Latest topics
» சினிமாby வாகரைமைந்தன் Today at 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலங்கையில் போர் அபாயம் – வருகிறார் பிரபாகரன்!!! தெரிவிக்கும் இந்திய ஊடகத்தின் பின்னணி என்ன?
2 posters
Page 1 of 1

இலங்கையில் போர் அபாயம் – வருகிறார் பிரபாகரன்!!! : தெரிவிக்கும் இந்திய ஊடகத்தின் பின்னணி என்ன?
முள்ளிவாய்க்காலில் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு விட்டதாக கூறிவந்த சிங்கள
அரசு தற்பேது புலிகள் பயத்தில் கிறுக்குப் பிடித்து உளற ஆரம்பித்துள்ளது
என்ற முன்னுரையுடன் ஆரம்பிக்கும் சிறப்பு செய்தி தமிழகத்தில் வெளிவரும்
மாதமிருமுறை பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
ஈழத்தில் எமது இனம் கொன்று குவிக்கப்பட்ட போது தமிழகத்தில் எழுந்த
உணர்வுக் கொந்தளிப்பை தமிழகத்தில் ஆட்சியுள்ளோர் திட்டமிட்டு அடக்கி
வந்தனர். உணர்வு மேலீட்டாள் தமது உடலை ஆயுதமாக்கி தமிழக அரசின்
முகத்திரையை கிழித்தெறிய முத்துக்குமார் உள்ளிட்டோர் தீச்சுவாலைகளை தமது
மேனி படரவிட்டு உயிர்தியாகம் செய்து தமிழகத்தை கொதிநிலைக்கு கொண்டு
சென்றிருந்தனர்.
அதற்கும் சளைக்காத கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு இவர்களது ஒப்பற்ற
தியாகத்தை களங்கப்படுத்தியதுடன் தமிழக மாணவர்களது கையில் சென்ற
போராட்டக்களத்தை சில புல்லுருவிகளை கொண்டு நீர்த்துப் போகச்
செய்திருந்தது. அத்துடன் நின்றுவிடாது தமிழ் இனம்.. தமிழ் மொழி.. தமிழர்
பண்பாடு.. கலாச்சாரம்.. எனக் கூறிக் கொண்டு எவர் வந்தாலும் இல்லாத
இறையாண்மையை மீறிவிட்டதாக கூறி தேசியபாதுகாப்புச் சட்டத்தில்
சிறையிலடைத்து டெல்லி(சோனியா) விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டது தமிழக
அரசு.
தமிழைப் பற்றிப் பேசினாலும் குற்றம், ஈழத்தமிழர்களை பற்றி மூச்சு
விட்டாலும் குற்றம், பிரபாகரனைப் பற்றி நினைத்தாலே குற்றம் எனும் தமிழக
அரசின் புதிய கொள்கை தமிழகத்தை ஆட்சி செய்துவரும் நிலையில் தற்போது புதிது
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பத்திரிகைகள் வாரப்பத்திரிகைகள் என்பன இதோ
ஈழப் போர் ஆரம்பிக்கப் போகின்றது… ஈழப்போர் ஆரம்பித்து விட்டது.. களத்தில்
பிரபாகரன்.. அவுத்திரேலியாவில் பிரபாகரன்.. என்னும் தலைப்புகளில் பரபரப்பு
செய்திகளை வெளியிட்டு வருவது ஆச்சரியமாக உள்ளது.
இந்த பத்திரிகைகள் அரசின் செய்தித்துறையின்
தணிக்ககைக்குட்படுத்தப்படுவதில்லையா..? உணர்வாளர்களான சில இயக்குநர்கள்
எடுத்த திரைப்படங்கள் தணிக்கைக்குழுவின் கெடுபிடியாள் பெட்டிக்குள்
உறங்கும் நிலையில் இந்த பத்திரிகைகளுக்கு மாத்திரம் எவ்வாறு தமிழக அரசு
அனுமதியளித்துள்ளது என்பது ஆச்சரியம்தான்.
இவற்றையெல்லாம் மீறி இவ்வாறு பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு காசு
பார்பது ஒருபக்கமிருந்தாலும் எதிர்வரும் காலங்களில் நடைபெற இருக்கும்
சூழ்ச்சித் திட்டங்களிற்கு அடித்தளம் அமைக்கும் முயற்சியாகவே இதனை நோக்க
வேண்டியுள்ளது.
புலி வருது… புலி வருது… என்று கூறி பரபரப்பினை ஏற்படுத்தி பின்
உண்மையிலேயே புலி வரும்போது எவ்வளவு எடுத்துக் கூறியும் நம்பாது இருந்தது
என கதை அறிந்திருப்போம். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட கதையாகும். புலி
வரப்போது.. புலி வருது.. புலி வந்திட்டுது.. என்று கூறி பரபரப்பை
ஏற்படுத்திவிட்டு சில நரிகளை களமிறக்கி நாசவேலைகளில் ஈடுபடுத்தி தமது
எண்ணத்தை செயற்படுத்தி அதன் பழியை புலிகள் மீது போடுவதே இந்த செய்தியின்
நோக்கமாக இருக்கும்.
இந்த சதித்திடடத்தின் பின்னாள் ஒழிந்து இருப்பது இந்திய உளவுத்துறையேதான்.
இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டிலையே இவ்வாறான செய்திகள் வெளிவருகின்றன.
தற்போதும் அவ்வாறே இந்த புதுக்கதை களமிறக்கப்பட்டுள்ளது.
15ற்கு மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடன் மீண்டும் சிறிலங்காவில் புலிகள் போரை
ஆரம்பிக்க உள்ளதாகவும் அமெரிக்காவை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட
புலிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அந்த செய்தி
தெரிவிக்கின்றது. (15 நாடுகள் இல்லை பெரும்பாலான நாடுகள் தமிழீழத்தை
ஆதரிக்கத்தான் போகுது. தமிழீழத் தேசியக் கொடி ஐ.நா. சபையில் பட்டொளி வீசி
பறக்கும் நாள் விரைவில் வரத்தான் போகுது. அதற்குள் ஏன் இந்த அவசரம்
என்டுதான் விளங்கவில்லை.)
இந்த ஆண்டு சூலை மாதத்திற்குள் வெளிநாடுகளில் உள்ள புலிகள் தம்மை
ஒருங்கிணைக்கும் பணியிலும் நிதி திரட்டுவதிலும் முனைப்புடன்
இருப்பதாகவும்,அதன் பின்னர் புலிகளின் ஆலோசனைக் கூட்டம் வெளிநாடு ஒன்றில்
நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்
தொடர்கின்றது.
2011ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐக்கிய நாடுகள் சபை ராசபக்சவின் மீது போர்
குற்றம் சுமத்தி விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். அத்துடன்
சிறிலங்காவில் தமிழர்களுக்கு தனிஈழம் வழங்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவை இரண்டும் நடைபெறாவிட்டால் இந்த ஆண்டு இறுதியில்
சிறிலங்காவில் போர் நடைபெற இருப்பதை தவிர்க்க முடியாது என்ற நிலை
ஏற்பட்டுள்ளது என்ற உண்மையையும் கூறியுள்ளனர்.
சமாதானம் பேசி சதிசெய்த நாடுகளில் இருந்து துரோகம் இழைத்த இந்தியா
உள்ளிட்ட எதிரி சிங்களன் வரை கதிகலங்க தமிழர் அரசமைத்து வருவான்டா எங்கள்
தலைவன் பிரபாகரன். அது சர்வ நிச்சயம்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: இலங்கையில் போர் அபாயம் – வருகிறார் பிரபாகரன்!!! தெரிவிக்கும் இந்திய ஊடகத்தின் பின்னணி என்ன?
இங்க உள்ளவர்களிலேயே சில எட்டப்பன் இருகிறார்கள்.
sureshkumarrane- உதய நிலா
- Posts : 43
Join date : 04/12/2010
Similar topics
» தமிழினம் இலங்கையில் இருந்த தடமே இல்லாது போகும் அபாயம்
» ஜெ., அடித்த ஹாட்ரிக்: குட்டிக்கதைகளின் பின்னணி என்ன?
» அ.தி.மு.க., கூட்டணி இழுபறி: பின்னணி என்ன?
» இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக பத்திரிகையாளர் தமிழ் பிரபாகரன் விடுதலை!
» தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதன் பின்னணி என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|