TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மோடி பதவியேற்பு -ஒரு பார்வை.

2 posters

Go down

மோடி பதவியேற்பு -ஒரு பார்வை. Empty மோடி பதவியேற்பு -ஒரு பார்வை.

Post by sakthy Fri May 23, 2014 12:56 pm

மோடி பதவியேற்பு -ஒரு பார்வை.

இந்திய மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்த நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கை, முதல் கட்டத்திலேயே பலத்த விவாதத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
வெளிநாட்டுக் கொள்கையில் மிகுந்த மாற்றங்களைக் கொண்டு வருவார் மோடி என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அவரது முதல் நடவடிக்கையே சொதப்பலாக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அவரது பதவி ஏற்பு விழாவுக்கு அண்டை நாடுகளை அழைத்திருப்பது – குறிப்பாக பாகிஸ்தான்,இலங்கை நாடுகளின் தலைவர்களை அழைத்திருப்பது – உள்நாட்டில் பலத்த கண்டனங்களை உருவாக்கியுள்ளது.

இந்தியத் தேர்தல் என்பது முழுக்க முழுக்க உள்நாட்டு ஜனநாயகமாகும். இந்தியப் பிரதமர் ஒருவர் தனது பதவியேற்பு விழாவில் அனைத்துக் கட்சிகளை அழைப்பதும் – அனைத்து உள்நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ளச் செய்வதும் பொதுவான நடைமுறைதான்.

பாகிஸ்தான், இலங்கைக்கு அழைப்பு முறையா?

ஆனால்,வெளியுறவு கொள்கைகளினால் பல சிக்கல்களைக் கொண்ட இலங்கை,பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளை எடுத்த எடுப்பிலேயே பதவியேற்பு விழாவுக்கு வரவழைப்பது முறையான ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படவில்லை.

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் – எல்லைப் பகுதியில் அடிக்கடி நடக்கும் ஊடுருவல்கள் -இந்திய மண்ணில் அவ்வப்போது ஆங்காங்கே நடைபெறும் குண்டு வெடிப்புகள் – இவையெல்லாவற்றுக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சில அமைப்புகள்தான் பின்னணியில் செயல்படுகின்றன என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்நிலையில்,பிரதமராக பதவியேற்றப் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் முறையான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடத்தி இருநாடுகளுக்கும் இடையிலான அடிப்படைக் கொள்கைகள்,உறவுகள்,வகுக்கப்பட்ட பின்னரே பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு வருவதும் நரேந்திர மோடி பாகிஸ்தான் செல்வதும் சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும்.

ஆனால்,அதைவிடுத்து எடுத்த எடுப்பிலேயே அண்டை நாடுகளை அழைப்பது அதிலும் குறிப்பாக பாகிஸ்தானை அழைப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிராக தமிழகம் கொந்தளிப்பு

இதேபோன்ற நிலைமை தான் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும்.
ஒட்டுமொத்த தமிழ்நாடே இலஙகை அதிபருக்கு எதிராக ஒன்று திரண்டு நிற்கும் வேளையில், அவரை பதவியேற்பு விழாவுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருப்பது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரம்பரிய திராவிடக் கட்சியான திமுகவுக்கு கூட ஓர் இடம் கூட கொடுக்காமல்,பாஜகவுக்கு ஒரு இடமும் அதன் கூட்டணி கட்சி பாமகவுக்கு ஒரு இடமும் வெற்றிப் பரிசாகத் தந்திருக்கும் தமிழக மக்களுக்கு மோடியின் செயல் கன்னத்தில் அறைந்ததை போல அமைந்துவிட்டது.

அவருடன் நெருக்கம் பாராட்டிய – அவரது கூட்டணியில் இணைந்துள்ள வைகோ போன்றவர்களே எதிர்ப்புக் குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர்.
மோடியுடன் நல்லுறவுகளை கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட ராஜபக்சே வருகையினால் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடிக்கு முறையான ஆலோசனை வழங்கப்பட்டதா?

இந்த முடிவை எடுப்பதற்கு முன்னால் மோடியும் அவரது வெளியுறவு கொள்கை ஆலோசகர்களும் ஒன்றை யோசித்திருக்க வேண்டும்.
பதவியேற்பு விழாவை உள்நாட்டு விழாவாக – அனைத்து கட்சிகளையும் – தேர்தலில் முட்டி மோதிக் கொண்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் ஒற்றுமை விழாவாக நடத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

எடுத்த எடுப்பிலேயே அண்டை நாடுகளின் தலைவர்களை திருப்திப்படுத்தவோ அவர்களுடன் உறவை உடனடியாக வலுப்படுத்தும் தேவையோ தற்போது மோடிக்கு கொஞ்சமும் இல்லை.

இந்த நிலையில் தனது பதவியேற்பு விழாவிலேயே சர்ச்சைக்குரிய அண்டை நாட்டுத் தலைவர்களை அழைத்து, சில தரப்பினருக்கு மோடி ஏமாற்றம் தந்திருக்கின்றார்.

அதை விடுத்து,கடுமையான தேர்தல் பிரச்சாரங்களால் பிளவுபட்டு கிடக்கும் இந்திய அரசியல் கட்சிகளை ஒரு மனதாக ஒன்றிணைக்கும் முக்கியமான பணியைச் செய்திருந்தால் உள்நாட்டில் பாராட்டுகள் குவிந்திருக்கும்.
பாகிஸ்தான்,இலங்கை தலைவர்களை உள்ளிட்ட அண்டைநாடுகள் யாரையுமே அழைக்காமல் – உள்நாட்டுத் தலைவர்களை மட்டுமே – உள்நாட்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை மட்டுமே கொண்ட நிகழ்ச்சியாக தனது பதவியேற்பு விழாவை மோடி நடத்த முற்பட்டிருந்தால் -

அவரது முடிவுக்கு எந்தவித சிக்கலும் – எதிர்ப்பும் இருந்திருக்காது.

தமிழர்கள் மீதும்,தமிழகத்தின் மீதும் ,குஜராத்தைப் போல் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுமா? ஈழத்தமிழர்களுக்கு விடிவு கனவா?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

மோடி பதவியேற்பு -ஒரு பார்வை. Empty Re: மோடி பதவியேற்பு -ஒரு பார்வை.

Post by Tamil Fri May 23, 2014 3:47 pm

தமிழர்கள் மீதும்,தமிழகத்தின் மீதும் ,குஜராத்தைப் போல் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுமா? ஈழத்தமிழர்களுக்கு விடிவு கனவா?
கனவாக இல்லாமல் நினைவானால் சரி 
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சேவை அனுமதிக்கக் கூடாது: வைகோ
» பா.ஜ.க., வரலாறு காணாத வெற்றி: மோடி 21ம் தேதி பிரதமராக பதவியேற்பு
» 2022 க்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு: மோடி உறுதி!'ஊழல் இந்தியா' என்பது 'திறமை மிகு இந்தியா' வாக மாற வேண்டும்: மோடி அறைகூவல்
» 167 நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவியேற்பு
» அருணாசல் முதல்வராக கேம்லின் பதவியேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum