Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மகிந்த ராஜபக்சவினது இராசதந்திரத்திற்கு அடுத்த பலிக்கடா கருணாநிதி
Page 1 of 1

அரச தகவல்களின் படி கருணாநிதிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில்
தொலைபேசி வழி உரையாடல்களும் இடம்பெற்றிருக்கிறன. தமிழ்நாட்டு முதல்வர்
கருணாநிதிக்கும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான
இந்த உறவினை கலைஞரின் மகள் கனிமொழி ஊடாகவே தொண்டமான்
சாத்தியமாக்கியிருக்கிறார்.
இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான
டெயிலிமிரரில் அதன் பத்தி எழுத்தாளர் Upul Joseph Fernando
குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர்
தி.வண்ணமதி.
தமிழ்நாட்டிலுள்ள பாடசாலைகளில் சிறிலங்காவினது அதிபர் ராஜபக்சவினது
உருவப்படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டி விநியோகிக்கப்பட்டதை எதிர்த்து
போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள்
கைதுசெய்யப்பட்டிருப்பதாக கடந்தவாரம் இந்திய ஊடகமொன்று செய்தி
வெளியிட்டிருந்தது.
போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் மகிந்த ராஜபக்ச என்ற
பெயரைக் கேட்டாலே அனைவரும் கோபத்தினை வெளிப்படுத்தும் ஒரு தன்மையே
தமிழ்நாட்டில் காணப்பட்டது.
ஆனால் இன்று அதிபர் ராஜபக்சவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டிகளைப்
பாடசாலைகளில் விநியோகிக்கும் அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.
மேலும், இதுபோல நாட்காட்டி விநியோகிக்கப்பட்டதை எதிர்த்து வீதிக்கிறங்கிப்
போராட்டம் நடாத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதும் தெளிவான செய்தியினைச்
கூறி நிற்கிறது.
போர் தீவிரம் பெற்றிருந்த காலப்பகுதியில் மகிந்த அரசாங்கத்திற்கு எதிரான
போராட்டங்களை தலைமையேற்று நடாத்தியவர் வேறு யாருமல்ல, தமிழ்நாட்டு முதல்வர்
கருணாநிதிதான்.
ஆனால் இன்று மகிந்த ராஜபக்சவிற்கும் தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிக்கும்
இடையில் ஏற்பட்டிருக்கும் நெருங்கிய உறவு பலருக்கு அதிசயமாகியிருக்கிறது.
இவர்களுக்கிடையில் இந்த உறவு ஏற்படுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசினது
தலைவர் எஸ். தொண்டமான்தான் காரணகர்த்தாவாக இருந்திருக்கிறார்.
அண்மைய காலங்களில் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு பயணம் செய்த தொண்டமான்
கருணாநிதியினைச் சந்தித்து அதிபர் ராஜபக்சவின் தகவல்களைப்
பரிமாறியிருக்கிறார். இப்படித்தான் இவர்களுக்கிடையிலான உறவு ஆரம்பமானது.
குறிப்பிட்ட சில அரச தகவல்களின் படி கருணாநிதிக்கும் மகிந்த
ராஜபக்சவிற்கும் இடையில் தொலைபேசி வழி உரையாடல்களும் இடம்பெற்றிருக்கிறன.
தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிக்கும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த
ராஜபக்சவிற்கும் இடையிலான இந்த உறவினை கலைஞரின் மகள் கனிமொழி ஊடாகவே
தொண்டமான் சாத்தியமாக்கியிருக்கிறார்.
கனிமொழிக்கும் தொண்டமானுக்கும் இடையில் நெருங்கிய நட்பு இருப்பதாகத்
தெரிகிறது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று
சிறிலங்காவிற்கான சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருந்தது.
இந்தக் குழுவில் அங்கம் வகித்திருந்த கனிமொழியும் சிறிலங்காவினது வடக்குப்
பகுதிக்கு வந்திருந்தார். இதனைத் தொடர்ந்துதான் கனிமொழிக்கும்
தொண்டமானுக்கும் நட்பு ஆரம்பித்திருக்கிறது.
இதற்கு முன்னர் கருணாநிதியும் அவரது மகள் கனிமொழியும் சிறிலங்கா மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகவே செயற்பட்டுவந்தார்கள்.
போர் முடிவுக்கட்டத்தினை நெருங்கியிருந்த வேளையில் மகிந்த ராஜபக்சவிற்கு
எதிரான கருத்துக்களை இவர்கள் இருவரும் வெளிப்படையாகவே வெளியிட்டு
வந்தார்கள்.
இதன்போது விடுதலைப் புலிகள் அமைப்பினையும் அதன் தலைவர் பிரபாகரனையும்
ஆதரித்து மாநிலம் தழுவிய போராட்டங்களையும் கருணாநிதி ஒழுங்கு
செய்திருந்தார்.
எல்லாவற்றையும் விட விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப
தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அவரது நினைவாக கருணாநிதி கவிதை ஒன்றை
எழுதியிருந்தார். போர் முடிவுக்கு வந்த பின்னரும்கூட சிறிலங்கா அரசாங்கம்
அகதிகளை மோசமாக நடாத்துகிறது எனக் கூறி கருணாநிதியும் மகள் கனிமொழியும்
பல்வேறு அறிக்கைகளை விடுத்திருந்தார்கள்.
போர் முடிவுக்கு வந்த சில மாதங்களின் பின்னர் கருணாநிதி விநோதமானதொரு அறிக்கையினை விடுத்திருந்தார்.
சிறிலங்காவினது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அரசியல் தீர்வு
முன்வைக்கப்படவேண்டுமெனில் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை
மேற்கொள்வது அவசியமானது என கருணாநிதி அந்த அறிக்கையில்
குறிப்பிட்டிருந்தார். மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து பணிசெய்யாமல் தீர்வு
எதனையும் கொண்டுவரமுடியாது என்றார் அவர்.
கருணாநிதியின் இந்தத் திடீர் மாற்றம் பலதரப்பட்ட மக்கள் மத்தியில்
அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் கனிமொழி ஊடாக மகிந்தவிற்கும்
கருணாநிதிக்கும் இடையில் தொண்டாமானின் கடுமையான உழைப்பின் பயனாக
கொண்டுவரப்பட்ட 'உடன்பாடு' பற்றி அறிந்தவர்கள் கருணாநிதியின் இந்த அறிக்கை
தொடர்பில் அதிர்ச்சியடையவில்லை.
இந்த உடன்பாட்டின் பின்னர்தான் சிறிலங்காவினது வடக்குக் கிழக்கில் அகதி
முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் நிலை தொடர்பாக நேரடியாக
அறிந்து கொள்வதற்காக தமிழ்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் குழுவொன்று
சிறிலங்காவிற்குப் பயணம் செய்தது.
இந்தக் குழுவில் கனிமொழியும் அங்கம் வகித்தார். தமிழ்நாட்டு சட்டசபை
உறுப்பினர்களின் சிறிலங்காவிற்கான பயணத்தின் இறுதிக் கட்டத்தினை அடைந்தபோது
கருணாநிதி மகிந்தவின் நண்பனாக மாறினார்.
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழ்நாட்டில் இறுதியாக இடம்பெற்ற தேர்தலில்
வெற்றிபெறும் நோக்கில் கருணாநிதி மகிந்த எதிர்ப்பு நிலைப்பாட்டினையே
எடுத்திருந்தார். அந்தத் தேர்தலில் கருணாநிதி பெருவெற்றியினைத்
தனதாக்குவதற்கு அவர் மகிந்த எதிர்ப்பு நிலைப்பாட்டினை எடுத்ததும் ஒரு
காரணம்.
ஆனால் தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தமிழர்களது
விடயத்தினைக் கையிலெடுக்கும் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தனது
வாக்குவங்கியினைப் பலப்படுத்திவிடக்கூடும் என்ற அச்சம் கருணாநிதிக்குத்
தற்போது எழுத்திருக்கிறது.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிலுள்ள பாடசாலைகளில் அதிபர் மகிந்த
ராஜபக்சவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டிகள்
விநியோகிக்கப்படுவதற்கு கருணாநிதி அனுமதித்திருக்கிறார் போலும்.
தனது அரசியல் சாணக்கியத்தைப் பயன்படுத்தியே மகிந்த ராஜபக்ச கருணாநிதியினை
வென்றிருக்கிறார். அதே சாணக்கியத்தினையே அதிபர் ராஜபக்ச ஐ.நாவினது செயலாளர்
நாயகம் பன் கீ மூனுக்கும் பிரயோகித்திருந்தார். மகிந்தவினது இராசதந்திர
முனைப்புக்களின் விளைவாகவே பன் கீ மூம் தான் அமைத்த வல்லுநர்கள் குழுவினைச்
சிறிலங்காவிற்கு அனுப்பமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் எனச் சிலர்
கூறுகிறார்கள்.
மகிந்தவின் சாணக்கியத்திற்குப் பலிக்கடாவான அடுத்த நபர் கருணாநிதியா அல்லது
இல்லையா என்பது தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ள மாநிலத் தேர்தல்களின்
பின்னர்தான் தெரியவரும்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஆம் ஆத்மியின் அடுத்த குறி தி.மு.க- கலக்கத்தில் கருணாநிதி
» அடுத்த முறை யாருக்கு மந்திரி பதவி? கருணாநிதி தகவல்
» தி.மு.க.,வின் அடுத்த தலைவர் யார்? அழகிரி பேட்டிக்கு கருணாநிதி பதில்
» அதிசயம் ஆனால் உண்மை கருணாநிதி இப்படத்திலிருப்பதுபோல் ஒருநாள் நிச்சயம் கருணாநிதி மாறுவார்
» யாழிற்கு செல்லவுள்ள மகிந்த!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum