TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ராஜாவுக்கு மேலும் 3 நாள் காவல் நீட்டிப்பு : பதில் தராமல் மழுப்புவதாக சி.பி.ஐ.,புகார்

Go down

ராஜாவுக்கு மேலும் 3 நாள் காவல் நீட்டிப்பு : பதில் தராமல் மழுப்புவதாக சி.பி.ஐ.,புகார் Empty ராஜாவுக்கு மேலும் 3 நாள் காவல் நீட்டிப்பு : பதில் தராமல் மழுப்புவதாக சி.பி.ஐ.,புகார்

Post by ஜனனி Tue Feb 15, 2011 7:52 am

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்று முன்னாள் மத்திய
அமைச்சர் ராஜாவுக்கு மூன்று நாட்கள் காவல் நீட்டிப்பும், தொழிலதிபர்
பல்வாவுக்கு நான்கு நாட்கள் காவல் நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன்
மூலம் ராஜாவுக்கு நான்காவது முறையாக சி.பி.ஐ., காவல் நீட்டிப்பு
வழங்கப்பட்டுள்ளது. பதில் தராமல் மழுப்புவதாக ராஜா குறித்து சி.பி.ஐ.,
கருத்து தெரிவித்தது. இத்தடவை காவலுக்குப் பின், அவர் சிறையில்
அடைக்கப்படுவார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைது
செய்யப்பட்டு, சி.பி.ஐ., காவலில் வைத்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு
வருகிறார். கடந்த 2ம் தேதி அன்று கைது செய்யப்பட்ட ராஜாவை, டில்லியில்
சி.பி.ஐ., தலைமை அலுவலகத்தில் வைத்து தொடர்ச்சியாக அதிகாரிகள் விசாரணை
நடத்தி வருகின்றனர். இதுவரை மூன்று முறை காவல் நீட்டிப்புக்காக கோர்ட்டில்
ராஜாவை ஆஜர்படுத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று நான்காவது முறையாக
கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர்.பாட்டியாலா கோர்ட்டுக்கு மதியம் 2
மணியளவில் ராஜாவையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும்
மும்பையைச் சேர்ந்த பல்வாவையும் சி.பி.ஐ., அதிகாரிகள் அழைத்து வந்தனர்.
அங்கு, நீதிபதி சைனி முன் இருவரையும் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். பின்னர்
இவர்கள் இருவருக்கும் காவல் நீட்டிப்பு வழங்கும்படி சி.பி.ஐ., வக்கீல்
கோரிக்கை வைத்தார். அப்போது, ராஜாவின் வக்கீலான ரமேஷ் குப்தா எதிர்ப்பு
தெரிவித்து வாதாடினார்.
அவர் கூறியதாவது:போலீஸ் காவல் என்பது விசாரணைக்கு தேவையான ஒன்று
தான். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ராஜா விஷயத்தில் எதற்காக
அடுத்தடுத்து காவல் நீட்டிப்பு வேண்டும் என்பது புரியவில்லை. ராஜாவை
தொடர்ந்து காவலில் வைத்துக் கொண்டே பத்திரிகைகளுக்கு செய்திகளை கசிய
விடுவதற்கே சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிடுகின்றனர். முழுக்க முழுக்க
உள்நோக்கத்துடன் சி.பி.ஐ., செயல்படுகிறது. பத்திரிகைகளுக்கு செய்தி கசிய
விடுவதன் மூலம், ராஜாவை மேலும் மேலும் களங்கப்படுத்த முயற்சி
மேற்கொள்ளப்படுகிறது. கோர்ட்டுக்கு தரப்படாத விஷயங்களை எல்லாம்
பத்திரிகைகளுக்கு சி.பி.ஐ., தந்து கொண்டே இருக்கிறது. வழக்கிற்கு அவசியம்
இல்லாத விஷயங்களை தொடர்ந்து பரப்பியும் வருகிறது.எனவே, இவ்விஷயத்தில்
கோர்ட் தலையிட்டு, அவசியமற்ற விஷயங்களை சி.பி.ஐ., பரப்புவதற்கு தடை
விதிக்க வேண்டும். ஏற்கனவே 11 நாட்கள் ராஜாவை சி.பி.ஐ.,
விசாரித்துவிட்டது. விசாரணையில் எந்த புதிய தகவலும் கிடைக்கவில்லை. இந்த
சூழ்நிலையில் எதற்காக மீண்டும் மீண்டும் காவல் நீட்டிப்பு கேட்க வேண்டும்.
எனவே, காவல் நீட்டிப்பு வழங்கக் கூடாது.இவ்வாறு ரமேஷ் குப்தா கூறினார்.
தொழிலதிபர் பல்வாவின் வக்கீலான விஜய் அகர்வாலும் வாதிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:இவ்வழக்கில் முதலில் 240 கோடி ரூபாய்
பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பிறகு 200 கோடி ரூபாய்
பரிவர்த்தனை என்று இப்போது கூறுகின்றனர். பணம் எந்த இடத்திலிருந்து எந்த
இடத்திற்கு அளித்தது என்பது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எந்த
வழியில் பணம் சென்றுள்ளது என்பதையும் விளக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து
ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு வழக்குகள் என எல்லாமே சமர்ப்பிக்கப்பட்டும்
விட்டது. அனைத்துமே செக் வாயிலாகவே அளிக்கப்பட்டும் உள்ளது. இதில்
மறைத்ததற்கோ, முறைகேடு செய்ததற்கோ வழியும் இல்லை. எனவே, காவல் நீட்டிப்பு
முறையற்றது.இவ்வாறு அகர்வால் கூறினார்.
மழுப்பல்: பின்னர் சி.பி.ஐ., வக்கீலான அகிலேஷ் வாதிட்டதாவது:ராஜாவையும்,
பல்வாவையும் நேருக்கு நேர் வைத்து விசாரித்து விட்டோம். இருவருமே உண்மைகளை
கூற மறுக்கின்றனர். கேட்கும் கேள்விகளுக்கு பதில் தராமல் மழுப்பியும்,
சம்பந்தமில்லாத வகையிலும் பதில் அளிக்கின்றனர். நேரடியாக எதையும் கூற
மறுக்கின்றனர். இதனால், உண்மைகள் இன்னும் வெளிக்கொண்டு வர இயலவில்லை.பணம்
பரிவர்த்தனை எப்படி நடந்துள்ளது என்பது குறித்து புதிய விவரங்கள்
வருகின்றன. அது குறித்து இருவரிடமும் விசாரிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக
சினியுக் நிறுவனத்திடம் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பணம் மாற்றப்பட்ட
விஷயத்தில் நிறைய தகவல்கள் உள்ளன. ஆதாயத்தின் பேரில் தான் ராஜா இந்த பண
மாற்றத்தை செய்துள்ளார்.தவிர ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த தொலைத்தொடர்பு
அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்களும், கேஸ் டயரிகளும் காணாமல் போய் உள்ளன.
நிறைய விவரங்களை இன்னும் கைப்பற்றியாக வேண்டியுள்ளது. அதற்கான
நடவடிக்கைகள் தான் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. ராஜா 12 ஆண்டுகள்
மத்திய அமைச்சராக இருந்தவர். அரசியல் செல்வாக்கு மிக்கவர். பல்வாவும்
பெரிய கோடீஸ்வரர். இவர்களை வெளியில் விட்டால் இவ்வழக்கு சம்பந்தப்பட்ட
சாட்சிகளையும் தடயங்களையும் அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, காவல்
நீட்டிப்பு வழங்கிட வேண்டும்.இவ்வாறு அகிலேஷ் வாதிட்டார்.
இறுதியாக நீதிபதி சைனி, முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு மூன்று
நாட்களுக்கும், தொழிலதிபர் பல்வாவுக்கு நான்கு நாட்களுக்கும் காவல்
நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் சி.பி.ஐ.,
அலுவலகத்துக்கு மீண்டும் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இனி சிறை: முதல் முறை 5 நாட்களும், இரண்டாவது முறை 4 நாட்களும்,
மூன்றாவது முறை 2 நாட்களும் காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில்,
இப்போது நான்காவது முறையாக 3 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு
வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு விசாரணை கைதியை அதிகபட்சம் 14 நாட்கள்
வரை காவலில் வைத்து விசாரித்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்
அனுமதித்த உச்சபட்ச அளவை சி.பி.ஐ., முழுவதுமாக பயன்படுத்தியுள்ளது.இனி
வரும் வியாழக்கிழமை அன்று ராஜா, பாட்டியாலா கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்படுவார். ராஜாவின் வக்கீல் ஜாமீன் கேட்க வாய்ப்பும் உள்ளது.
ஆனால், கிரிமினல் வழக்கில் ஜாமீன் என்பது உடனடியாக கிடைக்காது என்று
கூறப்படுவதால், குறைந்த பட்சம் சிறையில் இருந்த பிறகு தான் ஜாமீன்
கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த நிலையில், கோர்ட்டில் இருந்து நேராக
திகார் ஜெயிலுக்குத் தான் ராஜா செல்வார் என்றும் கூறப்படுகிறது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum