TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், அழகிரி-ஸ்டாலின் ஆதரவாளர் களிடையே திடீர் மோதல் வெடித்தது.

Go down

நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், அழகிரி-ஸ்டாலின் ஆதரவாளர் களிடையே திடீர் மோதல் வெடித்தது.  Empty நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், அழகிரி-ஸ்டாலின் ஆதரவாளர் களிடையே திடீர் மோதல் வெடித்தது.

Post by அருள் Sat Feb 04, 2012 5:45 am

நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், அழகிரி-ஸ்டாலின் ஆதரவாளர் களிடையே திடீர் மோதல் வெடித்தது.  Gallerye_23553359_398783சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், அழகிரி-ஸ்டாலின்
ஆதரவாளர் களிடையே திடீர் மோதல் வெடித்தது. எதிர்பாராத இந்த ரகளையால்,
அக்கட்சித் தலைவர் கருணாநிதி கடும் வேதனையடைந்தார்.
அறிவாலயத்தில் தி.மு.க., பொதுக்குழு நேற்று கூடியது. தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்ட பிறகு, கட்சிப்பிரமுகர்கள் பேச அழைக்கப்பட்டனர். விவாதம்,
இரண்டாவது கட்டமாக மாலை 4 மணிக்கும் தொடர்ந்தது. திண்டுக்கல் லியோனி,
வழக்கறிஞர் ஜோதி மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோர் பேசும் போது, லேசான
பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. சேலம் மாவட்டச் செயலர் வீரபாண்டி
ஆறுமுகம் பேசும் போது, பரபரப்பு உச்சத்தை அடைந்தது.
பொதுக்குழுவில் அவர் பேசியதாவது: தி.மு.க.,வில் இன்று ஒரு வேதனையான
பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருவரை, "இவர் இன்னாருக்கு வேண்டப்பட்டவர், இவர்
அவருடைய ஆள்' என அடையாளம் காட்டும் நிகழ்ச்சிகள் அரங்கேறிக்
கொண்டிருக்கின்றன. தலைவர் ஆரோக்கியமாக இருந்து, நம்மை எல்லாம் வழி நடத்திக்
கொண்டிருக்கும் நிலையில், இதுபோல் இன்னொருவரை தலைமைப்பதவிக்கு
முன்னிறுத்துவது நல்லதல்ல. ஸ்டாலின், அழகிரி மட்டும்அல்ல, தலைவரின்
குடும்பமே நமது இதயம் போன்றது தான். அந்தக் குடும்பத்தில் இருந்து யார்
வந்தாலும், அவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அதற்காக, தலைவர்
முன்னிலையிலேயே, "இவர் தான் அடுத்த தலைவர்' என்றெல்லாம் பேசுவது உகந்ததல்ல.
இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் பேசிக் கொண்டு இருந்தபோதே, பொதுக்குழுவில்
அமர்ந்திருந்த கட்சியினர், அவருக்கு எதிராகவும், "தளபதி, தளபதி' என்றும்
கோஷமிடத் துவங்கினர். அதற்கு எதிர் கோஷமும் எழுந்தது. பலர், மேடையை நோக்கி
முன்னேறினர். இதனால், பொதுக்குழுவில் பெரும் கூச்சலும், குழப்பமும்
நிலவியது. "இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்' எனக் கூறிய ஆறுமுகம்,
தொடர்ந்து பேச முயன்றார். ஆனால், அவரை பேச விடாமல், கட்சிக்காரர்கள்
கோஷமிட்டபடி இருந்தனர். மேடையில் இருந்த முன்னணித் தலைவர்களாலும்,
தொண்டர்களை அமைதிப்படுத்த முடியவில்லை.
இறுதியில் எழுந்த, கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் பேசியதாவது: அடுத்த
தலைவர் பற்றி பேச்சு எழுந்தபோது, "இது ஒன்றும் சங்கர மடம் அல்ல, வாரிசுகளை
அறிவிப்பதற்கு. இது ஜனநாயக அமைப்பு. கட்சி கூடித்தான் அடுத்த தலைவரைத்
தேர்ந்தெடுக்கும்' என, ஏற்கனவே தலைவர் கூறியிருக்கிறார். நானும், தலைவரும் இல்லாத தருணங்களில் எல்லாம் கட்சியை ஸ்டாலின் தான் வழி
நடத்தி வந்திருக்கிறார். இனிமேலும், அவர் தான் தலைவராக வேண்டும் என
இருந்தால், அதை யார் தடுத்துவிட முடியும்? அதற்காக, இப்போதே இதுபோன்ற
சர்ச்சைகள் எழுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் பேசிய பிறகே,
ஒருவாறு அமைதி திரும்பியது.
அடுத்ததாக, கட்சித் தலைவர் கருணாநிதியின் பக்கம் மைக் வைக்கப்பட்ட போது,
"அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறேன்' எனக் கூறி, மைக்கை திருப்பி
விட்டு விட்டார். தொண்டர்கள் எழுந்து, பெருங்கூச்சலோடு வேண்டுகோள்
விடுக்கவே, தொடர்ந்து அவர் பேசியதாவது: பெரியாரால், அண்ணாவால் பாராட்டுப்
பெற்றவன் நான். தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என ஒருக்காலும்
விரும்பியவனல்ல. பொதுக்குழுவில் விவாதத்துக்காக கொடுக்கப்பட்ட பொருள் தவிர,
மற்றவை பற்றி பேசினால், அது பத்திரிகைகளுக்குத் தான் செய்தியாகப்
பயன்படும். இவ்வாறு ஆரம்பித்து விரிவாக பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி,
பேச்சின் இடையில் கண் கலங்கினார். பொதுக்குழு முடிந்து, நிருபர்களைச்
சந்தித்த போது, "அடுத்த தலைவர் யார் என்பதைப் பற்றி கூட்டத்தில் எந்த
விவாதமும் நடக்கவில்லை' என, திட்டவட்டமாக மறுத்தார்.

அழகிரி புறக்கணிப்பு?


* தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டில் இருந்து, அறிவாலயம்
வரை, சாலையின் இரு புறமும் கட்சிக்கொடிகள், தோரணங்கள், குழல் விளக்குகள்
பொருத்தப்பட்டிருந்தன.
* மதிய வேளையில், 2,500 பேருக்கு சைவ சமையல் தயாரித்து வழங்கப்பட்டது.
*
காலையில், 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாலையில், சேது சமுத்திர
திட்டத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானமும், பொதுக்குழு விளக்கக் கூட்டங்கள்
நடத்துவது பற்றிய இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
* கூட்டம் நடந்த கலைஞர் அரங்கம் அருகே வரை செல்ல, காலையில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாலையில், கூட்டம் முடியும் வரை, அந்த கட்டடத்துக்கு உள்ளேயே அனுமதிக்கப்படவில்லை.
*
கூட்டத்தில் பேசிய பலர், காங்கிரசுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என
வலியுறுத்தினர். அதற்கு, தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும்,
கைதட்டலும் இருந்தது.
* திண்டுக்கல் லியோனி பேசுகையில், "மொபைல்
போனும், கையுமாக கட்சியினர் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, தி.மு.க.,
இன்னமும் ஆட்சியில் தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது' என்றார்.
*
"தேர்தலில், பணக்காரர்களுக்குத் தான் சீட் கொடுக்கப்படுகிறது' என,
வழக்கறிஞர் ஜோதி பேசியபோது, பெரும் ஆதரவு அலை எழுந்தது. "நீ பார்த்தியா' என
ஒருவர் சத்தம் போட, அவரைக் கண்டித்தும், ஜோதியை ஆதரித்தும் பெரும் கூச்சல்
ஏற்பட்டது.
* "தி.மு.க.,வுக்கு இரண்டு சேனல்கள் இருக்கின்றன.
பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க, கலைஞர் "டிவி'யைப் போலவே, அந்த இன்னொரு
சேனலும் செயல்பட வேண்டும்' என, திருச்சி சிவா பேசியபோது எழுந்த கைதட்டல்
அடங்க, நெடுநேரம் ஆனது.
* காலையில், பொதுக்குழு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டு, கட்சியினர் பேச அழைக்கப்பட்ட உடன், மத்திய அமைச்சர்
அழகிரி, அரங்கை விட்டு வெளியேறினார். மாலையில், நடந்த விவாதத்தில் அவர்
பங்கேற்கவில்லை.
[You must be registered and logged in to see this link.]
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தனியார் விமான டயர் வெடித்தது : சென்னை ஏர்போர்ட் திடீர் மூடல்!
» பென்னாகரம் தொகுதியில் வெடித்தது மோதல்:வேட்டி வழங்கிய தி.மு.க., பிரமுகர் கைது
» தென்மண்டல அமைப்பு கலைப்பு - ஸ்டாலின் : பொதுக்குழுவுக்கு வரமாட்டோம் - அழகிரி
» ஸ்டாலின் குறித்த அழகிரி கருத்து :தி.மு.க.,வில் பரபரப்பு
» ஒரே ஹோட்டலில் கருணாநிதி, அழகிரி; மற்றொன்றில் தங்கினார் ஸ்டாலின்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum