TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தொடரை வென்றது இந்தியா *காம்பிர் மீண்டும் சதம்

Go down

தொடரை வென்றது இந்தியா *காம்பிர் மீண்டும் சதம் Empty தொடரை வென்றது இந்தியா *காம்பிர் மீண்டும் சதம்

Post by piraba Sun Dec 05, 2010 7:30 am



வதோதரா: காம்பிர் மீண்டும் சதம் அடித்து அசத்த, நியூசிலாந்துக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 கணக்கில் கைப்பற்றி அசத்தியது இந்தியா.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. "டாஸ்' ஜெயித்த இந்திய அணி கேப்டன் காம்பிர் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஸ்ரீசாந்த், ரெய்னாவுக்குப் பதில் ஜாகிர் கான் மற்றும் ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் ஜேமி ஹவ், சவுத்தி நீக்கப்பட்டு, பிரண்டன் மெக்கலம், பிராங்க்ளின் இடம் பெற்றனர்.
மெக்கலம் ஏமாற்றம்:
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம், கப்டில் துவக்கம் தந்தனர். முதல் ஓவரை ஜாகிர் வீசினார். இவர் வீசிய ஆட்டத்தின் 2 வது பந்திலேயே, டக்-அவுட்டாகி வெளியேறினார் மெக்கலம். வழக்கத்திற்கு மாறாக அதிரடி காட்டிய கப்டில் (12), காம்பிரின் துல்லிய "த்ரோவில்' ரன் அவுட்டானர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோஸ் டெய்லர் (4) சொதப்பினார். சற்று நேரம் தாக்குப் பிடித்த வில்லியம்சன் (21), ஸ்டைரிஸ் (22) ஓரளவு ரன்கள் சேர்த்து வெளியேறினார். மிடில் ஆர்டரில் கேப்டன் வெட்டோரி (3), ஹாப்கின்ஸ் (6) சோபிக்க வில்லை. நியூசிலாந்து அணி 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
பிராங்க்ளின் ஆறுதல்:
பின்னர் பிராங்க்ளின், மெக்கலம் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராங்க்ளின், ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் முதல் அரை சதம் கடந்தார். இவருக்கு நாதன் மெக்கலம் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க, நியூசிலாந்து அணி 200 ரன்களை கடந்தது. இந்த ஜோடி 8 வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில், நாதன் மெக்கலம் அவுட்டானார். இவர் 43 ரன்கள் (4 பவுண்டரி) சேர்த்தார். பின்வரிசையில் மில்ஸ்15 ரன்கள் சேர்க்க, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 224 ரன்கள் சேர்த்தது. 72 ரன்களுடன் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) பிராங்க்ளின் அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா தரப்பில் ஜாகிர், அஷ்வின், யூசுப் பதான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
காம்பிர் மிரட்டல்:
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு காம்பிர் அதிரடி துவக்கம் தந்தார். சேவக் இல்லாத குறையை நீக்கிய இவர், மெக்கே பந்து வீச்சில் "ஹாட்ரிக் பவுண்டரி' அடித்து அசத்தினார். தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த காம்பிர், 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். இவருடன் இணைந்த முரளி விஜய் வழக்கம் போல, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த நிலையில், விஜய் (30) அவுட்டானார்.
மீண்டும் சதம்:
நியூசிலாந்துக்கு எதிரான 2 வது போட்டியில் (ஜெய்ப்பூர்) சதம் அடித்து அசத்திய காம்பிர், நேற்றும் சதம் கடந்தார். இது ஒரு நாள் அரங்கில் இவர் அடிக்கும் 9 வது சதமாக அமைந்தது. மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த விராத் கோஹ்லி, ஒரு நாள் அரங்கில் 10 வது அரை சதம் கடந்தார். மெக்கே பந்து வீச்சில் ஒரு சூப்பர் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் கோஹ்லி. 39.3 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்த இந்திய அணி, 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. காம்பிர் 126 (16 பவுண்டரி) விராத் கோஹ்லி 63 (6 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை காம்பிர் தட்டிச் சென்றார். இவ்வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை தன்வசப்படுத்தியது இந்தியா. இவ்விரு அணிகள் மோதும் 4 வது போட்டி, வரும் 7 ம் தேதி பெங்களூருவில் நடக்க உள்ளது.

பாக்ஸ் செய்திகள்:
பாதிப்பு இல்லை
வதோதரா போட்டியில் சதம் அடித்தது குறித்து இந்திய கேப்டன் காம்பிர் கூறியது: ஒரு கேப்டனாக முதல் தொடரிலேயே வெற்றி பெற்றது, மகிழ்ச்சியான விஷயம். நேற்றைய போட்டியில் அடித்த சதம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் நான் அடித்த சதம், தொடரை கைப்பற்ற உதவியுள்ளது. கேப்டன் பொறுப்பு எனது ஆட்டத்திறனை எந்த விதத்திலும் பாதிக்காது. இதனால் வழக்கம் போல எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறேன். எஞ்சியுள்ள போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 5-0 என வெல்வோம். இவ்வாறு காம்பிர் தெரிவித்தார்.

8 வது வீரர்
நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜெய்ப்பூர் (138 ரன்) மற்றும் வதோதரா (126 ரன்) போட்டிகளில் சதம் அடித்துள்ளார் இந்திய கேப்டன் காம்பிர். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த 8 வது கேப்டன் என்ற பெருமை பெற்றார். முன்னதாக ரிக்கி பாண்டிங் (2 முறை), மகிலா ஜெயவர்தனா, சனத் ஜெயசூர்யா, சவுரவ் கங்குலி, கிறிஸ் கெய்ல், கிரீம் ஸ்மித், ஆலன் பார்டர் ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.

சூப்பர் ஜோடி
நேற்றைய போட்டியில், நியூசிலாந்தின் நாதன் மெக்கலம், ஜேம்ஸ் பிராங்க்ளின் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக 8வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த நியூசிலாந்து ஜோடி என்ற பெருமை பெற்றது. முன்னதாக கடந்த 2001ல் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, டியான் நாஷ் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்திருந்தது.

ஸ்கோர் போர்டு
நியூசிலாந்து
கப்டில் -ரன் அவுட் (காம்பிர்)- 12 (15)
பிரண்டன் மெக்கலம் (கே) விஜய் (ப) ஜாகிர் 0 (1)
வில்லியம்சன் எல்.பி.டபிள்யு., (ப) முனாப் 21 (50)
டெய்லர் (கே) சகா (ப) ஜாகிர் 4 (16)
ஸ்டைரிஸ் (கே) யுவராஜ் (ப) அஷ்வின் 22 (35)
பிராங்க்ளின் -அவுட் இல்லை- 72 (108)
வெட்டோரி (கே) யுவராஜ் (ப) யூசுப் 3 (7)
ஹாப்கின்ஸ் (கே) யுவராஜ் (ப) யூசுப் 6 (6)
நாதன் மெக்கலம் (கே) காம்பிர் (ப) அஷ்வின் 43 (53)
மில்ஸ் -ரன் அவுட் (சகா)- 15 (9)
உதிரிகள் 26
மொத்தம் (50 ஓவரில் 9 விக்., இழப்பு) 224
விக்கெட் வீழ்ச்சி: 1-2 (பிரண்டன் மெக்கலம்), 2-19 (கப்டில்), 3-34 (டெய்லர்), 4-49 (வில்லியம்சன்), 5-77 (ஸ்டைரிஸ்), 6-96 (வெட்டோரி), 7-106 (ஹாப்கின்ஸ்), 8-200 (நாதன் மெக்கலம்), 9-224 (மில்ஸ்).
பந்து வீச்சு: ஜாகிர் 8-2-31-2, நெஹ்ரா 8-1-38-0, முனாப் 10-0-28-1, அஷ்வின் 9-1-49-2, யூசுப் 8-0-27-2, ரவிந்திர ஜடேஜா 7-0-40-0.
இந்தியா
முரளி விஜய் -ரன் அவுட் (வெட்டோரி)- 30 (50)
காம்பிர் -அவுட் இல்லை- 126 (117)
கோஹ்லி -அவுட் இல்லை- 63 (70)
உதிரிகள் 10
மொத்தம் (39.3 ஓவரில் 1 விக்., இழப்பு) 229
விக்கெட் வீழ்ச்சி: 1-115 (முரளி விஜய்).
பந்து வீச்சு: மில்ஸ் 6-0-39-0, மெக்கே 6.3-0-42-0, பிராங்க்ளின் 4-0-34-0, வெட்டோரி 9-0-41-0, நாதன் மெக்கலம் 8-0-36-0, ஸ்டைரிஸ் 6-0-32-0.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அணிக்கு அவமானம் * மூன்றாவது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி * "நம்பர்-' இடத்தை இழந்தது * தொடரை வென்றது இங்கிலாந்து
» யூசுப் பதான் அதிரடி சதம் வீண் *இந்தியா மீண்டும் தோல்வி * கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா
» தொடரை வென்றது இந்தியா: ஜிம்பாப்வே ஹாட்ரிக் தோல்வி
» இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது : இந்தியா மீண்டும் ஏமாற்றம்
» பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது அவுஸ்திரேலியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum