TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:38 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 31, 2023 7:57 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 30, 2023 4:47 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am


டாக்டரிடம் கேளுங்கள் பகுதி-02

Go down

டாக்டரிடம் கேளுங்கள் பகுதி-02 Empty டாக்டரிடம் கேளுங்கள் பகுதி-02

Post by Tamil Sat Jan 08, 2011 10:13 am

மெலிந்த தேகம்.. மாறாத சோகம்!
‘‘எனக்கு வயது[You must be registered and logged in to see this link.]
43. மூன்று மாதங்களுக்கு முன்பு கர்ப்பப் பை நீக்கப்பட்டது. கேன்சர்
வருவதற்கான அறிகுறி எதுவும் இல்லையென்று டாக்டர் சொன்னாலும், குழப்பமாக
உள்ளது.
வெள்ளைபடுவது, வலது மார்பில் பால் போல் திரவம் வருவது என்ற பிரச்னைகளால்
பயந்துகிடக்கிறேன். எனக்கு தெளிவு தாருங்கள், டாக்டர்.’’


டாக்டர் ஆர்.ஆர்.ராய் (கேன்சர் சிறப்பு நிபுணர், சென்னை):-
‘‘கர்ப்பப் பையை நீக்கியவர்களுக்கெல்லாம் கேன்சர் வரும் என்று பயப்படத்
தேவை இல்லை. கர்ப்பப் பை நீக்கும் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்களைப்
பொதுவாக மூன்று மாதங்களுக்கு, மாதம் ஒரு தடவை செக்கப்புக்கு வரச்
சொல்வார்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், அந்த மருத்துவரிடம்
தெளிவாகக் கூறி விளக்கம் பெறுங்கள்.
கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில பரிசோதனை முடிவுகளைப்
பார்க்கும்போது எல்லாமே நார்மலாக உள்ளது. பயப்படவும், குழம்பவும்
அவசியமில்லை. வெள்ளைப்படுதல், மார்பகத்தில் திரவம் வருதல் போன்றவை
இன்ஃபெக்ஷனால்கூட இருக்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு ஆன்டிபயாடிக்
மாத்திரை கள் எடுக்கலாம். கர்ப்பப் பை நீக்கியதும் சில பெண்களுக்கு இதுபோல்
வருவதுண்டு. கவலைப் படவேண்டாம். நல்ல உணவு, ஓய்வு, ஆரோக்கியமான சிந்தனை |
இவை போதும், உங்களைத் தெளிவாக்க!’’
——————————————————————————————————–




‘‘என்
வயது 53. இரண்டு ஆண்டுகளாக யானைக்கால் நோயினால் பாதிக்கப் பட்டுள்ளேன்.
இந்த நோய் பூரணமாகக் குணமாக எந்த ஆஸ்பத்திரியை அணுக வேண்டும்? இதற்கான இலவச
மருத்துவமனை எங்காவது உள்ளதா? தற்போது இடது காலில் உள்ள நோய், வலது
காலுக்கும் பரவுமா? மேலும் பரவாமல் தடுக்க என்ன சிகிச்சை எடுக்க
வேண்டும்?’’

டாக்டர் ஏ.டி.செல்வகுமார் (இணை இயக்குநர், நோய்பரப்பி களால் உண்டாகும் நோய் தடுப்புப் பிரிவு, சென்னை): ‘‘பைலேரியா
என்னும் யானைக்கால் நோய் ஒருமுறை வந்துவிட்டால், அதை பூரணமாக குணமாக்க
முடியாது. சிகிச்சை மூலம் ஓரளவு கட்டுப்படுத்தலாம்; மேலும் பரவாமல்
தடுக்கலாம். சுடுநீர் தெரபி, காற்றழுத்த தெரபி, மின்காந்த தெரபி போன்ற
சிகிச்சை முறைகள் வீக்கம் அதிகமாகாமல் தடுக்கும்.
நோயால் பாதிக்கப்பட்ட காலை நீங்கள் சுத்தமாக கழுவிப் பராமரித்தல்
அவசியம். சாதாரண சோப்பு அல்லது பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு
தினந்தோறும் கழுவ வேண்டும். விரல் இடுக்குகள் மற்றும் தோலின் மடிப்பு
பகுதிகளில் ஈரப்பசை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் புண்
ஏற்பட்டால் நைட்ரோ ஃப்யூரோசான் களிம்பும், விரல் இடுக்கில் வரும் சேத்துப்
புண்ணுக்கு விட்ஃபீல்டு பசையையும் தடவவேண்டும். கால், கை நகங்களை வெட்டி
சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சொத்தைப்பல் இருந்தால் அகற்ற வேண்டும்.
கால் வீக்கம் இருந்தால், தூங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் தவறாது
எலாஸ்டிக் பேண்டேஜ் கட்டவேண்டும். தூங்கும்போதும், ஓய்வெடுக்கும்போதும்
காலை சற்று உயரே தூக்கி வைத்துக் கொள்ளவேண்டும். தினமும் உடற்பயிற்சியும்
மசாஜும் அவசியம்.
உணவில் கொழுப்பையும் உப்பையும் குறைத்து, கீரை மற்றும் நார்ச்சத்து
அதிகம் உள்ள காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொசுவலை, கொசுவத்தி,
கொசு தடுப்பு களிம்பு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை இரவில் உபயோகித்து, கொசுக்
கடியிலிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும். இந்நோய் உங்களிடமிருந்து
பிறருக்கு பரவும் வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி உங்கள்
குடும்பத்தினர் அனைவரும் டி.இ.சி என்ற மாத்திரை எடுப்பது அவசியம். இந்த
மாத்திரை, யானைக்கால் நோயை உண்டாக்கும் லார்வாக்களை அழிக்கும். ஏற்கெனவே
பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்ற உறுப்புகளுக்கு நோய் பரவாமலும் தடுக்கும்.
யானைக்கால் நோய் பரம்பரை வியாதி அல்ல. க்யூலக்ஸ் என்ற கொசுக்களால்
ஏற்படுவது. இந்நோய் வந்த மனிதனின் ரத்தத்தில் மைக்ரோ பைலேரியா என்னும்
லார்வாக்கள் (குட்டிப் புழுக்கள்) கலந்துள்ளன. அந்த மனிதனை கொசு
கடிக்கும்போது, ரத்தத்தோடு சேர்ந்து இந்தக் குட்டி புழுக்களும் கொசுவின்
உடலுக்குள் சென்று வளர்கின் றன. பிறகு, இன்னொரு மனிதனை அந்தக் கொசு
கடிக்கும்போது அவனது உடலுக்குள் லார்வாக்கள் செலுத்தப்படு கின்றன. அவை
வளர்ந்து, ரத்த நாளங்களில் கலந்து நிணநீர்க் குழாய்களில் அடைப்பை
ஏற்படுத்தும். அதனால் கால் வீக்கம், விரைவீக்கம், பெண்களுக்கு மார்பகம்,
பிறப்புறுப்பு போன்றவை பாதிக்கப்படு கின்றன. யானைக்கால் நோய்க்கான சிகிச்சை
மையங்கள் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம்,
திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி போன்ற இடங்களில் அரசு பொது
மருத்துவமனை களில் செயல்படுகின்றன. இங்கே டி.இ.சி. மாத்திரைகள் மற்றும்
ஆலோசனைகள் இலவசமாக வழங்கப் படுகின்றன..’’
———————————————————————————————————-



‘‘எனது
பெண் குழந்தைக்கு இப்போது 10 மாதம். 6.9 கிலோ எடை தான் இருக்கிறாள். இந்த
வயதுக்கு இது குறைவான எடை என்று தோன்றுகிறது. எவ்வளவு போராடினாலும்
சிறிதளவுதான் சாப்பிடுகிறாள். அவளது இந்த ஒல்லி உடல்வாகு வாழ்நாள் முழுதும்
தொடருமா (என் கணவரும் மாமியாரும் ஒல்லி உடல்வாகு உடையவர்கள்)? எந்த உணவை,
எந்த அளவு கொடுத்தால் அவள் புஷ்டியாக ஆவாள்?’’

டாக்டர் ஜே. விஸ்வநாத்(குழந்தை மருத்துவ நிபுணர், சென்னை):
‘‘பொதுவாக 10 மாதங்களில் இந்தியக் குழந்தைகளின் சராசரி எடை 7 கிலோதான்.
எனவே, எடை குறைவாக இருப்பதாக நினைத்து கவலைப்பட வேண்டாம். பிறக்கும்போது
குழந்தை சராசரியாக 2.5 கிலோ எடை இருக்கும். இது ஆறு மாதங்களில் இரு
மடங்காகும். ஒரு வருடத்தில் மூன்றரை மடங்காகும். இரு வருடத்தில் 4
மடங்காகும். பிறக்கும்போது சராசரி 51?செ.மீ. ஆக உள்ள குழந்தையின் உயரம்,
ஒரு வருடத்தில் 77? செ.மீ. ஆகிறது. அதேபோல், பிறக்கும்போது தலைச் சுற்றளவு
சராசரியாக 35?செ.மீ. இருக்கும். ஓராண்டில் 45? செ.மீ. வரை வரும். இந்த
அளவுகளுடன் ஒப்பிட்டால் உங்கள் குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளது.
மேலும், பிறந்தபோது ஒல்லியாக இருக்கும் குழந்தை எப்போதுமே அப்படி
இருக்கும் என்பதில்லை. அப்பாவோ, அம்மாவோ மெலிந்த தேகம் கொண்டிருந்தால்
குழந்தையும் அப்படி இருக்கும் என்று நினைப்பதும் தவறு. உங்கள் குழந்தைக்கு
புரோட்டீன், கார்போஹைட் ரேட், கொழுப்பு, தாதுப்பொருள் கலந்த சரிவிகித உணவு
கொடுக்க வேண்டும். அப்படியும் மெலிந்து கொண்டே போனால், குழந்தைநல நிபுணரின்
ஆலோசனையுடன் ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து, ஏதாவது பிரச்னை இருந்தால்
சிகிச்சை மேற்கொள்ளவும். 9 மாதங்கள் ஆனதுமே காலையில் இரண்டு சிறிய
இட்லிகளும், மதியம் மற்றும் மாலையில் சாதம், பருப்பு, காய்கறிகள்
ஆகியவற்றோடு நெய் கலந்தும் தரவேண்டும். இவற்றுடன் தாய்ப் பால் அல்லது 500
மி.லி. பிற பாலும் தரவேண்டும். அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் முட்டை,
மீன் கொடுக்க லாம்.
சிறிது சிறிதாக சாதத்தின் அளவு அதிகரிக்கப்படவேண்டும். பருப்பு சோறு இருவேளை தரலாம். தாய்ப்பால் அல்லது வேறு பால் அருந்தும் குழந்தைக்கு டானிக்குகள் தேவை இல்லை..’’
————————————————————————————————————–



‘‘எனக்கு
வயது 50. மூன்று குழந்தைகள். எல்லாமே சுகப்பிரசவம். கடந்த சில ஆண்டுகளாக,
இருமினாலும், தும்மினாலும், சிரித்தாலும் சிறுநீர் வெளியேறிவிடுகிறது.
சிலசமயம், சிறுநீர் கழிக்க டாய்லெட் செல்வதற்குள் போய்விடுகிறது. வயதானால்
இப்படி ஆகுமா? இதைப்பற்றி எப்படி கேட்பது என்று வெட்கப்பட்டே இதுநாள் வரை
இருந்துவிட்டேன். என் பிரச்னைக்கு ‘அ.வி’ ஒரு வழி சொல்லுமா?’’

டாக்டர் கார்த்திக் குணசேகரன் (யூரோ கைனகாலஜிஸ்ட் மற்றும் பெல்விக் ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜன்):
‘‘சிறுநீர் அடக்க முடியாமல் போவது மற்றும் உங்களுக்கு இருக்கும்
அடியிறக்கம் போன்றவை வயதானதால் மட்டும் வரும் பிரச்னைகள் இல்லை. இரண்டு,
மூன்று குழந்தை பிறந்த பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வரும் பிரச்னைகள்
இவை.
பிறப்பு உறுப்பு வழியாக அடிக்கடி பிரசவம் (நார்மல் டெலிவரி) ஆகும்போது,
அப்பகுதியின் தசைகளும் நரம்புகளும் பாதிக்கப்படுவதுதான் இந்தப் பிரச்னைக்கு
காரணம். நார்மல் டெலிவரியான பெண்களில், 40 சதவீதம் பேருக்கு இந்தப்
பிரச்னை உண்டு. உங்களுக்கு முதலில் ‘யூரின் – கல்ச்சர் டெஸ்ட்’ செய்ய
வேண்டும். ஏதாவது நோய்த்தொற்று இருந்தால் அதில் தெரிந்துவிடும்.
சிறுநீரகத்தில் கல் எதுவும் இருக்கிறதா என்று அறிய ஒரு அல்ட்ரா சவுண்ட்
ஸ்கேனிங்கும் செய்துகொள்ளலாம். இவை முதல்கட்ட பரிசோதனைகள். பிறகுதான்
உங்கள் பிரச்னைக்கு உரிய பிரத்யேக டெஸ்டான ‘யூரோடைனமிக்ஸ்’ என்ற பரிசோதனை
செய்யவேண்டும். என்ன வகையான சிகிச்சை தேவை என்பதை அறிய இந்தப் பரிசோதனை
உதவும்.
அவசரமாக சிறுநீர் போகவேண்டும் என்ற உணர்வு எப்போதும் இருந்துகொண்டே
இருப்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகளிலேயே குணப்படுத்தி விடலாம்.
அடியிறக்கம் இருப்பதால் சிரித்தாலும் தும்மினாலும் சிறுநீர் வந்துவிடும்
பிரச்னைக்கு, ஸ்லிங் ஆபரேஷன் என்று ஒரு அறுவைசிகிச்சை செய்யலாம்..’’
—————————————————————————————————————–



‘நான்கைந்து
மாதங்களுக்கு முன் என் கணவர் திடீரென, தனக்கு மயக்கமாக வருவதாகவும், இரு
கண்களிலும் பார்வை தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறினார். அதன்பிறகு ஒரு
மாதத்துக்கு, காலையில் எழுந்ததும் மயக்கம் வருகிறது என்றார். ஓய்வில்லாமல்
தொடர்ச்சியாக வேலை பார்த்தது, தூக்கமின்மை, நேரத்துக்கு சாப்பிடாதது ஆகியவை
காரணங்கள் என டாக்டர் சொன்னார். அவர் வயது 37. அவருக்கு வந்திருப்பது
குறைவான ரத்த அழுத்த நோயா? அப்படி இருந்தால்
கண்பார்வை மங்குமா?’’

டாக்டர் தேவதாஸ் (பொது மருத்துவ நிபுணர், திருச்சி):
‘‘சாதாரணமாக நல்ல உடல்நலத்துடன் இருப்பவர் களுக்கு, குறைந்த ரத்த அழுத்தம்
வரவே வராது. அனீமியா போன்ற அதிக ரத்தம் விரயம் ஆகும் குறை பாடு
உள்ளவர்களுக்கோ, விபத்தின்போது பாதிக்கப் பட்டவர்களுக்கோ மற்றும் இதயத்
துடிப்பு அதிகமாகத் துடிப்பவர்களுக்கோ மட்டும்தான் இது ஏற்படும்.
இதனால் உடலின் வலு முழுவதும் குறைந்து, உடம்பே ஒருவித குளிர்நிலைக்கு
வரலாம். உங்கள் கணவருக்கு இது மாதிரியான பிரச்னைகள் இல்லாததால், அவருக்கு
குறைந்த அழுத்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. உங்கள் கணவரின் கண்கள்
பாதிக்கப்பட்டதற்கும் குறைந்த ரத்த அழுத்தத்துக்கும் எந்தவிதமான
சம்பந்தமும் இல்லை. பார்வை மங்குவதை அப்படியே விட்டுவிடாமல், தகுந்த கண்
மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளவும். எதற்கும் கொஞ்சம்
ஓய்வெடுப்பது நல்லது..’’
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11796
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum