TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன

Go down

கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Empty கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன

Post by mmani Sat Dec 31, 2011 7:28 am

புதுச்சேரி: தமிழகத்தை பயமுறுத்திய, "தானே' புயல், நேற்று முன்தினம்
நள்ளிரவில், கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் கோரத் தாண்டவம்
ஆடியது. கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில், 26 பேர்
உயிரிழந்தனர்; பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உயிரிழந்தோரின் குடும்பத்தின ருக்கு இரு
மாநில முதல்வர்களும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க
உத்தரவிட்டுள்ளனர்.

திசை மாறிய புயல்: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த
தாழ்வு மண்டலம், கடுமையான புயலாக உருவெடுத்தது. கடலூருக்கும்,
நெல்லூருக்கும் இடையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட, "தானே'
புயல், நேற்று முன்தினம் இரவு, புதுச்சேரியையும், கடலூரையும் நோக்கி
திரும்பியது. இதன் எதிரொலியாக, இவ்விரண்டு பகுதிகளிலும், நேற்று முன்தினம்
மதியம் முதலே மழை பெய்யத் துவங்கியது; மாலையில் பலத்தக் காற்று வீசியது.
நள்ளிரவில், பலத்த சத்தத்துடன், 100லிருந்து, 140 கி.மீ., வேகத்தில், புயல்
காற்று வீசியது.

புதுச்சேரி: நள்ளிரவில் துவங்கிய புயல் காற்று, விடிய விடிய
வீசி, புதுச்சேரி நகரை மட்டுமல்லாமல், கிராமங்களையும் சூறையாடியது.
காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், வீடுகளின் மாடியில்
போடப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள், தகரக் கூரைகள் பறந்தன; அனைத்து
குடிசைப் பகுதிகளும் உருக்குலைந்தன. லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு
சாய்ந்தன. கிழக்கு கடற்கரை சாலை, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை ஆகிய
சாலைகளில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுப்பணித் துறையினரும்,
தீயணைப்புத் துறையினரும், பொக்லைன், புல்டோசர் போன்ற இயந்திரங்களின்
உதவியுடன், பிரதான சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.
பின், பஸ் போக்குவரத்து துவங்கியது.

அலங்கோலமானது நகரம்: சாலைகளில் இருந்த மின்சார கம்பங்கள்,
சிக்னல் விளக்குகள், வழிகாட்டி பலகைகள், பெயர் பலகைகள் உள்ளிட்ட எதுவும்,
புயல் காற்றுக்கு தப்பவில்லை. பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள்
சாய்ந்தும், வளைந்தும் கிடக்கின்றன. அனைத்து தெருக்களும் அலங்கோலமாகக்
காட்சியளிக்கின்றன.

கொட்டியது பலத்த மழை: புதுச்சேரியில் நேற்று காலை, 9 மணியளவில்,
காற்று சற்று ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து, கனமழை பெய்யத் துவங்கியது. நேற்று
முன்தினம் காலை, 8.30 மணியில் இருந்து நேற்று காலை, 8.30 மணி வரையிலான, 24
மணி நேரத்தில், 14 செ.மீ., மழை கொட்டி தீர்த்துள்ளது.

கடலூர் மாவட்டம்: புயல் சின்னம் காரணமாக, கடலூர் பகுதி கடலில்,
இரண்டு மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பின. கடலோரப் பகுதி கிராமங்களில்
கடல் நீர் உட்புகுந்தது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு, காற்றின் வேகம், 130
கி.மீ., வரை உயர்ந்தது. பயங்கர சத்தத்துடன் புயல் கோரத் தாண்டவமாடியது.
மக்கள் வெளியே தலை காட்ட முடியவில்லை. புயல் சீற்றம், நேற்று காலை, 11 மணி
வரை நீடித்தது. அதன்பின், படிப்படியாக காற்றின் வேகம் குறைந்தது.

தகவல் தொடர்பு துண்டிப்பு: கடலூர், பண்ருட்டி, சிதம்பரம்
உள்ளிட்ட பகுதிகளில் இருந்த, பி.எஸ்.என்.எல்., மற்றும் மொபைல் போன் டவர்கள்
முறிந்து விழுந்தன. இதனால், நேற்று காலை, 6.30 மணிக்கு மொபைல் போன் சேவை
முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால், மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்
மற்றும் பத்திரிகையாளர்கள், புயல் பாதிப்பு குறித்து தகவல் பெற முடியாமல்
பெரும் அவதிப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று
முன்தினம் நள்ளிரவு முதல், புயல் காற்றுடன் கூடிய மழையால் மரங்கள் விழுந்து
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் பரவலாக கிராமப்
பகுதிகளில் கூரை வீடுகள் சேதமடைந்தன. புயலின் கோரத் தாண்டவத்தில் ஏராளமான
மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால் மின் வினியோகம் சீராக, ஒரு
வாரத்திற்கு மேலாகும் எனக் கூறப்படுகிறது. இதனால், மக்களின் இயல்பு
வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

நிவாரண நிதி: தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் 21 பேரும்,
விழுப்புரம் மாவட்டத்தில் 2 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 பேரும்,
சென்னையில் ஒருவரும் ஆக மொத்தம் 26 பேர் பலியாகியுள்ளனர். இவர்களின்
குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதல்வர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் புயலுக்கு பலியான 7 பேரின்
குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க புதுவை முதல்வர் ரங்கசாமி
உத்தரவிட்டுள்ளார்.

வீதிக்கு வந்த பொருட்களை வாரி சுருட்டிய கும்பல்: தானே புயலின்
தாக்குதலுக்குள்ளான, கடலூரில், சிதறிக் கிடந்த விளம்பர போர்டுகள்,
இரும்புத் தகடுகளை, மர்ம கும்பல் வாரி சுருட்டிச் சென்றது. இரும்புத்
தகடுகள், விளம்பர போர்டுகளில் இருந்த டியூப் லைட்டுகள், ஐமாஸ் விளக்கு
பல்புகள், இரும்பு ஆங்கிள், டிஜிட்டல் பேனர்களை அள்ளிச் சென்றனர். இன்னும்
சிலர், மூன்று சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றனர். வீதியில் முறிந்து
விழுந்த தென்னை மரங்களில் இருந்த தேங்காய்களை, மூட்டை மூட்டையாக கட்டிச்
சென்றனர். புயலின் கோர தாண்டவத்தில், பலர் வீடுகளை இழந்து, நிர்கதியாய்
தவிக்கும் போது, வீதியில் கிடப்பது தனக்கே சொந்தம் என, தேங்காயைக் கூட
விட்டு வைக்காமல் சில கும்பல் தன் கைவரிசையைக் காட்டியது, வேதனையளிப்பதாக
இருந்தது.

போக்குவரத்து பாதிப்பு: புதுச்சேரியிலிருந்து கடலூர், இ.சி.ஆர்.,
விழுப்புரம் மெயின் ரோடுகளின் ஓரத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து
சாலையில் விழுந்ததால், மேற்கண்ட மார்க்கங்களில் போக்குவரத்து கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. பிற்பகலில் தற்காலிகமாக கிளைகளை மட்டும் வெட்டி
அகற்றி, போக்குவரத்துக்கு வழி செய்யப்பட்டது. நகரம், கிராமம் என,
புதுச்சேரி முழுவதும் லட்சக்கணக்கில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
இதனால், கிராமப்புற பகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Empty Re: கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன

Post by mmani Sat Dec 31, 2011 7:29 am



  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_001226759_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_001232651_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_001239616_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_001253844_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_001307525_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_00131449_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_00132188_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_001332608_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_001341364_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_001348210_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_00135547_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_001404965_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_001413168_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_001421549_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_001451504_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_001459647_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_001506728_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_00151373_376385

  • கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன Gallerye_001519552_376385
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum