Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நக்சலைட்டுகளால் மாவட்ட கலெக்டர் கடத்தல்: மத்திய அரசு நிலை என்ன?
Page 1 of 1
நக்சலைட்டுகளால் மாவட்ட கலெக்டர் கடத்தல்: மத்திய அரசு நிலை என்ன?
மால்காங்கிரி: ""ஒடிசாவில் கலெக்டர் கடத்தப்பட்டதால், மற்ற பகுதிகளில் நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறினார்.
ஒடிசாவில் மால்கான்கிரி மாவட்ட கலெக்டராக இருப்பவர் வி.கிருஷ்ணா. 30 வயது ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மாவட்டத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த, சித்ரகொண்டா பகுதியில் உள்ள படாபாடா என்ற இடத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்று முன்தினம் சென்றார். அங்கு, பொதுமக்களுடன் கலந்துரையாடிய அவர், அருகில் உள்ள சிறிய பாலம் ஒன்றை பார்ப்பதற்காக, ஜூனியர் இன்ஜினியர்கள் இருவர் மற்றும் ஒரு நபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, அவர்களை சுற்றி வளைத்த 50க்கும் மேற்பட்ட நக்சலைட்கள், கலெக்டர் கிருஷ்ணாவையும், மற்றவர்களையும் கடத்திச் சென்றனர். பின்னர் ஜூனியர் இன்ஜினியர் ஒருவரையும், மற்றொரு நபரையும் விடுவித்த நக்சலைட்கள், அவர்கள் இருவரிடமும் கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பினர். நேற்று முன்தினம் இரவு படாபாடா வந்து சேர்ந்த அவர்கள், கடிதத்தை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். கலெக்டரையும், மற்றொரு ஜூனியர் இன்ஜினியரையும் பிணைக் கைதிகளாக நக்சலைட்கள் பிடித்து வைத்திருக்கும் விவரத்தையும் தெரிவித்தனர்.
நக்சலைட்கள் கொடுத்து அனுப்பிய கடிதத்தில், "நக்சலைட்களுக்கு எதிரான போலீசாரின் நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும். சிறையில் உள்ள தங்கள் அமைப்பினரை விடுதலை செய்ய வேண்டும். இரண்டு நாட்களுக்குள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என்று நிபந்தனை விதித்துள்ளனர். நக்சலைட்களின் மிரட்டலின் பேரில், இந்தக் கடிதத்தை கிருஷ்ணாவே எழுதியுள்ளார். "கலெக்டர் கிருஷ்ணா கடத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது' என தெரிவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், "அவரை விரைவில் விடுவிக்க வேண்டும்' என்று நக்சலைட்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதோடு, கிருஷ்ணாவை விடுவிப்பதற்கான அனைத்து வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். "பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக கடுமையாக பாடுபட்டு வருபவர் கலெக்டர் கிருஷ்ணா. கடத்தப்பட்ட ஜூனியர் இன்ஜினியரான பபித்ரா மாஜ்கியும் பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே, அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்' என, முதல்வர் நவீன் பட்நாயக் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலெக்டர் கடத்தப்பட்ட விவகாரம், ஒடிசா மாநில சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது. சபையின் மையத்திற்கு சென்ற எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், "கலெக்டர் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ள இடம் பற்றிய தகவலை பிஜு ஜனதாதள அரசு தெரிவிக்க வேண்டும். அவரை விடுவிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் விவரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். சம்பவம் தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி, அமளியில் ஈடுபட்டதால், சபை இரு முறை ஒத்தி வைக்கப்பட்டது.
தகவல் தொடர்பு இல்லை: கலெக்டரை நக்சலைட்கள் எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. இருந்தாலும், ஆந்திர மாநிலத்தை ஒட்டிய, நீர்நிலைகள் அதிகம் நிறைந்த ஜான்பாய் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், இந்தப் பகுதி அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி; எளிதில் யாரும் செல்ல முடியாது. சித்திரகொண்டா பகுதியில் மொபைல் டவர்கள் பலவற்றை நக்சலைட்கள் சேதப்படுத்தியுள்ளதால், அப்பகுதிக்கான தகவல் தொடர்பு சேவையும் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கடத்தப்பட்ட சம்பவம், மால்காங்கிரி மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று அங்குள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன; சாலைகளிலும் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. கலெக்டரை விரைவில் விடுவிக்கக் கோரி, அங்கு சில தரப்பினர் பேரணியும் நடத்தினர்.
மத்திய அரசு நிலை என்ன? ""ஒடிசாவில் கலெக்டர் கடத்தப்பட்டதால், மற்ற பகுதிகளில் நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறினார். அவர் மேலும் கூறியதாவது: கலெக்டர் கிருஷ்ணாவை கடத்திய நக்சலைட்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அது குறித்து மாநில அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கலெக்டரை விடுவிப்பதற்காக சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கும் என, நினைக்கவில்லை. உள்ளூர் மக்களும், மாநில அரசும் பேச்சுவார்த்தை நடத்தி அவரை விடுவித்து விடுவர். கலெக்டர் கடத்தப்பட்ட பகுதி தொலை தூரத்தில் உள்ளது என்பதால், அவர் விடுவிக்கப்பட சில நாட்களாகலாம். கலெக்டரை விடுவிப்பது தொடர்பாக நக்சலைட்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் அவர் திரும்பி வருவார். இருந்தாலும், சில நாட்களாகும்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கலெக்டர் கிருஷ்ணா சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சி நடக்கப் போவது பற்றி முன்பே விளம்பரம் செய்யப்பட்டதால், ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் பொதுமக்களின் பிரச்னைகளை கிருஷ்ணா கேட்டுள்ளார். இந்தக் கூட்டம் முடிந்த பின், பாலம் ஒன்றை பார்வையிட ஜூனியர் இன்ஜினியர்களுடன் கலெக்டர் கிருஷ்ணா, மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். 4 முதல் 5 கி.மீ., தூரத்தில் உள்ள அந்த இடத்திற்கு, பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் சென்றுள்ளார். இது அவரின் அர்ப்பணிப்பு உணர்வையே காட்டுகிறது. நக்சலைட் அபாயத்தை ஒழிக்க மாநில அரசுகள் கேட்கும் உதவிகளை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது; எதிர்காலத்திலும் செய்யும். கலெக்டர் கிருஷ்ணாவை விடுவிப்பதற்காக, அந்தப் பகுதிகளில் வேண்டுமானால், நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தப்பட்டலாம். அது பற்றி மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். சத்திஸ்கரில் சில நாட்களுக்கு முன், நக்சலைட்களால் கடத்தப்பட்ட போலீஸ்காரர் ஒருவரை விடுவிக்க, 48 மணி நேரத்திற்கு நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இவ்வாறு ஜி.கே.பிள்ளை கூறினார்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» நக்சலைட்டுகளால் பாதித்த மாநிலங்களுக்கு ரூ.120 கோடி:400 போலீஸ் ஸ்டேஷன்கள் கட்ட மத்திய அரசு ஒதுக்கியது
» ஓடிசா எம்.எல்.ஏ., நாளை விடுதலை: சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட கலெக்டர் நிலை என்ன?
» கூடங்குளம், முல்லைப் பெரியாறில் மத்திய அரசின் நிலை என்ன?
» டில்லி அரசு திரும்ப ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை, தமிழகத்திற்கு வழங்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
» ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் குறட்டைவிட்டு தூங்கிய சம்பவம்
» ஓடிசா எம்.எல்.ஏ., நாளை விடுதலை: சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட கலெக்டர் நிலை என்ன?
» கூடங்குளம், முல்லைப் பெரியாறில் மத்திய அரசின் நிலை என்ன?
» டில்லி அரசு திரும்ப ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை, தமிழகத்திற்கு வழங்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
» ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் குறட்டைவிட்டு தூங்கிய சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum