்ட களைப்பு இருக்கத்தான் செய்யும்.
10.கொண்டவன் சரியா இருந்தா கூரை ஏறி சண்டை பிடிக்கலாம்.
கணவன் நல்லவனாக மனைவிக்கு எப்போதும் பக்கபலமாக இருந்தால், மனைவி யாருக்கும் பயப்படவேண்டும் என்று அவசியமில்லை. தன்னை எதிர்ப்பவர்களை பதிலுக்கு எதிர்க்கலாம். அவர்களும் அடங்கிவிடுவார்கள். ஒரு வேளை, கணவன் மனைவியின் நலனில் அக்கறை இல்லாமல், அவள் எப்படிப்போனால் என்ன என்ற மனப்போக்குடன் இருந்தால், மனைவி மற்றவர்களிடம் சண்டை பிடிக்க இயலாது. அமைதியாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில், மனைவியை மற்றவர்கள் ஏறி மிதித்தால் கூட அவர்களை அவன் கேள்வி கேட்கமாட்டான்.
11.இருக்கிறவன் அள்ளி முடிஞ்சிக்கிறான், இல்லாதவன் தடவி பாத்துக்கறான்.
அந்த காலத்தில் ஆண்கள் பெண்களைப்போன்று நீளமான முடி வைத்திருப்பார்கள். எனவே அவர்கள் அதனை அள்ளி கூந்தல் போட்டுக்கொள்வார்கள். தலை வழுக்கை உள்ளவர்கள் நீளமான முடி வைத்திருப்பவர்களின் கூந்தலை தடவிதான் பார்த்துக்கொள்ளவேண்டும்! அதுபோல, வசதி படைத்தவர்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவார்கள். இல்லாதவர்கள், இருப்பவர்கள் யாராவது வாங்கியிருந்தால் அதனைப் பார்த்து கற்பனையில் மகிழ்ச்சி கொள்வார்கள்.
12.செய்வன திருந்தச் செய்.
இது நமக்கு எளிதில் விளங்கக்கூடிய பழமொழிதான். எந்த ஒரு வேலையை செய்தாலும் அதை ஒரு ஈடுபாட்டுடன் செய்து, முழுவதுமாக செய்யவேண்டும். அரைகுறையாக விட்டுவிட்டு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் ஏனோ தானோ என்று செய்யக்கூடாது.
13.இல்லாதவனுக்கு இலுப்பை பூ சர்க்கரை.
அந்த காலத்தில், சர்க்கரை வாங்க வசதி இல்லாதவர்கள் இலுப்பை பூக்களை மூட்டை மூட்டையாக பறித்துவந்து, காய வைத்து பின் உரலில் இடித்து சர்க்கரை செய்வார்கள். உண்மையைச் சொன்னால் கரும்பு சர்க்கரையைவிட இலுப்பைப்பூ சர்க்கரை அருமையாக இருக்கும். இந்த காலத்தில் இலுப்பை மரங்களை பார்ப்பதே அரிது. அந்த காலத்தில் இல்லாதவனுக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. ஆனால் இந்த காலத்தில் இருப்பவன் கூட வாங்க இயலாது. நம்மில் 90% பெயருக்கு இலுப்பைப்பூவில் சர்க்கரை எடுக்கலாம் என்றே தெரியாது.
14.குப்ப காட்டு நாய்க்கு தெரியுமா கொய்யாப்பழ வாசனை?
இது ‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?’ என்பதற்கு இணையான பழமொழி. ஒரு பொருளின் முக்கியத்துவத்தை ஒருவர் உணராதபோது இவ்வாறு கூறி அவரைத் திட்டலாம்.
15.ஆச இருக்குதாம் அரசனாக, அம்சம் இருக்குதாம் கழுத மேய்க்க.
நாம் ஆசைப்பட்டால் மட்டும் நமது லட்சியத்தை அடைய இயலாது. நமது கடின உழைப்பும், கடவுளின் அனுக்கிரகமும் கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். ஆசை மட்டும் கொண்டுவிட்டு அதற்கான முயற்சியை எடுக்கவில்லையென்றால், கண்டிப்பாக ஊரார் நம்மைப் பார்த்து இப்படித்தான் கூறுவார்கள்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

பழமொழி விளக்கங்கள் Empty Re: பழமொழி விளக்கங்கள்

Post by logu Sun Jul 07, 2013 7:44 am

1. செங்கோல் கோணினால் எல்லாம் கோணிப்போம்.
ஒரு மன்னன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடே அழிந்துபோகும். அதுபோல, குடும்பத்தில் தலைவர் ஒழுங்காக இல்லையென்றால் மற்றவர்களுக்கும் மதிப்பு இராது. மேலும் குடும்பம் குடும்பமாக இராது.
2. மத்தளத்துக்கு இரு புறமும் அடி.
வாழ்கையில் எல்லாவிதங்களிலும் கஷ்டப்படுபர்களை சுட்டும் வகையில் இந்த பழமொழியைக் கூறுவார்கள்.
3. நொல்லயன் கொல்லில அல்லாதவன் பாக்கி.
நொல்லயன் என்றால் கண் தெரியாதவன் என்பது நமக்குத் தெரியும். அவன் கொல்லியில் (அதாவது கொல்லை என்பதை கொல்லி என்கிறார்கள். வயக்காடு என்றும் கூறுவார்கள்.) பயிரிட்டால் அவைகளை மற்றவர்கள் கண்டிப்பாக அபகரிக்கத்தான் பார்ப்பார்கள். ஏனென்றால் அவனுக்குத்தான் கண் தெரியாதே! ஒருவரும் பாக்கி இல்லாமல் அவனை ஏமாற்ற நினைப்பார்கள். நாமும் கண் தெரியாதவர்களைப் போன்று வெகுளியாக இருந்தால் அனைவரும் நம்மை ஏமாற்றதான் முயல்வார்கள்.
4. பொது பொண்டாட்டி புழுத்து செத்தா, என் பொண்டாட்டி வீங்கி செத்தா.
ஒரு நான்கு பேருக்கு பொதுவாக ஒரு மனைவி இருந்தால் யாராவது ஒருவர் அவளை கவனிப்பார்கள் என்று நால்வருமே கவனிக்கமாட்டார்கள். அதனால் அவள் கவனிப்பாரின்றி இறப்பாள். அதுதான் ‘பொது பொண்டாட்டி புழுத்து செத்தா என்பதன்’ பொருள். அடுத்தவங்களைப் பார்த்துப் பார்த்து பொறாமைப்பட்டே, நலிந்து போவதை பழமொழியின் இரண்டாம் பகுதி உணர்த்துகிறது.
5. பக்கத்து இலைக்கு ஏன் பாயாசம் கேக்கற?
அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி பிறரிடம் பிரச்சினைக்கு செல்பவர்களை இந்த பழமொழி வைத்து திட்டுவோம். அதாவது, ஒரு விருந்தில் அமர்ந்து சாப்பிடுகிறோம் என்றால் நமக்கு பாயாசம் இன்னும் வரவில்லையென்று பரிமாறுபவரிடம் கேட்கலாம். ஆனால், அருகில் அமர்ந்து உண்பவருக்காக கேட்பது என்பது நம் வேலை இல்லை. அவருக்கு வாய் இருக்கிறது, அவர் கேட்டுக்கொள்வார். அதுபோலதான் வாழ்க்கையும்.
6. குடிக்க கூழு, கொப்பளிக்க பண்ணீரா?
ஏழ்மையில் இருப்பவர்கள் தங்கள் தகுதிக்கு மீறி செலவு செய்தால் அல்லது ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டால் இந்த பழமொழியைக் கூறுவோம்.
7. தனக்கே தகறாராம், தம்பிக்கு தயிர் சோறாம்.
தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும்” என்பார்கள். தன்னுடைய குடும்பத்தையே கவனிக்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களை இந்த பழமொழி குறிப்பிடுகிறது. அதாவது, உதவி செய்யக்கூட நாம் ஒரு நிலையில் இருக்கவேண்டும். மிகவும் ஏழ்மையானவர்கள் பிறருக்கு உதவி செய்ய என்னும்போது இப்படித்தான் சமுதாயம் அவர்களை கேலி செய்கிறது.
8. கோணையன் கிழிச்சது கோமணத்துக்கு ஆச்சி.
ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாத ஒருவன் (கோணையன்) கிழித்த ஒரு துணி கோமணமாக பயன்படுத்த உதவியது. அப்படியென்றால் ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பது போல.
9. அல்லாம குறையாது, சொல்லாம வராது.
எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தாமல் அது குறையாது. குறைந்திருக்கிறது என்றால், கண்டிப்பாக நாம் அதனை பயன்படுத்தியிருக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல, ஒரு செய்தி பரவுகிறது என்றால், அதை யாராவது சொல்லியிருந்தால்தானே வெளிவரும்?
10.மண் பானையில் இருப்பதை மாணிக்கப் பானையில் போட்டு மூடணும்.
மாணிக்கப் பானை என்பது நமது வயிறு. அதாவது பாத்திரத்தில் இருக்கும் உணவை நமது வயிறு என்னும் பாத்திரத்தில் போட்டு மூடுவதை இவ்வாறாக கூறுகிறார்கள்.
11.உனக்கு கோபமாச்சி, எனக்கு லாபமாச்சி.
சிறு பிள்ளைகள் இருவர் அண்ணன் தம்பி என்று வைத்துக்கொள்வோம். ஆனால் தற்போது அவர்கள் சண்டை போட்டுக்கொண்டு பேசுவதில்லை. அண்ணன் ஒரு திண்பண்டம் வாங்கி வருகிறான். தன் தம்பியிடம் பாதி கொடுக்கிறான். ஆனால் தம்பி, அண்ணன் மீதுள்ள கோபத்தால் வேண்டாம் என்கிறான். அப்போது அண்ணன் ‘உனக்கு கோபமாச்சி, எனக்கு லாபமாச்சி’ என்று சொல்லிக்கொண்டு மீதி பாதி திண்பண்டத்தையும் அவனே திண்றுவிடுவான்.
12.வெக்கம் வேணாங்குது, விருப்பம் கொண்டாங்குது.
ஒரு வீட்டிற்கு செல்கிறோம். அவர்கள் நமக்கு சாப்பிட ஒரு பலகாரம் கொடுக்கிறார்கள். ஆனால், நாம் அதனை வாங்கி சாப்பிட்டால் அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று வாங்க மறுத்துவிடுகிறோம். ஆனால், நமது மனதிற்குள் அதை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று ஒரு விருப்பம் இருக்கும். அதுதான் ‘வெக்கம் வேண்டாம் என்கிறது, விருப்பம் கொண்டுவா என்கிறது.’ என்பதின் அர்த்தம்.
13.ஊருக்குன்னா இரும்ப கூட இடிப்பேன், ஊட்டுக்குன்னா தவுடு கூட இடிக்கமாட்டேன்.
ஒரு சிலர் இருக்கிறார்கள். மற்றவர்களுடைய நன் மதிப்பை பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஊருக்காக ஓடி ஓடி உழைப்பார்கள். ஆனால், வீட்டில் உள்ளவர்களின் தேவைகளை கடைக்கண்ணால் கூட பார்க்க விரும்பவும் மாட்டார்கள். இவர்கள் மனக்குரல்தான் இந்த பழமொழி.
14.ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்றாளம்.
தன்னிடம் உள்ள தவற்றை ஒத்துக்கொள்ளாமல் சூழ்நிலைகள் மீதோ அல்லது அடுத்தவர்கள் மீதோ பழி போடுபவர்களை இப்படி கூறலாம்.
15.வந்தா வரவுல வச்சிக்க, இல்லன்னா செலவுல வச்சிக்க.
வாழ்கையில் நமக்கு கிடைப்பது லாபம் என்று வைத்துக்கொள்வோம். கிடைக்காததை அது நமக்கு இல்லையென்ற ஒரு நன் மனதுடன் கவலையற்று இருப்போம்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

பழமொழி விளக்கங்கள் Empty Re: பழமொழி விளக்கங்கள்

Post by logu Sun Jul 07, 2013 7:44 am

1. மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக் கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்.
முழு நெல்லி கசக்கும் என்று சாப்பிடாமல் இருந்தால் சாப்பிட்டப்பிறகு கிடைக்கும் இனிப்புச் சுவையை உணரமுடியுமா? அதுபோல, வயதில் பெரியவர்கள் நமக்கு அறிவுரை கூறும்போது அதைக் கேட்பதும் கடைபிடிப்பதும் நமக்கு சிரமமாக இருந்தாலும், அதனை கடைபிடிப்பதால் நாம் அனுகூலம் அடையும்போது பெரியவர்கள் அறிவுரை எவ்வளவு இனிமையானது என்பதை உணர்வோம்.
2. எளியாரை வலியார் வாட்டினால் வலியாரை தெய்வம் வாட்டும்.
தன்னைவிட பலம் (பண பலம், மன பலம் அல்லது உடல் பலம்) குறைந்தவர்களை நாம் வஞ்சித்தாலோ அல்லது ஏமாற்றினாலோ கடவுள் அவர்களுக்கு சார்பாக இருந்து நம்மை வஞ்சிப்பார்.
3. சொல்லிக் கொடுத்த சொல்லும், கட்டிக் கொடுத்த கட்டு சோறும் நிலைக்காது.
ஊருக்குப் போகும்போது நாம் உணவுப் பொட்டலம் எடுத்துச் செல்வோம். அது ஒரு வேளை அல்லது இரண்டு வேலைகளுக்குத்தான் வரும். அது போல பெரியவர்கள் கூறும் அறிவுரை அப்போது மட்டும்தான் கடைப்பிடிக்கப்படும். நமக்கென்று ஒரு சுயபுத்தி இருந்தால்தான் நாம் நல்வழி வாழ்வோம். யாரோ ஒருவர் சொல்லிக்கொடுத்ததெல்லாம் நம் மனதில் நிரந்தரமாய் நிலைக்காது, கடைபிடிக்கவும் முடியாது.
4. அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.
எதையுமே ஒரு அளவோடுதான் செய்யவேண்டும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது. இரவும் பகலும் கண்விழித்துப் படித்தால் நம் உடல் நலன்தான் கெடும். "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்பது படிப்பு விஷயத்திலும் உண்மைதான்.
5. எள்ளுதான் எண்ணெய்க்கு அழுவுது, எலி புழுக்கை ஏன் அழுவுது?
எள் செக்கில் நன்கு மசியப்படும்போது தன்னிடம் உள்ள எண்ணெய் தன்னை விட்டு செல்கிறதே என்று அழுவது நியாயம். ஆனால் எலியின் கழிவான ஒன்றிற்கும் உபயோகமில்லாத புழுக்கை அழுவதில் ஒரு அர்த்தமும் இல்லை. அதுபோல, ஒரு விஷயத்தில் மற்றவர்கள் சம்பந்தமில்லாமல் தலையிடும்போது இந்த பழமொழியைச் சொல்லுவர்.
6. உற்றார் திண்ணா புத்தா பூடும், ஊரார் திண்ணா பேரா விளங்கும்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தேவையானவற்றை செய்தால் அவர்கள் வாழ்த்தமாட்டார்கள். ஏனென்றால் அது கடமை. அதுதான் புத்தா பூடும் என்பது. அதாவாது செய்தது வீண்தான் (தன் குடும்பத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள் நினைப்பது). அதுவே ஊரில் உள்ளவர்களுக்கு செய்தால் நல்ல பேர் விளங்கும். குடும்பத்தைப் பதறடித்துவிட்டு ஊருக்கு உபகாரம் செய்பவர்களின் மனப்போக்கு இப்படித்தான் இருக்கும். அதாவது பேர் வாங்கவேண்டும் என்ற பகட்டுப்போக்கு மட்டுமே இருக்கும். குடும்பத்தை கவனிக்கமாட்டார்கள். அவர்களின் அந்த மனப்போக்கு தவறு என்று சாடுவதுதான் இந்த பழமொழி. அதற்குத்தான் “தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும்(charity begins at home)” என்று மற்றொரு பழமொழியை கூறி வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.
7. அடிக்காம அழுவுற பொம்பலையையும் இடிக்காம பெய்யுற மழையையும் நம்பமுடியாது.
மழை பெய்யும்போது இடி இடித்தால் அது நிற்கப்போகிறது என்று அர்த்தம். ஆனால் சத்தம் இல்லாமல் பெய்யும் மழை எப்போது நிற்கும் என சொல்ல முடியாது. அதுபோல, எதற்கெடுத்தாலும் (தொட்டாஞ்சிணிங்கி போல்) அழும் பெண்களுக்கு இந்த பழமொழி கூறப்படுகிறது.
8. நொண்டி குதிரைக்கு சறுக்கினதே சாக்கு.
எனக்குத் தெரிந்த ஒருவர் அடிக்கடி குடிப்பார். ஏன் என்று கேட்டால், “என் பொண்டாட்டி என்கிட்ட சண்ட போட்டுக்கிட்டே இருக்கிறா. அத மறக்கத்தான் தினமும் குடிக்கிறேன்.” என்பார். அவர்தான் நொண்டிக்குதிரை. அவர் ஒரு பெரிய குடிகாரர். எப்படியாவது குடிக்கவேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு சாக்கு சொல்லி குடித்துக்கொண்டிருக்கிறார். அதுதான் ‘நொண்டி குதிரைக்கு சறுக்கினதே சாக்கு’ என்பதின் அர்த்தம்.
9. மடியில கணம் இருந்தால்தானே மனசுல பயம் இருக்கும்.
நம்மில் ஏதேனும் குறை இருந்தால்தானே நாம் பிரச்சினைகளைக் கண்டு பயப்படுவோம்.
10.கொடுவா புடி புடிச்சாதான் அருவா புடி கிடைக்கும்.
கடையில் ஒரு பொருள் வாங்க விலை கேட்கிறோம். கடைக்காரர் ஐம்பது ரூபாய் என்கிறார். நாம் இருபது ரூபாய் தருவதாக பேரம் பேசுவோம். கடைக்காரர் முப்பது ரூபாய்க்குத் தருவதாக கூறுவார். ஆனால் நாம் விடாப்பிடியாக இருபது ரூபாய் என்றே இருப்போம். ஆனால் அவர் அந்த விலை கட்டுப்படி ஆகாது என்று கூறி இருபத்தைந்து ரூபாய்க்குத் தருவதாக ஒத்துக்கொள்வார். நாமும் ஒரு வழியாக சம்மதிப்போம்.
கடைக்காரருக்கும் கண்டிப்பாக லாபமாகத்தான் இருக்கும். ஏனெனில் அந்த பொருளின் அடக்கவிலை இருபது ரூபாய். அவர் ஐம்பது ரூபாய் (கொடுவாள் புடி) என்று கூறியதால்தான் இருபத்தைந்து ரூபாய்க்கு (அரிவாள் புடி) விற்றார். அவருக்கு ஐந்து ரூபாய் லாபம் கிடைத்தது. அதுவே முப்பது ரூபாய் என்று கூறியிருந்தால் அவர் நஷ்டத்திற்குதான் அந்த பொருளை விற்றிருக்க முடியும். இது நமக்கும் பொருந்தும். ஏனெனில் அந்த பொருளை நாம் முப்பது ரூபாய்க்கு கேட்டிருந்தால் முப்பத்தைந்து ரூபாய்க்குதான் கிடைத்திருக்கும்.
11.மண்ணா இருந்தாலும் மருந்தென்று நம்பி திங்கணும்.
நமது நம்பிக்கைதான் நம்மைக் காப்பாற்றுகிறது. நோய்க்கு மருந்தே சாப்பிட்டாலும் நமக்கு நம்பிக்கையில்லையென்றால் நோய் தீராது. அதாவது மண்ணைக்கூட அதுதான் நோய்க்கான மருந்து என்று நம்பி சாப்பிட்டால் நோய் தீருமாம்.
12.வருவது வழியில நிக்காது, போறது போவாம இருக்காது.
நமக்கு கிடைக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருப்பது கண்டிப்பாக கிடைக்கும். என்னதான் முயன்றாலும் நமக்கென்று தலையில் எழுதி வைக்காதது கண்டிப்பாக கிடைக்காது. எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பதுதான் இந்த பழமொழியின் அர்த்தம்.
13.உணவே மருந்து, உடலே வைத்தியர்.
நாம் சாப்பிடும் சத்தான உணவுதான் நோய்க்கு மருந்து. நோய்க்கிறுமிகளுக்கு ஏற்றாற்போன்று எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் நமது உடல்தான் வைத்தியர். சரிவிகித உணவு உண்டு மன திடத்துடன் வாழ்ந்தால் நம்மை நோய் அண்டாது.
14.பாத்திரம் அறிந்து பிச்சையிடு.
பிச்சையிட்டால் நமக்குப் புண்ணியம் என்று நினைக்கிறோம். ஆனால், பிச்சைக் கேட்பவர்கள் உண்மையாகவே வாழ்கையில் கஷ்டப்படுகிறார்களா என்று பார்த்து பிச்சையிட்டால்தான் நமக்குப் புண்ணியம். நல்ல வாழ்க்கை தரம் இருந்தும் சோம்பேறித்தனமாய் பிச்சையெடுப்பவர்களுக்கு பிச்சையிட்டு அவர்களை ஊக்குவிக்கக் கூடாது.
15.வயிற்று சோத்து காரனுக்கு வலம் வந்ததுதான் மிச்சம்.
மிக ஏழ்மையானவன் எவ்வளவுதான் அலைந்து திரிந்து உழைத்தாலும் தனது வயிரை நிரப்பிக்கொள்ளும் அளவுக்குத்தான் அவன் பொருள் ஈட்ட முடியும். சில நேரங்களில் அது கூட முடிவதில்லை. அவனால் தன் வாழ்க்கைக்கு என்று எதையும் மிச்சப்படுத்த இயலாது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

பழமொழி விளக்கங்கள் Empty Re: பழமொழி விளக்கங்கள்

Post by logu Sun Jul 07, 2013 7:45 am

1. நீர்ல பார்த்தேன் உன் சீரை, உப்புல பார்த்தேன் உன் துப்பை.
பொதுவாக இது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கான பழமொழியாகும். அதாவது பெண்கள் புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சீர் என்பது நகையோ பாத்திரங்களோ இல்லை. மாறாக பொறுப்பும் சிக்கன குணமும்தான். அதாவது நீரை எவ்வாறு செலவு செய்கிறார்கள் என்பதே அவர்களின் சிக்கன குணத்தை விளக்கும். மேலும் உப்பு என்பது ஒரு உயிர் நாடி போன்றது. அதனை பாதுகாக்கும், பயன்படுத்தும் மற்றும் கையாளும் முறையை வைத்து ஒரு பெண்ணின் குடும்ப நிர்வாகத் திறமையை (துப்பு) கண்டறியலாம்.
2. தென்ன மரத்துல தேள் கொட்டினா பன மரத்துல நெரி ஏறுதாம்.
ஒருவர் ஒரு தவறு செய்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். நாம் அந்த தவறை சுட்டிக் காட்டவில்லையென்றாலும், வேறு ஒருவர் அந்த தவறை செய்திருப்பார். அதைபற்றி நாம் பேசினாலும் இவரைப் பற்றிதான் சொல்கிறோம் என்று சில நேரங்களில் சண்டைக்கு வருவதுண்டு. அதாவது வேறு விதமாக, ஒருவர் ஒரு தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார் என்றால், வேறொருவர் தான் செய்த வேறொரு தவறை நினைத்து பயப்படுவதை இந்த பழமொழி உபயோகித்து கூறலாம்.
3. பழய முறத்துக்கு சாணி, கிழ பொணத்துக்கு சோறு.
எதற்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி. அதாவது பழுதடைந்த முறம்(பெரியவங்க பிஞ்சு போன முறத்தால அடிப்பேன்னு சொல்வாங்களே,அந்த முறம்) சரி செய்ய சாணம் பூசி முழுகுவார்கள். அதுதான் ‘பழய முறத்துக்கு சாணி’ என்பது. ஒரு வயதானவற்கு தேவை அவரை உயிரோடு வைத்திருக்க வேளா வேளைக்குச் சோறு. அதுதான் ‘கிழ பொணத்துக்கு சோறு’ என்பது. இவ்வாறாக தேவையை உணர்ந்து செயல்படவேண்டும்.
4. கெவிலி சொல்ற பல்லி கழநி பானையில விழுந்துச்சாம்.
நாம் ஒன்று கூறும்போது பல்லி “உச்” கொட்டும். அப்போது “பல்லியே சொல்லிடுச்சி. நான் சொல்றதுதான் சரி” என்போம். பல்லி நாம் கூறுவதை ஆமோதிப்பது போன்ற சத்தம் போடுவதுதான் கெவிலி சொல்லுதல். மற்றவர்களுக்கு கெவிலி சொல்லும் பல்லியே அதனுடைய வாழ்கையில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் கழநி பானையில் விழுந்து இறக்கிறது. அதுபோல அறிவுரை கூறுபவர்களே தவறு செய்யும்போது இந்த பழமொழியைக் கூறுவோம்.
5. ஊருக்கு பொது, ஏரிக்கு மது
ஏரியின் மதுவில்தான் அதிக பயன்பாடு இருக்கும். மீன்கள் அதிகம் கிடைக்கக் கூடிய இடமும் அதுதான். அது ஊருக்குப் பொதுவானது. அதுபோல யாராவது மிகவும் ஏமாளியாக ஊர் மக்கள் அனைவரிடமும் ஏமாறுபவராக இருந்தால், அவரை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம், தனக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் அவரை இந்த பழமொழி வைத்துக் குறிப்பிடுவோம்.
6. மூளை செய்யாததை முழங்கால் செய்யும்.
இது பொதுவாக கிறிஸ்துவர்கள் கூறுவது. ஏனெனில் அவர்கள் முழங்கால் படியிட்டு பிராத்திக்கிறார்கள். நம்மால் ஒரு செயலை வெற்றிகரமாக செய்ய முடியாதபோது, நம்மைவிட மேலான கடவுளை வேண்டிக் கேட்கும்போது அவர் நமக்கு அந்த செயலை வெற்றியுடன் முடித்துக் கொடுப்பார் என்பதே இதன் அர்த்தம். நாம் கடவுளைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.
7. நாற்றும் பிடுங்கணும், நடவும் நடணும்.
ஒருவர் ஏகப்பட்ட வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டியவராக, வேலை பளு அதிகம் கொண்டவராக இருந்தால், “எனக்கு ஏகப்பட்ட வேல இருக்குது. நாற்றும் பிடுங்கணும், நடவும் நடணும்” எனபார்.
8. வர்மம், வைராக்கியம் தர்மத்தின் பலனையும் விழுங்கும்.
நாம் என்னதான் நல்லவர்களாக அனைவருக்கும் தர்மம் செய்பவர்களாக இருந்தாலும், நமக்கு கெடுதல் செய்தவர்கள் மீது பகை உணர்வு கொண்டு வாழ்ந்தால், “செய்த தர்மம் தலை காக்கும்” என்ற பழமொழி பொய்த்துப் போகும். அதாவது நாம் செய்த தர்மத்தின் பலனாக நமக்கு ஆபத்து ஏற்படாதென்றோ அல்லது நமக்கு சொர்க்கம் கிடைக்கும் என்றோ கூற இயலாது.
9. இத விட்டாலும் வேற கதி இல்ல, அப்பால போனாலும் நாதி இல்ல.
ஒரு பெண் ஒருவனை காதலித்து திருமணம் செய்திருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். இதனால் அவள் குடும்பம் அவளை தலை முழுகிவிட்டது. யாரும் தேவையில்லை தன் கணவன் மட்டும் போதும் என்று அவனுடன் வாழ்கிறாள். ஆனால் அவனோ கெட்டவனாக மாறிவிட்டான். அவளை தினம் தினம் கொடுமைப்படுத்துகிறான். அவளுக்கு அவனை விட்டு ஓடிவிடலாம் என்றுகூட தோன்றுகிறது. ஆனால் அவள் காதல் திருமணம் செய்ததால் தன் ஆதரவாளர்களை இழந்துவிட்டாள். என்ன செய்வது? அவளுக்கு இத விட்டாலும் வேற கதி இல்ல, அப்பால போனாலும் நாதி இல்ல.
10.படுத்தாலும் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்.
நாம் என்னதான் உழைத்தாலும், சொத்து சேர்த்து வைத்தாலும், சொத்தைக் காப்பாற்ற முயற்சி எடுத்தாலும் நமக்கென்று நம் தலையில் என்ன எழிதியிருக்கிறதோ அதுதான் கடைசிவரை நிலைக்கும்.
11.ஆன மேல போறவன் அந்து காலன், குதிரை மேல போறவன் குந்து காலன்.
புனைப்பெயர், பட்டப்பெயர் வைப்பதைப் பற்றிய பழமொழி இது. நமது ஊர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கும். அது உருவ தோற்றத்தின் காரணமாக இருக்கலாம் அல்லது அவர்கள் குணம் அல்லது தொழில் இவைகளால் ஒருவரின் பட்டப்பெயர் வைக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு, குள்ளமாக இருந்தால் குள்ளையன், உயரமாக இருந்தால் நெட்டையன், வெள்ளையாக இருந்தால் வெள்ளையன், கருப்பா இருந்தால் கருப்பால்டி.
எங்க ஊருல வினோதமான பட்டப்பெயர்கள் உண்டு. ஒரு வாத்தியார் பேசும்போது அடிக்கடி “சரிதாம்பா... சரிதாம்பா...” என்று சொல்லுவாராம். அதனால் அவருக்கு ‘சரிதான் வாத்தியார்’ என்று வைத்துவிட்டனர். இன்னொருவர் தனது நண்பன் அயர்ந்து தூங்குவதைப் பார்த்து, “என்னப்பா செத்த பொணம் மாதிரி தூங்குறியே?” என்று கேட்டாராம். அதற்கு நண்பர், “பொணம் என்றாலே செத்ததுதான். அது என்ன செத்த பொணம்?” என்று கேட்டவர் அவருக்கு ‘செத்த பொணம்’ என்று பட்டப்பெயர் வைத்துவிட்டார். இப்படியாக நாம் பட்டப்பெயர் வைப்பதைப் பற்றி கூறுவதுதான் இந்த பழமொழி.
12. உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது.
சோற்று உலையை அனல் குறைவாக வைத்து மூடி போட்டு வெளியில் பொங்கி வராமல் அதனை சமைத்துவிடலாம். ஆனால் நம்மைப் பற்றிய ஒரு ரகசியத்தை ஒருவரிடம் கூறினால், அவர் அதனை பத்து பேரிடமாவது கூறினால்தான் அவருக்கு தூக்கம் வரும். அந்த பத்து பேர் மேலும் பலரிடம் கூறுவர். இப்படியாக ஊர் முழுக்க அந்த விஷயத்தைப் பற்றிதான் பேசுவார்கள். அதனை தடுத்து உங்கள் ரகசியத்தைக் காக்க முடியுமா? ஊர் வாயை மூட முடியாது.
13.ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
ஊசியை காந்தம் இழுப்பதுபோல, உத்தமனின் அன்பு கண்டு அனைவரும் அவனிடம் நட்பு கொள்ள விரும்புவர்.
14.மண்ணைத் திண்ணாலும் மறையத் திங்கணும்.
பிள்ளைகள் வீட்டில் செய்த திண்பண்டங்களை வீட்டிற்கு வெளியில் அல்லது தெருவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் பெரியவர்கள் அவர்களை அதட்டி வீட்டிற்கு உள்ளே சென்று சாப்பிடுமாறு கூறுவார்கள். ஏனென்றால் யாராவது பார்த்தால் ‘என்ன ஏதோ சாப்பிடுகிறானே!’ என்று நினைத்துவிட்டாலே அந்த எண்ண அலையாகப்பட்டது பிள்ளைகளுக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தலாம். அதினால்தான் மண்ணைத் திண்ணாலும் மறையத் திங்கணும் என்று கூறுவார்கள்.
15.ஊரான் போவ பலபட்டர ஏன் தெண்டம் கொடுக்க?
யாரோ ஒருவர் அனுகூலம் அடைய நாம் ஏன் பணம் செலவு செய்யவேண்டும்? அல்லது யாரோ ஒருவர் செய்த குற்றத்திற்கு நாம் ஏன் தண்டனை அனுபவிக்கவேண்டும்? என்பதுதான் இதன் அர்த்தம்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

பழமொழி விளக்கங்கள் Empty Re: பழமொழி விளக்கங்கள்

Post by Tamil Mon Jul 29, 2013 10:09 pm

அருமை ...........
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

பழமொழி விளக்கங்கள் Empty Re: பழமொழி விளக்கங்கள்

Post by Muthumohamed Mon Jul 29, 2013 11:41 pm

நல்ல பதிவு ஆனால் சிறிய எழுத்தாக இருக்கிறதே
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

பழமொழி விளக்கங்கள் Empty Re: பழமொழி விளக்கங்கள்

Post by ஜனனி Mon Jan 20, 2014 7:35 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

பழமொழி விளக்கங்கள் Empty Re: பழமொழி விளக்கங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum