TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!

3 posters

Go down

இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!  Empty இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!

Post by logu Sat Jun 15, 2013 2:34 pm


இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!  970213_662626763751237_1644443510_n


மாணவர் நகலகம் அருணாச்சலம் வெளியீட்டில் வந்த "நந்தன் வழி" இதழில் முதல்முறை மணிவண்ணன் அவர்களின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். அதற்கு முன்னர் பல திரைப்படங்கள் வழியாக அவரை அறிந்திருந்தாலும், அவரது எழுத்துக்களின் சமூக கோபமும், கூர்மையும் ஈர்த்தது.

மணிவண்ணன் தீவிரமான வாசிப்பாளர். தேர்ந்த அரசியல் பார்வையும், ஈடுபாடும் உடையவர். தமிழ் சமூகத்தின் அரசியல் விடுதலை சாத்தியப்பட வேண்டுமென்ற தீராத வேட்கை அவருக்குள் உண்டு. ஈழம் இனப்படுகொலையில் வெந்து தணிந்த போது வேதனையில் துடித்த மிகச்சில பிரபலங்களில் அவரும் ஒருவர். 

எனது "திரை கடலோடியும் துயரம் தேடு", "ஈழம்: இனப்படுகொலைக்கு பின்னால்" நூல்களை வாங்கி படித்து நண்பர்களுக்கும் வழங்கியிருக்கிறார். இரண்டு நூல்களையும் 500 வீதம் வாங்கி தனது மகளது திருமண வரவேற்பின் போது வாழ்த்த வந்தவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். அதுவரையில் தனிப்பட்ட எந்த தொடர்பும் அவரோடு இருந்ததில்லை. பிரபலங்களை தொடர்புகொள்ள எப்போதுமிருக்கிற தயக்கத்தோடு அவருக்கு நன்றி சொல்ல அழைத்த பேச்சு துவக்கம் பல நாட்கள் அரசியல் பற்றிய தொலைபேசி உரையாடலாக தொடர்ந்தது. அப்போதெல்லாம் உண்மையான வாஞ்சையுடன் ஈழம், ஈழத்தில் தமிழ் மக்களின் துயரம், தமிழ்நாட்டின் அரசியல் அவலம் குறித்து பேசியிருக்கிறார். ஒரு பிரபலத்திடம் பேசுவது போன்ற எந்த உணர்வும் ஏற்பட்டதில்லை. அப்படி அவர் காட்டிக்கொண்டதுமில்லை. மிக எளிமையான மனிதர். அனைத்திற்கும் மேலாக எதிரில் இருப்பவர் பேசுவதை கூர்ந்து கவனித்து, கேட்கக்கூடிய மனிதர். 

சென்னைக்கு வரும் போது நேரடியாக சந்திக்க அவரும் விரும்பினார். 2011ல் சென்னை வந்த போது ஆழி Senthil Nathanஅவர்களோடு சென்று சந்தித்து சில மணி நேரங்கள் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போதும் ஈழம், தமிழ்நாட்டு அரசியல், தெற்கு சூடான் விடுதலைப் போராட்டம் என்று பல்வேறு விசயங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். இந்த முறை சென்னைக்கு செல்லும் போது சந்திக்க நினைத்திருந்தேன். இன்று அவர் இல்லை. கவலையும், இயலாமையும் வருத்துகிறது. 

அரசியல் ஓர்மையுள்ள ஒரு திறமையான கலைஞனை தமிழ் சமூகம் இழந்து தவிக்கிறது. அரண்மனைகளில் வாழ்பவர்களின் கௌரவமும், சுயநலமும் இல்லாத இக்கலைஞன் தமிழ் சினிமாவிற்கும், தமிழ்மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் என்றும் இணையற்ற நண்பனாகவே இருந்திருக்கிறார். அதனால் தான் பெரியாரியத்தையும், பொதுவுடமை தத்துவத்தையும் இரு கண்களாக கொண்டு தமிழ்தேசிய அரசியலை சுயநலமில்லாமல் தூக்கிப்பிடிக்க அவரால் முடிந்தது. மணிவண்ணன் மாளிகைகளின் அரசனல்ல; மண்ணின் மக்களின் கலைஞன். 

அவரது இழப்பிற்கு ஆழ்ந்தஅஞ்சலிகள்

logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!  Empty Re: இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!

Post by logu Sat Jun 15, 2013 2:34 pm

இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!  1001327_570269119692423_1705692659_n
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!  Empty Re: இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!

Post by logu Sat Jun 15, 2013 2:35 pm

இனி நான் இருப்பது எத்தனை காலமோ தெரியாது. நான் இறந்துவிட்டால் என் உடலில் புலிக்கொடி போர்த்தி இறுதி நிகழ்ச்சிகளை செய்யுங்கள். இதுதான் என் விருப்பம்.'

#மணிவண்ணன் செப்டம்பர் 10, 2011
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!  Empty Re: இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!

Post by logu Sat Jun 15, 2013 2:36 pm

இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!  5544_387850604664885_1509352416_n
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!  Empty Re: இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!

Post by logu Sat Jun 15, 2013 2:40 pm

நான் டப்பிங் பேசிக் கொண்டிருந்த காலத்தில்... ஒரு கதாபாத்திரத்திற்கு என் குரல் பொருத்தம் என முடிவு செய்து ரூ 500 முன் பணம் கொடுத்தார்கள். அதற்கு 10% கமிஷன் யாருக்கோ கொடுக்க வேண்டும் என்ற சூட்சமம் அறியாத நான், டீ கடன்,பன் கடன்,டிபன் கடன் இப்படி எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டு டப்பிங் அரங்கிற்கு சென்றேன். இன்றே அந்த கேரக்டருக்கு பேசி முடித்து விட்டால் மீதி 1500 கிடைக்கும் அதில் தீபாவளியை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்ற 1000 கற்பனையில் உதடு தானாய் விசிலியது. ஆனால் எனக்கு பதில் அந்த கேரக்டருக்கு வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். கேட்டால் என் குரல் பொருந்த வில்லையாம்(10%)!
கலங்கிய படி வாசலில் நின்றிருந்தேன். அப்படத்தின் இயக்குனர் வந்தார். விஷயம் அறிந்து என்னை சமாதானப் படுத்தினார். அடுத்த படத்தில் டப்பிங் வாய்ப்பு தருவதாக சொன்னார். நான் சொன்னேன் அதற்காக நான் அழவில்லை நீங்கள் கொடுத்த முன் பணத்தை நான் செலவழித்து விட்டேன், உடனே என்னால் திருப்பி தர முடியாது நான் என்ன செய்வேன் என்றேன்.
என் தோளைத் தட்டி கொடுத்து "பரவாயில்ல போங்க" என்று சிரித்தார். அந்த சிரிப்பு மட்டும் இன்னமும் என் எண்ணத்தில் மறையவே இல்லை. அந்த இயக்குனர் சற்று முன் மறைந்த மணிவண்ணன்!
நடிகர் பார்த்திபன் 
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!  Empty Re: இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!

Post by logu Sat Jun 15, 2013 2:42 pm

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் சிறந்து விளங்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மணிவண்ணன். இவர் இன்று சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பகல் 12 மணி அளவில் திடீர் மாரப்டைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 59.
1979-ம் ஆண்டு பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள், டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதையும் எழுதி உள்ளார்.பின்னர் படிப்படியாக உயர்ந்து இயக்குனர் ஆனார். இவரது முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை. நூறாவது நாள், ஜல்லிக்கட்டு உள்ளபட 50 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அமைதிப்படை மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர் என்ற அந்தஸ்து இவருக்கு பெற்றுக்கொடுத்தது.
இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!  15-manivannan
படையப்பா, முதல்வன், காதலுக்கு மரியாதை, ரெட் உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் வெளியான ராஜராஜ சோழன் எம்.ஏ. என்ற படம் இவரது 50-வது படம். இதுவே கடைசிப் படமாகவும் அமைந்துவிட்டது.

ஆரம்பக் காலங்களில் திமுக அபிமானியாக இருந்த மணிவண்ணன், பின்னர் வைகோ மதிமுகவை தொடங்கியபோது அவருக்கு ஆதரவளித்தார். தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளரான மணிவண்ணன், முள்ளிவாய்க்கால இறுதிபோருக்கு பின்னர், சீமானின் நாம் தமிழர் கட்சி மேடைகளில் முழங்கி வந்தார். மேலும் பல்வேறு ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களிலும் பங்கேற்று வந்தவர் திடீரென் மறைந்ததைக் கேள்விப் பட்டு நெசப்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் போன்மாதம் நடந்த அமைதிப் படை 2-இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிவண்ணன் ஒரு கட்டத்தில், ‘பாரதிராஜாவுக்கு தன்னைத் தவிர யாருமே இயக்குநர் இல்லை என்ற நினைப்பு உண்டு. அதனால் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலடியாக ‘டைம்பாஸ்’ நிறுவன இதழ் ஒன்றில் பாரதிராஜா “மணிவண்ணனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண்காணிப்பில் இருந்துச்சு. அந்தப் பெண்ணுக்கு நானும் ஆறுமுகமும் அவருடைய பிராமண சமூகத்தில் மாப்பிள்ளை தேடிட்டு இருந்தோம். ஒரு முறை மணிவண்ணனையும் அழைச்சுட்டு அந்த மயிலாப்பூர் வீட்டுக்குப் போயிட்டு கார்ல திரும்பிட்டு இருந்தோம். அப்போ அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாப் பேசிட்டே வந்தோம். அப்போ எங்க பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், ‘அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனே’னு சட்டுனு கேட்டுட்டான். அப்போதைக்கு நான் எதுவும் சொல்லாம, என் மனைவிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். ‘ஒரு வருஷம் போகட்டுங்க. அப்பவும் அவர் இதே பிடிவாதத்தோட இருந்தா… அவருக்கே அந்தப் பெண்ணைக் கட்டிவெச்சுடலாம்’னு அவங்க சொன்னாங்க. ஒரு வருஷம் போனது. ‘மணிவண்ணன் அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கான். பேசாம கட்டி வெச்சிடுங்க’னு சித்ரா லட்சுமணன் என்கிட்ட வந்து சொன்னான். ‘சரி’னு முடிவெடுத்து, அந்தப் பொண் ணுக்கு என் கைக்காசுல இருந்து பத்து பவுன் நகை போட்டு, அந்தப் பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன்.
அப்புறம் ‘காதல் ஓவியம்’ படத்தின் வசனத்தை அவனை எழுதச் சொன்னேன். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்துட்டு இருக்கும்போது அதுல கலந்துக்காம, என்னைத் தேடி வீட்டுக்கு வந்தான் மணிவண்ணன். ‘நான் தனியாப் படம் டைரக்ஷன் பண்ணப்போறேன்’னு சொன்னான். உடனே, மனசார ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன்.
மணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி. என்ன ஒண்ணு… வாயைத் திறந்தா, எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும். ஒரு ராஜா கதை இருக்குமே… வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா. ஆனா, அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. ‘இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்க’னு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க… பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப் போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்!” -என்று கூறியிருந்தார்.இந்த பேட்டி வெளியானதில் இருந்தே மணிவண்ணன் மிகுந்த கவலைக்குள்ளானதில்தான் மாண்டு போனார் என நன்கு தெரிந்தவர்கள் கூறுகின்றனர்..

கோடங்கி

- See more at: [You must be registered and logged in to see this link.]
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!  Empty Re: இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!

Post by veelratna Sat Jun 15, 2013 6:54 pm

கண்ணீர் அஞ்சலிகள்
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!  Empty Re: இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!

Post by அருள் Sun Jun 16, 2013 7:48 am

gold
veelratna wrote:கண்ணீர் அஞ்சலிகள்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!  Empty Re: இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum