TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இதயத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!

2 posters

Go down

 இதயத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!  Empty இதயத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!

Post by KAPILS Thu Aug 01, 2013 9:05 pm

இதயத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் டஜன் கணக்கில் பல உடற்பயிற்சிகள் உள்ளன. இத்தகைய உடற்பயிற்சிகளின் நோக்கம், உடல் உழைப்பை அதிகரிக்கச் செய்வதே ஆகும். இதன் மூலம் இதயத்தை நல்ல உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள முடியும். எப்படியெனில் இவ்வகை பயிற்சிகள் இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரிக்கச் செய்வதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது. பொதுவாக இதயத்தை நல்ல நிலையில் வைத்திருப்பதன் மூலம், உடல் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தும் முறையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணப்படும். அதிலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, படிகளில் ஏறும் போது களைப்படைய மாட்டோம்.


அதிக நேரம் உடற்பயிற்சிகள் செய்வதால், இதயமானது உடல் முழுவதும் இரத்தத்தை நன்கு பம்ப் செய்து, இதயத்துடிப்பை சீராக்கி உடலுக்கு நன்மை பயக்கிறது. குறிப்பாக இதயத்துடிப்பை அதிகரிக்க, ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்கள் ஏரோபிக் பயிற்சிகள் செய்வது மிகவும் நல்லது. வாரத்திற்கு மூன்று நாட்கள், இருபது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நலம். மேலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பல்வேறு உடற்பயிற்சிகள் உள்ளன. இப்போது அந்த உடற்பயிற்சிகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை தினமும் பின்பற்றி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

நடைப்பயிற்சி

சுறுசுறுப்பான நடைப்பயிற்சி, இதயம் நன்கு இயக்குவதற்கு உதவுகிறது. அதிலும் வசதியான சிறந்த காலணிகளை அணிந்து கொண்டு நன்கு வேகமாக நடைப்பயிற்சி செய்யும் பொழுது, நமது நோக்கத்தை அடைய முடியும். ஒருவேளை உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை என்றால், ஒரு நாளைக்கு பலமுறை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

ஓட்டம்

ஓட்டப் பயிற்சியானது நமது உடலின் கலோரிகளை எரிப்பதற்கான மிகச்சிறந்த பயிற்சி முறையாகும். 75 கிலோ எடை கொண்ட ஒருவர், ஒரு மைல் ஓடினால் 100 கலோரிகளை எரிக்க முடியும். அதிலும் சுறுசுறுப்பாக வேகத்துடன் நடைப்பயிற்சியை ஆரம்பித்து, ஐந்து நிமிடங்களுக்கு இடையிடையே ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் ஓட வேண்டும். ஒருவேளை முடியுமென்றால் ஓடும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

மாடிப்படிகளில் ஏறுதல்

மாடிப்படிகளில் ஏறும் பயிற்சியானது, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

யோகா

யோகா செய்வதன் மூலம் நமது உடலிலுள்ள கொழுப்புக்கள் குறைந்து, இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.

எடை தூக்கும் பயிற்சி

எடை தூக்கும் பயிற்சியின் மூலம் அதிகப்படியான இரத்த அழுத்தம் குறையும். மேலும் இப்பயிற்சி கொழுப்புச்சத்தை அளவுடன் வைத்துக் கொள்ளவும், இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. மெல்லிய தசைகளை அதிகப்படுத்தி தேவையில்லாத கொழுப்பு தசையைக் கரைத்து, உடலின் வளர்சிதை மாற்றத்தினை சீராக்கி சரியான எடையுடன் திகழ உதவுகிறது. அதிலும் உடலைப் பலப்படுத்தும் இந்த ஏரோபிக் பயிற்சியானது வயதாவதால் ஏற்படும் எலும்பு மற்றும் தசை மாற்றங்களைத் தடுக்க உதவுகிறது. இவ்வகைப் பயிற்சிகள் இதயத்தின் துடிப்பை அதிகரிக்காது. ஆனால் உடலுக்கு நல்ல ஸ்டாமினாவைத் தரும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வலுவிழந்து காணப்படும் தசைகள் மற்று இதர தசைப்பகுதிகள் உறுதி பெறவும் இப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

நீச்சல்

நீச்சல் பயிற்சியானது உடல் முழுவதற்குமான ஒரு சிறந்த பயிற்சியாகும். இந்த பயிற்சியானது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்வது மட்டுமின்றி, இதயத்தின் முழு ஆரோக்கியத்திற்கும் உதவியாக உள்ளது. நீந்தும் பொழுது நீரானது பன் திசை தடுப்பானாக செயல்படுவதால், தசைகள் நன்கு பலம் பெற்று உறுதியாகத் திகழ்கிறது. ஒருவேளை மூட்டுவலிகள் இருந்தால், வலியை அதிகரிக்கச் செய்யும் நடை மற்றும் ஓட்டப் பயிற்சிகளை விட, நீச்சல் பயிற்சி மிகவும் நல்லது.

சைக்கிள் ஓட்டுதல்

சைக்கிள் ஓட்டும் பயிற்சியானது மிக எளிய மற்றும் மூட்டுகளுக்கு துன்பம் தராத பயிற்சியாகும். எனவே ஜிம்களில் தனியாகவோ அல்லது சாலைகளிலோ சைக்கிள் ஓட்டும் பயிற்சியை மேற்கொள்ளலாம். இப்பயிற்சியின் போது, இதயமானது இரத்தத்தை நன்கு பம்ப் செய்வதோடு, உடலின் கீழ்ப்பகுதியை நன்கு வலுவுறச் செய்து, அங்குள்ள தசைகளையும் பலப்படுத்துகிறது.

சர்க்யூட் பயிற்சி

அனைத்து உடற்பயிற்சிகளையும் கலந்து செய்ய வேண்டும். உதாரணமாக, இதயத்திற்கான பயிற்சி செய்யும் பொழுது, இடையிடையே மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை உடல் பலத்திற்கான பயிற்சியையும் ஒரு நிமிடத்திற்கு செய்ய வேண்டும். இல்லையென்றால் ஐந்து முதல் பத்து வகையான உடல் பலத்திற்கான பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்து, அதில் ஒரு வகையைப் பயிற்சி செய்து, பின் குறைந்த எடை தூக்கும் பயிற்சியினை மீண்டும் மீண்டும் செய்து, இதய ஓட்டம் அதிகரிப்பதற்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் தசைகள் உறுதி பெற்று, இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.
நன்றி : செய்தி
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

 இதயத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!  Empty Re: இதயத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!

Post by logu Thu Aug 01, 2013 9:21 pm

அருமை கபில்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

 இதயத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!  Empty Re: இதயத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!

Post by KAPILS Thu Aug 01, 2013 9:25 pm

நன்றிஅறிவிப்பு அறிவிப்பு 
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

 இதயத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!  Empty Re: இதயத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்
» கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன.. மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன... இந்தக் குட்டி தேவதை சொல்லுரா கேளுங்க?
» காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!!
» இது கண்டிப்பாக அனைவரும் Install செய்ய வேண்டிய App
» ஆண்கள் 35 வயது தொடக்கத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum