TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கசப்புடன் கூட்டணியில் நீடிப்போம்: கருணாநிதி

Go down

கசப்புடன் கூட்டணியில் நீடிப்போம்: கருணாநிதி Empty கசப்புடன் கூட்டணியில் நீடிப்போம்: கருணாநிதி

Post by அருள் Thu May 31, 2012 7:31 am


கசப்புடன் கூட்டணியில் நீடிப்போம்: கருணாநிதி Xcm



ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார் திமுக தலைவர்
கருணாநிதி. உடன் (இடமிருந்து) கட்சியின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர்
ஆற்காடு வீராசாமி, தென்சென்னை மாவட்டச் ச


சென்னை,
மே 30: பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டாலும் காங்கிரஸ் தலைமையிலான
கூட்டணியில் கசப்புடன் நீடிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.சென்னை
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் புதன்கிழமை நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, "மத்திய கூட்டணியிலிருந்து விலகப் போகிறோம்'
என்று கருணாநிதி கூறியதாக சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின.இது தொடர்பாக விளக்கம் அளித்து புதன்கிழமை மாலை திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியது:பெட்ரோல்
விலையைக் குறைக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று எங்களால்
நிபந்தனை விதிக்க முடியாது. குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு
வெளியேறிவிடுவோம் என்றும் கூற முடியாது.ஏனென்றால் திடீரென்று
கூட்டணியை விட்டு வெளியே வந்தால் மத்தியில் வரவிருக்கும் ஆட்சி பிற்போக்கான
மதவாத சார்புடைய ஆட்சியாக வரலாம். எனக்கு இப்போது வந்துள்ள தகவல்களின்படி
பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசித்து வருவதாகக்
கேள்விப்படுகிறேன். மத்திய அரசிடமிருந்து நல்ல தகவல் வரும் என்று
எதிர்பார்க்கிறேன்.விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் வர உள்ளது.
இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நெருக்கடியை மத்திய அரசுக்குக் கொடுக்கக்கூடிய
காரியங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம்.திமுக கசப்போடு அந்தக் கூட்டணியில் நீடிக்கும் என்றார்.இந்தப்
போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாகக் கொள்ளலாமா என்று
கருணாநிதியிடம் கேட்டதற்கு, "இது மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
இல்லை. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்' என்றார்.கருணாநிதியின்
இந்தப் பேட்டியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சிகள், தான் பேசிய பேச்சில்
இருந்து அவர் பின்வாங்கிவிட்டதாக தெரிவித்தன.அரசில் இருந்து விலக
மத்திய அரசு இடம் தரக் கூடாது: முன்னதாக பெட்ரோல் விலை உயர்வைக் குறைக்க
மத்திய அரசை வலியுறுத்தியும் பால் விலை, மின் கட்டண உயர்வைக் குறைக்க மாநில
அரசை வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்
திமுக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமைத் தாங்கி
கருணாநிதி பேசியது:பெட்ரோல் கட்டணத்தை லிட்டருக்கு ரூ.7.50 வரை
மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. அந்தக் கொடுமையான விலை உயர்வினை
எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக
இருக்கும் ஏ.கே.அந்தோனியே கண்டித்து இருக்கிறார். எனவே நான் சொல்வதை
பிரதமர் கேட்காவிட்டாலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் கோரிக்கையையாவது
நிறைவேற்ற வேண்டும்.அரசுகளுக்குப் போட்டி: மத்திய அரசு பெட்ரோல்
விலையையும், மாநில அரசு பால் விலை, மின் கட்டணம், பஸ் கட்டணத்தையும்
உயர்த்தியுள்ளன. இப்போது இந்த இரு அரசுகளுக்குமிடையே ஒரு போட்டி
ஏற்பட்டுள்ளது. எந்த அரசு கட்டணத்தைக் குறைத்து மக்களின் மனதில் நல்ல
எண்ணத்தைப் பெறப் போகிறது என்பதுதான் அந்தப் போட்டி. இரு அரசுகளுமே இதனை
நிறைவேற்ற போட்டிப்போட வேண்டும்.எச்சரிக்கை: மத்திய அரசோடு திமுக
கூட்டணியில் இருப்பது என்பது வேறு விவகாரம். அதேசமயம் மக்களுக்கு விரோதமான
காரியங்கள் நடைபெறும்போது அதைத் தடுக்கும் நிலையில் திமுக செயல்படுவது
என்பது வேறு.பாஜக ஆட்சியில் இருந்தபோதும், வி.பி.சிங் பிரதமராக
இருந்தபோதும் கூட்டணியில் திமுக இருந்திருக்கிறது. அப்போதும் திமுகவின்
அடிப்படை கொள்கைகளுக்கு மாசு வந்தபோது அதை அவர்களுக்குச் சுட்டிக்
காட்டியிருப்பதுடன், அதைத் தீர்த்து வைக்கக்கூடிய பொறுப்பை அவர்களுக்கு
அளித்திருக்கிறோம்.அதனை அவர்கள் நிறைவேற்றாதபோது திமுகவின்
எதிர்ப்புக் குரலை உயர்த்தி அவர்களோடு இருக்கும் வரையில் இருந்து,
முடியாவிட்டால் தனியாகப் பிரிந்து திமுகவின் கொள்கையைத்தான் வலியுறுத்தி
வந்திருக்கிறோம்.அதற்கு இடம் தராத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்ள வேண்டும்.மத்தியில்
போடப்படும் வரிகளைத் தாங்கும் சக்தி சாதாரண பொதுமக்களுக்கு இல்லை என்றால்
அந்தச் சக்தியை மாநில அரசு தானே வலிய வந்து தாங்கிக்கொண்டு நிவாரணம் அளிக்க
வேண்டும். திமுக ஆட்சியில் இருந்தபோது இதைப்போல் நிறைவேற்றியிருக்கிறோம்.எனவே, மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வைக் குறைத்துக் கொள்ளாவிட்டால் அடுத்தடுத்து பல போராட்டங்களை நடத்துவோம் என்றார் கருணாநிதி.பெட்ரோல் விலையைக் குறைக்கும் வாய்ப்புகள் ஆராயப்படும்: டி.ஆர். பாலுவிடம் பிரதமர் உறுதிபுது
தில்லி, மே 30: பெட்ரோல் விலையைக் குறைக்கும் வாய்ப்புகள் குறித்து
ஆராயப்படும் என்று தன்னிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக திமுக
நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறினார்."பெட்ரோல் விலை
உயர்த்தப்பட்டதால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை மத்திய அரசு
கவனித்து வருகிறது. விலையைக் குறைக்கும் வாய்ப்புகள் குறித்து ஆராயப்படும்.
இந்த விஷயத்தில், நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்க நடவடிக்கை
எடுக்கப்படும்' என்று பிரதமர் உறுதியளித்ததாக பாலு கூறினார். தில்லியில் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் புதன்கிழமை பாலு சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் அந்தச் சந்திப்பு நடைபெற்றது. பிறகு,
செய்தியாளர்களிடம் பேசிய பாலு, "பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.50
உயர்த்தப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் திமுக புதன்கிழமை
ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் அவசியம் குறித்து பிரதமரிடம் விளக்கினேன்.
இந்த விவகாரத்தில் திமுக மிகுந்த அதிருப்திக்கு உள்ளாகியிருப்பதை
எடுத்துரைத்தேன். பெட்ரோல் விலையேற்றத்தால் சாதாரண மக்கள், மாதச்
சம்பளம் பெறுவோர், விவசாயிகள், வியாபாரிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும்
பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலையைத் திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்' என்றார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அ.தி.மு.க., கூட்டணியில் நீடிப்போம் : தா.பாண்டியன் பேட்டி
»  அதிசயம் ஆனால் உண்மை கருணாநிதி இப்படத்திலிருப்பதுபோல் ஒருநாள் நிச்சயம் கருணாநிதி மாறுவார்
» அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணியில் புயலைஏற்படுத்தியுள்ளது.
» அதிமுக கூட்டணியில் குழப்பம் நீங்கியது
» பா ஜ க கூட்டணியில் இருந்து மதிமுக வெளியே வருகிறது ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum