TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:24 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 10:57 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விமர்சனம்

Go down

விமர்சனம் Empty விமர்சனம்

Post by ஜனனி Wed Apr 28, 2010 7:31 am

ரெட்டச்சுழி
விமர்சனம் Rettaisuzhi06



சுழிக்குள்
இழுத்துக் கொள்கிற கதைதான். கர்புர்ரென்று திரியும் இரண்டு பெரிசுகள்.
தலைக்கு மேல் நாக்கோடு திரியும் இரண்டு டஜன் சிறுசுகள். இவர்களை வைத்துக்
கொண்டு தமிழ்சினிமாவின் புதிய ரூட்டில் 'பெடல்' போடுகிறார் புதுமுக
இயக்குனர் தாமிரா. இடையில் காதல் என்ற கிரியா ஊக்கியும் இணைந்து கொள்ள,
தூரத்தை வெகு எளிதாக கடக்க வைக்கிறது திரைக்கதை. ஒரு காட்சியில் மின்னலாக
வந்து போகும் 'முத்துக்குமார் நினைவு விளையாட்டு திடல்' என்ற போர்டு
டைரக்டரின் இன உணர்வையும் காட்சி படுத்துவதால், தாமிரா... பிடியுங்கள்
தனியாக ஒரு மெடல்!

காம்ரேட்
தோழர் பாரதிராஜா தெருமுனையில் கூட்டம் போட்டால் கூட, தான் டவுனுக்கு போவதை
தடுப்பதற்கான சதி என்பதாக புரிந்து கொள்ளும் அளவுக்கு பகை வளர்க்கிறார்
தாத்தா பாலசந்தர். அவ்வளவு ஏன்? பெரிய மனுஷன் என்ற நிலையிலிருந்து இறங்கி
பாரதிராஜாவின் படம் போட்ட போஸ்டரை கிழிக்கிற அளவுக்கு மூக்கு நுனியில்
முட்டிக் கொண்டு நிற்கிறது பகை. இவர்கள் வீட்டு இளசுகள் இரண்டும்
எதிரெதிராக நிற்காமல் காதலில் விழுகிற போது என்னாகும் என்பது தெரிந்தே,
என்னாகுமோ என்ற பதற்றத்தை வர வைக்கிறார்கள். க்ளைமாக்ஸ்தான் சற்றே
நாடகத்தனம் (ஹ¨ம், கமர்ஷியல் காம்ப்ரமைஸ்)

இயல்பாகவே
போர்க்குணம் கொண்ட பாரதிராஜாவுக்கு பொருத்தமான கேரக்டர். இவர் பேசுகிற
போதெல்லாம் பிசிறடிக்காமல் இவரது குரலாகவே ஒலிக்கிறது நல்லான் தமிழ்
எழுதியிருக்கும் வசனங்கள். ஒகேனக்கலில் ஆரம்பித்து உலக விஷயங்களை எல்லாம்
அலசுகிறது இவரது பேனா. பேஷ். இமயத்தின் முகத்தில் ஏராளமான உணர்ச்சி
குவியல். க்ளைமாக்சில் "நான் வேணா காலில் விழட்டா" என்று கலங்குவது,
கலக்கல் ஐயா.

பெருத்த
மீசையும் நடுங்கும் கைகளும் துடிக்கும் உதடுகளுமாக சிகரம்! இவரது கோபம்
படீரென்று நகைச்சுவையாக முடிகையில் தியேட்டரே திடுதிடுக்கிறது.
காரிலிருந்து இறங்கி பாரதிராஜாவின் சைக்கிளில் உள்ள காற்றை மெனக்கட்டு
பிடுங்கி விடுவதெல்லாம் டூ மச் என்றாலும் குறும்பு.

நடித்திருக்கும்
பல குட்டீஸ்களில் இருவர் மனசை அள்ளிக் கொள்கிறார்கள். 'தோழரே...' என்று
பாரதிராஜாவை கலாய்க்கும் அந்த பொடியனும், அவ்வப்போது அட்வைஸ் பொழியும்
அச(த்த)ல் குஷ்புவும்! "நீ வாய மூடு. எது பேசினாலும் பிரச்சனை ஆகுது"
என்கிற அதட்டலில் பொங்கி வழிகிறது சிரிப்பும், யதார்த்தமும்!

ஆரி-
அஞ்சலி காதலில் இனிப்பை விட துவர்ப்பே அதிகம். அந்த இளவயது பிளாஷ்பேக்கில்
உச்சரிக்கப்படும் "உசிரளவுக்கு பிடிச்சுருக்கு" என்ற ஒற்றை வசனம், தாமிரா
ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர் என்ற கவுரவத்தை பறைசாற்றுகிறது. எதையோ
நினைத்துக் கொண்டு மார்க் போடும் அஞ்சலி, "32 பெயில்" என்று எழுதுவதும்,
அதை ஆரியின் கைகளில் கொடுத்து கவலைப்பட வைப்பதுமாக சின்ன சின்ன
ஹைக்கூக்களையும் வாரியிறைத்திருக்கிறார் இயக்குனர். படம் நெடுகிலும்
சர்க்கரை தூவியது போல வரும் ஜோக்குகள் தனியாக பாராட்டப்பட
வேண்டியவை.(டீச்சர் எனக்கு 83 மார்க் போட்டிருக்கீங்க. ஏண்டா, அது போதாதா?
இல்ல டீச்சர். நான் பரிட்சையே எழுதல...)

கருணாஸ்
வருகிற காட்சிகள் எல்லாமே கிச்சுகிச்சு நிமிடங்கள். யூனிபார்மை கழற்றாமலே
அதனை மறைத்துக் கொண்டு மாப்பிள்ளை காஸ்ட்யூமுக்கு மாறுகிற அவர்,
க்ளைமாக்ஸ் சீரியசுக்கு நடுவிலும் சிரிக்க வைப்பது ஜிலீர்.

பாடல்களில்
சந்திரா எழுதிய 'நான் என்று சொல், இல்லை நாம் என்று சொல்' பாடலும், அந்த
ட்யூனும் சூப்பர் ஹிட் ஆகக்கூடும். மற்றபடி கார்த்திக் ராஜாவின் வருகையில்
ஆர்ப்பாட்டமில்லை.

செழியனின் ஒளிப்பதிவு கிராமத்தில் ஒரு சிம்லா!

'உசுரளவுக்கு பிடிச்சிருக்கு'ன்னு சொல்ல ஆசைதான், ஆனா...!

-ஆர்.எஸ்.அந்தணன்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum