TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 13, 2024 3:11 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 12, 2024 12:41 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

3 posters

Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by அருள் Sat Jul 21, 2012 8:28 am

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 547829_253550568081863_1816681981_n
தன் கேரியரையே புரட்டிப் போட்ட படம் என்று
கமல்ஹாசன் சொன்ன அபூர்வ சகோதரர்கள் படத்தில் - அவருக்கு அம்மாவாக முதலில்
நடித்தது காந்திமதிதான். அவருடன் ஒரு பாடல் காட்சியே ஷூட் செய்த பிறகு
திரைக்கதையை மாற்றிய கமல், காந்திமதிக்கு பதில் மனோரமாவை அம்மாவாக
மாற்றினார்.

கமல் இதற்காக காந்திமதியிடம் பகிரங்கமாய் மன்னிப்பு
கேட்டார். ஆனால் காந்திமதி இதற்கெல்லாம் வருத்தப்படவில்லை. அவர் இறக்கும்
வரை, கமல் தன்னுடைய மகன் போல என்றே சொல்லி வந்தார். எல்லா சினிமா
பிரமுகர்களிடமும் அன்பாய் நேசிக்கும் வெகுளி மனசு அவருக்கு என்கிறார்கள்
கோடம்பாக்கத்துக்காரர்கள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by அருள் Sat Jul 21, 2012 10:32 am

"வீரபாண்டிய
கட்டபொம்மன்" திரைப்படம் வெளியாகும் வரை, நாடகமாக மட்டும் 100 முறை
மிகமிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திரைப்படம் வெளிவந்து
ஓடிமுடிந்தபின்பும் ஒரு 12 முறை நடத்தப்பட்டது.

இந்த 112
முறையில், இந்நாடகத்தின் அபார வசூல் மூலம் நடிகர் திலகம் பல்வேறு
ஸ்தாபனங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் பல்வேறு
நற்செயல்களுக்கும் அள்ளி அளித்துள்ள நன்கொடை மட்டும் ரூபாய் முப்பத்து
இரண்டு லட்சம். இத்தொகை இன்றைய பொருளாதார மதிப்பீட்டில் பற்பல
கோடிகளுக்குச் சமம்.

வீர பாண்டிய கட்ட பொம்மன் நாடகத்தில் வீர வசனம் பேசும் நடிகர் திலகத்தின் புகைப்படம் உங்களுக்காக.


தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 252748_253571161413137_1804921649_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by அருள் Sat Jul 21, 2012 10:39 am

நடிகர் திலகம் நடிப்பில் கம்பீரமாக ஜொலித்த கந்தன் கருணை படத்துக்காக 1967-ம் வெளியான விளம்பரம் உங்களுக்காக.

இந்த விளம்பரத்தை டவுன் லோட் செய்து பார்த்தால் இதில் உள்ள அத்தனை ஜிகினாக்கள் அனைத்தும் மின்னுவதை பார்க்கலாம்.


தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 553593_253566924746894_1582554855_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by அருள் Sat Jul 21, 2012 10:40 am

"முத்த
காட்சிகளை அனுமதிப்பதா வேண்டாமா என்று தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள்
பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்று நடிகர் திலகத்திடம் ஒரு கேள்வி
கேட்கப்பட்டது 1967 வருடம்.

அதற்க்கு "முத்தம் கொடுப்பதை காட்டவே
கூடாது. ஆனா நாம முத்தம் கொடுத்துகிட்டதா ஜனங்க நினைக்கணும். அந்த
மாதிரிதான் நடிக்கணும். மூடி காட்டுவதுதான் கலை. பச்சையா, உள்ளதை அப்படியே
காட்டினா அது கலை ஆகாது. அதனால முத்த்ம் கொடுப்பதை எல்லாம் திரையிலே காட்ட
கூடாது என்பதுதான் என் தாழ்மையான வேண்டுகோள்" என்று பதில்
அளித்திருக்கிறார் நடிகர் திலகம்.

இந்த கேள்வியை கேட்டவர் யார்
தெரியுமா ???? நம்முடைய இப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. 1967-ம் வருட
பொம்மை ஆண்டு மலர் பேட்டியில் "பொம்மை" முதலாம் ஆண்டு மலரில் 'நக்ஷத்திரம்
கண்ட நக்ஷத்திரம்' என்கிற புதுப் பகுதிக்காக இந்த சிறப்பு நேர்காணல்
நடத்த பட்டுள்ளது.

அந்த பக்கத்தில் இடம் பெற்ற நடிகர் திலகத்தின் புகைப்படம் உங்களுக்காக இங்கே.
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 561145_253561228080797_440226877_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by ஜனனி Mon Jul 23, 2012 5:23 pm

இன்று பிறந்தநாள் காணும் நடிகர் சூர்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by அருள் Wed Jul 25, 2012 7:57 am

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Illya10"‘அபூர்வ
சகோதரர்கள்’, ‘பணக்காரன்’, ‘மைடியர் மார்த்தாண்டன்’ உட்பட பல படங்களில்
இளையராஜா ‘குள்ளமணி’ன்ற என் பேர் வர்ற மாதிரி பாட்டுக்கு மெட்டு
அமைத்திருப்பார். ஒருமுறை ராஜா சாரிடம் ‘ஏன் என் பெயர் பாடலில் வர்ற மாதிரி
மெட்டு போட்டீங்கன்னு?’ கேட்டேன்.

அதுக்கு அவர்,‘நூறு வருஷம்
இந்த மாப்பிள்ளையும், பொண்ணுதான்ற பாட்டில் ஒரு இடத்தில் உன் பெயர் வருது,
கல்யாண வீட்டில் இந்தப் பாட்டைப் போடுவாங்க. மங்களகரமான நிகழ்ச்சிகளில் உன்
பெயரைச் சொல்றது நல்ல விஷயம்தானே? ரொம்ப நாளாய் உன்னைத் தெரியும். நீ
ரொம்ப நல்லவன். உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணிச்சு, என்னால முடிஞ்சதைப்
பண்ணினேன்’ என்றார்.

ஒரு நிமிடம் நான் நெகிழ்ந்து போயிட்டேன். இந்த மாதிரி பெரியவங்களோட அன்பும், ஆசீர்வாதமும்தான் என் சொத்து."

- நடிகர் திரு. குள்ளமணி - கல்கி.

நன்றி: இசைஞானி பக்தர்கள் (The Maestro’s Devotees)
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by அருள் Wed Jul 25, 2012 8:01 am

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Rajini10
"அன்புள்ள
ரஜினிகாந்த்" - ஒரு ஆங்கில படத்தின் கதைக்கருவை தழுவி 1984ல் வெளியான,
இந்த படத்தில் ரஜினி நடித்த, அந்த கெஸ்ட் ரோலில் நடிக்க முதலில் அப்ரோச்
செய்யப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர்.

அரசாங்க அலுவல் காரணமாக,
எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்துவிட, அந்த ரோலுக்கு தன்னுடய நெருங்கிய நண்பரான,
ரஜினியை தேர்வு செய்துவிட்டார் டைரக்டர் கே.நட்ராஜ் .
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by ஜனனி Wed Jul 25, 2012 8:24 pm

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 28284 தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 28284
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by ஜனனி Thu Jul 26, 2012 6:49 pm

நமீதா
கபூர் அறிமுகமானது தெலுங்கி திரையுலகில். சொந்தம் என்கிற படம் மூலமாக.
அதன் பின் ஜெமினி படத்தின் ரீ மேக்கில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்தார். அதன்
பின் தமிழ் திரையுலகம் அழைத்து கொண்டது அவரை.

தெலுங்கு திரையுலகில் அறிமுகமான நமீதா கபூர் இப்படித்தான் இருந்தார்.


தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 526516_254944721275781_1263431452_n
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by ஜனனி Thu Jul 26, 2012 6:52 pm

இந்திய
பழக்க வழக்கங்கள் எதுவுமே தெரியாத இங்கிலாந்து வளர்ப்பான நடிகை Katrina
Kaif ஹிந்தி திரையுலகில் நடிக்க வந்த பின் இந்திய மொழிகளை பேசுவது எப்படி
என்று தொடங்கி பாரம்பரிய நடனம் வரை அத்தனையையும் சிரத்தை எடுத்து கற்று
கொண்டுள்ளார்.

அவருடைய இன்றைய வெற்றிக்கு இதை உழைப்பும் ஒரு
முக்கிய காரணம் என்கிறார்கள் பாலிவுட் காரர்கள். நம்முடைய பாரம்பரிய
நடனத்தை கேத்ரீனா கற்று கொண்ட ஒரு கணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்
உங்களுக்காக ..

கூடுதல் தகவல் - மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கும் கேத்ரீனா நடிக்காத ஒரே மொழி தமிழ் மட்டுமே.தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 217906_254943874609199_2045349980_n
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by ஜனனி Thu Jul 26, 2012 9:46 pm

"பெங்களூரில்
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னையும் ஐஸ்வர்யா ராயயையும் பார்த்து
எல்லோரும் அம்மா பெண்ணா என்று கேட்டார்கள். இரண்டு பேரும் ஆமாம் என்று
சொன்னோம். எனக்கும் ஐஸ்வர்யாவை பார்த்தால் என்னுடைய இளமை காலம் நினைவுக்கு
வருகிறது" - இப்படி சொல்லி இருக்கிறார் நம்முடைய கன்னடத்து பைங்கிளி
சரோஜா தேவி !!!


தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 547753_254948507942069_639349394_nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 547753_254948507942069_639349394_n
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Fri Jul 27, 2012 3:42 pm

வானொலியில்
பாடகராகப் பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயர் , வீணை வித்வான் சாந்தகுமாரி
தம்பதிக்கு இரண்டாவது மகளாக பிறந்த சித்ராவை இசை உலகில் கொண்டு வர அவரது
பெற்றோருக்கு எந்த ஐடியாவும் இருந்திருக்கவில்லை.
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 205312_255158484587738_496122747_n
அவர்களின்
மூத்த மகள் பீனாவின் குரல் இனிமை காரணமாக அவருக்குத்தான் கிருஷ்ணன் நாயர்
வீட்டில், கவனத்துடன் தேவையான பயிற்சிகளெல்லாம் முறைப்படி அளிக்கப்பட்டது.

பீனாவிற்கு சங்கீதம் கற்பிக்கப்பட்ட பொழுது, சின்னஞ்சிறு சித்ரா தன்
கேள்வி ஞானத்தினாலேயே அந்த பாடல்களை கேட்டு, நினைவு படுத்திக் கொண்டு
பாடும் திறமை படைத்தவராக இருந்தார் என்கிறார்கள் அவருடைய உறவினர்கள். ஆல்
இந்திய ரேடியோவில் கர்நாடக சங்கீதத்தில் சில வரிகள் பாடும்போது
சித்ராவுக்கு ஐந்து வயது.

சித்ரா தனது தந்தை கிருஷ்ணன் நாயருடன் இருக்கும் புகைப்படம் உங்களுக்காக. நன்றி:- மலையாள மனோரமா


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by ஜனனி Sat Jul 28, 2012 7:15 pm

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Cinema10"ஆராரோ ஆராரோ" என்று தமிழர்களை தாலாட்டிய லதா
மங்கேஷ்கரும் - "நீ பார்த்த பார்வைகொரு நன்றி" என்று தமிழுக்கு நன்றி சொன்ன
ஆஷா போன்ஸ்லேவும் சகோதரிகள் என்பது தெரிந்த விஷயம். ஆனால் அவர்களுக்கு
இடையே வெளியில் சொல்லாத மன வருத்தம் , மன கசப்பு இருந்து வருகிறது என்று
ஐம்பது வருடங்களாக செய்திகள் வெளியிடுகின்றன வட இந்திய சினிமா
பத்திரிக்கைகள்.

பதினாறு வயது ஆஷா 31 வயது கண்பத் ராவ்
போன்ஸ்லே என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நொடியில் தொடங்கியிருக்கிறது
லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போன்ஸ்லேவுக்கு இடையிலான பிரிவு. இந்த
திருமணம் முறிந்து, அந்த பிரிவுக்கு பின் பெற்றோர் வீடு திரும்பிய
பின்னும் லதா, ஆஷா இடையே எதுவும் மாற்றம் ஏற்படவில்லை.

"லதாவும்
ஆஷாவும் எதிர் எதிர் flat-களில்தான் குடியிருந்தனர். இருவர் வீடுகளுக்கும்
பொதுவான சமயல்காரர்கள்தான் இருந்தனர். ஆனாலும் லதா என்கிற பெயரும், அந்த
குரலும் ஆஷாவை எப்போதும் துன்புறுத்தி கொண்டே இருந்தது. லதாவின் குரலில்
இருந்து தன்னுடைய குரல் முற்றிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும்
என்பதற்காக தலைகீழாக மட்டும்தான் ஆஷா நிற்கவில்லை. மற்ற எல்லாவற்றையும்
செய்தார்" - ஹிந்தியின் பிரபல இசையமைப்பாளர் ஒ.பி.நய்யார் ஒரு பேட்டியில்
இப்படி கூறி இருந்தார்.

இந்திய திரையுலக நைட்டிங்கேல் லதா
மங்கேஸ்கரும், அவர்த தங்கை ஆஷா போன்ஸ்லேவும் மகராஸ்டிராவின் பாரம்பரிய
விழா ஒன்றின் போது இணைத்து ஆடும் புகைப்படும் உங்களுக்காக இங்கே....
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by ஜனனி Mon Jul 30, 2012 7:23 am

நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு வெறும் மேக்கப் டெஸ்ட் மட்டுமே எடுத்து, படத்தில் இடம்பெறாத சில வேடங்கள்.தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Sivaji10
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by அருள் Mon Jul 30, 2012 2:10 pm

பதினான்கு
வருட இடைவெளிக்கு பின் வெள்ளி திரைக்கு ஸ்ரீதேவியின் மறு பிரவேசம்
"இங்க்லீஷ் விங்க்லீஷ்" என்ற படத்தின் மூலம் நடக்க உள்ளது. இந்த படத்தில்
வெளிநாட்டு மருமகளாக போகும் இந்திய பெண்ணாக நடித்திருக்கிறார் ஸ்ரீ.
ஆங்கிலம் தெரியாததனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் கதை.

ஹிந்தி தமிழ் தெலுங்கு என்று மூன்று மொழிகளில் வர போகும் இந்த படத்தில்
ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கிறார் அமிதாப். அதே வேடத்தை தமிழிலில் அஜீத்
செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் பால்கி கூறி இருக்கிறார்.


ஆங்கிலம் தெரியாது என்பதால் மனம் வருத்தப்படும் ஸ்ரீதேவியிடம் "மொழி என்பது
நம் உணர்வுகளை தெரிவிக்கும் ஒரு கருவி மட்டுமே. அதற்க்கு மேல் பெரிய
முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று மன உறுதி அளிக்கும்
மூன்று நிமிட வேடத்தில் அஜீத் நடிக்க இருக்கிறார் என்றும் பால்கி
தெரிவித்துள்ளார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by அருள் Mon Jul 30, 2012 4:00 pm

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 549563_255999134503673_1916228051_n
நிறம் மாறாத பூக்கள் படம். பாடலுக்கான சூழலை,
கவிஞர் கண்ணதாசனிடம் விளக்கினார் இயக்குநர் பாரதிராஜா. "யார் ஹீரோ?" என்று
கேட்டிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

'புதுப்பையன்தாண்ணே! ஒண்ணு
ரெண்டு படங்களிலே நடிச்சிருக்கான். "என்றார் பாரதிராஜா. "ஹீரோயின்?" என்ற
கேள்விக்கு "அதுவும் புதுசுதாண்ணே! நம்ம ராதா அண்ணன் பொண்ணு..நான்தான்
அறிமுகப்படுத்தினேன். இந்தப்படத்திலே வில்லன் கூட புதுசுதாண்ணே" என்று
பதில் சொல்லி இருக்கிறார் பாரதிராஜா.

அனைவரும் புதுமுகம் என்று
கேல்விப்பட்டவுடம் முகம் மலர்ந்த கவிஞர் "அடேடே! எல்லாருமே புதுசா!
வரட்டும் வரட்டும்! நல்லா வரட்டும்.!" என்று வாழ்த்தியபடியே பாட்டு
எழுதியிருக்கிறார் இப்படி.

"ஆயிரம் மலர்களே மலருங்கள்!அமுத கீதம் பாடுங்கள்!ஆடுங்கள்!....." என்று.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by ஜனனி Mon Jul 30, 2012 6:00 pm

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 917304 தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Tue Jul 31, 2012 8:12 am

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 409751101986
–ல் தாஷ்கண்ட் படவிழாவில் `முதல் மரியாதை’ திரைப்படத்தை திரையிட்டார்கள்.
சப்டைட்டில் போட்டும் அந்தப் படத்தைப் புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள்
மக்கள்.

விழாவுக்குப் போயிருந்த ஹிந்தி திரைப்பட துரையின்
பிதாமகராக வர்ணிக்கப்படும் ராஜ்கபூர், ரஷ்ய மொழியில் முழுக்க முழுக்க
"முதல் மரியாதை" படத்துக்கு ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தார். பாராட்டினர்
மக்கள். கண்கள் நனைந்தது பாரதிராஜாவுக்கு!

இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடும் இயக்குனர் இமயத்துக்கு உசெடமில் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by ஜனனி Tue Jul 31, 2012 7:42 pm

"என்
மனம் குதூகலம் அடையும்போது, நான் என்னையே அறியாமல் வாயால் விசில் அடிக்கத்
தொடங்கிவிடுவேன். இந்த வழக்கத்தை விட்டொழிக்க நான் பல முறை நினைத்தது
உண்டு. ஆனால், முடியவில்லை.

ஒரு சமயம் மைசூர் பிருந்தாவனத்துக்கு என் தோழியுடன் சென்றிருந்தேன்.பிருந்தாவனத்தின்
இயற்கை எழில் என் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கவைத்தது. என்னையும் அறியாமல்
விசில் அடிக்கத் தொடங்கிவிட்டேன். அப்படியே விசில் அடித்துக்கொண்டே எவ்வளவு
தூரம் நடந்திருப்பேனோ தெரியவில்லை. ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப்
பார்த்தேன்.

என்ன ஆச்சர்யம்… ஒரு மாணவர் கூட்டமே என் பின்னால்
என்னைக் கேலி செய்யத் தயாராக வந்துகொண்டு இருந்தது. திடுக்கிட்டவாறே
வெட்கத்துடன் என் தோழியை அழைத்துக்கொண்டு ஓடிப் போய் காரில்
அமர்ந்துகொண்டேன். இதை இன்று நினைத்தாலும் வெட்கமாகத்தான் இருக் கிறது"

1970-ம் ஆண்டு பத்திரிகை பேட்டி ஒன்றில் தனக்கு சந்தோசம் வந்துவிட்டால் என்ன செய்வேன் என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறார் இப்படி.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by ஜனனி Tue Jul 31, 2012 7:59 pm

Filmfare
August மாத புத்தகத்தின் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள 48 வயது ஸ்ரீதேவி
இது. பதினான்கு வருடம் கழித்து நடிக்க வரும் ஸ்ரீதேவியிடம் ஒரு ஸ்பெஷல்
இன்டெர்வியூ வாங்கி இருக்கிறார்கள் Filmfare புத்தகத்தினர்.


அதில் "உழைப்பு மட்டுமே தன்னுடைய வெற்றிக்கு காரணம் இல்லை என்று கூறியுள்ள
ஸ்ரீதேவி கடின உழைப்பாளிகள் எல்லாம் வெற்றி பெறுவது இல்லை என்றும் தன்னுடைய
அழகும், வெற்றி பெரும் வேடங்களை தேர்வு செய்யும் தன்னுடைய திறமைக்குமே
தன்னுடைய வெற்றியை காணிக்கை ஆக்குவதாக" இந்த Filmfare பேட்டியில் சொல்லி
இருக்கிறார் ஸ்ரீதேவி.தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 526480_256320157804904_312243713_n
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by மாலதி Sat Aug 11, 2012 10:52 am

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் 542305_259235957513324_1940730113_nஇரண்டு
வருட காண்ட்ராக்டில் வருடத்துக்கு பத்து கோடி ரூபாய் என்று இருபது கோடி
ரூபாய்க்கு "கல்யாண் ஜூவெல்லர்ஸ்" நிறுவன விளம்பர தூதராக ஐஸ்வர்யா ராய்
ஒப்பந்தம் செய்யப்பட்டது பழைய செய்தி.

ஒன்றரை கோடி ரூபாயில்
எடுக்கப்பட்ட "கல்யாண் ஜூவெல்லர்ஸ்" நிறுவனத்திற்கான Print AD - இதுதான்.
இந்த விளம்பரம் வெளியான நாளிலயே சர்ச்சைகளும் ஆரம்பித்து விட்டன. இந்த
விளம்பரம் முழுக்க முழுக்க போட்டோஷாப் செய்யப்பட்டது என்றும் இது ஒரிஜினல்
ஐஸ்வர்யா ராய் இல்லை என்றும்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Empty Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum