Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
திருப்பூர் சாய ஆலைகள் மூடல்: உறுதி செய்தது ஐகோர்ட்: மேல்முறையீடு செய்ய முடிவு
Page 1 of 1

"ஜீரோ டிஸ்சார்ஜ்' சான்று பெறாத சாய ஆலைகள், பொது மற்றும் தனியார்
சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டும் என்ற உத்தரவை, சென்னை ஐகோர்ட்
நேற்று மீண்டும் உறுதிப்படுத்தியது. இனி, சாய ஆலைகளை இயக்க வேண்டுமெனில்,
சுப்ரீம் கோர்ட்டிடம் முறையிட்டு, அவகாசம் பெற வேண்டும். எனவே, சாய ஆலைகள்
மீண்டும் எப்போது இயங்கும் என்பதை கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் தொடர்ந்து வழக்கு,
சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட உத்தரவை அமல்படுத்தாததால், போடப்பட்ட அவமதிப்பு
வழக்கு என்பதால் சிக்கலான சூழல் நிலவுகிறது. சாய ஆலைகளை ஒட்டுமொத்தமாக
மூடினால், நான்கு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். அவர்களின்
குடும்பம் பாதிக்கப்படும். பனியன் தொழில் என்பது சங்கிலித் தொடராக
பிணைந்திருப்பதால், சாய ஆலைகள் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த தொழிலும்
பாதிக்கப்படும். படிப்படியாக ஒவ்வொரு தொழிலின் இயக்கும் நிற்கும்.
தற்போது, கோடை கால ஆர்டரை முடித்துக் கொள்ள, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள்
மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், கோர்ட் பிறப்பித்துள்ள
உத்தரவு, பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சிக்கலான சூழல் தொடர்பாக, சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் சாமியப்பனிடம் கேட்ட போது,
""சாய ஆலை உரிமையாளர்கள் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகளுடன்
கலந்தாய்வு நடத்தி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது குறித்து
முடிவு செய்யப்படும்,'' என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: ஐகோர்ட் உத்தரவுப்படி, விரைவில் சாய
ஆலைகளும், சுத்திகரிப்பு நிலையங்களும் மூடப்படும். அடுத்தகட்ட நடவடிக்கை
குறித்து, பிற தொழில் அமைப்புகளிடம் ஆலோசனை பெறப்பட்டது; சங்க
நடவடிக்கைகளுக்கு, அனைத்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. நாளை
(இன்று) காலை, நிர்வாக குழு மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசித்து, சுப்ரீம்
கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.தொடர்ந்து
சிக்கல் ஏற்பட்டு வருவதால், சாயத்தொழிலை காப்பாற்ற வேண்டியது அவசியமாகி
உள்ளது.
சங்க உறுப்பினர்கள் மற்றும் பிற தொழில் அமைப்பினரின் ஆலோசனைப்படி,
அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் முடிவு செய்யப்படும்.அனைத்து சாய
ஆலைகளின் மின் இணைப்பையும் துண்டிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மக்கள்
நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள ஆலைகளில் பொருட்கள் திருட்டு போக
வாய்ப்புள்ளது. எவ்வளவு தான் ஆட்களை நியமித்திருந்தாலும், இருட்டான
பகுதியில் விலை மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பது அவ்வளவு எளிதானதல்ல;
ஜெனரேட்டர் மூலமாக விளக்கு எரிக்கும் அளவுக்கு பொருளாதார வசதியும் இல்லை.
எனவே, மின் விளக்கு எரிவதற்காக "சிங்கிள் பேஸ்' இணைப்பாவது கொடுக்க
வேண்டும் என, கோர்ட்டில் வலியுறுத்தப்பட்டது.அதற்காக தனியாக மனு
செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டது; அதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி
விடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சாய ஆலை உரிமையாளர்களின் உடமைகளையும்,
எதிர்காலத்தையும் காப்பாற்ற, தமிழக அரசு கைகொடுத்து உதவ வேண்டும், என்றார்.
அறிக்கை தயாரிக்கிறது, மாசுக்கட்டுப்பாடு வாரியம்: சென்னை
ஐகோர்ட்டில் நடந்த சாய ஆலைகள் வழக்கு, சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வந்த
காலத்தையும் கணக்கிட்டு, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் பெயர்
பட்டியல் கோரப்பட்டுள்ளது. வாரிய அதிகாரிகள் செயல்பாடுகளை விளக்கி,
விரிவான அறிக்கை தயாரித்து, கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக,
மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மாசுக்கட்டுப்பாடு
வாரியத்தின் சுற்றுச்சூழல் மற்றும் ஆய்வக பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 2006 டிச., மாதம் வெளியான சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, 2007 ஜூலை
31க்குள் ஆர்.ஓ., நிர்மான பணிகள் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்; அபராத
தொகையும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். முதல் இரண்டு மாதம் அபராதம்
செலுத்தி சாய ஆலைகள், சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு, 2009 அக்.,6 வரை
அவகாசம் பெற்றன; மீண்டும் 2010 ஜன., 5 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.
"ஜீரோ டிஸ்சார்ஜ்' பணிகள் துவங்கிய பிறகும் மூன்று மாதங்களுக்கு சோதனை
அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகே, தீவிர கண்காணிப்பு நடந்தது. அதன்படி,
முறைகேடாக செயல்பட்ட ஆலைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து மூடப்பட்டன.
குறைபாடுகளை சரிசெய்த பின், மீண்டும் இசைவாணை வழங்கப்பட்டன. வாரியத்துக்கு
வழங்கப்பட்டிருந்த அதிகாரம் அவ்வளவே.
தற்போது வெளியாகியுள்ள கோர்ட் உத்தரவில், 2007 முதல் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டது. ஆனால், சாய ஆலைகள் அவகாசம் பெற்றிருந்த காலத்தில்,
மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல்
கொடுக்கப்பட்டுள்ளது. 2010 மார்ச் முதல் கடந்த மாதம் வரை பல ஆலைகள்
மூடப்பட்டுள்ளன. கடந்த மாத நிலவரப்படி, 400 சாய ஆலைகள்
மூடப்பட்டுள்ளன.குறிப்பிட்ட கால இடைவெளியில், திருப்பூரில் இருந்து
ஒரத்துப்பாளையம் வரை, கழிவுநீர் பரிசோதனை செய்து அறிக்கை
தயாரிக்கப்பட்டுள்ளது. கோர்ட் அவமதிப்பு வழக்கு என்பதால், கடந்த ஆறு
ஆண்டுகளாக பணியாற்றிய அதிகாரிகள் பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒவ்வொரு அதிகாரிகள் காலத்திலும் ஆய்வு பணிகள்
மேற்கொள்ளப்பட்டன. கோர்ட் உத்தரவுக்கு விரைவில் பதில் அளிப்பதற்காக,
விரிவான ஆய்வறிக்கை தயாரித்து சமர்ப்பிக்கப்பட உள்ளது.இவ்வாறு, அதிகாரிகள்
தெரிவித்தனர்.
கோர்ட்டில் விவாதம் : திருப்பூரில் சாயப்பட்டறைகளை மூடுவது
தொடர்பாக பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி மனு தாக்கல் செய்வதாக,
சென்னை ஐகோர்ட்டில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நேற்று
தெரிவிக்கப்பட்டது.நொய்யல் ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றும்
சாயப்பட்டறைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உடனடியாக மூடுமாறு,
மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி
சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்காக, இவ்வழக்கு நேற்று
பட்டியலிடப்பட்டிருந்தது.தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய
"முதல் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசு
கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சீனியர் வக்கீல் வில்சன், வக்கீல்
ரமண்லால் ஆஜராகினர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீதான கோர்ட்
அவமதிப்பு வழக்கில், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யவோ,
உத்தரவில் மாற்றம் செய்யவோ கோரி மனு தாக்கல் செய்வதாக, சீனியர் வக்கீல்
வில்சன் தெரிவித்தார்.
அதற்கு, தலைமை நீதிபதி இக்பால், "வாய்மொழியாக நீங்கள் கூறுவதை
வைத்து நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் எப்போது மனு தாக்கல்
செய்கிறீர்களோ, அப்போது பார்க்கலாம். நீங்கள் வேண்டுமானால் சுப்ரீம்
கோர்ட்டுக்கு செல்லுங்கள்' என்றார்.
அரசு பிளீடர் ராஜாகலிபுல்லா, "திருப்பூரில் நேரடியாகவும், மறைமுகமாவும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.
அதற்கு தலைமை நீதிபதி, "நாங்கள் உத்தரவு பிறப்பித்து விட்டோம். தற்போது எங்கள் முன் மனு இல்லை. வாய்மொழியாக கூறுவதை நாங்கள் ஏற்க முடியாது' என்றார்.
போலீஸ் கண்காணிப்பில் சாய ஆலைகள் : சென்னை ஐகோர்ட்
உத்தரவுப்படி, மாசு கட்டுப்பாட்டுவாரியம் சாய ஆலைகளை மூடவும்,
மின்வாரியம், மின் இணைப்புகளை துண்டிக்கவும் நேற்று தயார் நிலையில்
இருந்தனர். அச்சமயங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில்
இருக்க, நேற்று திருப்பூர் போலீசார் உஷார் நிலையில் இருந்தனர். சாய சலவை
ஆலைகள் அதிகளவில் நிறைந்துள்ள சில பகுதிகளில் போலீசார் தீவிர கவனம்
செலுத்தினர்; ரோந்து வாகனங்களில் சென்ற போலீசர், சாய ஆலைகளை கண்காணித்தனர்.
திருப்பூர் டி.எஸ்.பி., ராஜா கூறுகையில், "" சாய ஆலைகள்
அதிகமுள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு இருந்தது; ரோந்து வாகனங்கள்
அப்பகுதிகளில் நிறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. மாசு கட்டுப்பாடு
வாரியம் மற்றும் மின்வாரியம் தரப்பில் நடவடிக்கைகள் எதுவும் இல்லை; எனவே,
அதற்கான உத்தரவு வந்து அத்துறைகள் சார்பில் சாய ஆலைகளில் நடவடிக்கை
எடுக்கும்போது, போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர்,'' என்றார்.
நகல் கிடைத்ததும்...!மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கண்ணன் கூறுகையில்,""ஐகோர்ட்டில்
மறுவிசாரணை உத்தரவு நகல் பெற, மாசுக்கட்டுப்பாடு வாரிய நிலைக்குழு
விண்ணப்பித்திருந்தது. அதன்படி, வாரியத்துக்கான உத்தரவு நகல் கிடைத்ததும்,
மாவட்ட வாரிய அலுவலகம் வாயிலாக, மின் வாரியத்திற்கு பரிந்துரைக்கப்படும்.
அதன் பின், சாய ஆலைகள், தனியார், பொது சுத்திகரிப்பு நிலையங்களின் மின்
இணைப்பு துண்டிக்கப்படும். கோர்ட் உத்தரவில் அறிவுறுத்தியுள்ளபடி, ஆய்வு
மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.
திருப்பூரில் வரும் 4ல் "பந்த்' இந்து முன்னணி அறிவிப்பு : "சாய
ஆலை கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூரில்
வரும் 4ம் தேதி முழு வேலை நிறுத்த போராட்டம் செய்ய உள்ளது,' என இந்து
முன்னணி அறிவித்துள்ளது.
இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை
ஐகோர்ட் உத்தரவுப்படி, திருப்பூரில் சாய ஆலைகள் மூடப்படுவதால் பல லட்சம்
தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். இத்தொழிலை நம்பியுள்ள வெளிமாநில,
வெளிமாவட்டங்களை சேர்ந்த நான்கு லட்சம் தொழிலாளர்கள் நிலை
கேள்விக்குறியாகும். பனியன் தொழில் சார்ந்த அனைத்து தொழில்களும்
முடங்கும். "ஜீரோ டிஸ்சார்ஜ்' முறை சாத்தியமில்லாத பட்சத்தில்,
சாயக்கழிவுநீரை கடலில் கொண்டு சேர்ப்பதே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக
அமையும். குஜராத் மாநிலத்தில், இவ்வாறு கழிவுநீர் கடலில்
கலக்கப்படுகிறது.கடந்த 65 ஆண்டுகளில், சொந்த முயற்சிகளில் பலரும் போராடி
திருப்பூரை பனியன் தொழில் நகரமாக உருவாக்கி உள்ளனர்.
தொழில்களை செய்ய, தொழில்களை வளர்க்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து
வரும் நிலையில், திருப்பூரில் பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி தரும்
பனியன் தொழிலை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும். சாய ஆலைகளை மூடிவிட்டால்,
திருப்பூரில் எதுவும் இருக்காது.கோர்ட்டில் அரசு கூடுதல் அவகாசம் பெற்று
தந்து, சாய ஆலைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். 2,100 டி.டி.எஸ்., அளவில்
கழிவுநீர் வெளியேற்ற சுற்றுச்சூழல் பாதிப்பதில்லை என்ற அடிப்படையில்
கழிவுநீரை வெளியேற்ற அனுமதி பெற்று தர வேண்டும். அத்துடன், திருப்பூரில்
சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கடலில் கொண்டு செல்லும்
திட்டத்தை, அரசு கையில் எடுத்து செயல்படுத்தி, இப்பிரச்னைக்கு நிரந்தர
தீர்வு காண வேண்டும்.இக்கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 4ம் தேதி காலை 6.00
மணி முதல் மாலை 6.00 மணி வரை திருப்பூர் பகுதி முழுவதும், முழு வேலை
நிறுத்தம் செய்ய, இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. தேர்தல் வரை
இப்பிரச்னை நீடிக்குமானால், தேர்தலில் கடுமையான எதிர்பிரசாரத்திலும்
ஈடுபடுவோம். இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி எம்.பி., -
எம்.எல்.ஏ., போன்ற மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து,
அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும், என்றார்.
கடலில் கலக்கும் திட்டம் செயல்படுத்தாதது ஏன்? அ.தி.மு.க., கேள்வி :
""சாயக்கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டம் ஜெயலலிதா அறிவித்தது என்பதால்,
செயல்படுத்தாமல் தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள்ளது,'' என திருப்பூர்
மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சண்முகவேலு எம்.எல்.ஏ., குற்றம்
சாட்டியுள்ளார்.திருப்பூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 30
ஆண்டுகளில் திருப்பூரில் பனியன் தொழில் பெரிதும் வளர்ந்துள்ளது. பல லட்சம்
பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து, ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய
செலாவணியை ஈட்டுகிறது. இதற்கு அடிப்படையான சாய ஆலைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
சாய ஆலைகளில் "ஜீரோ டிஸ்சார்ஜ்' என்பது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று.
இதை நிர்ப்பந்தம் செய்வது முறையல்ல.
அதே சமயம், சாயக்கழிவால் விவசாயம் பாதிக்கப்படுவதும் தவிர்க்கப்பட
வேண்டும். இதற்கு தீர்வு சாயக்கழிவை குழாய் மூலம் கடலில் கொண்டு
சேர்ப்பது; இதற்கு 700 கோடி ரூபாய் செலவாகும். மத்திய - மாநில அரசுகள்
இச்செலவை ஏற்று நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தும் எந்த நடவடிக்கையும்
இல்லை. ஜெயலலிதா அறிவித்த திட்டம் என்பதால், இதை செயல்படுத்த அரசு
அலட்சியம் காட்டுகிறது.சாய ஆலைகளில் சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு மத்திய,
மாநில அரசுகள் அறிவித்த மானியத்தொகை இதுவரை வழங்கப்பட வில்லை. இது, சாய
ஆலைகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சாயக்கழிவு பிரச்னை பல
பகுதிகளில் உள்ளது. ஆனால், இங்கு மட்டுமே இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவை மதிக்க வேண்டிய அதே வேளையில்,
தொழில் துறையின் நலனை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். விவசாயிகள், சாய ஆலை
உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள் கொண்ட முத்தரப்பு கமிட்டி ஏற்படுத்தி,
உரிய மாற்று நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வேண்டும். அரசியல் வேறுபாடு
இல்லாமல் உரிய தீர்வு குறித்து சிந்திக்க வேண்டும்.சாய ஆலைகளை மூடினால்
ஒட்டுமொத்த பனியன் தொழிலே ஸ்தம்பிக்கும். திருப்பூர் மாவட்டம் முழுவதும்
பெரும் பாதிப்பு ஏற்படும்; சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். கோர்ட்
தீர்ப்பால், சாய ஆலைகள் மூடப்பட்டு, பனியன் தொழிலுக்கு நூல் கொள்முதல்
நிறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜின்னிங், ஸ்பின்னிங்,
எக்ஸ்போர்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பும் பெரும் பாதிப்பை
சந்திக்கும் நிலை உள்ளது.சாய ஆலைகள் தரப்பில் எங்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டால், அவர்களுக்கு ஆதரவாக களமிறங்க உள்ளோம். தமிழக அரசு,
உடனடியாக தலையிட்டு, அரசு வக்கீல்கள் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் உரிய
வாதங்களை எடுத்து வைத்து, போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.சாய
ஆலை பிரச்னை தொடர்பான போராட்டம், அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா
உத்தரவுக்கு பின், அறிவிக்கப்படும். இப்பிரச்னை குறித்து அவருக்கு அனைத்து
விபரங்களும் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தயார் செய்து அனுப்பப்பட உள்ளது,
என்றார்.
சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை : ""சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து,
தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும்,'' என திருப்பூர்
ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.அவர் மேலும்
கூறுகையில்,""சாயத்தொழில் என்பது பனியன் ஏற்றுமதி வர்த்தகத்தின்
முதுகெலும்பு போன்றது. திடீரென சாய ஆலைகளை மூடும்போது, ஏற்றுமதி ஆடை
உற்பத்தி முடங்கும். ஈரோடு, பவானி, பெருந்துறை பகுதிளுக்கு சென்று
துணிகளுக்கு சாயமிடுவது எளிதான காரியம் இல்லை. சாயத்தொழிலுக்கு
ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சட்ட வல்லுனர்களுடன்
ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில், தொழில் அமைப்புகளின் கூட்டு
கமிட்டியை கூட்டி, அடுத்தகட்ட தொழில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து
முடிவு செய்யப்படும்,'' என்றார்.
"சைமா' தலைவர் ஈஸ்வரன் கூறுகையில்,""சாய, சலவை ஆலைகள்
மூடப்படும்போது, உள்நாட்டு வர்த்தகத்துக்கான ஆடை தயாரிப்பிலும், ஏற்றுமதி
உற்பத்தியும் வெகுவாக பாதிக்கும். இந்தாண்டு வர்த்தகத்தில் சரிவு
ஏற்படும். சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்துடன் ஆலோசனை நடத்தி, கூட்டு
கமிட்டி மூலமாக முக்கிய முடிவு எடுக்கப்படும். அரசு உதவியை பெறவும், சட்ட
ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடரவும் விரைவில் முடிவு
எடுக்கப்படும்,'' என்றார்.
மாசு கட்டுப்பாடு வாரிய அறிக்கைக்காக மின்வாரியம் காத்திருப்பு:
ஐகோர்ட் உத்தரவுப்படி சாய ஆலைகளில் மின் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கை
எடுக்க, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிக்கைக்காக, திருப்பூர் மின்வாரிய
அதிகாரிகள் நேற்று மாலை வரை காத்திருந்தனர்.திருப்பூரில் செயல்படும் சாய,
சலவை ஆலைகளை மூட, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது; இந்த உத்தரவை
நடைமுறைப்படுத்தும் வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம், சாய சலவை
ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சாய
ஆலைகளில் மின் இணைப்பு மீட்டர் பாக்ஸ் பகுதியில் உள்ள "ப்யூஸ்கேரியர்'
மற்றும் மின் இணைப்பு தரப்பட்டுள்ள மின்கம்பத்தில் இருந்தும் மின் இணைப்பை
துண்டிக்க, மின்வாரியம் முடிவு செய்துள்ளது. மின்வாரிய அதிகாரிகள், மின்
இணைப்பை துண்டித்த பிறகும், முறைகேடாக மின் திருட்டு நடக்காமல் முற்றிலும்
தடுக்க முடியும். மீண்டும் மின்வாரியத்தின் முறையான அனுமதிக்கு பின்பே
மின் இணைப்பை பெற முடியும்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர்
கூறுகையில், "சாய ஆலைகளில் மின் இணைப்பை துண்டிக்க, மாசு கட்டுப்பாட்டு
வாரியத்தின் உத்தரவுக்காக, இன்று (நேற்று) மாலை வரை காத்திருந்தோம்; மாசு
கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து, அதற்கான உத்தரவு நகல் வரவில்லை; இதுவரை
மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை, '' என்றார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அரசு பஸ்சை கடத்தி 9 பேரை கொன்ற டிரைவருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்
» இளவரசன் தற்கொலை செய்தது உறுதி: எஸ்.பி.,
» தயா "சைபர் பார்க்' ஆக்கிரமிப்பு விசாரணை தொடக்கம்: உறுதி செய்தது வரைபடம்
» தகவலை உறுதி செய்து கொண்டு நடவடிக்கை : தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
» தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum