Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விதிமீறல்: சிக்கலில் இன்னொரு தி.மு.க., மத்திய அமைச்சர்
Page 1 of 1

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நீதிமன்றத்தின்
கண்டனத்துக்குள்ளாகி, பதவியை இழந்த தொலைத் தொடர்புத் துறை முன்னாள்
அமைச்சர் ராஜாவைத் தொடர்ந்து, இன்னொரு அமைச்சரும் சிக்கலில்
சிக்கியுள்ளார். இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் பரிந்துரைகளை மீறி,
மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்திசெல்வன், 170 ஆயுர் வேத
கல்லூரிகளுக்கு, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
தொழிற்கல்வி கல்லூரிகள் துவங்கி நடத்துவது என்பது தற்போது இந்தியாவில்,
லாபகரமான தொழிலாக மாறியுள்ளது. ஏற்கனவே, உரிய விதிமுறைகளை பூர்த்தி
செய்யாத மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதாக, இந்திய மருத்துவக்
கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது
குறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.இந்நிலையில், உச்ச நீதிமன்ற
கருத்துக்களை மீறியும், இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் அளித்த
பரிந்துரைகளை கண்டு கொள்ளாமலும், 170 ஆயுர் வேத கல்லூரிகள், மாணவர்
சேர்க்கையை தொடர்ந்து நடத்திக் கொள்ள அனுமதியளித்து, மத்திய சுகாதாரத்
துறை இணை அமைச்சர் காந்திசெல்வன் உத்தரவிட்டுள்ளார். இது சம்பந்தமான
உத்தரவு, கடந்த ஜூலை 15ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறைந்தபட்ச
அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட
விதிமுறைகளைப் பின்பற்றாத 170 ஆயுர் வேத கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை,
இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அந்த
உத்தரவை மாற்றி, அவற்றில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதியளித்து
அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், "ஒரு மருத்துவக் கல்லூரியில் ஒரு நாளைக்கு குறைந்தது
40 உள் நோயாளிகள் இருந்தாலும், ஒரு நாளைக்கு 100 புறநோயாளிகள் வருகை
இருந்தாலும், 80 சதவீத ஆசிரியர்கள் இருந்தாலும், கடந்த 2009 - 10ம்
கல்வியாண்டைப் போல, சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நிபந்தனை அடிப்படையில்
அனுமதி வழங்கலாம்' எனக் கூறப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், மருத்துவக்
கவுன்சில் சர்ச்சை குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் வழக்கில்,
இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் தரப்பில், "நூறு சதவீதம் உள் நோயாளிகள்
வருகையும், நூறு சதவீதம் வெளி நோயாளிகள் வருகையும், நூறு சதவீதம் ஆசிரியர்
வசதியும் இருந்தால் மட்டுமே அக்கல்லூரிக்கு ஒப்புதல் வழங்க முடியும்' எனத்
தெரிவிக்கப்பட்டது.இது சம்பந்தமாக, கடந்த ஆண்டு மே 31ம் தேதி, மத்திய
சுகாதாரத் துறைக்கு, இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் கடிதம் அனுப்பியது.
அதில், "மத்திய கவுன்சிலின் விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு,
பாராட்டு தெரிவித்துள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், மத்திய கவுன்சில் விதிமுறைகளைத் திரித்து, 80 சதவீத
ஆசிரியர்கள் வசதி இருந்தால் போதுமானது எனக் கூறியுள்ளார் அமைச்சர்.மத்திய
சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், தனது உத்தரவுக்கு ஒப்புதல்
அளித்துள்ளதாக கூறியுள்ள இணை அமைச்சர் காந்திசெல்வன், "சிறு, குறு,
நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் தினேஷ் படேல், மத்திய சுகாதாரத் துறை
அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையிலும், தேசிய ஆயுர் வேத
மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் கூட்டமைப்பு சார்பில்,
அனுப்பப்பட்ட மனுக்களின் அடிப்படையிலும் விதிகளில் திருத்தம்
செய்யப்பட்டது' எனக் கூறியுள்ளார்.
மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வன் கூறியதாவது: விதிமுறை
மீறல்கள் எதுவும் இல்லை. மேலும், இது கேபினட் அமைச்சரின் கட்டுப்பாட்டில்
உள்ளது. நான் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை. இது தொடர்பாக கேபினட்
அமைச்சர் மூலம் முழு விளக்கம் அளிக்கப்படும், என்றார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்
» கதர் துணியை அவமதித்த மத்திய அமைச்சர்
» மத்திய அமைச்சர் ஜெய்ராமுக்கு பிரதமர் மன்மோகன் கண்டிப்பு
» சமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு
» மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அழகிரி ராஜினாமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum