Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானமா? - ஜெயராம் ரமேஷ் கண்டனம்
Page 1 of 1

திருவனந்தபுரம்:
நாட்டின் இயற்கை வளமான காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் கட்டுவது
அவசியம்தானா? என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
எழுப்பியுள்ளார்.
கேரளத்தில் கொச்சிக்கு அருகில் உள்ள எடகொச்சி என்ற இடத்தில் அடர்த்தியான
மாங்குரோவ் காடுகள் இயற்கையாக அமைந்துள்ளன. இந்தப் பிரதேசத்தை அழித்து
கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது கிரிக்கெட் அமைப்பு.
இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) அணிகளில் கொச்சி அத்ணியும்
இடம்பெற்றுள்ளதால் அங்கு விளையாட்டை நடத்தும் பொருட்டு இந்த மைதானத்தை
நிறுவ இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்த மைதானத்துக்காக பல ஏக்கர் பரப்பில் அடந்து செழித்து வளர்ந்துள்ள
மாங்குரோவ் காடுகள் அழிக்கப்படவுள்ளன. இதனால் திட்டத்துக்கு அந்த மாநில
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அந்த மாநிலத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எந்த ஒரு அரசியல்
கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒருமித்தமாக ஆதரவுதான்
தெரிவித்துள்ளனர்.
மாங்குரோவ் காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் நிறுவ உள்ளதற்கு மத்திய
சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளிப்படையான எதிர்ப்பையும்
ஆட்சேபத்தையும் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தென்மாநில வன அமைச்சர்களின் 4-வது
மாநாட்டை தொடங்கி வைத்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"நாட்டின் மதிப்பிட முடியாத சொத்து மாங்குரோவ் காடுகள். தென்
மாநிலங்களில்தான் இந்த காடுகள் அதிகம் உள்ளன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக
இக்காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. காரணம் மனிதர்களின்
விஷமத்தனமான திட்டங்கள்தான்.
சுனாமி போன்ற இயற்கை பேரிடரின்போது மனித சமுதாயத்துக்கே அரணாகவும் உள்ளவை
மாங்குரோவ் காடுகள்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி தாக்கிய
போது இதை அனுபவத்தின் மூலம் உணர்ந்தோம். கடலோரப் பகுதியில் மாங்குரோவ்
காடுகள் இருந்த பகுதியில் எல்லாம் பாதிப்பின் தன்மை குறைவாக இருந்ததை நாம்
அறிவோம்.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மாங்குரோவ் காடுகளை அழித்து எடகொச்சி
என்ற இடத்தில் கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளனர். இதற்கு
கேரளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒருமித்தமாக ஆதரவு தெரிவித்துள்ளது
கவலை அளிக்கும் விஷயம்.
இந்த இடத்தில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக நமக்கு மாங்குரோவ்
காடுகள் முக்கியமா? அல்லது கிரிக்கெட் முக்கியமா? என்ற கேள்வியை நமக்கு
நாமே எழுப்பி பதில் தேட முற்பட வேண்டும்.
காடுகள் அழிந்தால் என்ன நடக்கும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமலேயே பலர்
செயல்படுவதுதான் இன்று மோசமான பருவ கால மாறுதல்களைத் தோற்றுவித்து
வருகிறது.
தென் மாநிலங்களில் மாங்குரோவ் காடுகள் அழிந்து வருவது கவலைக்குரிய விஷயம்.
இக்காடுகளை பாதுகாக்கவும், இக்காடுகளின் பரப்பளவை விஸ்தரிக்கவும் மாநில
அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழங்குடியினர் பற்றிய பார்வை மாற வேண்டும்!
பழங்குடியினர் பற்றிய வனத்துறை அதிகாரிகளின் பார்வை நிச்சயம் மாற வேண்டும்.
காடுகளுக்கு பழங்குடி மக்களே முக்கிய அரண்களாக இருக்கும்படி வனத்துறையினர்
பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அவர்கள் மீது வன பாதுகாப்புச்
சட்டத்தைப் பாய்ச்சக் கூடாது.
பசுமை இந்தியா...
'பசுமை இந்தியா இயக்கம்' திட்டத்தின் மூலம் நாட்டில் தரமான காடுகள் மற்றும்
அதன் பரப்பை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல்
பாதுகாப்பின் ஒரு பகுதியாக இந்த தேசியத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்துக்கு பிப்ரவரி 22-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்
அளிக்கவுள்ளார்.
நாடு முழுவதும் இன்னும் 50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காடுகளை உருவாக்கி பாதுகாப்பதுதான் இத்திட்டத்தின் குறிக்கோள்.
இத்திட்டம் வழக்கம்போல் மாநில வனத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படாது.
கிராமப் பஞ்சாயத்துகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், வன மேலாண்மை
குழுக்கள் மூலம் அமல்படுத்தப்படும். காடுகளை மக்களே உருவாக்கி பாதுகாக்க
வேண்டும். இதற்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகள் மட்டும் மாநில வனத்துறையிடம்
இருந்து பெற்றுக்கொள்ளப்படும்," என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
செய்தி நன்றி:-
thatstamil

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» இவர்கள் இல்லாமல் காடுகளை காப்பாற்றுவது சாத்தியமா?
» கமலுடன் இணையும் ஜெயராம்!
» வாணி ஜெயராம் பிறந்த நாளின்று!
» மனித ஜாதி அழித்து...
» கிறிஸ்தவத்தினை அழித்து உலக அரசியலை ஆட்டங்காணவைக்கப் போகும் தோலாலான நூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum