Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம் பின்னணி: தேர்தலில் சலுகை காட்டவா?
Page 1 of 1

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றத்திற்கு, தேர்தல் கமிஷன் அறிவிப்பு
காரணமாக கூறப்பட்டாலும், அரசியல் பின்புலம் மற்றும் பணம் பிரதானமாக
இருந்ததாக கூறப்படுகிறது. இதில், நேர்மையான அதிகாரிகளும், தேர்தல்
கமிஷனின், "பிளாக் லிஸ்டில்' உள்ளவர்களும், முக்கியமில்லாத பதவிகளுக்கு
மாற்றப்பட்டுள்ளனர்.
பார்லிமென்ட், சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகளுக்கு
மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்படுவது
வழக்கம். தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் கமிஷன்
அறிவிப்பிற்கு முன்பே, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும், ஐ.பி.எஸ்.,
அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.இது
தவிர, டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் என பலரும் மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் இறுதியில் இருந்தே இம்மாற்றங்கள் துவங்கி விட்டன.
மாவட்டங்களில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், கடந்த, 4ம்
தேதி, சென்னை மாநகர் முழுவதும், 190 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும், 68 ஐ.பி.எஸ்.,
அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவை அறிவிக்கப்பட்டன.
கூடுதல் டி.ஜி.பி.,க்கள் இருவர், டி.ஜி.பி.,க்களாக பதவி உயர்வு
பெற்றனர். எஸ்.பி.,யாக இருந்த சிலர், டி.ஐ.ஜி.,க்களாகவும், டி.ஐ.ஜி.,யாக
இருந்தவர்கள், ஐ.ஜி.,க்களாகவும் பதவி உயர்வு பெற்றனர்.இவர்களை தவிர,
ஏற்கனவே பல்வேறு பணிகளில் இருந்த டி.ஐ.ஜி.,க்கள் மற்றும் ஐ.ஜி.,க்கள்
இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் சிலர், முக்கியமான பதவிக்கும்,
சிலர், பிரச்னையில்லாத பதவிக்கும் சென்றுள்ளனர்.ஆளும் தி.மு.க.,விற்கு
சாதகமான ஆட்கள் பலரும், முக்கிய பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. தி.மு.க.,வைப் பொறுத்தவரை, தமிழகத்தில் சில பகுதிகளில்
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சில பகுதிகளில் எதிர்க்கட்சியினருக்கு
வாய்ப்புகள் உள்ளன.எதிர்க்கட்சிக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் சாதகமான
அதிகாரிகள் நியமிக்கப்படும் பட்சத்தில், அவர்கள் அப்பகுதியில், தி.மு.க.,
வெற்றிக்கு அடித்தளம் அமைப்பர் என்ற கருத்து பரவலாக உள்ளது.
சமீபத்தில், தமிழக டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி., சென்னை புறநகர்
கமிஷனர் உள்ளிட்ட சில அதிகாரிகளை மாற்ற வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு,
அ.தி.மு.க., தரப்பில் இருந்து கடிதம் எழுதப்பட்டது. ஆனால், பல சர்ச்சைகள்
ஏற்பட்ட நிலையிலும், டி.ஜி.பி., லத்திகா சரணை தமிழக அரசு மாற்றவில்லை.
கூடுதல் டி.ஜி.பி.,யும் மாற்றப்பட மாட்டார் என தெரிகிறது.மூன்று ஆண்டுகள்
ஆகாத நிலையில், சென்னை நகர் மற்றும் புறநகர் கமிஷனர்களும் மாற்றப்பட
மாட்டார்கள் என, கூறப்படுகிறது.தேர்தல் கமிஷன் உத்தரவிட்டால் மட்டுமே
இவர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளை பொறுத்தவரை,
ஆளுங்கட்சிக்கு சாதகமானவர்கள், தேர்தல் கமிஷனின்,"லிஸ்டி'ல் உள்ளவர்கள்
மாற்றத்தை சந்தித்துள்ளனர்.
தென் மண்டல ஐ.ஜி.,யாக இருந்த கிருஷ்ணமூர்த்தி மீது, திருமங்கலம்
இடைத்தேர்தலின் போதும், திருச்செந்தூர் இடைத் தேர்தலின் போதும், தி.மு.க.,
விற்கு ஆதரவாக செயல்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இம்முறையும் இப்பிரச்னை
ஏற்படும் என்பதால், சிறப்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு
மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில், மதுரை மாநகர் கமிஷனராக
இருந்த பாலசுப்பரமணியனுக்கு, தி.மு.க., தரப்பில் நல்ல பெயர் இருப்பதால்,
ஐ.ஜி., பதவி உயர்வு கிடைத்ததும், கிருஷ்ணமூர்த்தி இருந்த இடத்திற்கு அவர்
மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி டி.ஐ.ஜி.,யாக இருந்த பொன் மாணிக்கவேல் மாற்றப்பட்டு,
மயிலாப்பூர் துணை கமிஷனராக இருந்து, ரயில்வேக்கு மாற்றப்பட்ட மவுரியா
திருச்சி டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளளார். பொன் மாணிக்கவேல்,
எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டார் என்பதால், அங்கிருந்து அவரை
மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.இவர்களை போன்று ஆளுங்கட்சிக்கு
சாதகமானவர்கள் பலரும், மாவட்ட எஸ்.பி.,க்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி., கண்ணப்பன், நெல்லை கமிஷனராக இருந்த அபெய்
குமார் சிங் உள்ளிட்ட சிலர் முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு மாற்றம்
செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் ஆளுங்கட்சியினர், மாவட்ட செயலர்கள்,
அமைச்சர்களின் எதிர்ப்பினாலும் சிலர் மாற்றப்பட்டுள்ளதாகவும்
கூறப்படுகிறது. ஆளுங்கட்சியினரின் இந்த மாற்றத்தில், சிலர் தங்களுக்கு
வேண்டிய பதவிகளை ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலரது உதவியுடன், கேட்ட
பணத்தையும் கொடுத்து பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. சென்னையில் முக்கிய
பதவிகளுக்கு மாற்றப்பட்டுள்ள சிலர், இந்த அடிப்படையில் பதவிகளை
பெற்றுள்ளனர்.அதே நேரத்தில், சில அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு அதிகளவில்
விசுவாசமாக இருந்ததன் காரணமாக, ஒரு வேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்
பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, முக்கியமில்லாத பதவியை பெற்று
ஒதுங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சீனாவின் போக்கில் திடீர் மாற்றம்: விசா வழங்குவதில் தடாலடி சலுகை!
» ஜெயிலில் கல்மாடிக்கு சலுகை காட்டியதாக புகார்: திகார் ஜெயில் சூப்பிரண்டு அந்தமான் சிறைக்கு மாற்றம்
» கூடங்குளம்: போலீஸ் இன்ஸ்பெக்டர், கூடுதல் எஸ்.பி., மாற்றம்: பின்னணி என்ன?
» தமிழகத்தில் ஒரே நாளில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
» வாகா எல்லை அணிவகுப்பில் மாற்றம் :இரு நாட்டு அதிகாரிகள் முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum