TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:51 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 13, 2024 3:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Wed Sep 18, 2013 1:20 pm

எம்.ஜி.ஆர்-ரின் வில்லன் என்றால் அது நம்பியார் மட்டுமே. எம்.ஜி.ஆரை ரசித்த, தமிழ்நாட்டின் ஒரு தலைமுறைக்கே நம்பியார்தான் வில்லன் என்றால் அதில் ஆச்சர்ய படுவதற்கு ஒன்றுமில்லை. 
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 1238300_383916088378643_389507147_n
அப்படிப்பட்ட எம்.என்.நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் அத்தனை படங்களில் நடித்து குவித்த எம்.என். நம்பியாரைக் கௌரவப்படுத்தும் விதமாக யாரும் எந்தவிருதும் அளித்ததில்லை .


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Wed Sep 18, 2013 1:21 pm

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 933930_383911735045745_855848495_n
1966-ம் ஆண்டு தமிழகத்தில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா தேர்ந்தெடுக்கப்பட்டார். கவர்னர் பரிசு அளிப்பதாக இருந்தது. 

ஆனால், 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்கும் வாய்ப்பு இல்லை. என் படத்தையே பார்க்காத கவர்னர் எனக்குச் சிறந்த நடிகர் விருது கொடுப்பதை நான் விரும்பவில்லை’ என்று எம்.ஆர்.ராதா அந்த விருதை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் விழாவுக்கே போக வில்லை. 


புகைப்படம்: பெரியாருடன் எம்.ஆர்.ராதா.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Wed Sep 18, 2013 1:22 pm

பெரியாரின் பிறந்தநாள் இன்று. நடிகவேளின் நினைவு தினமும் இன்று. அவர்கள் இருவரை பற்றிய சுவாரஸ்யமான செய்தி ஒன்று. 

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 539724_383706601732925_299126309_n
தன்னுடைய "ராமாயணம்" மூலம் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் பகுத்தறிவு புரட்சி நடத்தி கொண்டிருந்தார்கள். அந்த நாடகத்தை பார்த்த பெரியார் அவர்கள் மிகவும் அகமகிழ்ந்து எம்.ஆர்.ராதாவை பாராட்டி இருக்கிறார். 


'நான் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இராமாயண ஆராய்ச்சி செய்து அதன் தன்மையையும் உண்மையையும் சொற்பொழிவாலும் பத்திரிகையாலும் ஆராய்ச்சி நூல் என்பதினாலும் மக்களுக்கு வெளியிட்டு வந்தாலும் அவை மக்களிடையில் சாதாரணமாக பரவுவதற்கு முடியாமல் போய்விட்டது. இப்போது இராதா அவர்கள் பெரும்பாலும் எனது ஆராய்ச்சிக் கருத்துக்களையே தழுவி நாடக ரூபமாக்கி நடிக்க முன் வந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்" என்று கூறி புளங்காகிதம் அடைந்திருக்கிறார் பெரியார். 

புகைப்படத்தில் அம்புடன் கீழே குனிந்திருப்பவர்தான் ராமர். அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் "நடிகவேள்". 

தகவல் / புகைப்பட / நன்றி: ப்ளாகர் முகில்.

 


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Wed Sep 18, 2013 1:23 pm

நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் சண்டைக் காட்சிகளில் நடிப்பதில்லை என்று ஒரு கொள்கையை வைத்திருந்தார். ஆனால் அவரையும் சண்டை செய்து நடிக்க வைத்தவர் எம்.ஜி.ஆர்.,
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 1240649_383704795066439_321490495_n
'நல்லவன் வாழ்வான்' படத்தில் இருவரும் மோதிக் கொள்ளும் ஒரு காட்சி உண்டு. கதைப்படி எம்.ஆர்.ராதா நடிக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆர்., விரும்பினார். 

அதைப் பற்றி கூறி, "இந்தக் காட்சியில் நாம் இருவரும் நடித்தால் நன்றாக இருக்கும். நீங்கள் சம்மதித்தால் உங்களுக்கு சிரமமில்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கேட்டிருக்கிறார். "சரி, நடிச்சிட்டா போச்சு" என்று எம்.ஆர்.ராதா கூறியதும் எம்.ஜி.ஆர். உற்சாகமாகிவிட்டார்.

அந்த சண்டைக் காட்சியை அமைத்தது, இயக்கியது எல்லாம் எம்.ஜி.ஆர்., தான். தண்ணீருக்கடியில் இருவரும் சண்டை செய்வது போல் காட்சிகள் ஒரு வாரம் தொடர்ந்தாற் போல் படமாக்கப்பட்டது. தண்ணீரில் நனைந்தபடியே இருந்தது எம்.ஆர்.ராதா ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் படுக்கையில் அவரை விழ வைத்தது. எழுந்திருக்க முடியாமல், அசைய முடியாமல் படுத்திருந்தார். எம்.ஜி.ஆர்., ரொம்பவும் வேதனைப்பட்டுப் போனார். 'நம்மால் தானே ராதாண்ணனுக்கு இப்படி ஆயிற்று' என்று தனக்குத் தானே குற்ற உணர்வுக்குள் மருகினார்.

தனது படப்பிடிப்பு மற்றும் எல்லா வேலைகளையும் ஒத்தி போட்டுவிட்டு எம்.ஜி.ஆர்., தினமும் எம்.ஆர்.ராதா வீட்டுக்கு சென்றிருக்கிறார். 

எம்.ஆர்.ராதா தன்னுடைய வீட்டின் கீழ் தளத்தில் கட்டிலில் படுத்திருப்பார். எம்.ஜி.ஆர்., அவரது முகத்திற்கு நேராக கீழே தரையில் அமர்ந்து கொள்வார். வந்தது முதல் யாருடனும் பேச மாட்டார். எம்.ஆர்.ராதாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரமல்ல, காலை முதல் மாலை வரை அமர்ந்திருப்பார். இப்படி எம்.ஆர்.ராதாவின் உடல் நலம் தேறும் வரையில் எம்.ஜி.ஆர்., ஏதோ தியானம் செய்வது போல் அமர்ந்துவிட்டு செல்வாராம். 


எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர் இடேயேயான நட்பு குறித்து ஒரு பத்திரிக்கை பேட்டியில் எம்.ஆர்.ராதா கூறியது.

 


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Wed Sep 18, 2013 1:23 pm

"கல்கி கார்டனில்" நடக்க இருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் இசை கச்சேரியை ரசிக்க காத்திருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள். 
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 562814_383334828436769_1125270801_n
அம்மாவின் பாட்டை ரசிப்பதற்காக முன் வரிசையில் அமர்ந்திருக்கும் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர். கச்சேரிக்கு முன்னதாக அது குறித்து உரையாற்றி கொண்டிருக்கிறார் அம்மாவின் கணவர் சதாசிவம்.
 


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Wed Sep 18, 2013 1:24 pm

காற்று முழுவதும் கீதமாக நிறைந்திருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு டான்சில்ஸ் தொந்தரவு இருந்திருக்கிறது. 

இந்த பிரச்சனைக்காக எம்.எஸ்.க்கு சிகிச்சை பண்ணின டாக்டர், அவங்களுக்கு ஆபரேஷன் பண்ண மறுத்துட்டாராம். "இந்த நாட்டுக்குக் கடவுள் கொடுத்திருக்கிற மிகப் பெரிய பரிசு இவங்க குரல். அதுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா..?" அப்படின்னு அதுக்கு காரணம் சொல்லிருக்கார். 
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 1000344_383329441770641_95950358_n
அப்புறம் எம்.எஸ்.க்கு இருந்த, அந்த டான்சில்ஸ் பிரச்சனை வெறும் மருந்து, மாத்திரைகளிலேயே இருக்கிறது.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Wed Sep 18, 2013 1:25 pm

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாவின் 97-வது பிறந்த தினம் இன்று. அவர்களை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக நமது டி.சி.டி.வி பக்கத்தில். 


எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாவுக்காக மட்டுமே, காஞ்சிபுரத்தில் இருந்து, தறியில் நெய்த ஸ்பெஷல் பட்டுப் புடவைகள் வந்து கொண்டிருந்தது. 

பெரும்பாலும் மெஹ்ரூன் அல்லது ப்ளூ-கலரில் அதிக ஆடம்பரங்கள் இல்லாத நீரோடை போன்ற தெளிவான புடவைகள் மட்டுமே அவரது விருப்பமாக இருதிருக்கிறது.
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 29588_383328001770785_1666795998_n
எம்.எஸ்.அம்மாவுக்காக நெய்த இந்த "ப்ளூ" கலர்தான், பின்னாட்களில் 'எம்.எஸ். ப்ளூ' என்று தமிழக பெண்களிடம் மட்டுமல்ல இந்திய பெண்களிடமும் புகழ் பெற்றுவிட்டது.

 


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Wed Sep 18, 2013 1:27 pm

இன்று 'அஷ்டாவதானி" பானுமதி அம்மா . அவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 1185841_380764282027157_381985619_n

தன்னுடைய 13-வது வயதில் நடிக்க வந்த பழம் பெரும் நடிகை "பானுமதி" தன்னுடய 18 -வயதில் துணை இயக்குனரான ராமகிரிஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். அத்துடன் திரைப்படங்களுக்கு முழுக்கு போட்ட பானுமதி, தெலுங்கு திரையுலகின் முன்னோடியான பி.என்.ரெட்டியின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் நடிக்க வந்த படம் "ஸ்வர்க சீமா".


இப்படத்தில் இடம்பெற்ற , கையில் வெள்ளைப் புறாவை வைத்துக்கொண்டு, 'ஓகோ... கோ... பாவுரமா...' என்ற பானுமதியின் ஆடலும் பாடலும் தெலுங்கு திரையுலகில் மட்டுமில்லை, தமிழ் ரசிகர்களையும் கட்டி போட்டுவிட்டது. 'சொர்க்க சீமா' அடைந்த வெற்றி காரணமாக, சினிமாவுக்கு முழுக்கு போடும் திட்டத்தை பானுமதி கைவிட் டார். அதன் பிறகே "பானுமதி ராமகிருஷ்ணா" என்கிற ஒரு அற்புதமான 'அஷ்டாவதானி" சினிமாவுக்கு கிடைத்தார். 


புகைப்படம்: "ஸ்வர்க சீமா"வில் பானுமதி ராமகிருஷ்ணா.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Wed Sep 18, 2013 1:28 pm

ராஜகுமாரி படத்தின் போதுதான் அதில் வசனம் எழுத சென்ற கருணாநிதிக்கும், படத்தில் கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆருக்கும் அறிமுகம் ஏற்பட்டு இருக்கிறது. 

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 1237650_379423018827950_1432356842_n
அப்போது, எம்.ஜி.ஆர். காங்கிரஸ் அனுதாபியாக இருந்ததால் காந்தி எழுதிய புத்தகங்களை கருணாநிதிக்கு பரிசளிப்பதும், கருணாநிதி அப்போது பெரியாரின் "குடியரசு" பத்திரிகையில் எழுதி வந்ததால் பெரியார் எழுதிய புத்தகங்களைக் எம்.ஜி.ஆருக்கு பரிசளிப்பதுமாக இருந்திருக்கிறது 


இப்படி தொடங்கிய அறிமுகம்தான் பின்னாட்களில் நட்பாக துளிர் விட்டு விரைவிலேயே நெருங்கிய நண்பர்களாகவும் மாறி இருக்கிறார்கள்.

தகவல் நன்றி: காலச்சுவடு.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Wed Sep 18, 2013 1:28 pm

எம்.ஜி.ஆருடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த லதா, சிவாஜியுடன் ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா. அதுதான் உண்மை. 
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 1231472_379360695500849_475049820_n
இதுபற்றி ஒரு பேட்டியில் லதா இப்படி கூறி இருக்கிறார். 


“ஒரு படத்திலாவது சிவாஜியுடன் நடித்து விடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போதுதான் சிவாஜி நடிக்கும் சிவகாமியின் செல்வன் படம் தயாராக இருந்த நேரம். படத்துக்கு 2 கதாநாயகிகள். ஒரு கதாநாயகி வாணிஸ்ரீ. இன்னொரு கதாநாயகியின் கேரக்டர் படத்தின் பிற்பகுதியில்தான் வரும் என்றார்கள். அதாவது பெரிய சிவாஜியின் மனைவி வாணிஸ்ரீ. அவரின் வாரிசாக உருவாகும் சிவாஜிக்கு யாரைப் போடலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள். இந்த தகவல் என் காதுக்கு வந்ததும் இந்த கேரக்டரையாவது ஏற்று நடிப்போமே என்று தோன்றியது. அதோடு மிகக்குறைந்த நாட்களே கால்ஷீட் கேட்டார்கள். அதனால் சிவாஜி படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் அந்த கேரக்டரில் நடிக்க `ஓ.கே' சொல்லிவிட்டேன். செட்டில் என்னை ரொம்ப மரியாதையாக நடத்தினார், சிவாஜி. ஆனாலும் தொடர்ந்து அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையாமலே போய்விட்டது.”


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Wed Sep 18, 2013 1:29 pm

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 1235056_379356548834597_1597443913_nஜெயலலிதாவின் போயஸ் வீட்டில் எப்போதும் ஏழு நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால், சில குட்டிகள் சிறுதாவூர், கொடநாடு எனப் பிரித்து அனுப்பிவைக்கப்படுகின்றன.


புகைப்படம், தகவல்: நன்றி விகடன்.
 


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Wed Sep 18, 2013 1:32 pm

16வயதினிலே படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த சூழ்நிலையில் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் யாரும் படத்தை வாங்க விரும்பவில்லை.
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 1003777_377160055720913_30140195_n
"விளையாட்டுப் பையன் மாதிரி நடிச்சிக்கிட்டு இருந்த கமலஹாசனை இப்படி கோவணம் கட்டி, வெத்தல பாக்கு போட வச்சிட்டாங்க,அப்புறம் எப்படி படம் ஓடும்" என்பது தான் அவர்கள் சொன்ன காரணம்.

அப்படி இருந்தும் ஒரு விநியோகஸ்தர், மிகப்பெரிய "NSC" (வடக்கு, தெற்கு ஆற்காடு, செங்கல்பட்டு) ஏரியாவை வாங்க முன் வந்துள்ளார்.ஆச்சர்யம் தாங்க முடியாத பாரதிராஜா," நெசமாத்தான் வாங்கப்போறீங்களா? நெசமாவே உங்களுக்கு படம் பிடிச்சிருக்கா?" என்று கேட்டுள்ளார்.

"ஒரு அடிப்படையான கருத்தைச் சொல்லியிருக்கீங்க. ஆளப் பாக்காதே. ஆடையப் பாக்காதே.மனசப் பாரு அப்படின்னு. கிராமத்துலயிருந்து பட்டணம் வரைக்கும் எல்லாருக்கும் தேவையான ஒரு கருத்து இது.எல்லா ஜனங்களுடைய மனசுக்கும் தெரிஞ்ச விஷயம். அதனால இந்தக் கருத்து ஜெயிக்கும்.எனக்கு நம்பிக்கையிருக்கு" என்று அந்த விநியோகஸ்தர் பதிலளித்துள்ளார்.


அந்த விநியோகஸ்தர் வேறு யாருமில்லை. அப்போது காதர் மொய்தீன் என்ற பெயரில் இருந்து - தற்போது ராஜ் கிரணாக மாறியுள்ள நடிகர் " ராஜ்கிரண்"தான்.


ராஜ்கிரண் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். டி.சி.டி.வி குடும்பத்தின் சார்பில் ராஜ்கிரணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Wed Sep 18, 2013 1:33 pm

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 21407_375788425858076_279722008_nஎம்.ஜி.ஆர்., தமிழக முதல்வராக இருந்த பொது இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியை நேரடியாகச் சென்று பார்த்தது மட்டுமின்றி கபில் தேவ், கவாஸ்கர் போன்ற இந்தியா வீரர்களையும், வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற பாகிஸ்தான் வீரர்களையும் கவுரவித்து, பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார். கிரிக்கெட் போட்டி முழுவதையும் பைனாகுலர் மூலம் பார்த்து ரசித்தார்.

திருச்சியில் தி.மு.க.வின் வளர்ச்சி நிதிக்காக எம்.ஜி.ஆரின் தலைமையில் 'காவேரி தந்த கலைச்செல்வி' நாட்டிய நாடகம் ஜெயலலிதா குழுவினர் நடத்திக் கொண்டிருக்க, கீழே பார்வையாளர் வரிசையில் கொஞ்சம் தனியாக உட்கார்ந்து கொண்டு எம்.ஜி.ஆர். டிரான்சிஸ்டரில் (பேட்டரியில் இயங்கும் கையடக்கமான அளவில் இருக்கும்) கிரிக்கெட் வர்ணனையை காதில் வைத்து கேட்டுக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆர். வலது காதை பொத்திக் கொண்டு தலையை குனிந்தது போல் தெரிந்தது பார்ப்பவர்களுக்கு. ஒன்றிரண்டு பத்திரிகையாளர்கள் தான் அதை மோப்பம் பிடித்து செய்தியாக்கினர்.

காரில் முதன் முதலில் டிவி., பொருத்திக் கொண்டது எம்.ஜி.ஆர்., தான். அது செய்திகளுக்காக மட்டுமின்றி, டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காகவும் தான். கிரிக்கெட் வர்ணனையை கேட்பதாகட்டும், நிகழ்ச்சிகளை பார்ப்பதாகட்டும் அவர் ஒரு தனிமை விரும்பி.

எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வராக இருந்த பொது இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியை நேரடியாகச் சென்று பார்த்தது மட்டுமின்றி கபில் தேவ், கவாஸ்கர் போன்ற இந்தியா வீரர்களையும், வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற பாகிஸ்தான் வீரர்களையும் கவுரவித்து, பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார். கிரிக்கெட் போட்டி முழுவதையும் பைனாகுலர் மூலம் பார்த்து ரசித்தார்.

சிவாஜி நடிகர் சங்கத் தலைவராக இருந்த பொது பெங்களூரில் தமிழ், கன்னட திரையுலகினர் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டிக்கு தலைமை தாங்கி நடத்தி வைத்தார் நடிகர் எம்.ஜி.ஆர். இப்படி வெளியே தெரிந்த தகவல்கள் குறைவு. தெரியாதது நிறைய உண்டு.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Wed Sep 18, 2013 1:34 pm

எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதி’ படத்தில், வில்லன்..... 
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 1235906_375762115860707_1439047152_n
எம். ஜி. ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘ராஜகுமாரி’ யில் வில்லன்..... 

சிவாஜி கதாநாயகனாக பிரகாசித்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் குணசித்திர நடிகர்.....

இயக்குனர் ஸ்ரீதரின் “காதலிக்க நேரமில்லை” படத்தில் முழு நீள நகைச்சுவை கதாபாத்திரம்... என்று நடிப்பை ஊதிய டி.எஸ்.பாலையா அவர்களின் பிறந்த நாள் இன்று. 


பாகவதர், சின்னப்பா, எம். ஜி. ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் ஆகிய சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்த பாலையா 40 ஆண்டுகளில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். 

படங்களில் நடனம் மட்டுமே ஆடிவந்த லலிதா - பத்மினி சகோதரிகள் முதன் முதலாக ‘பிரசன்னா’ என்ற மலையாள படத்தில் நடித்தனர். பட்சிராஜா தயாரித்த இப்படத்தின் கதாநாயகன் பாலையா என்பது குறிப்பிடத்தக்கது.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum