TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வடை பஜ்ஜி

Go down

வடை பஜ்ஜி Empty வடை பஜ்ஜி

Post by Tamil Wed Feb 03, 2010 7:52 am

வடை பஜ்ஜி Vadai
தென்னிந்தியர்களின் சிற்றுண்டி
வகைகளில் வடைக்கு முக்கிய இடம் உண்டு. வீட்டில் விஷேசம் என்றால், என்ன
சாப்பாடு, வடை பாயசமா? என்று கேட்கும் அளவிற்கு விஷேசங்களும் வடைக்கும்
மிகப் பெரிய தொடர்பு உள்ளது. இந்த வடையில்தான் எத்தனை எத்தனை வகைகள்! மெது
வடை, மசால் வடை, தவலை வடை என்று வித விதமான ருசியில் பல்வேறு வகை வடைகள்
தயாரிக்கப்படுகின்றன.

வடை பஜ்ஜி Vadai
வடையைப் போன்றே பஜ்ஜி, போண்டா
ரகங்களும் மிகவும் ருசியானவை. எண்ணெய்யில் பொரித்து எடுக்கப்படும்
சமாச்சாரங்கள். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் கொஞ்சம் கவனமுடன்
சாப்பிட வேண்டும். மாலை நேரத்தில் சூடான பஜ்ஜியும், சுவையான டீயும்
கிடைத்தால், சிலருக்கு சொர்க்கம் அதுவே.பருப்பு வடை செய்யும்போது
முளைவிட்ட பயறு சேர்த்து அரைத்து செய்தால், சுவை கூடுவதுடன் சத்தும்
பலமடங்கு அதிகரிக்கும். பஜ்ஜி, போண்டா போன்றவை மிருதுவாக உப்பினாற்போல்
வருவதற்கு சிலர் சிறிது சோடா உப்பு சேர்ப்பார்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

வடை பஜ்ஜி Empty அவல் வடை

Post by Tamil Wed Feb 03, 2010 7:53 am

அவல் வடை



தேவையான பொருட்கள்




  • அவல் -- 1 கப்
  • கடலை மாவு -- 2 டேபிள்ஸ்பூன்
  • வெங்காயம் -- 1/2 கப் (பொடிதாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் -- 4 என்னம்
  • சீரகம் -- 1 டீஸ்பூன்
  • இஞ்சி -- 1/2 அங்குலம் அளவு
  • சோடா மாவு -- 1 சிட்டிகை அளவு
  • கறிவேப்பிலை -- 1 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)
  • உப்பு , எண்ணைய் -- தே.அ




செய்முறை




  • அவலை வெறும் வாணலியில் 1 நிமிடம் வறுத்து பின் மிக்ஸியில் ஒரு சுத்து மட்டும் சுத்தி எடுக்கவும்.
  • தண்ணீர் விட்டு தூசியை நீக்கி 2 மணிநேரம் ஊறவிடவும்.
  • பின் தண்ணீரை வடிக்கவும்.
  • பச்சைமிளகாய்,சீரகம்,இஞ்சியை கரகரப்பாக மிக்ஸியில் அரைக்கவும்.
  • அதை அவலுடன் சேர்க்கவும்.
  • மீதியுள்ள அனைத்து பொருட்களுடன் உப்பு சேர்த்து வடை மாவிற்கு பிசையவும்.
  • பின் வாணலியில் எண்ணையை காயவைத்து வடையை போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
  • வித்தியாச சுவையுடன் அவல் வடை ரெடி.





வழங்கியவர்


Subha Jayaprakash





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



2 நபர்களுக்கு

2 hr 20 min

30 min
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

வடை பஜ்ஜி Empty காய்கறி போண்டா

Post by Tamil Wed Feb 03, 2010 7:55 am





தேவையானப் பொருட்கள

  • உருளைக்கிழங்கு - 4
  • காரட் - 3
  • பீன்ஸ் - 50 கிராம்
  • வெங்காயம் - 4
  • பச்சை மிளகாய் - 3
  • பட்டாணி - கால் கப்
  • கடலை மாவு - ஒன்றரை கப்
  • அரிசி மாவு - கால் கப்
  • மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
  • உப்பு - அரை தேக்கரண்டி + முக்கால் தேக்கரண்டி
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்ட

வெங்காயம், காரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.


உருளைக்கிழங்கை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து மசித்துக் கொள்ளவும்.


மற்றொரு பாத்திரத்தில் நறுக்கின காரட்டை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக வைக்கவும்.


வாணலியில்
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அடுத்து
பீன்ஸ் போட்டு 3 நிமிடம் வதக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை
மிளகாய் போட்டு 4 நிமிடம் வதக்கவும்.


காரட் வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு பீன்ஸ், வெங்காய கலவையுடன் போட்டு கிளறி விடவும்.


வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பட்டாணி, உப்பு ஆகியவற்றை வெங்காய கலவையுடன் போட்டு ஒன்றாக கிளறி விடவும்.


ஒரு
பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், 3/4 தேக்கரண்டி உப்பு
போட்டு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.


காய்கறி கலவையை சிறு எலுமிச்சை பழ அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் அடுக்கி வைத்துக் கொள்ளவும்.


வாணலியில்
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டில் வைத்திருக்கும் உருண்டையை எடுத்து
ஒவ்வொன்றாக கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில்
போடவும்.


போண்டா நன்கு வெந்து சிவந்த நிறம் ஆனதும் எண்ணெயை வடித்து எடுத்து விடவும்.


சுவையான காய்கறி போண்டா ரெடி. மாலை நேர சிற்றுண்டியாக தேங்காய் சட்னி அல்லது சாஸுடன் பரிமாறலாம்.


இந்த காய்கறி போண்டா குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. சாந்தா அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

வடை பஜ்ஜி Empty வாழைப்பூ வடை

Post by Tamil Wed Feb 03, 2010 7:57 am





தேவையானப் பொருட்கள்

  • வாழைப்பூ - 150 கிராம்
  • பொட்டுக்கடலை - 6 மேசைக்கரண்டி
  • செத்தல் மிளகாய் - 5
  • பெருங்காயம் - கால் தேக்கரண்டியை விட குறைவு
  • தேங்காய்ப்பூ - 3 மேசைக்கரண்டி
  • பெரிய வெங்காயம் - 30 கிராம்
  • மோர் - ஒரு டம்ளர்
  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வாழைப்பூவை
மோர் சேர்த்து, அவித்து எடுத்து நன்கு பிழிந்துக் கொள்ளவும் (அதிகம் வேக
வைக்க தேவையில்லை). பொட்டுகடலை, மிளகாய் வற்றல், தேங்காய்ப்பூ சேர்த்து
அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்
கொள்ளவும்.


வெங்காயத்தை
தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில்
வேக வைத்த வாழைப்பூவுடன், நறுக்கின வெங்காயம் சேர்த்து எடுத்துக்
கொள்ளவும்.


வாழைப்பூ,
வெங்காயத்துடன் அரைத்த கலவை, 1 1/2 தேக்கரண்டி உப்பு மற்றும்
பெருங்காயத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு பிசைந்துக் கொள்ளவும்.


பிசைந்து வைத்திருக்கும் கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி தட்டையாக்கிக் கொள்ளவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் வடைகளை ஒன்றொடு ஒன்று ஒட்டாமல் போட்டு பொரித்து எடுக்கவும்.


சுவையான, சத்தான வாழைப்பூ வடை தயார். இலங்கை தமிழரான திருமதி. அதிரா அவர்கள், திருமதி. சீதாலெஷ்மி அவர்களின் குறிப்பான வாழைப்பூ வடை செய்து பார்த்ததை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

வடை பஜ்ஜி Empty கீரை காரன் வடை

Post by Tamil Wed Feb 03, 2010 7:58 am

தேவையான பொருட்கள்




  • ஸ்வீட் காரன் - 3
  • பொட்டுகடலை - 1/2 கப்
  • அவல் - 1/2 கப்
  • சிகப்பு மிளகாய் - 4
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி - 1/2 அங்குலம்
  • முளை கீரை - 1/2 கப்
  • சீரகம் - 1/2 tsp
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரித்தெடுக்க




செய்முறை




  • அவலை 5 முதல் 10 நிமிடம் ஊற வைக்கவேண்டும்.
  • பச்சை
    மிளகாய், சிகப்பு மிளகாய், ஜீரகம், பொட்டுகடலையை பொடி செய்தபின் ஸ்வீட்
    காரன், உப்பு சேர்த்து வடை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • கீரையை பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்க்கவும்.
  • அவலை நன்கு பிழிந்து மாவுடன் சேர்த்து வடையாக தட்டி பொரித்தெடுக்கவும்.
  • சுவையான வித்தியாசமான சுவையுள்ள வடை தயார்.





வழங்கியவர்


Ms. Moorthy, USA





ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



15 நிமிடம்

10 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

வடை பஜ்ஜி Empty ஈஸி உருளை போண்டா

Post by Tamil Wed Feb 03, 2010 7:58 am




வழக்கமா
நம்ம ஆலு பரோட்டா'கு செய்யும் உருளை மசாலா மிச்சம் ஆனா அதை வைத்து இப்படி
செய்யலாம். இல்லை என்றால் கீழே இருக்கும் குறிப்பில் உள்ள மசாலா'வை
செய்யலாம்.




தேவையான பொருட்கள்




  • மசாலா:
  • 1. உருளைகிழங்கு - 2
  • 2. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • 3. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
  • 4. உப்பு - தேவைக்கு
  • மேல் மாவு:
  • 1. கார்ன் மாவு - 1/2 மேஜைக்கரண்டி
  • 2. ப்ரெட் தூள் - 1 (அ) 2 மேஜைக்கரண்டி




செய்முறை




  • கார்ன் மாவு மற்றும் ப்ரெட் தூள் ஒன்றாக கலந்து வைக்கவும்.
  • உருளைகிழங்கு வேக வைத்து நீர் இல்லாமல் உரித்துவிட்டு மசிக்கவும்.
  • இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • இவற்றை
    உருண்டைகளாக உருட்டி, கார்ன் மாவு கலவையில் பிரட்டி வைக்கவும்.
    (பிரட்டிவிட்டு ஒரு முறை கையில் சாதம் உருட்டுவது போல் உருட்டினால் தேவை
    இல்லாத அதிகப்படியான தூள் விழுந்துவிடும்)
  • கடாயில் எண்ணெய் காய வைத்து இந்த உருண்டைகளை பொரித்து எடுக்கவும்.





குறிப்பு:


விரும்பினால் மசாலா உடன் கொத்தமல்லி, பச்சை மிளகாய் கூட சேர்க்கலாம்.
காரம் உங்கள் விருப்பம் போல் சேர்க்கவும். இதை பச்சை சட்னியுடன்
சாப்பிடலாம். செய்ய சுலபமான ருசியான போண்டா.


வழங்கியவர்


VaniVasu
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

வடை பஜ்ஜி Empty வெஜிடபிள் போண்டா

Post by Tamil Wed Feb 03, 2010 7:59 am

தேவையான பொருட்கள்




  • மேல் மாவிற்கு:
  • கடலை மாவு - 1 கப்
  • அரிசிமாவு -கால் கப்
  • சில்லி பவுடர் - அரை டீஸ்பூன்
  • பேக்கிங் சோடா- பின்ச்
  • பெருங்காயத்தூள் - பின்ச்
  • வெஜிடபிள் கலவை:
  • உருளைகிழங்கு - 1
  • கேரட்,பீன்ஸ்,கோஸ் - நறுக்கியது அரை- 1கப் சிறியது
  • இஞ்சி - சிறிய துண்டு
  • மிளகாய் - 3
  • கொத்தமல்லி இலை,கருவேப்பிலை -சிறிது
  • வெங்காயம் - 1
  • எண்ணெய் - தேவைக்கு
  • உப்பு - தேவைக்கு




செய்முறை




  • முதலில் மேல் மாவிற்கு தேவையானவற்றை ஒரு பவுலில் எடுத்து அளவாக தண்ணீர் சேர்த்து கட்டியாக கரைத்து கொள்ளவும்.
  • உரூளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
  • காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்.இஞ்சி,மிளகாய்,மல்லி இலை,கருவேப்பிலை,வெங்காயம் பொடியாக நறுக்கவும்.
  • நறுக்கிய காய்கறிகளுடன் வேகவைத்து மசித்த உருளைகிழங்கு,உப்பு சேர்த்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு காய விடவும்.
  • உருண்டையை கரைத்து வைத்த மாவுக்கலவையில் லேசாக புரட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு செந்நிறமாக பொரித்து எடுக்கவும்.
  • சுவையான வெஜிடபிள் போண்டா ரெடி.இதனை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.





வழங்கியவர்


ஆசியா உமர்.





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

15 நிமிடம்

15-20 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

வடை பஜ்ஜி Empty Re: வடை பஜ்ஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum